ஆண்டவரிடத்தில் வாருங்கள். மகிழ்ச்சி அடையுங்கள்.(176) Come to the Lord and Rejoice. ஏசாயா 1:1-20,திருப்பாடல் 89:1-18, திருதூதர் Acts: 16: 19-34, லூக்கா: 19:1-10 (புத்தாண்டு நற்செய்தி)
முன்னுரை: கிறித்துவுக்கு மிகவும் பிரியமான அன்பர்களே! உங்க அனைவருக் கும் இயேசு கிறித்துவின் விலை யேறப் பெற்ற நாமத்தில் புத்தா ண்டு நல் வாழ்த்துக்கள். ஆண்ட வரே! அனைத்தையும், படைத்த வரே! இவ்வாண்டு முழுவதும் கண்மணிபோல் காத்து அன்புடன் வழி நடத்தியவரே! புத்தாண்டை காண செய்தவரே! இவ் ஆண்டும் உம் கிருபையால் நிறைந்திருக்க அருள்விராக. "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன். (மத்தேயு நற்செய்தி 11:28)என்று நம் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள் ; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங் கள். (மத்தேயு நற்செய்தி 25:34) விண்ணரசில் பங்கு பெற நம்மை அழைக்கிறார். வாழ்க்கை புத்தகத்தில் (the book of life) தங்கள் பெயர் எழுதப்பட்ட தற்காக மகிழ்ச்சியடையுங்கள். புது ஆண்டு பிறந்துவிட்டது, மகிழ் ச்சியாய் இருங்கள். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்...