பெண்களின் அருட்ப பணியை நினைவு கூர்தலும் கொண்டாடுதளும். Remembering and celebrating womens ministry. St. Luke 8:1-3. Phil 4: 1-7.
Introduction: பழைய ஏற்பாட்டில் வம்ச வரலாற்றில் பெரும்பாலும் பெண்களைப் பற்றி அதிகமாக குறிப்பிடவில்லை. புதிய ஏற்பாட்டில் மத்தேயூ முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வம்ச வரலாற்றில் மூன்று பெண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். யூத பாரம்பரியத்தின் படி ஜெபிக்கின்ற பொழுது நான் பெண்ணாக பிறக்காமல் இருப்பதற்காக உம்மை துதிக்கிறேன் என்று வேண்டுவார்கள். இந்துக்களின் மனு நூலில் பெண்கள் என்பவள் தந்தைதையின் கட்டுப்பாட்டிலும் பின்பு கணவனுக்கும் பின்பு பிள்ளைகளின் பராமரிப்பில வாழ வேண்டும் என்று அடிமையாக வைத்திருந்தார்கள். இஸ்லாம் மதத்திலும் பெண்களுக்கான உரிமைகள் இல்லை ஆனால் திருக்குறளில் திருவள்ளுவர் "தற்காத்து தற்கொண்டார் பேணி தகை சான்ற சொற்காத்து சோர்விலால் பெண்" என்று கூறி இருக்கிறார். 1500 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் இலக்கியத்தில் ஔவையார் போன்றவர்கள் அதிகமாக படித்திருக்கிறார்கள். இயேசுவின் பெண் சீடர்கள் : லூக்கா 8: 1-3. இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் 12 சீடர்கள் மட்டும் இருந்ததாக நாம் கருத முடியாது. 12 என்பது 12 கோத்திரங்களை குறிக்கிறது. என...