கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.
அறிமுகம்: கிறித்துவின் அன்பர்

களே! இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
கிறித்துவை அர்ப்பணித்தல் (The Presentation of Christ )
அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Dedication, Devotion என்று பொருள். " ஒருவருக்காக அல்லது ஒரு பணிக்காக தன்னை க் கொடுப்பது, முழுமையாக ஈடு படுவது."அர்ப்பணிப்பு என்பதா கும். அர்பணிப்பின் அடிப்படை,
வேதத்தின் படி,"உன் முழு இதயத் தோடும், உன் முழுஉள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!"(இணைச் சட்டம் 6:5)
ஒருவரின் ஆன்மாவை கடவுளு க்கு அர்ப்பணிப்பது அல்லது கடவுளின் சேவைக்கு அர்ப்பணி ப்பது அர்பணிப்பாகும். கிறித்தவர்களாகிய நாம், நம்மை நாமே கடவுளின் இறையரசை
இவ்வுலகில் கொண்டுவர நம்
வாழ்வின் மூலம் செயல்படுத்தி
காட்டுவதே கிறித்துவின் அர்ப் பணிப்பாகும்.
1.சாமுவேலை அர்பணித்தல். Presentation of Samuel to God. 1 சாமுவேல் 1:19-28.
கிறித்துவுக்கு பிரியமானவர்களே!
எப்பிராயீம் என்ற மலை தேசத்தி ல் ராமதாயீம் என்ற ஊரில் எல்க்கானாவின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். எல்க்கானா என்றால், "தேவன் உன்னை படைத்திருக்கிறார்" என்று பொருள். எல்க்கானா லேவி கோத்திரத்தில் கோராகின் வம்சத்தில் வந்தவன் (எண்ணாகமம் 16:1–4). லேவி கோத்திரத்தார் பிரதான ஆசாரியர்களுக்கு உதவியாக இருப்பவர்கள். கோராகின் வம்சத்தார் மோசேக்கு விரோத மாகக் கலகத்தை எழுப்பினர். எனவே கர்த்தர் அவர்களை அது வரை யாரும் மரித்திராத வகை யில் நிலத்தைப் பிளந்து உயி ரோடு பாதாளத்தில் இறக்கினார். இந்த கீழ்படையாமின் சாபத்தை இந்த எல்க்கானாவின் குடும்பம் அனுபவித்துக் கொண்டிருந்தது.
எல்கானாவுக்கு இரண்டு மனை விகள். மூத்தவள் பெயர் அன் னாள். அன்னாளுக்கு குழந்தை கள் இல்லாததால் இரண்டாவதாக பெனின்னாளை மனைவியாக்கி னான். பெனின்னாளுக்குக் குழந் தைகள் இருந்தனர். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்ப த்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். அதைப் பெற்றுக் கொண்ட வள் பெனின்னாள். அதனால் அவள் மிகவும் கர்வம் கொண்டவ ளாக இருந்தாள். கர்த்தர் இரண்டு மனைவிகளை அனுமதித்ததில் லை. அன்னாள் என்றால் கிருபை பெற்றவள் என்று பொருள். பெனின்னாள் என்றால் விலை யேறப் பெற்ற முத்து என்று பொருள். கர்த்தர் அன்னாளின் கர்ப்பத்தைத் தற்காலிகமாக அடைத்திருந்தார் (1சாமுவேல்1:6). பல வருடங்கள் ஆகியும் அன்னா ளுக்குக் குழந்தை இல்லாததால் பலர் பலவிதமாக பேசியிருப்பார் கள். மலடி என்ற பட்டமும் சூட்டி யிருப்பார்கள். அது அவளைத் துக்கத்தில் கொண்டு போயிரு க்கும். யாக்கோபின் மனைவி லேயாளுக்குக் குழந்தை பிறந்த வுடன் ராகேல் பொறாமைப் பட்ட தைப் போல அன்னாள் பொறா மைப் படவில்லை. ராகேல் யாக் கோபிடம் “எனக்குப் பிள்ளை கொடும் இல்லாவிட்டால் நான் சாகிறேன்.” என்று சண்டையிட்ட தைப் போல (தொடக்க நூல் 30:1) அன்னாள் தன் கணவரிடம் சண்டை போடவில்லை.. மேலும் பெனினாளிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படவில்லை. பெனின்னாளின் பிள்ளைகளை
வெறுத்ததாகவும் கூறப்படவில் லை. தன் கணவன் தன்னைஅதிக மாக நேசித்ததினால் பெருமை யினால் பெனின்னாளை அற்ப மாகவும் எண்ணவில்லை. குணசாலியான ஸ்திரீயாகவே அன்னாள் இருந்தாள்.ஆசரிப்பு கூடாரம் சீலோவில் (பெத்தேலு க்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்கு கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்கே எப்ராயீம் மலைப்பகுதி யில் சீலோ (Shiloh)அமைந்துள் ளது (நீதித் தலைவர்கள் 21:19). இது இருந்தது. ஒவ்வொரு ஆண் டும் மூன்று முறை இஸ்ர வேலில் ஆண் மக்கள் யாவரும் அங்கு செல்ல வேண்டும் என்று நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டுள்ளது (இணை சட்டம் 16:16). எல்க்கானாவும் தன் குடும்பத்து டன் ஆண்டுதோறும் சீலோவுக்குச் சென்று தேவனைத் தொழுது கொள்வான்.அங்கு ஏலி என்ற ஆசாரியன் இருந்தான். ஒரு கால த்தில் கர்த்தர் நீதி அரசர்களைக் கொண்டு வழி நடத்தி வந்தார். பின்னால் அரசர்களை ஏற்படுத் தினார். இடைப்பட்ட காலத்தில் சிம்சோன் மரித்தபின் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த நீதி அரச ர்கள் இல்லாத நிலையில் குழப் பமான காலகட்டத்தில் தேவனு டைய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்த ஏலி ஜனங்களை நியாயம் விசாரித்து வந்தான். எல்க்கானா தேவனுடைய சமூகத்தில் பலி செலுத்திவிட்டு அந்த விருந்தை தன்னுடைய இரண்டு மனைவி களுக்கும், எல்லா பிள்ளைகளுக் கும் பங்கு போட்டுக் கொடுப்பான் அதில் அன்னாளை அவன் அதிக மாக நேசித்தபடியினால் அவளு க்கு இரண்டு பங்கு கொடுப்பான்.
கர்த்தருடைய ஆலயத்துக்கு செல் லும் பொழுது பெனின்னாள் அன்னாளை வருத்தப்படும் படி பேசுவாள். வருடா வருடம் ஆலய த்துக்குச் சென்று வந்தாலும் அவ ளிடம் மாற்றம் எதுவும் காணப் படாமல் வாழ்ந்தாள். பெனின்னாள் ஆலயத்துக்குச் செல்லும் போது “தன்னை வருத் தப்படுத்தும்படி பேசுவாள் என்றோ, அவர்களுடன் தான் பலி செலுத்த வரவில்லை என்றோ, கர்த்தர் தனக்கு ஒரு குழந்தை யைக் கொடுத்தபின் வருகிறேன்” என்றோ கூறாமல் அன்னாள் கூடவே செல்வாள். சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி அவளுக் குள் இருந்ததால் அவளுக்குப் பதில் ஏதும் கூறமாட்டாள். ஆனால் அங்கு சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள். அதனால் தேவன் அவளைக் கனம் பண்ணி னார். எல்க்கானா அவள் அழுவ தைப் பார்த்து அவளுக்கு ஆறுத லாக “பத்து குமாரரைப் பார்க்கி லும் நான் உனக்கு விசேசித்த வன்” என்பான். பத்து குமாரர்க ளும் தரும் சந்தோஷம், சமாதா னம், ஆறுதலை ஒரு புருசனால் தர முடியும் என்று அன்னாளிடம் உறுதியளிப்பான். நம்முடைய சிக்கலைத் தீர்ப்பதற்கு எந்த மனி தனாலும் முடியாது. ஆனால் தேவ னால் எல்லாம் முடியும் என்ற விசுவாசத்தோடு அன்னாள் தனியாக நின்று மனங்கசந்து அழுது தேவனிடம் விண்ணப்பம் பண்ணினாள். அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்ட கர்த்தர் அவளை நினைத்தருளினார். சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.சாமுவேல் என்றால் "கடவுளிடம் கேட்டவர்". பிள்ளை வளர்ந்து பால் மறந்த பின் தான் பண்ணிய பொருத்த னையை நிறைவேற்றத் துணிந் தாள். அன்னாள் தான் மிகவும் விரும்பி கேட்டு பெற்றுக் கொண்ட ஆண் மகனை தன்னுடைய பொரு த்த னையின் படி கர்த்தருடைய ஆலயத்தில் கொண்டுவந்து விட்டாள். அப்போது சாமுவேலு க்கு மூன்றிலிருந்து ஐந்து வயதிற் குள் இருந்திருக்கலாம். அவனைப் பிரிவது அன்னாளுக்கு வேதனை யாக இருந்த போதிலும் தான் தேவனிடம் பண்ணிய பொருத்த னையை நிறை வேற்றினாள். தனக்குப் பிரியமானதை, அருமை யானதை கர்த்தருக்குக் கொடுத் தாள். ஏலியின் பிள்ளைகள் நல்ல வர்கள் அல்ல என்றும் அன்னா ளுக்குத் தெரியும் ஆனாலும் அவள் அவனைக் கொண்டு ஆலய த்தில் விட்டு விட்டாள். ஏலியை நம்பி சாமுவேலை விடவில்லை. தேவனை நம்பி சாமுவேல் என்ற பிள்ளையை அங்கு ஒப் படைத்தாள். அதன் பின்னும் ஒவ் வொரு வருடமும் ஒரு சின்ன சட்டையைத் தைத்துக் கொண்டு சாமுவேலைப் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சாமுவேல் ஏலியிடம் வருவதற்கு முன்னே கர்த்தர் ஒரு தீர்க்கதரி சியை அனுப்பி அன்னாள்பிள்ளை யில்லாமல் பல வருடங்கள் இருந்தபின்னும் தனக்குப் பிறந்த முதல் குழந்தையைத் தான் பொரு த்தனை பண்ணியபடி தேவனுடை ய ஆலயத்தில் விட்டுவிட்டபடியால் தேவன் அவளுக்கு இன்னும் மூன்று குமாரர்களையும், இரண்டு குமாரத்திகளையும் கொடுத்தார் (1சாமுவேல்2:21). ஆரோனின் குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரிய பணி எப்பீராயீமியரான எல்க் கானா, அன்னாளின் மகனான சாமுவேலுக்குக் கர்த்தர் கிடைக் கச் செய்தார். அது மட்டுமல்லாமல் நீதி அரசராகவும், ஆசாரியனா கவும். தீர்க்கதரிசியாகவும், அரசர் களுக்கு அபிசேகம் பண்ணுகிற வனாகவும் கர்த்தர் அவனை ஆக்கினார். சாமுவேல் செய்கின்ற ஊழியத்தை அவனது தாயான அன்னாளே கண்டு சந்தோஷப்பட சொந்த ஊரிலேயே பணி செய் தான்.ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப் பணிக்கி றேன், அவன் தன் வாழ் நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதா ர்கள். ஆலயமே, அவர் வீடு. சிறுவனாக இருக்கும் போதே,
மூன்றுமுறை கடவுளால் அழைக் கப்பட்டார். இஸ்ரவேலரின் முதல் அரசனான சவுல், மற்றும் தாவிது
அரசர்களை அபிசேகம் செய்தார்.
கடவுளுக்கு பணி செய்ய நசரேய னாகவே வாழ்வை அற்பணித்தார்.
2.உயிருள்ள பலியாக உங்களை அர்ப்பணியுங்கள்.
Offer yourself as a living Sacrifice. உரோமையர் 11:33-36, 12:1,2.
அன்பின் இறைமகாகளே! திரு
தூதர் பவுல் அடிகளார் கிபி 57-58
ஆண்டுகளில் இத் திருமுகத்தை
ரோமாபுரியில் உள்ள சிறு பான் மை கிறித்தவர்களுக்கு எழுதி னார். ரோமில் உள்ள கிறித்த வர்கள் பெரும்பகுதி புற இனத் தார். மேலும் மிருக பலிகளை செலுத்த எந்த கடமையும் இல் லை. எவ்வாறாயினும், நியாயப் பிரமான சட்டத்தின்படி விலங்கு பலிகளை மிஞ்சும் ஒரு தியாகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது என்று பவுல் கூறுகிறார். கிரித்துவர் தங்கள் உயிரை ஒரு விலங்கு பதிலாக அனுமதிக்க முடியாது, மாறாக தங்கள் சொந்த உயிர்களை தியாகம் செய்ய வேண்டும். எவ்வாறாயினும், தேவை என்பது இனி சடங்கு படுகொலை அல்ல, மாறாக உயிருள்ள நபரை கடவுளுக்கு சமர்ப்பிப்பது - ஒரு உயிருள்ள தியாகம் - கடவுளின் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை - கடவுளின் சித்தத்தைச் செய்வத ற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க் கை - அதாவது தியாகம், நம்பிக் கை மற்றும் விசுவாசம் ஆகும்.
இந்த உயிருள்ள சுய-தியாகம், "பரிசுத்தமானது, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை யிலும், திங்கட்கிழமை பணியிடத் திலும் தங்கள் உடலை கடவுளின் நோக்கங்களுக்காக சமர்ப்பிக்க வேண்டும். கடமை பொருந்தாத தருணமோ அல்லது சூழ்நிலை யோ இல்லை. இதுவே "எருசலேம் ஆலயத்தின் வழிபாட்டு முறை யின் உண்மையான தியாக வழிபாடு என்கிறார்."ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்? அவருக்கு அறிவுரையாளரா ய் இருப்பவர் யார்? அந்த அளவி ற்கு நமக்கு அறிவும், ஞானமும்
குறைவு.சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னி ட்டு உங்களை வேண்டுகிறேன் என தூய பவுல், நம்மை கடவுளு க்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக நம்மையே படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார் ந்த வழிபாடு என்கிறார்.
கிறித்தவர்களாகிய நாம் ஏதாவது
ஒரு விதத்தில், ஒரு வழியில் நம் வாழ்வை கிறித்துவுக்காக தியாக மாக அர்பணிக்க அழைக்கப்படு கிறோம்.அதற்கு, நம் மனதைப் புதுப்பிப்பதன் மூலமே மாற்றங் கள் ஏற்படும்.நாம் இந்த உலகத் தின் போக்கிற்கு இணங்காதீர் கள். நாம் இந்த உலகத்தார்
அல்ல, கிறித்துவின் உலகத்தார்.
அவருடன் இனைந்து வாழ
உயிருள்ள பலியாக நம்மை அர்ப்
பணிப்போம்.
3. கிறித்துவை அர்ப்பணித்தல்.
The Presentation of Christ. Luke 2:22-40.
கிறித்துவுக்கு பிரியமானவர்களே!
யூத வழக்கின் படி, ஒவ்வொரு யூத சிறுவனும் செய்ய வேண்டிய மூன்று பழங்கால சடங்குகளை நியாயப்பிரமானத்தின் படி இயே சுவும் மேற்கொள்வதை இங்கு முதலில் காணாபோம்.
(i) விருத்தசேதனம்.
ஒவ்வொரு யூத சிறுவனும் அவன் பிறந்த எட்டாவது நாளில் விருத்த சேதனம் செய்யப்பட்டான். அந்த சடங்கு மிகவும் புனிதமானது, அது ஒரு ஓய்வுநாளில் கூட நடத்தப் படலாம், சட்டம் முற்றிலும் அவசி யமில்லாத மற்ற எல்லா செயல் களையும் தடை செய்தது; அவ்வாறே இயேசு என்ற சிறுவன் தன் பெயரைப் பெற்றார் (லூக்கா 2:21)
2 அர்ப்பணிப்பு:
நியாயாப்பிரமான சட்டத்தின் படி
( விடுதலை பயணம் 13:2 ) ஒவ்வொரு முதல் பிறந்த ஆண். மனிதர்கள் மற்றும் கால்நடைகள் இரண்டும் கடவுளுக்கு புனிதமா னவை.
3. பலி:
லேவியர் 12:1-8ன்படி, தனக்கு
பிறந்த குழந்தைக்காக ஒரு செம்
மறி ஆட்டை எரிபலியாகவும் (தகனபலி),அல்லது புறாக் குஞ்சு
அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவ நிவாரண பலியாக கோவில்
குருவிடம் சந்திப்புக்கூடார நுழை
வாயிலில் செலுத்தவேண்டும். அதன்படி, இயேசுவின் தாயாகிய
மரியாள் ஏழைகளின் காணிக்கை
யான இரண்டு புறாக்குஞ்சுகளை
செலுத்தினார்.இந்த மூன்று விழா க்களும் விசித்திரமான பழைய விழாக்கள்; ஆனால் மூன்று சடங் குகளிலும், ஒரு குழந்தை கடவுளி ன் பரிசு என்ற நம்பிக்கை உள்ளது.
சிமியோனின் காத்திருப்பு:
அன்பானவர்களே!சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனு சன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிற வனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்த ஆவி இருந்தது ஜெபத் திலும், வழிபாட்டிலும், பணிவுட னும் உண்மையுடனும், கடவுள் தம் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நாளுக்காக அவர் காத்திருந்தார். கடவுளின் சொந்த அபிசேகம் செய்யப்பட்ட அரசரை காண்பதற் கு முன்பு அவருடைய வாழ்க்கை முடிவடையாது என்று கடவுள் பரிசுத்த ஆவியின் மூலம் அவரு க்கு வாக்குறுதி அளித்திருந்தார். குழந்தை இயேசுவில் அவர் அந்த ராஜாவை அடையாளம் கண்டு மகிழ்ச்சியடைந்தார்..
சிமியோன் இயேசுவின் பணி எது என சுருக்கமாக தருகிறார்.
(i) பலர் வீழ்ச்சியடைய அவர் காரணமாக இருப்பார்.
(ii) பலர் எழுவதற்கு அவர் காரண மாக இருப்பார். இயேசுவின் கரம்தான் ஒரு மனிதனை பழைய வாழ்க்கையிலிருந்து புதிய வாழ்க்கைக்கு, பாவத்திலிருந்து நன்மைக்கு, அவமானத்திலிருந்து மகிமைக்கு உயர்த்துகிறது.
(iii) அவர் அதிக எதிர்ப்பைச் சந்திப்பார். இயேசு கிறிஸ்துவிடம் நடுநிலைமை இருக்க முடியாது.
iv) இவரின் உள்ளத்தின் ஆவியை
ஒரு வாள் ஊடுறுவி பாயும்.என இயேசுவை முன்னறிவித்தார்.
இறைவாக்கினர் அன்னா:
அன்புள்ள இறைமக்களே! அன்னாள் ஆசேர் குலத்தைச் சேர்ந்தவர். இவள் பானுவேலின் மகள். இவர் இறைவாக்கினர். அவர் வயது முதிர்ந்தவர்; மண மாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவளுக்கு எண்பத்து நான்கு வயது.அவள் ஒருபோதும் ஜெபிப்பதை நிறுத்தவில்லை. பொது வழிபாடு பெரியது; ஆனால் தனிப்பட்ட வழிபாடும் பெரியது. யாரோ உண்மையாகச் சொன்னது போல், "முதலில் தனியாக ஜெபிப்பவர்கள் ஒன்றா கச் சிறப்பாகப் பிரார்த்தனை செய் கிறார்கள்." இந்த இறை வேண்ட லே, பல வருடங்கள் அண்ணாவை கசப்பில்லாமல், அசைக்க முடியா த நம்பிக்கையில் விட்டுச் சென் றன, ஏனென்றால் அவள் நாளுக் கு நாள் தனது தொடர்பை கடவுளி டம் பேணிக் கொண்டாள், ஆலய வாசமாக கொண்டாள்.அவரும் சரியான நேரத்தில் அங்கு வந்து குழந்தை ஏசுவை புகழ்ந்து, எருச லேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினார். தன் வாழ் நாளை கடவுளுக்காக அர்ப்பணித் தவர்கள் சிமியோனும், அன்னா ளும், இரட்ச்சகரை கண்டனர்.
4. கிறித்தவர்களின் அர்பணிப்பு:
கிறித்தூவுக்கு பிரியமானவர் களே! கிறித்தவர்களாகிய நாம்
நம் வாழ்க்கையை பல வழிகளில்
கிறித்துவுக்காக அர்ப்பணிக்கி றோம்.
1. நாம் நம் ஆலயம் செல்கிறோம்.
அதன்மூலம் ஆண்டவரின் நான் காவது கட்டளையான ஓய்வு நாளை தூயதாய் ஆசிரிப்பாயாக என்பதை நிறைவேற்றுகிறோம்.
2, ஆலயத்திற்கு செலுத்தவே ண்டிய காணிக்கை, மாத சந்தா,
நன் கொடைகள் தருகிறோம்.
3. திருமுழுக்கு என்ற அருட்சாதன
த்தை குடும்பத்தில் பின்பற்றி
பிள்ளைகளுக்கு கிறித்தவ பெயர்
வைக்கிறோம்.
4. சமயம் வாய்த்தாலும், வாய்க்கா விட்டாலும் திரு வசனத்தை பிரசங்கிக்கிறோம்.
5. நம் கைபேசி mobile மூலம்
தினமும் ஒரு வசனத்தை பலரு க்கு அனுப்புகிறோம்
6. கிறித்தவர்களாக மாறியதால்
சிறுபான்மையினராக கருதி, அரசு
வழங்கும் சலுகைகள் மறுக்கப்
படுவதை தாங்கிக் கொள்கிறோம்.
இன்னும், பல விதங்களில் நாம்
நம்மை கடவுளுக்காக அர்பணி த்து வாழ்கிறோம். இந்த அர்ப் பணிப்பு தொடர கடவுள் நம்மை
காத்து, வழிநடத்துவராக! ஆமேன்.
Prof.Dr David Arul Paramanandam
Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment