உணர்வுகளை விஞ்சும் நம்பிக்கை : வாழ்வு பொருளற் றுப் போகையில் கடவுளை பற்றுதல். (283) Faith over feelings, Trusting God when life doesn't make Sense. எரேமியா 29:10-14, எபிரேயர்: 11: 17-31, திருப்பாடல் 37: 23-40, மாற்கு: 4: 35-41.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "உணர்வுகளை விஞ்சும் நம்பி க்கை : வாழ்வு பொருளற்றுப் போகையில் கடவுளை பற்று தல்" என்பதாகும்.
அன்பர்களே!
உணர்வுகள் (Feelings) என்பவை, ஐம்புலன்களின் வழியே நாம் பெறும் அனுபவங்கள்.மகிழ்ச்சி, கோபம், பயம், ஆச்சரியம், துக் கம்ஆகும். இயற்கையான உணர்வுகள்.அன்பு, வெறுப்பு, குற்றவுணர்வு, பரிவு, பெருமை ஆகியவை மனம் சார்ந்த உணர் வுகள். மனிதன் உணர்வுகளின் கட்டாக (Bundle) இருக்கிறான். இது உளவியல் ரீதியானது.
ஒரு சிலர் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படுபவராக இருப் பார்கள். ஒரு சிலரோ உணர்வு களையும், உணர்ச்சிகளையும் அதிகம் வெளிக்காட்டாதவர்க ளாக இருப்பார்கள். வேறு சிலரோ மற்றவர்களின் உணர்வு களை புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதும், ஆறுதல் சொல்வதும், ஆதரவாக இருப்பது உறவை பலப்படுத்தும்
உறவுகளை மேம்படுத்த மற்றவ ர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும், மதிப்பளிக் க வேண்டும்.
உணர்வுகளின் ஏற்ற இறக்கங்க ளை கடந்து செல்ல நம்பிக்கை அடிப்படையாகும்.சில நேரங்களி ல் உணர்ச்சிகள் நம்மை சூழ்நி லைக்கு ஏற்ப தவறான முடிவுக ளை எடுக்கத் தூண்டிவிடும்
ஆனால், உணர்வுகள் நிரந்தரமா னவை அல்ல; அவை காலப்போ க்கிலும், சூழ்நிலைக்கு ஏற்பவும் மாறக்கூடியவை.
திருவிவிலியம் (Bible) என்பது வெறும் வரலாற்று நிகழ்வுகளி ன் தொகுப்பு மட்டுமல்ல; அது மனிதர்களின் ஆழ்ந்த உணர்வு கள், விசுவாசம் மற்றும் கடவுளி ன் வார்த்தைகள் இணைந்து வெளிப்படும் ஒரு ஆன்மீக உணர்வுப்பூர்வமான அனுபவமா கும். வேதம் முழுவதும் மனித உணர்ச்சிகளான அன்பு, பயம், துக்கம், மகிழ்ச்சி மற்றும் நன்றி உணர்வு ஆகியவை மிக அழுத்த மாகப் பதிவு செய்யப்பட்டுள் ளன.உ.ம் யோபுவின் இழப்புகள், எரேமியாவின் கண்ணீர் மற்றும் லாசருவின் மரணத்தின் போது இயேசு அடைந்த துக்கம் (யோவான் 11:35) ஆகியவை மனிதர்களின் உணர்வுகளுக்கு விவிலியம் தரும் சில உதாரணங்கள்.
வாழ்வு பொருளற்றுப் போகை யில் கடவுளை பற்றுதல்.
அன்பர்களே!
"உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்."என ஒரு பாடல் வரியா கும்.வாழ்வு பொருளற்றுப் போகையில் ஒரு மனிதன் பாடிய
பாடல் இது. பிரசங்கி (சபையுரை யாளர் /Preacher/ Ecclesiastes) புத்தகத்தில் பிரசங்கி, தான் தாவீதின் குமாரன், எருசலேமின் அரசர் என்று தன்னைக் குறித் துக் குறிப்பிடுகின்றான்.யூத மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியத் தின்படி, இந்த நூலை எழுதிய வர் இஸ்ரவேலின் ராஜாவான சாலமன் என்று நம்பப்படுகிறது இவர் ஒரு அரச வாழ்வை வாழ்ந் தவர், ஒருவன் ராஜாவாக இருந்தால் தான் விரும்பியதை அடைய அவனுக்குத் தடை கிடை யாது. . ஏனெனில் அவர் ராஜா. விரும்பியதெல்லாம் அனுபவித் து, சகல இன்பங்களையும் அடை ந்த ஒருவனே இந்தப் பிரசங்கி. இவன்தான் வாழ்க்கையை “எல்லாம் மாயை மாயை
வானத்தின் கீழே பூமிக்கு மேலே
எல்லாம் மாயை மாயை, மாயை, எல்லாம் மாயை" (எல்லாமே அர்த்தமற்றது அல்லது (நிலைய ற்றது) என்பது இந்த நூலின் புகழ்பெற்ற தத்துவமாகும். சூரியனுக்குக் கீழே மனிதன் செய்யும் எல்லா பிரயாசமும் எப்படி நிலையற்றதாக இருக்கி றது என்பதை இது விவரிக்கி றது.
வாழ்வின் அனைத்து நிலைக ளையும் கடந்து வந்தபின், "இறைவனுக்கு அஞ்சி, அவர து கட்டளைகளைக் கடைப்பிடி" (சபையுரையாளர் 12:13) என்பதே மனிதனின் முழுமையான கடமை என்று சபை உரையாளர் தனது அனுபவத்திலிருந்து முடிக்கிறார்.கடவுளை மையமா கக் கொண்டு வாழாத மனிதனி ன் வாழ்க்கை எவ்வளவு அர்த்த மற்றது (மாயை) என்பதை விளக்குவதே இந்த ஆசிரியரின் முக்கிய நோக்கமாக இருந்துள் ளது.
யோபுவுன் வாழ்க்கை (13:15)
துன்பங்கள் சூழ்ந்திருந்தாலும், நேர்மையான வழியில் நடப்பவர் கள் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்க முடியும் என்பதை யோபு இந்த வார்த்தை கள் மிக அழகாக எடுத்துரைக்கி ன்றன.என்உயிர்பறிபோனாலும், நான் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கையிலிருந்து மாற மாட் டேன் என்ற யோபின் அசைக்க முடியாத நம்பிக்கை.வாழ்வு பொருளற்றுப் போகையில் கடவுளை பற்றுதலுக்கு யோபு
போல் யாருமில்லை.
நம் வாழ்வில் எல்லாம் முடிந்து
விட்டது என்ற சூழலில் ஆண்ட
வரே நமது கடைசி புகலிடமாகற
இருக்கிறார்.(The lost Resort). என்பதை உணர்வது நம் நம்பிக் கையாகும்.
1.வாழ்வு பொருளற்றுப் போகையில் விடுதலை. Liberation when life becomes meaningless. எரேமியா 29:10-14.
அன்பர்களே! இறைவாக்கினர் எரேமியா காலத்தில் பாபிலோ னிய மன்னரான ( தற்சமயம் ஈராக்) இரண்டாம் நேபுகாத் நேச்சார் (Nebuchadnezzar II) இஸ்ரேல் நாட்டை வென்று, கி.மு. 605 மற்றும் கி.மு. 597-ல் இரண்டு கட்டங்களாக எருசலேம்மக்களை பாபிலோனுக்கு நாடு கடத்தி னார். எருசலேம் நகரை முற்று கையிட்டு, முதல்சாலமன் அரசர் கட்டிய எரூசலேம் கோவிலை (First Temple) அழித்து, யூத மக்க ளைச் சிறைபிடித்து பாபிலோ னுக்கு அழைத்துச் சென்ற வரலாற்று நிகழ்வு இவருடைய ஆட்சியில் தான் நடந்தது. இவர்தான் உலகின் ஏழு அதிசய ங்களில் ஒன்றான பாபிலோ னின் தொங்கும் தோட்டம் (Hanging Gardens of Babylon) இவரால் உருவாக்கப்பட்டது.
இறைவாக்கினர் எரேமியா பாபி லோனியாவில் சிறைபிடிக்கப் பட்ட யூதர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் (வசனங்கள் 1-23) எருசலேமில் இருந்து எரேமியா பாபிலோனில் உள்ள மூப்பர்கள், ஆசாரியர்கள் மற்றும் மக்களுக்கு அனுப்பிய முக்கிய கடிதம். அங்கே அவர்கள் வீடுகளைக் கட்டி, தோட்டங்க ளை அமைத்து, அமைதியோடு வாழும்படி அறிவுறுத்தினார்
இந்த நிகழ்வு செதேக்கியா வின் (செதேக்கியா (Zedekiah) என்பவர் விவிலியத்தின்படி யூதாவின் (Judah) கடைசி அரசர் ஆவார். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரால் (Nebuchadne zzar) அரியணையில் அமர்த்தப்ப ட்ட இவர், யூதாவை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றவர்.)
முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டில் நடந்தது . ஏற்கெனவே சிறைப்பிடிக்கப்பட்டிருந்த யூதர் கள், கள்ளத் தீர்க்கதரிசிகளின் (ஆகாப்,செதேக்கியா)தூண்டுதல்களால், தாங்கள் தங்கள் சிறை யிருப்பிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள்.
70 ஆண்டு சிறையிருப்பு:
நண்பர்களே இறைவாக்கினர் எரேமியா அவர்கள் கள்ள தீர்க்க தரிசிகள் கூறுவது போல இஸ்ர வேல் மக்கள் விரைவில் விடுவி க்க மாட்டார்கள் அவர்கள் 70 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது அக்காலத்தில் அவர் கள் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிக்க வேண்டும், ஏனெனில் இது ஒரு வலிமையான எதிர்காலத்தை உருவாக்க அவர்களுக்கு உதவும்
என்றார்.இந்தக் காலத்தில் கட வுள் அவர்களை ஒரு சிறந்த எதிர்காலத்திற்காகத் தயார் செய்வார்.
இங்கு இறைவாக்கினர் எரேமி யா (எரேமியா 29:14) வசனம் இணைச் சட்டத்தில் கூறப்பட்டு ள்ள வாக்குத்தத்தத்தை உறுதிப் படுத்துகிறார்
"உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை அடிமைத்தனத்தினி ன்று விடுவிப்பார். உன்மேல் இரக்கம்கொண்டு, உன்னை அவர் சிதறடித்துள்ள எல்லா நாடுகளிலுமிருந்து மீண்டும் கூட்டிச் சேர்ப்பார். (இணைச் சட்டம் 30:3)என்ற வாக்குறுதி பயன்படுத்தப்படுகிறது.
பாபிலோனுக்கான எழுபது ஆண்டுகளின் சாதனை "இந்த வார்த்தைகள், 'எழுபது ஆண்டு கள்' என்பது முதன்மையாக பாபிலோனியப் பேரரசின் கால அளவையும், இரண்டாவதாக யூதர்களின் நாடுகடத்தலின் கால அளவையும் குறிக்கின் றன."
கி.மு. 539-ல், 70 வது ஆண்டில் பெர்சிய மன்னரான மகா சைர ஸ் (Cyrus the Great) பாபிலோனைக் கைப்பற்றி, யூதர்களை தங்கள் தாய் நாட்டி ற்குத் திரும்ப அனுமதித்தார்
கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியாக, "உங்களை மீண்டும் கொண்டு வருவேன் என்பது உறுதியாக்க ப்பட்டது அனைவரும் எருசலேமு க்கு கொண்டுவரப்பட்டனர்
வாக்கு மாறா கடவுள்:
அன்பர்களே! ஆண்டவர் வாக்கு
மாறாதவர்.
இறுதிக்காலத்தில் உங்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காகவே இதை கூறுகிறார்." நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவீ ர்கள், நீங்கள் போய் என்னிடம் விண்ணப்பம் செய்வீர்கள், நான் உங்களுக்குச் செவிகொடுப் பேன். நீங்கள் என்னை முழு இருதயத்தோடு தேடும்போது, என்னைக் கண்டடைவீர்கள். நான் உங்களால் கண்டறியப்படு வேன் என்று ஆண்டவர் கூறுகிறார்; நான் உங்களை எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பேன், உங்கள் சிறையிருப்பிலிருந்து உங்க ளைத் திரும்பக் கொண்டு வருவேன், நான் உங்களை எல்லா தேசங்களிலிருந்தும், நான் உங்களைத் துரத்திய எல்லா இடங்களிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பேன் என்று உறுதி
அளித்தார்.
2. வாழ்வு பொருளற்றுப் போகையில் கடவுள்மீது நம்பிக்கை.Faith in God when life becomes meaningless. எபிரேயர் 11: 17-31.
அன்பர்களே! எபிரேயர் 11: 17-31 வசனங்கள், பழைய ஏற்பாட்டில்,
நம்பிக்கையின் மூலம் கடவுளின் வாக்குறுதிகளைப் பற்றிக்கொ ள்வதைப் பற்றிய ஆழமான விளக்கத்தை அளிக்கின்றன.
ஆபிரகாம், மோசே, யோசேப்பு, ராகாப் போன்ற நம்பிக்கை பெரியவர்கள் தங்கள் வாழ்க் கையில் எதிர்கொண்ட சோத னைகளையும், தியாகங்களை யும், கீழ்ப்படிதலையும் இந்த பகுதி விவரிக்கிறது.
1. ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை:
கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கை யை சோதித்தார். ஆபிரகாமிற்கு 99 வயதாகவும், சாராளுக்கு 90 வயதாகவும் இருந்தபோது, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் கடவுளின் வல்லமை யால் பிறந்தவர் ஈசாக். "வாக்குறுதியின் மகன்" வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கைப் பலியாகக் கொடுக்க கட்டளையிட்டபோது, ஆபிரகாம் அதைத் தயங்காமல் நிறைவேற்றத் துணிந்தார். இது அவரது ஆழ்ந்த கீழ்ப்படிதலைக் காட்டுகிறது. "ஈசாக்கினிடத்தில்தான் உன் சந்ததி விளங்கும்" என்று கடவுள் ஏற்கனவே உறுதியளித்திருந் தார். அந்த ஈசாக்கைபலியிட்டால் வாக்குறுதி எப்படி நிறைவேறும் என்ற மனித தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு, கடவுளின் வார்த் தைமாறாதது என்பதில் ஆபிர காம் உறுதியாக இருந்தார். கடவுளால் மட்டுமே மரித்தவர்க ளை உயிரோடு எழுப்ப முடியும் என்று ஆபிரகாம் முழுமையாக நம்பினார். எனவே, ஈசாக்கைப் பலியிட்டாலும் கடவுள் அவனை உயிர்ப்பிப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவரிடம் இருந்தது.
ஆபிரகாம் தன் ஒரே மகனான ஈசாக்கைப் பலியாகக் கொடுக் கத் துணிந்ததே அவரது விசுவா சத்தின் உச்சகட்டமாகும். கடவுள் வாக்குறுதியளித்தபடியே ஈசாக் கின் சந்ததியைப் பெருக்குவார் என்று நம்பிய அவர், உயிர்ப்பி க்க வல்லவர் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார்.
2.யோசேப்பு தன் மரணத்திற் குப் பிறகும் இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறு வார்கள் என்பதில் உறுதியாக இருந்து, தன் எலும்புகளை அங்கு (கானான்) எடுத்துச் செல்லும்படி கட்டளையிட்டான்.
3.மோசேயின் பெற்றோர் அரச ரின் கட்டளைக்குப் பயப்படாமல், அவனது தெய்வீக நோக்கத்தை உணர்ந்து அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தனர். இது கடவுளுடைய பாதுகாப்பின் மீதான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டு கிறது.
மோசே பார்வோனின் மகனின் வளர்ப்பு மகனாக இருந்த அனை த்து உலக இன்பங்களையும், செல்வங்களையும் உதறித்தள் ளினார். தற்காலிக பாவ இன்பங் களை விட, கடவுளின் மக்களு டன் சேர்ந்து துன்புறுவதையே அவர் மேலாகக் கருதினார். கண்ணுக்குத் தெரியாத கடவு ளைத் தன் கண்முன்னே காண் பதுபோல நம்பிக்கையோடு நிலைத்திருந்தார்.
4. எரிகோவின் மதில் சுவர்க ளும் ராகாபின் நம்பிக்கை யும். இஸ்ரவேலர்கள் கடவுள் சொன்னபடி எரிகோவைச் சுற்றி வந்தபோது, அவர்களின் நம்பிக் கையின் பலனாக மதில்கள் இடிந்து விழுந்தன.
நம்பிக்கையின் காரணமாகவே ராகாப் என்னும் வேசி, ஒற்றர் களை அன்போடு ஏற்றுக் கொண்டு கீழ்ப்படியாதவர்க ளோடு சேர்த்து அழிக்கப்ப டாமல் காப்பாற்றப்பட்டாள். இந்த பகுதி, நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல, மாறா க கடவுளின் வாக்குறுதிகளின் மீது முழுமையாகச் சார்ந்து வாழ் வது என்பதை நிரூபிக்கிறது. வாழ்வு பொருளற்றுப் போகை யில் கடவுள்மீதுள்ள நம்பிக்கை நம்மை கடவுளோடு இணைக் கிறது.
நம்பிக்கை என்பது கண்ணுக் குத் தெரியாத எதிர்காலத்தை, காணப்படுகிற நிகழ்வுகளை விட உறுதியாக நம்புவதே உண் மையான விசுவாசம்.
3.புயலுக்கு பின் அமைதி.
மாற்கு: 4: 35-41.
அன்பர்களே! இயேசு கிறிஸ்து தனது மூன்று வருட ஊழியத்தி ன் பெரும்பகுதியை இந்த கலி லேய கடலில் கழித்தார்.
இது, திருவிவலியத்தில் திபேரி யக் கடல் என்றும் பழைய ஏற்பா ட்டில் கின்னரெட் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது
கலிலேயா கடல், யோர்தான் நதி பாயும் இஸ்ரேலில் உள்ள ஏரி.
கலிலேய ஏரி அதன் புயல்களுக் குப் பெயர் பெற்றது.வழக்கமாக மிகவும் அமைதியாக இருக்கும் இந்த நீர்நிலைகளின் மீது, வானம் முற்றிலும் தெளிவாக இருக்கும்போது கூட, பயங்கர மான சூறாவளிகள் திடீரென வீசுவதைக் காண்பது அசாதா ரணமானதல்ல.
சுற்றிலும் மலைகளும், பசுமை யான வயல்களும் சூழப்பட்ட அழகிய இயற்கை எழில் கொஞ் சும் இடமாகும்.இயேசு தண்ணீ ரில் நடந்தது, புயலை அடக்கி யது, மற்றும் 5,000 பேருக்கு அப்பத்தையும் மீனையும் பகிர் ந்தளித்தது போன்ற பல அற்புத ங்கள் இங்கு நடைபெற்றதாக விவிலியம் கூறுகிறது.
பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு போன்ற சீடர்கள் இந்த ஏரியில் மீன்பிடித் தொழி லை செய்து வந்தவர்கள்.
மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில் தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது
அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலை களைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலை களையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.
கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு மலைப்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார் (காண்க: மத்தேயு 5:1-7:28).
அன்பர்களே! இந்த கலிலேய கடலில், ஒருநாள் மாலைவேலை யில் மக்கள்கூட்டம் அதிகமாக
இருந்தது. ஆண்டவர் சீடர்களை
ப்பார்த்து, அக்கரைக்கு செல் வோம் வாருங்கள் என்றார்.
உடனே, மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, இயேசுவுடன் பட
கில் சென்றனர்.இயேசுவின் பிரசங்க மேடையாகப் பயன்படு த்தப்பட்ட அந்தப் படகு இயேசு வையும் அவருடைய சில சீடர்க ளையும் கடலின் அக்கரைக்குக் கொண்டு போகப் பயன்படுத்தப் பட்டது.
ஆண்டவர் கலைப்பின் மிகுதி யால் படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கி க்கொண்டிருந்தார். இந்தப் படகு களில்... எந்த வொரு முக்கிய பிரமுகருக்கும் படகின் பின்புறத் தில் வைக்க ப்பட்டிருக்கும் சிறிய இருக்கையே இடமாகும்; அங்கே ஒரு கம்பளமும் மெத்தையும் விரிக்கப்பட்டிருக்கும். படகோட்டி, முன்னால் நன்றாகப் பார்ப்பதற் காக, படகின் பின்புறத்திற்கு அருகில் இருந்தாலும், தளத்தில் சற்று முன்புறமாக நிற்கிறார்."
அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டி ருந்தது.
இயற்கையாக, கலிலேய கடலி ன் மேல்பகுதி மலைகள், பள்ள தாக்குகள்,கணவாய்கள்,
எர்மோன் மலை சிகரங்கள், பீடபூமிகளிலிருந்து வரும் அழுத் தம் நிறைந்த காற்று கடலை
தாக்கும். அன்று அவ்வாறு நடந் தது.அப்பொழுது, சீடர்கள் இயேசுவை எழுப்பி, "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று சொல்லி அவரை எழுப்பினார் கள்.
உமக்குக் கவலையில்லை யா?" Don't you mind?
அன்பர்களே! இந்த வார்த்தை
சீடர்கள் படகில் இருந்தபோது இயேசுவிடம் கேட்ட பிரபலமான ஒரு வார்த்தை. அப்பொழுது அவர் அமைதியாய் இருந்தார்.
சில உண்மைகளை இதன்மூலம் உணர்த்துகிறார்:அவர் எப்போ தும் நம்மோடு இருக்கிறார்: படகில் இயேசு உறங்கினாலும், அவர் சீடர்களுடன்தான் இருந் தார். நம் கவலைகளின் போதும் அவர் நம்மை விட்டு விலகவில் லை.பயம் மற்றும் கவலைகளு க்குப் பதிலாக, கடவுள் மீது முழு மையான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை அது உணர் த்துகிறது.உங்கள் உள்ளத்தில் எழும் எந்தப் புயலையும் அமைதி ப்படுத்த அவரால் முடியும். உங்கள் கவலைகளை அவரிடம் ஒப்படைக்கலாம்.
இயேசு எழுந்து, காற்றைக் கடிந்து கொண்டார். கடலை நோக்கி, "இரையாதே, அமைதி யாயிரு" என்றார். காற்று அடங் கியது; மிகுந்த அமைதி உண்டா யிற்று.
இரையாதே, அமைதியாயிரு"
இயேசுவின் இந்த ஒற்றை வார் த்தைக்குக் கட்டுப்பட்டு, பெருங் காற்று உடனே நின்றுபோய் கடலில் மிகுந்த அமைதி உண்டா னது.நம் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத சோதனைகள், கவலைகள் அல்லது பயம் (புயல் போன்றவை) நம்மை அச்சுறுத்து ம்போது, இயேசுவின் இந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவரிடம் இறைவேண்டல் செய்தால் அவர் நமக்கு அமைதி யைத் தருவார்.
"ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்க ளுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?"
ஆண்டவர், சீடர்களைப் பார்த்து, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக் கு இன்னும் நம்பிக்கை இல்லை யா?" என்று கேட்டார்.தங்களோடு கடவுள் இருக்கும்போது எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்ப தை அவர்கள் உணர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
நம் வாழ்க்கையில் புயல்கள் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் போது நாம் அஞ்சுவது இயல் புதான். ஆனால், நமது பயத்தை விட நமது நம்பிக்கை பெரிய தாக இருக்க வேண்டும். நம் வாழ்வில் ஏற்படும் சோதனை களும், எதிர்பாராத இன்னல்க ளும் நம் மன உறுதியைப்குலை க்கும் போது, முழுமையான நம்பி க்கையுடன் கடவுளை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதை இக்கேள்வி நமக்கு உணர்த்துகி றது.
இவர் யாரோ?" (மாற்கு 4:35-41)
இயேசுவின் சீடர்கள் அவர் காற் றின் கொந்தளிப்பை அடக்கிய மாபெரும் அற்புதத்தைக் கண்டு வியந்து, " இவர் யாரோ?என்று கேட்டனர். புயலையும் கடலை யும் அடக்கும் வல்லமை படைத் தவர் இயேசு என்பதை உணர்ந் து, ஆச்சரியத்தால் அவர்கள் எழுப்பிய கேள்விதான் இது.
சீடர்கள் இவர் யாரோ என்று கேட்ட கேள்வி நல்ல கேள்விதா ன் ஆனால், மெய்யாகவேஇயேசு தேவனுடைய குமாரன்தான் என்று சரியாகக் கண்டு கொள்ள அவர்களுக்குச் சற்றுக் காலம் வேண்டியதாயிருந்தது.
அன்பர்களே! கடற்கரையில் போதனையோடு ஆரம்பித்த இயேசுவின் அன்றைய தினம் கடலில் ஒரு சோதனையான வேளையோடு முடிந்தது.
காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தியதைப் போல, நம் வாழ்வின் சோதனைகளை யும் அமைதியாக்க அவரால் முடியும்.சீடர்கள் இயேசு தங்க ளுடன் இருப்பதை உணர்ந்த போது, புயல் அமைதியானது. அவர் அங்கே இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்தவுட ன், அச்சமற்ற சமாதானம் அவர் களின் இதயங்களில் நுழைந் தது. இயேசுவுடன் பயணம் செய் வது என்பது, புயலிலும் கூட சமாதானத்துடன் பயணம் செய் யலாம்.கவலை எனும் புயலில், அவர் தேவனுடைய அன்பின் அமைதியை நமக்குக் கொண்டு வருகிறார்.
வாழ்வு பொருளற்றுப் போகையி ல் " அமைதி தரும் கடவுள் நம்மை ஆசிர்வதித்து காப்பா ராக ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com
Note: The sermon has been prepared to deliver on 14th June 2026 at CSI Bishop Newbegin Church, Athur, Chengalpet.
![]() |

Comments
Post a Comment