குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்"

இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
பன்முகத்தன்மையில் ஒற்றுமை
இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது.
நாட்டின் 77-வது குடியரசுத் தினம் 'வந்தே மாதரம்' 150-வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்பம்சமாக, 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் உருவானதன் 150-வது ஆண்டு கொண்டாட்டங்களும் இணை ந்து நடைபெற உள்ளன.
இந்திய அரசியலமைப்பு நாட் டின் ஆன்மாவாக விளங்கு கிறது. இது உலகின் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகு ம். இது அனைத்து குடிமக்களுக் கும் அடிப்படைஉரிமைகள், சட்ட த்தின் முன் சமத்துவம், மதச்சார் பின் மை, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்கி றது. 77 ஆண்டுகளுக்குப் பிறகு ம், இது இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை வழிநடத்துகிறது.
கிறித்தவர்களின் குடியரசின் கடமையும், பொருப்பும்.The duty and responsibility of the Christian Republic.
அன்பர்களே!குடியரசு தினத்தில் கிறிஸ்தவர்களின் பங்கு என்பது, சுதந்திரப் போராட்டத் தில் அவர்களின் பங்களிப்பு, சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு, மற்றும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்க ளை பின்பற்றுவதில் உள்ள முக்கியத்துவத்தைக் குறிக்கி றது; அவர்கள் கல்வி, சுகாதாரம், மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் பங்களித்து, இந்தியாவை ஒரு மதச் சார்பற்ற, பன்மைத்துவ நாடாக உருவாக்க உழைத்துள்ளனர். அவர்கள் இந்திய அரசியலமைப்பைப் பின்பற்றுவதன் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டவும் செயல்படுகின் றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத் தில் கிறிஸ்தவ பெண்கள் உட்பட பல கிறிஸ்தவர்கள் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர், அவர்களில் சிலர் முக்கியப் பங்காற்றியவர் கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (அரசியல்வாதி), ஏ.கே. ஆண்ட னி (முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்), பி.சி. ராய்சமூக நீதியை வலியுறுத்தி, சுதந்திர இந்தியாவின் நிறுவனங்களை உருவாக்க உழைத்துள்ளனர்.
மற்றும் அமிர்த கவுர், ஹரேந்திர குமார் முகர்ஜி, ஜே.சி. குமரப்பா, பண்டித ரமாபாய், ஜார்ஜ் ஜோசப், ஜோச்சிம் ஆல்வா, டைட்டஸ்ஜி (தேவர்துண்டியில் டைட்டஸ்), மற்றும் மதுசூதன் தாஸ்போன்ற முக்கிய நபர்கள் உட்பட ஏராளமான இந்திய கிறிஸ்தவர்கள் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்றனர்.
சமூக சேவை மற்றும் வளர்ச்சி:
கல்வி நிறுவனங்கள், மருத்து வமனைகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை நிறுவி, இந்தியாவின் சமூக வளர்ச் சியில் முக்கியப் பங்காற்றியுள் ளனர்.
குடியரசு தினத்தைக் கொண்டா டும்போது, இந்திய அரசியல மைப்பையும், அதன் ஜனநாயகக் கோட்பாடுகளையும் கடைப் பிடிப்பதன் மூலம், நாட்டின் சட்ட ங்களையும், நீதியையும் நிலை நாட்ட கிறிஸ்தவர்கள் உறுதிய ளிக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள், நாட்டின் பன்மை த்துவத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் பேணுவதில் முக்கியப் பங்காற்றுகின்றனர், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலி யுறுத்துகின்றனர்.
குடியரசு தினத்தின் உண்மை யான நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அரசியலில் பங்கேற் பதன் மூலம், அரசாங்க முடிவுகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்ப டுத்தும் தாக்கத்தை உணர்ந்து அமைதி வழியில் செயல்படு கின்றனர்.
கிறிஸ்தவர்களின் பங்கு என் பது, நாட்டின் சுதந்திரம், வளர்ச் சி, சமத்துவம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டு வதில் அவர்களின் தொடர்ச்சி யான அர்ப்பணிப்பைக் குறிக் கிறது.
கேள்வி குறியாகும் இந்தியாவின் ஒருமைப்பாடு.
India's integrity is becoming a question mark".
அன்பர்களே! இந்திய அரசியல மைப்பின் மதச்சார்பின்மை பல்வேறு பிரிவுகளில் வேரூன்றி யுள்ளது, முதன்மையாக தனி நபர் உரிமைகளை உத்தரவாதம் செய்யும் பிரிவுகள் 25-28 (மத சுதந்திரம்), மற்றும் சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாததை உறுதி செய்யும் பிரிவுகள் 14, 15, 16,1976 ஆம் ஆண்டு 42 வது திருத்தத்தின் மூலம் "மதச்சார் பற்ற" என்ற வார்த்தை முகவுரை யில் (𝙿𝚛𝚎𝚊𝚖𝚋𝚕𝚎)சேர்க்கப்பட்டது, ஆனாலும், அமைதி வழியில் வாழும் கிறித்தவர்களுக்கு 2025ம் ஆண்டு கிறிஸ்மஸ் மிக வும் பாதிக்கப்பட்ட நாளானது. இந்தியாவின் பல மாநிலங்க ளில் வன்முறை, நாச வேலை, தீ வைப்பு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை சீர்குலைத் தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்ப வங்கள் முதன்மையாக கிறிஸ் தவ நிறுவனங்கள், பிரார்த்த னைக் கூட்டங்கள் மற்றும் பொது அலங்காரங்களில் நடந்தன, பெரும்பாலும் " மத மாற்றங்க ளை " தடுப்பது என்ற சாக்குப் போக்கின் கீழ் அல்லது "கலாச்சார விழிப்புணர்வை" பாதுகாத்தல் என்ற சாக்குப் போக்கின் கீழ். இந்த சம்பவங் கள் முதன்மையாக ஆர்எஸ்எஸ் மற்றும் பிற இந்துத்துவா வலது சாரி அமைப்புகளின் உறுப்பினர் களால் ஏற்பட்டன .
தென்னிந்திய திருச்சபை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்:Protest by the Church of South India, Madras Diocese.
அன்பர்களே! சென்னை CSI பேராய மறை மாவட்டத்தால் ஜனவரி 12, 2026 அன்று காலை 10:00 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் 'கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்' ஏற்பாடு செய்யப்ப ட்டது. இந்தப் போராட்டத்திற்கு சென்னை மறைமாவட்டத்தின் பேராயர் A. பால் பிரான்சிஸ் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். CSI Synod பேரவை பொதுச் செயலாளர், வழக்கறிஞர் சி. பெர்னாண் டாஸ் ரத்தின ராஜா சி.எஸ்.ஐ., நிகழ்வில் கலந்து கொண்டு 'கண்டனச் செய்தியை' வழங்கி, இந்திய தண்டனைச் சட்டத்தின் விதிகள், சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் அனைத்து மனிதகுலத் தின் சமத்துவத்தின் அடிப்படைக் கொள்கையின் மீது கவனத்தை ஈர்த்தார். நிகழ்ச்சிகளை சென்னைப் பேராய செயலர் அருட்திரு. அகஸ்ட்டின் பிரேம்ராஜ் தொகுத்து வழங்கி னார். கத்தோலிக்க திருச்சபை, இந்திய சுவிசேச சபை, பெந்தேகோஸ்தே சபைகள், ஆற்காடு லூத்தரன் சபையின் போதகர்கள் மற்றும் பரந்த நம்பி க்கை சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், கிறிஸ்தவர்கள், மத சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமைகள் மீறப்படுவதைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் வலுவான கிறிஸ்தவ ஒற்றுமை யையும் பிரதிபலித்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்சென்னை பேராய வட்டாரத் தலைவர்கள், ஆயர்கள், நிரு வனத்தலைவர் கள் மதுரை-ராம்நாடு மறை மாவட்டத்தின் பேராயர். டாக்டர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், சினோட் துறை இயக்குநர்கள், ஊழியர் கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பல CSI மறைமா வட்டங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தென்னிந்திய திருச்சபை நீதி, அமைதி மற்றும் மத சுதந்தி ரத்திற்காக நிற்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது, மேலும் அனைத்து குடிமக்களுக்கும் மத சுதந்திரத்திற்கான அரசியல மைப்பு உத்தரவாதத்தை நிலை நிறுத்துமாறு சிவில் அதிகாரிக ளையும் சமூகத்தையும் கேட்டுக் கொள்கிறது.
கிறிஸ்தவர்கள் வீதிக்கு வந்து போராடுவது இயேசு காட்டிய வழிகளில் ஒன்றாகும் இயேசு வின் காலத்தில் அவருக்கு யூத ஆலயங்களில் அவருக்கு இடம் கொடுக்க மறுத்த பொழுது தன்னுடைய நற்செய்தி பணி யை வீதிகளிலும், மலைகளிலும் கடற்கரையிலும், மேடைகளாக அமைத்து பணியாற்றினார்.
1. எழுந்து கட்டுவோம் வாருங்கள்.Come, let us rise and build. நெகேமியா 2:11-18.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! இறைவாக்கினர் நெகே மியா கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் யூத மக்களின் மறுசீரமைப்பு காலத்தில் வாழ்ந்த ஒரு முக்கிய நபர், அவர் பாரசீகப் பேரரசர் அர்த்தக்சஸ்தா I-ன் கீழ் எருச லேமின் மதில்களைக் கட்டினார். பாபிலோனிய அடிமைத்தனத் திலிருந்து யூதர்கள் திரும்பி வந்த பிறகு, எருசலேமை புனர மைக்கும் பணியில் ஈடுபட்டார், இது எஸ்ராவின் பணிகளுக்குப் பிறகு நடந்தது. இவர் வாழ்ந்த காலம்: கி.மு. 444-ல் சூசா நகரில் பாரசீகத்தில் வாழ்ந்தார்.
எருசலேமின் மதில் சுவர்களை மீண்டும் கட்டும் பணியை மேற் கொண்டார். பாரசீகப் பேரரசின் கீழ் யூதேயாவின் ஆளுநராக இருந்தார், அரசனுக்கு பானப் பணிவிடைக்காரராகவும் இருந் தார்.
இவர் இறைவாக்கினர்கள் எஸ்ரா மற்றும் மல்கியா ஆகி யோர் காலத்தைச் சேர்ந்தவர்.
எருசலேமின் அழிவைக் கண்ட நெகேமியா எப்படித் தலைவர் களைச் சந்தித்து, தேவனிடம் ஜெபித்தபின், சுவர்களைக் கட்டும் திட்டத்தை அவர்களிடம் வெளிப்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்று, "நாம் எழுந்து கட்டுவோம்" என்று அவர்களை உற்சாகப்படுத்தி னார் என்பதைக் காட்டுகிறது. நாம் (We )என்ற வார்த்தை பன்முகத்தன்மையை வெளி ப்படுத்துகிறது இந்த பகுதி, தேவனுடைய திட்டங்களை செயல்படுத்துவதில் ஜெபம், திட்டமிடல், சரியான நேரத்தில் மக்களை ஈடுபடுத்துதல், மற்றும் சவால்களுக்கு மத்தி யில் நம்பிக்கையுடன் செயல் படுவதன் முக்கியத்தை விளக்கு கிறது.
நெகேமியா எருசலேமிற்குச் சென்று மூன்று நாட்கள் தங்கியி ருந்து, இரவில் தனியாகச் சென்று, எருசலேமின் சிதைந்த சுவர்களை இரகசியமாகப் பார் வையிட்டார். தேவனால் தன் இருதயத்தில் வைக்கப்பட்ட பார த்தை யாருக்கும் சொல்லவில் லை.இவர் பள்ளத்தாக்கு வாசல் வழியாகச் சென்று, எருசலேமின் இடிந்துபோன மதில் சுவர்களை க் கட்டவும், நகரத்தைப் பாதுகா க்கவும், மக்கள் மீண்டும் குடியே றவும் செய்தார். , எருசலேமின் நிலையைக் கேட்டு வருந்தி, மன்னரின் அனுமதியுடன், தனது மக்களுடன் இணைந்து இந்த மாபெரும் கட்டுமானப் பணியை மேற்கொண்டார். சிதைந்த எருசலேம் நிலையைப் பார்த்து, திரும்பினார். தலைவர்களிடம், "எருசலேம் பாழாய்க் கிடக்கிறது, அதன் வாசல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டிருக்கின்றன" என்று கூறி, அவர்களின் நிலை யை விளக்கினார்.இதற்கு
தலைவர்கள், "நாம் எழுந்து கட்டு வோம்" என்று பதிலளித்தனர். நெகேமியா, "நம்மேல் கிருபை யாயிருக்கும் தேவனுடைய முகம் நமக்குத் துணையாக இருக்கி றது என்றும், ராஜா சொன்ன வார்த்தைகள் நமக்குக் கை கொடுத்திருக்கிறது என்றும் சொல்லி, அவர்கள் எழுந்து அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளை வலுப்படுத்தினார் கள்". இத்தகைய மாபெரும் கடவுளின் பணிக்கு ஜெபமும் திட்டமிடலும் (Prayer and Planning) தேவை. நெகேமியா தேவனை நம்பி ஜெபித்தபின், செயல்படு வதற்குத் தயாரானார். அன்பர்களே ஜெபம் மட்டும் போதாது; செயல் படவும், திட்ட மிடவும் வேண்டும்.தேவனால் கொடுக்கப்பட்ட திட்ட த்தை உடனடியாக எல்லோரிடமும் சொல்லாமல், இரகசியமாக ஆய்வு செய்து, திட்டமிட்டபிறகே வெளிப்படுத்தினார்.தான் கண்ட உண்மையையும், தேவனுடைய கிருபையையும் தலைவர்களிடம் தெளிவாக எடுத்துரைத்தார். இது அவர்களின் மனதை மாற் றியது.இதில் மிக முக்கியமான து கூட்டு முயற்சி (Collective Effort): “நாம் எழுந்து கட்டுவோம்” என்ற அவர்களின் பதில், வேலை க்கான அர்ப்பணிப்பைக் காட்டு கிறது. அனைவரும் ஒன்று சேர் ந்து வேலை செய்யத் தொடங் கினர். நெகேமியா, "தேவனுடை ய முகம் நமக்குத் துணையாக இருக்கிறது" என்று சொன்னது, அவர்களின் செயலுக்குக் கார ணமும், நம்பிக்கையும் கடவுள் என்பதை உணர்த்துகிறது.
எதிரிகளின் பேச்சுக்களுக்கு மத்தியில், நெகேமியா தன் நோக்கத்திலிருந்து பின்வாங்கா மல், வேலையைத் தொடர்ந்தார்.
இந்த வசனங்கள், ஒரு உன்னத மான நோக்கத்திற்காக எப்படித் திட்டமிட்டு, சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் இணை ந்து செயல்பட வேண்டும் என்ப தற்கு ஒரு சிறந்த உதாரண மாகும்.
புனித நகரமான எருசலேமின் சிதைந்த நிலை, கடவுளின் மக்கள் மீதுள்ள அவமானத்தைக் குறித்தது. சுவர்களை மீண்டும் கட்டுவதன் மூலம் தங்கள் கௌர வத்தையும், அடையாளத்தையும் மீட்டெடுக்க நெகேமியா விரும் பினார்.மதில் சுவர்கள் கட்டப் பட்டபோது, நெகேமியா மக்களி டையே சமய மற்றும் சமூக சீர்திருத்தங்களையும் மேற் கொண்டார். இது கடவுளை வணங்குவதற்கும், வழிநடத்து வதற்கும் உதவியது.
அன்பர்களே! இறுதியில், நெகே மியாவின் தலைமைத்துவத் தாலும், மக்களின் கடின உழைப் பினாலும், 52 நாட்களிலேயே மதில் சுவர்கள் மீண்டும் கட்டி முடிக்கப்பட்டன.
2.திருச்சபை ஒரே நம்பிக்கை கொண்ட மக்களின் கூடுகை. The church is a gathering of people of ONE faith.திருத்தூதர் பணி கள் Acts 4::32 -37.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருச்சபை என்பது ஒரே நம்பிக்கையைக் கொண்டு, இயேசு கிறிஸ்துவை மையமாக வைத்து ஒன்று கூடும் புனித மக்களின் கூட்டம் அல்லது இறைமக்கள் சமூகமாகும்; இது ஒரே உடல், ஒரே ஆவி, ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை மற் றும் ஒரே திருமுழுக்கைக் கொண்டு, கடவுளின்குடும்பமாக செயல்படுகிறது. ஆதி திருச் சபை கிறித்து என்ற ஒரே நம்பி க்கை கொண்ட மக்களினங்க ளின் கூடுகையாக இருந்தது. அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடை மைகளைத் தம் முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர் களுக்குப் பொதுவாய் இருந்தது. அவர்கள் அனைவரும் கடவுளுக் குச் சொந்தமானவராகவும், ஒரு உடன்படிக்கைக்கும் ஒரு சமூகத் திற்கும் சொந்தமானவராக இருப்பார்கள். அவர்கள் கடவுளு க்குச் சொந்தமானவராக இருக் கும்போது, அவர்கள் தன் வாழ்க் கையை வாழவும், தாங்களே முடிவுகளை எடுக்கவும், மற்ற வர்களுடன் உறவில் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆதித் திருச்சபையின் ஒற்று மை, கிருபை, பெருந்தன்மை மற்றும் ஊழியத்தை விளக்குகி ன்றன, அங்கு விசுவாசிகள் “ஒரே இருதயமும் ஒரே மன மும்” கொண்டிருந்தனர், சொத் துக்களைப் பொதுவாய்ப் பகிர் ந்து கொண்டனர், தேவையில் இருந்தவர்களுக்கு உதவினர், பர்னபா (Barnabas) என்பவர் ஆரம்பகால கிறிஸ்தவத்தில் திருத்தூதர் பவுலுடன் இணை ந்து பணியாற்றிய முக்கிய சீடர் ஆவார்; அவரது இயற்பெயர் யோசேப்பு, பர்னபா என்ற பெயர் திருத்தூதர்களால் சூட்டப்பட்டது.பர்னபா என்றால் "ஊக்குவிப்பவர்" என்று பொருள், இவர் சைப்பிரஸ் தீவைச் சேர்ந்த லேவியர். இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று திருத்தூதர்களுக்கு உதவினார், இவர்தான் பவுல் மனமாற்றம் அடைந்த பிறகு, அவரைமற்ற திருத்தூதர்களுக் கு அறிமுகம் செய்தார், மேலும் பல நற்செய்தி பயணங்களில் பவுலுடன் இணைந்து மிஷனரி பயணங்களை மேற்கொண்டார். புறஜாதிகளுக்குநற்செய்தியைப் பரப்பினார். அந்தியோக்கியாவில் கிறிஸ் தவ சமூகத்தை உருவாக்க உதவினார். நல்லவர், பரிசுத்த ஆவியும் விசுவாசமும் நிறைந் தவர்" என்று லூக்கா இவரைப் பற்றி விவரிக்கிறார். இவர் எருச லேம் சங்கத்தில் பங்கேற்று, பின்னர் சைப்ரஸ் நாட்டில் மறை சாட்சியாக மரித்தார்.
3.கிறித்துவ ஒருமைப்பாடே திருச்சபையின் பலமாகும்.
The Unity of Christianity is the strength of the Church. மாற்கு Mark 6:32-44.
கிறிஸ்துவின் அன்பர்களே!
நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவால் நிகழ்த்தப்பட்ட ஒரே குறிப்பிட்ட அற்புதம் ஐந்தப்பம் இரண்டு மீன்கள். இது இயேசுவின் பரிவையும், தேவைகளை நிறைவு செய்யும் வல்லமையை யும், மக்களைச் சார்ந்து கொள் ளாமல் கடவுளிடம் சார்ந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது, மேலும் இது "வாழ்வின் அப்பமாகிய" இயேசுவை நமக்குக் காட்டுகிறது, நமது ஆன்மீகப் பசிக்கு அவரே உண்மையான திருப்தி என வலியுறுத்துகிறது. இது கலிலேயா கடலின் வடகிழ க்கு கரையில் ஒரு "தொலை தூர" அல்லது "பாலைவன" இடத்தில் நடந்தது இந்த அற்பு தம், இயேசு தம்மையே "ஜீவ அப்பமாக" கொடுக்கும் திருவிருப்ப (Eucharist) sacrament-க்கு ஒரு அடையாள மாகும்.
திருத்தூதர்கள் திரும்பி வந்து தங்கள் பணிகளைப் பற்றி இயேசுவிடம் கூறும்போது, இயேசு அவர்களை தனிமை யான இடத்திற்குச் ஓய்வெடுக்க அழைக்கிறார், ஏனெனில் மக்கள் வருகையும் போக்குமாக இருந்ததால் அவர்களுக்கு உண்ண நேரம்கூட இல்லை. இது இயேசு தம் ஊழியர்களின் சோர்வை உணர்ந்து, அவர்களுக் கும் ஓய்வு தேவை என்பதை உணர்த்துகிறது.மக்கள் இயேசு வைப் பின்தொடர்ந்து, "மேய்ப் பன் இல்லாத ஆடுகளைப் போல" இருந்தனர். இயேசு அவர்கள் மீது பரிவு (𝙲𝚘𝚖𝚙𝚊𝚜𝚜
𝚒𝚘𝚗) கொண்டு, அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்
இந்த சம்பவம் நடந்தபோது "மாலை வேளை" என்று குறிப் பிடப்பட்டுள்ளது, இது பல மணி நேரங்கள் போதனை நடந்திருக் கலாம் என்பதைக் காட்டுகிறது.
இயேசுவின் பரிவு, மக்கள் கூட்ட த்தின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் கொண்ட ஒரு சிறுவனைக் கண்டார். கிறித்துவிடம் .அவனை கொண் டு வந்தார்.அச்சிறுவன் வைத்தி ருந்த ஐந்து ரொட்டிகள் மற்றும் இரண்டு மீன்களைக் கொண் டு, இயேசு பிட்டு, அனைவருக் கும் கொடுத்து, அவர்கள் திருப் தியடையும் வரை அளிக்கிறார், மேலும் மீதமுள்ள துண்டுகளை 12 கூடைகளில் சேகரிக்கிறார்.
யோவான் நற்செய்தியில் இயேசு, "நானே வாழ்வின் அப்பம்" என்று கூறுவது இந்தப் பகுதிக்குப் பொருள் சேர்க்கிறது (யோவான் 6:35).
இந்த அற்புதத்தின் மூலம், இயேசு தம்மைப் பின்பற்றுவ தன் மூலம் மட்டுமே உண்மை யான ஆன்மீகப் பசியைத் தீர்க்க முடியும் என்பதைக் காட்டுகி றார்.
இயேசுவின் இரக்கம் நிறைந்த பார்வை இயேசு மக்களின் உடல் மற்றும் ஆன்மீகத் தேவைகள் இரண்டையும் கவனிக்கிறார்.
இயேசுவின் அற்புதங்கள் வெறு ம் செயல்கள் அல்ல; அவை அவருடைய வல்லமையையும், (Power) அவருடைய இதயத்தை யும் (Heart) வெளிப் படுத்துகின் றன, நம்மிடம் குறைவாக இருந் தாலும், தேவனுடைய கிருபை யால் அது போதுமானதாக மாறு ம் என்பது இதன் வெளிப்பாடு. இயேசு தம்முடைய சீடர்கள் ஓய் வெடுக்க விரும்பினார், ஆனால் இரக்கம் அவரை சேவை செய் யத் தூண்டியது - மாற்கு 6:34. இயேசு கூட்டத்தை குழுக்களாக வும், வரிசையாகவும் வரிசைப் படுத்தினார். இதில் ஒழுக்கம் பின்பற்றப்படுகிறது.இத்தகைய ஒழுங்குமுறை வழக்கமானது, அவருடைய படைப்பால் சாட்சி யமளிக்கப்படுகிறது -
அவர் இத்தகைய ஒழுங்குமுறை யை நமது தேவாலயங்களின் அமைப்பிலும் வழிபாட்டிலும் பின்பற்ற விரும்புகிறார் - (1கொரி 14:33 , 40)
அன்பர்களே!
கிறிஸ்தவ ஒருமைப்பாடு (Christian Unity) என்பது இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து விசுவாசிக ளும், பிரிவுகள் மற்றும் கோட்பா ட்டு வேறுபாடுகளைக் கடந்து, ஆவியிலும் உண்மையிலும் ஒன்றாயிருக்க வேண்டும் என்ற கொள்கையாகும், இது "எக்கு மெனிகல் இயக்கம்" (Ecumenical Movement) மூலமாகவும், விசுவாசத்தின் அடிப்படையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமாகவும் அடையப்படுகிறது. கிறிஸ்துவின் அன்பிலும், விசுவாசத்திலும் இணைந்திருப் பது கிறித்துவ ஒருமைப்பாடு. அந்த ஒருமைப்பாட்டில் நாம்
நிலைத்து செயல்பட கடவுள் அருள் புரிவாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermon centre. com.

துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருடன் ஒற்றுமையுடன் தென்னிந்திய திருச்சபைத் தலைவர்கள் ஒன்றுகூடினர்.
Comments
Post a Comment