Posts

Showing posts from June, 2026

சீடத்துவம்: வந்து பாருங்கள் சென்று பகிருங்கள் (285) Discipleship: Come and See, Go and Tell. செக்கரியா 8 : 18:23, உரோமையர் 10:9-17, திருப்பா டல் 66, யோவான்1:39-42

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்,   இவ்வார ஞாயிறு  தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப் பது, " சீடத்துவம்: வந்து பாருங் கள் சென்று பகிருங்கள்  (Discipleship: Come and See, Go and Tell ")   என்பதாகும்.  சீடத்துவம் என்றால் என்ன,? What is Discipleship? அன்பர்களே!கிறிஸ்தவத்தில் சீடத்துவம் (Discipleship) என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களை (teachings) நம்பி, அவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்று க்கொண்டு, அவருடைய வழிக ளைத் தன் வாழ்நாள் முழுவ தும் தீவிரமாகப் பின்பற்றும் செயல்முறையாகும் . இது வெறும் அறிவு சார்ந்த கல்வி அல்ல; இது கிறிஸ்துவைப் போலவே வாழும் ஒரு வாழ்க்கை முறையாகும். சீர்திருத்த திருச்சபையின் தந்தை ( Protestant Church) என்று அழைக்கப்படும்  மார்ட்டின்லூத ரின் கூற்றுப்படி "சீடத்துவம் என்பது, மனிதனின் சொந்த நற்செயல்களையோ அல்லது சடங்குகளையோ சார்ந்திருப்ப து அல்ல. மாறாக, இயேசு கிறிஸ் துவின் மீது முழுமையாக நம்பிக் கை வைத்து, [விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்] என...

சுற்றுச்சூழல் ஞாயிறு Environment Sunday.படைப்பு பேசுகிறது: . இயற்கையில் கடவுளின் குரலை கவனித்தல் (284) ,Creation speaks : Listening to God's voice in Nature. யோபு 12:7-12, திருவெளிப்பாடு 22: 1-6 திருப்பாடல் 19, லூக்கா 12:22-34

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்,   இவ்வாரம் " சுற்றுச்சூழல் ஞாயிறு" Environment Sunday. அதன்  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " படை ப்பு பேசுகிறது: . இயற்கையி ல் கடவுளின் குரலை கவனித் தல்் "  என்பதாகும் .  ஏன் சுற்றுச் சூழல் ஞாயிறு தென்னிந்திய திருச்சபை கொண்டாடுகிறது.? அன்பர்களே! திருச்சபைகள் ஒவ் வொறு வாரமும் ஒரு சிறந்த தலைப்பை வைத்து அதன் முக் கியத்துவத்தை உணர்ந்து,இறை மக்களுக்கு இறை செய்தி வழங் கிவருகிறது.அதன் அடிபபடையி ல் தான் இவ்வாறு சுற்றுச்சூழல் வாரமாக கொண்டாடுகிறோம். சுற்றுசூழல் என்பது,"   மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழும் மற்றும் வளரும் நிலம், காற்று, நீர் போன்றவை உள்ளட ங்கிய இயற்கைசூழலே சுற்றுச் சூழல்". நாம் வாழும் உலகில், சுற்றுச்சூழல் சீர்கேடு உலக உயி ர்களுக்கு பெரும் அச்சுறுத்தலா க  உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடை ந்து வருகின்றது.  இம்மாசுபாடு களால் உலக உயிர்களின் வாழ் நாள் சுருங்கிக் கொண்டேயிருக் கிறது....

உணர்வுகளை விஞ்சும் நம்பிக்கை : வாழ்வு பொருளற் றுப் போகையில் கடவுளை பற்றுதல். (283) Faith over feelings, Trusting God when life doesn't make Sense. எரேமியா 29:10-14, எபிரேயர்: 11: 17-31, திருப்பாடல் 37: 23-40, மாற்கு: 4: 35-41.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உணர்வுகளை விஞ்சும் நம்பி க்கை : வாழ்வு பொருளற்றுப் போகையில் கடவுளை பற்று தல்" என்பதாகும். அன்பர்களே! உணர்வுகள் (Feelings) என்பவை, ஐம்புலன்களின் வழியே நாம் பெறும் அனுபவங்கள்.மகிழ்ச்சி, கோபம், பயம், ஆச்சரியம், துக் கம்ஆகும்.  இயற்கையான உணர்வுகள்.அன்பு, வெறுப்பு, குற்றவுணர்வு, பரிவு, பெருமை ஆகியவை மனம் சார்ந்த உணர் வுகள். மனிதன் உணர்வுகளின் கட்டாக (Bundle) இருக்கிறான். இது உளவியல் ரீதியானது. ஒரு சிலர் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படுபவராக இருப் பார்கள். ஒரு சிலரோ உணர்வு களையும், உணர்ச்சிகளையும் அதிகம் வெளிக்காட்டாதவர்க ளாக இருப்பார்கள். வேறு சிலரோ மற்றவர்களின் உணர்வு களை புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதும், ஆறுதல் சொல்வதும், ஆதரவாக இருப்பது உறவை பலப்படுத்தும் உறவுகளை மேம்படுத்த மற்றவ ர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்...

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்,  இவ்வாரம் நம் திருச்சபை கள்  மாணவர் ஞாயிராக கொண்டாடப்படுகிறது.இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " இயேசு: நமது உன்னத வழிகாட்டி" என்பதா கும். மாணவர் ஞாயிறு: அன்பர்களே! இக் கல்வியாண் டின் துவக்க மாதம் சூன் ,மாணவ ர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சவால் நிறைந்த மாதமாகும். முக்கியமாக, மேற் படிப்பில் சேறு கின்றவர்கள், புதிய வகுப்பில், கல்வி நிலையங்களில் சேறும் போது ஏற்படும் சவால்கள், தேவைகள், பிரச்சனைகள் மிக வும் கவலை அளிக்கும் செயலா கும். மருத்துவப்படிப்பில் சேறும் கணவில் இருந்த 2.2 மில்லியன் மாணவர்களுக்கு, NEET -UG 2026 paper தேர்வு தாள்கள் பொது வழியில் வெளியாகி மறுதேர் வுவறை சென்றதும்,   மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) அதன் புதிய ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கு மாறியபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக 42 மில்லியன் மாணவர்களின் மதிப்பெண் தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இணையத்தில் பகிரங்கமாக வெளிவந்ததின் காரண...