பெண்களின் அருட்ப பணியை நினைவு கூர்தலும் கொண்டாடுதளும். Remembering and celebrating womens ministry. St. Luke 8:1-3. Phil 4: 1-7.
Introduction:
பழைய ஏற்பாட்டில் வம்ச வரலாற்றில் பெரும்பாலும் பெண்களைப் பற்றி அதிகமாக குறிப்பிடவில்லை. புதிய ஏற்பாட்டில் மத்தேயூ முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள வம்ச வரலாற்றில் மூன்று பெண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். யூத பாரம்பரியத்தின் படி ஜெபிக்கின்ற பொழுது நான் பெண்ணாக பிறக்காமல் இருப்பதற்காக உம்மை துதிக்கிறேன் என்று வேண்டுவார்கள். இந்துக்களின் மனு நூலில் பெண்கள் என்பவள் தந்தைதையின் கட்டுப்பாட்டிலும் பின்பு கணவனுக்கும் பின்பு பிள்ளைகளின் பராமரிப்பில வாழ வேண்டும் என்று அடிமையாக வைத்திருந்தார்கள். இஸ்லாம் மதத்திலும் பெண்களுக்கான உரிமைகள் இல்லை ஆனால் திருக்குறளில் திருவள்ளுவர் "தற்காத்து தற்கொண்டார் பேணி தகை சான்ற சொற்காத்து சோர்விலால் பெண்" என்று கூறி இருக்கிறார். 1500 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் இலக்கியத்தில் ஔவையார் போன்றவர்கள் அதிகமாக படித்திருக்கிறார்கள்.
இயேசுவின் பெண் சீடர்கள்:
லூக்கா 8: 1-3.
இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் 12 சீடர்கள் மட்டும் இருந்ததாக நாம் கருத முடியாது. 12 என்பது 12 கோத்திரங்களை குறிக்கிறது. எனவே அவருடைய ஊழியத்தில் பெண்கள் தொடர்ந்து தங்கள் ஆஸ்திகளினால் அவருக்கு பணிவிடை செய்தார்கள். அவர்களில் முக்கியமானவர் 1. மகதலேனா மரியாள் முதன்மையானவர் ஆவார். நான்கு நற்செய்திகளிலும் இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். நான்கு நூலிலும் 12 முறை இவர் பெயர் வந்துள்ளது. மற்ற எந்த சீடருக்கும் இந்த வாய்ப்பு இல்லை. இவர் முக்கியமாக சிலுவைப் பாட்டிலும் உயிர்த்தெழுதிலும் பங்கு பெற்றவர். ஏழு பிசாசுகளிருந்து அவரை இயேசு கிறிஸ்து விடுதலை செய்தார். அதன்காரணமாக அவர் ஊழியத்தில் பணிவிடை செய்தார். எனவே இவர் சிடர்கரளுக்கெல்லாம் சீடர் எனப்படுகிறார். "Appostelic to Appostels . இயேசுவுக்கு பணிவிடை செய்தவர்கள் ஐந்து பேரும் மேரி மேரி என்று வருகிறது.
2. Mary Cleofas
3. Mary Salome
4. Mary - mother of James and Jose. 5.Mary of Bethany and
6. Last but not least Mary the mother of Jesus.
ஆண்டவருக்கே பாடம் எடுத்த பெண்:
மார்க் 7 :24-30
இயேசு கிறிஸ்து ஒரு நாள் தீர் பகுதிக்குள் சென்றார் அப்பொழுது காணானிய பெண் இயேசுவின் காலில் விழுந்தாள். அவருடைய மகளை தீய ஆவி பிடித்திருந்தது. இவர் கிரேக்க பெண். இயேசுவிடம் தம் மகளிடமிருந்த பேயை ஒட்டி விடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரை பார்த்து முதலில் பிள்ளைகள் திருப்தி அடையட்டும் பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுவது முறையல்ல என்றார். அதற்கு அப்பெண் ஆம் ஐயா ஆனாலும் மேசையின் கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே என்று பதில் அளித்தார், Referring dog is an insult but she gently answer to Jesus. She become a teacher to teacher.
3. அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தில் பெண்கள்:
பவுலின் ஊழியத்தில் 17 பெண்கள் கலந்து கொண்டு வெவ்வேறு இடங்களில் ஊழியம் செய்தனர். பவுலின் ஊழியத்தில் துணையாக இருந்தனர். ரோமர் 16:1,7,12-16 இவ்வதிகாரத்தில் பெயிபா, பிரிஸ்கா, மரியா, யூனியா,திரிபோசா, பெர்சி, ஒலிம்பா, பிலமோன்1:2.அப்பியா, மற்றும் தியோரவை சேர்ந்த லிடியாவும், லவோதிகேயாவை சேர்ந்த நிம்பியாவும், தீமொத்தேயூமுவின் பாட்டியும் தாயும் பவுலின் உடன் பணியாளர்கள். முதன் முதலில் திருச்சபைகள் பெண்களின் இல்லங்களில் தான் கூடின. இறைபணியில் பெண்களின் பங்கு மகத்தானது பெரும்பாலான ஆலயங்கள் பெண்கள் தான் அதிகமாக வருகிறார்கள் இயற்கையாகவே பெண்களுக்கு அர்ப்பணிப்பும் தைரியமும் இறை அன்பும் நிறைந்தவர்கள். கிறிஸ்துவில் ஆண் என்றும் பெண் என்றும் பாகுபாடு இல்லை. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் பெண்களை பிரசங்கிக்க அனுமதிக்கவில்லை. அவருடைய விளக்கம் ஆதாம் முதலில் படைக்கப்பட்டான் என கூறுகிறார். 1தீமொத்தேயு 2 :11,12.
இறையரசை இவ்வுலகில் படைக்க ஒன்று சேர்ந்து உழைப்போம் இரைப்பணி ஆற்றுவோம் என்ற உறுதியோடு செயல்படுவோம்.
Comments
Post a Comment