இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும் (291)Women who trust God.: Faithful and Fearless. 2அரசர்கள்: 22: 11-20, ரோமர்: 16:1-17, திருப்பாடல்: 18:1-19, மத்தேயு: 15:21-28
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும்.Women who trust God.: Faithful and Fearless. அன்பர்களே! இறை நம்பிக்கை யில் உள்ள பெண்கள் யார்? Who are the women of faith?" இறைநம்பிக்கையுள்ள பெண் கள் தூய்மையான உள்ளம் கொண்டு, இறைவனின் கட்ட ளைகளைப் பின்பற்றி நடப்பவ ர்கள். அவர்கள் உண்மை பேசு தல், பொறுமை காத்தல், மற்ற வர்களுக்கு உதவுதல் மற்றும் அடக்கமாக வாழுதல் போன்ற நற்பண்புகளைக் கொண்டு திகழ்கிறவர்களே இறைநம்பிக் கையுள்ள பெண்கள். திருவள்ளுவர் கூறும் இறை நம்பிக்கையுள்ள பெண்கள்: அன்பர்களே! திருவள்ளுவர் கூறும்," தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" (அதிகாரம்: இல்வாழ்க்கை, குறள் 55) -அதாவது,தனக்கெனத் தனி தெய்வம் தொழாமல், தன் கணவனே தெய்வம் எனக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்து வாழும் பெண், மழை பெய்யச் சொன்னால் மழை பெய்யும் என்கிறாள். அவள் மனத்தால், சொல்லால்,...