வழிபாடு. இறைதிட்டம் நிறைவேற்ற இறையடி சேர்வோம்.(293) Worship: In God's Presence, for God's Purpose. எசாயா 6:1-8, திருத்தூதர் பணிகள் 2:42-47, திருப்பாடல் 100, மாற்கு: 12:28-34.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, 'வழிபாடு:. இறைதிட்டம் நிறைவேற்ற இறையடி சேர்வோம்".
வழிபாடு எப்படி தோன்றியது?
How did Worship originate?
அன்பர்களே! ஆதிமனிதன் எவைகளை கண்டு அஞ்சினா னோ, பிரமித்தானோ அவை களை மாபெறும் சக்தி என வணங்க ஆரம்பித்தான்.
ஆதி மனிதர்கள் சூரியன், மழை, விலங்குகள் மற்றும் பூமியை சக்திவாய்ந்த ஆற்றல்களாகக் கருதினர். உயிர்வாழ்வதற்காக அவர்கள் இந்த ஆற்றல்களைத் திருப்திப்படுத்த முயன்றனர். மக்கள் மரியாதை செலுத்துவத ற்கும் அருளைப் பெறுவதற்கும் உணவு, விலங்குகள் அல்லது சிறப்புப் பொருட்களைப் படைப் பதற்காகக் கல் பலிபீடங்களை யோ அல்லது புனிதத் தலங்க ளையோ கட்டினார்கள்.உலகில் வழிபாடு 30,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது Upper Paleolithic period (பழைய கற் காலம்) முன்பாக வழிபாடு தோன்றியதை தொல்பொருள் ஆய்வு வெளிப்படுத்துகிறது.
மக்கள் எப்போது திருவிவலி யத்தில் வழிபாட்டைத் தொட ங்கினர்?
When did people start to worship in the Holy Bible?
அன்பர்களே! , திருவிவலியத் தில் மனித வரலாற்றின் ஆரம்ப காலம். கர்த்தருடைய நாமத்தை த் தொழுது கொள்ளுகிறவர்க
ளைப் பற்றிய முதலாவது வெளி ப்படையான குறிப்பு இருக்கிறது காயீனும் ஆபேலும் கடவுளு க்கு பலிகளைக் கொண்டு வந்தார்கள் (தொடக்க நூல் 4:3-4 வரலாற்றுக்கு முந்தைய காலம்).
காயீன் பயிர்களை வளர்த்த ஒரு விவசாயி, ஆபேல்ஆடுகளை வளர்த்த மேய்ப்பன்.ஆபேல் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலை யும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். இது இவரின் உயிருக்கே ஆபத் தாக முடிந்தது. முதல் கொலை (the first fratricide in the World)
காயீன் தனது அறுவடை செய்ய ப்பட்ட பயிர்களில் சிலவற்றைக் கொண்டு வந்தார்.ஆபேல் தனது மந்தையிலிருந்து சிறந்த முதல் பிறந்த ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்தார். இது முதல்
பிறப்பு கர்த்தருக்குரியது என்ப தை முன்னறிவித்தது.
கடவுள்ஒரு நபரின் உள்
மனசை,இதயத்தை பார்க்கிறார். ஆபேல் மெய்யான விசு வாசத்தில் தன் சிறந்ததைக் கொடுத்தான், ஆனால் காயீன் ஒரு உண்மையான இருதயம் இல்லாமல் ஒரு வழக்கமான காணிக்கையைக் கொடுத்தார், ஆபேலின் தியாகம் சிறப்பாக இருந்தது என்று புதிய ஏற்பாட்டு விளக்குகிறது. (எபிரேயர் 11:4)
ஆதாமின் மூன்றாம் மகன் சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான். அப்பொழுதே "; "ஆண்டவர்" என்னும் திருப்பெயரால் கடவுளை வழிபடலாயினர். (தொடக் கநூல் 4:26)
உண்மையான வழிபாடு எது?
What is a true Worship?
அன்பர்களே! உண்மையான வழிபாடு என்பது சடங்குகளைத் தாண்டி, தூய உள்ளத்தோடு ஆன்மாவிலும் உண்மையிலும் கடவுளைப் பணிந்துகொள்வது ம், நீதியையும் இரக்கத்தையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் ஆகும் எனத் திருவிவிலியம் கூறுகிறது.
கடவுள் ஒரு ஆவியாய் இருக்கி றார். அவரை வழிபடுவோர் ஆவி யிலும் உண்மையிலும் அவரை வழிபட வேண்டும்.பலிகளைவிட இரக்கமும், கடவுளை அறிதலும் முக்கியம். எளியோருக்கு உதவு வதும் நேர்மையாய் நடப்பதும் இறைவனுக்குப் பிடித்தமான வழிபாடு.
இறைதிட்டம் என்றால் என்ன?
What is God's Purpose?
அன்பர்களே! கடவுளின் இறை திட்டம் (Divine Plan) என்பது
மனிதர்கள் அனைவரும் அன்பி ல் நிலைத்து வாழவும், ஒருவருக் கொருவர் நன்மைகள் செய்ய வும் கடவுள் விரும்புகிறார். எனவே அவர் தன் சாயலாகவே மனிதனை படைத்தார்.பூமியைப் பராமரிக்கவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும், தங்கள் படைப்பாளருடன் நெருங்கிய உறவில் வாழவும் கடவுள் தனது சொந்த உருவத்தில் மனிதர்களை வடிவமைத்தார்.
ஆரம்பகால மனிதர்கள் தவறு களைச் செய்து, சோகத்தையும் தவறையும் உலகிற்குக் கொண்டுவந்தபோது, அதை சரிசெய்ய கடவுள் மீட்பு என்ற ஒரு புதிய திட்டத்தை வகுத் தார். இவற்றின் வெளிப்பாடே
மீட்பராகிய இயேசு கிறித்து இரட்சகராக உலகிற்கு வெளிப்
படுத்தினார்.
1 தூய்மைபடுத்தும் வழிபாடு .
Cleansing Worship. ஏசாயா 6:1-8.
அன்பர்களே! யூதா தேசத்தை 52 ஆண்டுகள் ஆட்சி செய்த உசியா அரசர் மறைந்த , கி.மு 740ம் ஆண்டில் எருசலேம்
தேவாலயத்தில், ஆண்டவர் மிகவும் உயரமானதோர் அரிய ணையில் அமர்ந்திருப்பதை இறைவாக்கினர் ஏசாயா தரிசனம் கண்டார்; ஆண்டவரின் தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
சேராபீன்கள் (Seraphim) அவரு க்கு மேலாக நின்றார்கள்;
ஆண்டவருடைய அரியணைக்கு மேலே நின்றுகொண்டு, அவரை ப் இரவும், பகலும் போற்றும் மிக உயர்வான இறை தூதர்கள் ஆவர். எபிரேய மொழியில் 'சேராப்' என்றால் 'எரிபவை' அல்லது 'அனல் பறப்பவை' என்று பொருள்.அவற்றுக்கு ஆறு சிறகுகள் உள்ளன.
இரண்டு சிறகுகளால் தங்கள் முகத்தை மூடிக்கொள்கின்றன காரணம் கடவுளின் ஒளியை தாங்க முடியாது.
மீதமுள்ள இரண்டு சிறகுகளால் பறக்கின்றன. சேராபீன்களின் பணி என்னவென்றால், " ஒருவர் மற்றவரைப் பார்த்து; "படைகளி ன் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது" என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந் தார்.
இது ஆண்டவரின் சமூகத்தில் தூய்மையையும், கீழ்ப்படித லையும் வெளிப்படுத்தும் அடையாளமாகச் செயல்படுகின் றன. நாம் கடவுளை வழிபடும்
கூட்டத்தினர், தூய்மை, கீழ்படித ல் நமது அணிகலன்களாக இருக்க வேண்டும்.
சேராபீன்களின் உரத்த குரல் ஒலியால் ஆலய வாயில் நிலை களின் அடித்தளங்கள் அசைந் தன; கோவில் முழுவதும் புகை யால் நிறைந்தது.
ஆண்டவரின் முழுமையான தூய்மையை கண்ட ஏசாயா
அங்கு தன்நிலையை உணர் கிறார். தன்னை மற்ற மனிதர் களுடன் ஒப்பிடுவதற்குப் பதிலாக, கடவுளுடைய பரிபூரண ஒளியில் தன்னைப் பார்த்த போது தன் அசுத்தம் புரிந்தது.
தன் சுய பாவத்தையும் பலவீனத் தையும் உணர்ந்து,"; "ஐயோ, நான் அழிந்தேன்;. ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய் மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவரா கிய அரசரை என் கண்கள் கண்டனவே" என்றார்.
வாய் மற்றும் உதடுகள் மனித னின் உள்ளத்தின் வெளிப்பாடா கும். தன் பேச்சிலும், எண்ணத்தி லும், வாழ்விலும் உள்ள பாவத் தை ஏசாயா மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.
கடவுளின் சமூகத்தில் நின்று வழிபாடு செய்யும் போது மனிதனின் அகந்தை அழிகி றது.ஏசாயாவின் இந்தத் தாழ் மையும் பாவ உணர்வும் தான், அடுத்த வசனங்களில் கடவுளின் தூதன் மூலமாக அவர் நெருப்புத் தணலால் சுத்திகரிக்கப்படவும், இறைப்பணிக்கு அழைக்கப்ப டவும் அடிப்படையாக அமைந் தது.
ஒரு நெருப்புத்தணல் ஒருவரின் பாவங்களை சுத்திகரிக்கப்படு கிறது போல, மனம் திருந்தாதவ ர்களும், கடவுளை ஏற்றுக் கொள் ளாதவர்களும் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்கள்.
இதே நெருப்புத்தணல் பெந்தக் கோஸ்து என்னும் நாள் வந்த போது, நெருப்புப்போன்ற பிளவு ற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். என
திருத்தூதர் பணிகள் 2 ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்..
யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?"Whom shall I send?
அன்பர்களே! இந்த வார்த்தை ஆண்டவரின் அனுதின வார்த் தை. நாம் ஒவ்வொருவரையும் ஆண்டவர் மிகுந்த ஏக்கத்துடன் நம்மை பார்த்து கேட்கின்ற ஒரு கேள்வியாகும் ஆண்டவர் பணி உலகில் தொடர்ந்து நடைபெற வேண்டும் அதற்கு ஆட்கள் தேவை. நாம் இன்றே தயாராக வேண்டும் என்ற வேண்டுதலை நமக்கு வைக்கின்றார். இறைவாக்கினர் ஏசாயா இந்த வார்த்தையை கேட்ட உடனே
"இதோ நானிருக்கிறேன். அடியே னை அனுப்பும்" என்றார்.
மனிதர்களின் தேவைகளைச் சந்திக்கவும், நற்செய்தியை அறிவிக்கவும் ஆண்டவர் இன்றைக்கும் மனிதர்களை அழைக்கிறார்.தகுதியற்றவனாக உணர்ந்தாலும், தேவனுடைய அழைப்புக்குத் தன்னை முழுமை யாக அர்ப்பணித்துச் சேவை செய்ய முன்வருகிறான். அவர் இறைபணிக்கு தகுதியாக கடவுள் அவரை முதலாவதாக தூய்மைப்படுத்துகிறார்.
2 திருதூதர்களின் வழிபாடு:
The Worship of Apostles. திருத்தூதர் பணிகள் 2:42-47,
அன்பர்களே! எருசலேமில் உருவான முதல் கிறிஸ்தவ திருச்சபை சமூகத்தின் வாழ்க் கை முறையை திருத்தூதர் லூக்கா அவர்கள் விளக்குகி றார்.. இது திருச்சபையின் நான்கு தூண்களான திருத்தூதர்களின் போதனை, கூட்டுறவு, அப்பம் பிடுதல் மற்றும் இறைவேண்டல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.
1 திருத்தூதர்களின் போதனை:
இயேசுவின் வார்த்தைகளையும் போதனைகளையும் கேட்டு அதன்படி தொடர்ந்து திருத் தூதர்கள் வாழ்ந்து வந்தனர்.
தனது நற்செய்தியில், லூக்கா இயேசுவின் போதனைகளுக்கு மிகுந்த கவனம் செலுத்துகிறார்
தனது மாபெரும் கட்டளையில், இயேசு தனது சீடர்களுக்கு,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப் பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று (மத்தேயு நற்செய்தி 28:20) அறிவுறுத் தினார்.
"போதனை” என்பது, அவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்டவற்றையும், இயேசு வின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவற்றி ற்கு வலுவான முக்கியத்துவம் கொடுப்பதையும் உள்ளடக்கி யிருந்தது என்பதில் உறுதியாயி ருந்தனர்.ஒரு ஆரோக்கியமான தேவாலயம் எப்போதும் கற்கி ன்ற ஆலயமாக, கற்றுக்கொடு க்கும் ஆலயமாக இருக்க வேண்டும்.ஒவ்வொரு நாளும் கடவுளின் ஞானத்தை அதிகம் புரிந்து கொள்ளத் தவறினால் நம் ஆலய ஆராதனை நேரம் வீணடிக்கப்படுவதாகக் கருது கிறது என்று இறையியலாளர் வில்லியம் பார்க்லே குறிப்பிடு கிறார்.
2.கூட்டுறவு :(Koinonia):
கொய்னோனியா என்றால் ஐக்கியம் அல்லது பகிர்ந்து கொள்ளுதல் என்று பொருள். ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் பற்றி லூக்கா கூறுகிறார், அவர்கள், "திருத்தூதர் கற்பித்த வற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலு ம் உறுதியாய் நிலைத்திருந்தார் கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. (திருத்தூதர் பணிகள் 2:42)
“ கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் அனுபவிக்கும் ஐக்கியத்தைக் குறித்துப் பேச திருதூதர் பவுல் அடிகளார் அதைப் பயன்படுத் தினார்: “கடவுள் நம்பிக்கைக் குரியவர்; தம் மகனும் நம் ஆண்ட வருமாகிய இயேசு கிறிஸ்துவி ன் நட்புறவில் பங்குபெற உங்க ளை அவர் அழைத்துள்ளார். (1 கொரிந்தியர் 1:9) ஐக்கியம் என்பது, கடவுளுடன் மற்றும் சக
மனிதர்களுடன் அன்புருவில்
நிலைத்திருப்பதை குறிக்கிறது.
சீடர்கள் உணரும் ஐக்கியமானது , தங்களுக்குள் வளங்களைப் பகிர்ந்துகொள்வதில் இயல்பா கவே வெளிப்படுகிறது.
3.அப்பம் பிட்குதல்” ( tou artou —
அன்பர்களே! "Tou artou" என்பது ஒரு கிரேக்க வார்த்தை. அதன் பொருள் "the breaking of Bread" அப்பம் பிட்குதலை குறிக்கி றது. கிறிஸ்தவ திருச்சபைக ளில் கர்த்தருடைய நற் கருணை ஆராதனை என்றும் அழைக்கப்படும் நிகழ்வே அப்பம் பிட்குதல் ஆகும். இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் நினைவு கூர்ந்து, விசுவாசிகள் ஒன்றாக இணைந்து அப்பத்தைப் பகிர் ந்து உட்கொள்ளும் ஒரு புனித ஆன்மீகச் சடங்கு இது வாகும்.
சிலுவையில் நமக்காகச் சிந்தப் பட்ட இயேசுவின் இரத்தம் மற்றும் உடைக்கப்பட்ட சரீரத்தை நினைவுகூர்தல் ஆகும்.
விசுவாசிகள் அனைவரும் ஒரே சரீரமாக, தேவனுடனும் சக விசுவாசிகளுடனும் கொண்டு ள்ள அன்பின் ஐக்கியத்தை வெளிப்படுத்துதல் ஆகும்.
இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் பிட்கிற அப்பம், கிறிஸ்துவினு டைய சரீரத்தின் ஐக்கியமாயும், நாங்கள் ஆசீர்வதிக்கிற பாத்தி ரம், கிறிஸ்துவினுடைய இரத்த த்தின் ஐக்கியமாயிருக்கிறது..
இது ஒரு அகாபே விருந்தாகும்.
இயேசு அப்பம் பிட்ட நான்கு சந்தர்ப்பங்களை லூக்கா பதிவு செய்கிறார் (லூக்கா 9:16; 22:19; 24:30, 35). அவற்றுள் ஒன்று (22:19), இயேசு கர்த்தருடைய நற்கருணை ஏற்படுத்திய சந்தர்ப்பமாகும்.
4 இறை வேண்டல்:
புதிய ஏற்பாட்டில், திருத்தூதர் கள் தங்கள் திருப்பணிகளு க்கும் ஆன்மீக வலிமைக்கும் இறைவேண்டலை அடிப்படை யாகக் கொண்டனர்.
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது திருத்தூதர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் இறைவேண்டலில் ஈடுபட்டபோது தான் தூய ஆவிஅனைவருக்கும் ஈவாக அருளப்பட்டது.
தொடக்கத் திருச்சபை காலத் தில் அனைவரும் ஒரே மனதுடன் இணைந்திருந்து இறை வேண் டலில் உறுதியாய் நிலைத்திருந் தனர்.பேதுருவும் யோவானும் பிற்பகல் மூன்று மணிக்குப் இறைவேண்டல் செய்யக் கோயிலுக்குச் சென்றனர் என்பதை நாம் படிக்கிறோம்.
கிறிஸ்தவர்களின் அடிப்படை தகுதியே இறை வேண்டளாகும்
A prayerless Christian is a powerless
Christian
இயேசுவின் விண்ணேற்றத்திற் குப் பிறகு சீடர்களின் செயல் களை விவரிக்க திருதூதர் லூக்கா பயன்படுத்திய அதே வார்த்தைதான் இதுவாகும்; அவர், “இவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு இறை வேண்டலில் நிலைத்திருந் தார்கள்” (தி.ப 1:14 Acts) என்று கூறினார்.
"Proskarterountes" என்பது
உறுதியாக இருத்தல்” என்று
பொருளாகும். எவற்றில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் இறை வேண்டுதலிலும் நற்செய்தியை பகிர்வதிலும் அன்பு கூறுவதிலும் கூட்டுறவிலும் பற்றுறுதியிளும் உறுதியாக இருக்க வேண்டும்
3 அனைத்திலும் முதன்மை யான கட்டளை எது?" Which commandment is the first of all?
மாற்கு 12:28-34
அன்பர்களே! மாற்கு 12:28–34 இல், இயேசு புனித வாரத்தில் எருசலேம் கோவிலில் இருக்கி றார், அவரை சிக்க வைக்க முயற்சிக்கும் மத தலைவர் களான பரிசேயர், ஏரோதியர் கள், சதுசேயர்களிடம் கடுமையான விசாரணையை எதிர்கொள்கிறார்.
அவர்கள் இரண்டு கேள்வி களை கேட்கிறார்கள்.
1 சீசருக்கு வரிசெலுத்துவது முறையா?
2 உயிரத்தெழுதலில் ஏழுபேரை
மணந்த பெண் யாருக்கு மனை வியாய் இருப்பாள்?
இதற்கு கடவுள் மிகத் தகுதியா ன பதிலை கொடுத்தார்
அவர்கள் வாதாடிக்கொண்டி ருப்பதைக்கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒரு வர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, திருச்சட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கட்டளை களில் ( பழைய ஏற்பாட்டில் 613 கட்டளைகள் உள்ளன) "அனைத்திலும் முதன்மை யான கட்டளை எது?" என்று கேட்டார். Which commandment is the first of all?
அதற்கு ஆண்டவர் பழைய ஏற்பாட்டில் இருந்து இணைச் சட்டம்: உபாகமம்:6:4,5,ஐ, "இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயா க! என்றும்;
மற்றும் லேவியர்:19:18 ன்படி, "பழிக்குப் பழியென உன் இனத் தார்மேல் காழ்ப்புக்கொள்ளாதே. உன் மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்! என்ற இரண்டு நூலின் அதிகார வசனங்களை ஒன்றிணைத்து, மிகஅறிவார்ந்த பதிலை அவருக்கு தருகிறார்.
இதற்கு முன்பு எந்தவொரு யூத ரபியும் இந்த இரண்டு கட்டளை களை இணைத்து இவ்வளவு துல்லியமாக பதில் அளித்த தில்லை.
இறைவனிடம் நமது இதயம், ஆன்மா, மனம் மற்றும் அனைத்து பலத்தோடும் அன்பு செலுத்த வேண்டும். அன்பு என்பது வெறும் உணர்ச்சி அல்ல; அது முழு மனிதனின் அர்ப்பணிப்பாகும்.நம்மைப் போலவே மற்றவர்களை நேசிப்பது ஆன்மீக வாழ்வின் அடையாளம். இறைபக்தி உள்ளவன் மனித நேயத்தை தவிர்க்க முடியாது.
இயேசு இறைவனின் மீதான அன்பையும் மனிதர்கள் மீதான அன்பையும் ஒன்றாக இணைத் து முழுமையான மற்றும் பிரிக்க முடியாத ஆன்மீகத்தின் அடிப்படையாக மாற்றியுள்ளார்.
நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை;
நண்பர்களே இந்த வார்த்தை யை ஆண்டவர் மறைநூல் அறிஞர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், "நீர் இறையாட்சியி னின்று தொலையில் இல்லை" என்று கூறினார்.
கடவுளை நேசிப்பதும் மற்றவர்க ளிடம் அன்பு காட்டுவது சடங்கு பலிகளை விட முக்கியம் என்ப தை மனிதன் புத்திசாலித்த னமாக அங்கீகரித்த பிறகு. இந்த வசனம் இயேசுவை சோதிக்கும் மதத் தலைவர்களின் முடிவைக் குறிக்கிறது, உண்மையான ஆன்மீக புரிதல் இதயத்தில் தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது, மத விதிகள் மூல
மல்ல. இறையரசு, யார் கடவுள் மீதும், சக மனிதர்மீதும் அன்பு
செலுத்துகிறார்களோ அவர்களு க்கே.
இவன் இறையாட்சிக்கு தொலை யில் இல்லை"என்பது, முழுமை யாக நுழைய அவர் இன்னும் இயேசுவில் தனிப்பட்ட விசுவாச த்தை வைக்க வேண்டும்.
அன்பர்களே! நம் வழிபாடு, நம் வழியே இறைதிட்டம் நிறைவே றும்படியாய் அமைந்தால் நாம் இறையடி நிச்சயம் சேர்வோம்.
அன்பே நம் வழிபாடு, வழிபாடே
நம் அன்பு என்ற அன்பின் உறவில் வாழ கடவுள் அருள் புரிவாராக! ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511.
Comments
Post a Comment