பெண் குழந்தையின் மதிப்பை உறுதி செய்தல் (235) Affirming the worth of the Girl Child.எண்ணிக்கை Numbers: 27: 1-11, திருப்பாடல் 71 : 1-12, திருத்தூதர் பணிகள் 21: 7-14, மாற்கு 5: 35-43.பெண் குழந்தைகள் ஞாயிறு The Girl - Child Sunday.

முன்னுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம் பெண் குழந்தைகள் ஞாயிறு 
அதன் தலைப்பாக நமக்குகொடு க்கப்பட்டிருப்பது," பெண் குழந் தையின் மதிப்பை உறுதி செய்தல். Affirming the worth of the Girl Child.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருவிவிலியம், படைப் பில் ஆதாம் ஏவாளுக்கு காயின் ஆபேல் என்ற ஆண் குழந்தைக ளின் பெயர்கள் மட்டுமே குறிப் பிடப்பட்டிருக்கிறது  ஆனால் பெண் குழந்தைகள் பெயர்கள் இடம் பெறவில்லை.ஆனால், தொடக்க நூலில் 4 ஆம் அத்தி யாயத்தில் வெளிப்படையாகப் பெயரிடப் பட்ட முதல் பெண்கள்: லாமேக்கின் மனைவிகளான ஆதா மற்றும் சில்லா. (Adah and Zillah,)ஆவார்கள்.
 பண்டைய சமூகத்தில் அதாவது தொடக்க நூல் காலத்தில் வம்சா வளி (Genealogies)ஆண் வழியாக க் கண்டறியப்பட்டது. அதுதந்தை வழி சமூகமாககும்.(Patrilineal society) இதன் முதன்மை நோக் கம், குறிப்பாக ஆதாம் முதல் நோவா வரையிலும், இஸ்ரவேல் மக்கள் வரையிலும், ஆணாதி க்க வம்சாவளியைக் கொண் டது. இது பெண்களை மதிப்பி ழக்கச் செய்வதற்காக அல்ல, மாறாக அது வம்சாவளியைப் பதிவு செய்வதற்கான நிலையா ன சமுக முறையாக இருந்தது.
 யூத கலாச்சாரத்திலும், வழிபா ட்டு முறையிலும் பெண்களுக் கான சமநீதி வழங்கவில்லை. அது ஆணாதிக்க சமூகமாவும், சமயமாகவும் இருந்தது. ஒரு யூதன் ஜெபிக்கின்ற போது,  கடவுளே உமக்கு நன்றி என்னை கடவுள் நம்பிக்கையற்றவராக வும், ஒரு காட்டு மிராண்டியாக வும், ஒரு அடிமையாகவும், ஒரு பெண்ணாகவும் படைக்காத தற்கும் நன்றி என வேண்டுவார். இப்படி வேண்டுகின்ற யூத மதம்தான், "கடவுள், தான் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என பெண்களை படைத்தார் என்று கூறுகிறது."
 நண்பர்களே! நம் திருவிவலி யம்  தான் உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கு தன் தந்தையின் உரிமை சொத்தில்  (property rights)பங்களிக்க வேண் டும் என்று கூறுகிறது.( எண்ணி க்கை:27:8)
 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஐந்தப்பம் இரண்டு மீனை 5000 பேருக்கு பகிர்ந்து அளித்தார் அந்த 5000 பேரில் ஆண்கள் மட்டுமே எண்ணப்பட் டனர் பெண்களும் குழந்தைக ளும் எண்ணிக்கையில் கொண் டு வரப்படவில்லை.(மத்தேயு நற்செய்தி 14:21) நம் நற்செய் தியாளர்களும் யூத கலாச்சார எழுத்தாளர்கள் போலவே எழுதினார். நம் திருத்தூதர் பவுல் அடிகளார், " இனி உங்க ளிடையே யூதர் என்றும் கிரேக் கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணை ந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றா ய் இருக்கிறீர்கள். (கலாத்தியர் 3:28) என ஆண் பெண் சமநிலை யை குறிக்கிறார்.
 நண்பர்களே! பெண் குழந்தைக ளுக்குதாயின் வயிற்றில் கரு நிலையிலிருந்து கல்லறை நிலை  வரை அவர்களின் வாழ்க் கை சவாலாகவே. உள்ளது. கருக்கொலை, சிசுக் கொலை, பெண் கடத்தல், பாலியல் வன் கொடுமை, வரதட்சணை,மற்றும் வீட்டுவன்முறை (Domestic violence ) மூலம் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. . பாலின சமத்துவம் (gender equality) என்பது ஒருஅடிப் படை மனித உரிமை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கொள்கையாகும்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான கல்வி,வேலைவாய்ப்பு, பாதுகாப்பான வேலைகள், சம ஊதியம், மற்றும் தலைமைப் பொருப்புகளைக் கொண்ட ஒரு பணியிடத்தை உருவாக்குதல் மிக அவசியம்.
இந்தியாவில், சமீபத்திய முதன் மையான  சமூக வளர்ச்சி என்ப து, அரசியலமைப்பு (106) சட்டம், 2023 ஆகும் , இந்தச் சட்டம் மக்களவை (நாடாளு மன்ற த்தின் கீழ்சபை), மாநில சட்டமன்றங்கள்  ஆகியவற்றில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்களை ஒதுக்கு கிறது.இது புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து எல்லை நிர் ணய செயல்முறை முடிந்ததும் இந்த இடஒதுக்கீடு நடைமுறை க்கு வரும். எனவே, இது இன் னும் அமலுக்கு வரவில்லை.
 பெரும்பாலும் மக்களின் கருத்து பெண்களுக்கு 50 சதவீதம் எல்லா துறைகளிலும் ஒதுக்க வேண்டும் என்பதே. அவ்வாறு செய்கின்ற போது தான் பெண் களுக்கான மதிப்பு மரியாதை சமூகத்தில் உறுதி செய்யப்படும்.
1.சொத்துரிமை என்பது பிறப்புரிமை.Property right is a birth right.எண்ணிக்கை Numbers: 27: 1-11.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உலகில் போராடாமல் உரிமைகள் கிடைப்பதில்லை போராடியே பல உரிமைகளை மக்கள் பெற்றுள்ளனர் அந்த வகையில் இந்தியாவில்  20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிரு ந்தே மாநிலத் தலைவர்கள் பெண்களுக்கு சம உரிமைகோரி போராடி வந்தனர். 1929 ஆம் ஆண்டு, செங்கல்பட்டில் சுய மரியாதை இயக்கம் (Self Respect Movement )ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டில், பெரியார் பெண்கள் சொத்துரிமை பெற வேண்டும் என்று ஒரு தீர்மானத் தை நிறை வேற்றினார்.இது, சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு, 1989 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எம். கருணாநிதி, அந்தக்கோரிக்கையைநிறைவேற்ற இந்து வாரிசுரிமை (தமிழ் நாடு திருத்தம்) சட்டத்தை நிறைவேற்றி பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை
வழங்கினார். இதற்கெல்லாம், முன்னோடியாக, யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங் களைச் சார்ந்தவர் செலொபு காத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரி ன் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற ஐந்து புதல்வியர் இருந்த னர்.இவர்கள், மோசேயிடமும், ஆசாரியனாகிய எலெயாசாரிட மும், பிரபுக்களிடமும், இஸ்ர வேல் சபையார் அனைவரிடமும் வந்து, பாலை நிலத்தில் இறந்த
தன் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லாததால், தங்கள் தந்தை யின் பெயர் உரிமை சொத்து பங்கை  கேட்டார்கள்.ஒரு குடும்ப த்தின் ஆண் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால், அந்த குடும்பத் தின் பெயர் மற்றும் சொத்துக் கள் வேறொரு குடும்பத்திற்குச் செல்லும். இது போன்ற சூழலில், மகள்கள் தந்தையின் பெயரை குடும்பத்திலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
இப்போது மோசே தங்கள் வழக் கைக் கர்த்தருக்கு முன்பாகக் கொண்டு வந்தார். கர்த்தர், 'செலொப்பியாத்தின் மகள்கள்  கேட்பது சரியே; அவர்கள் தந்தை யின் சகோதரரிடையே அவர்களு க்கும் உரிமைச் சொத்தில் பங்கு கொடுத்து, அவர்கள் தந்தையின் உரிமைச் சொத்து அவர்களுக் குக் கிடைக்கச் செய் என கட்ட ளையிட்டார். இது பெண்களின் உரிமை போராட்டம். கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வழிகாட் டுதலின்படி கேட்டார்கள். புதிய சட்டத்தை இஸ்ரேல் மக்களுக் காக இப்பெண்கள் நிலை நாட் டினர். சொத்துரிமை எங்களின் பிறப்புரிமை என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்துக் கூறினார்கள்.
2. பெண் தீர்க்கர்கள். கிறித்து வின் திருதூதர்கள்.The girl prophets are the Apostelic of Christ. திருதூ தர் பணிகள் Acts: 21: 7-14.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிகளா றும் அவரோடு சென்ற உடன் ஊழியர்களும் தீரு Tyre நகரத் திலிருந்து டோலுமைஸ் நகருக் கு வந்தனர்.அதன் பிறகு மறு நாள் அவர்கள் புறப்பட்டுச் செச ரியா வந்தார்கள். நற்செய்தி அறிவிப்பவரான பிலிப்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கினார்கள். அவர் திருத்தொ ண்டர் எழுவருள் ஒருவர்
இவர் எருசலேமில் உள்ள கிறிஸ் தவ சமூகத்தின் ஏழைகளைப் பராமரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் அவர் ஒருவராக இருந்தார் ( திருதூதர் பணிகள் 6 ). அவர் சமாரியாவில் பிரசங் கித்து அற்புதங்களைச் செய்தார் , மேலும் எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியில் ஒரு எத்தியோப்பிய மனிதரைச் சந்தித்து திருமுழுக்கு கொடு த்தார் , இது பாரம்பரியமாக எத்தியோப்பிய திருச்சபையின் தொடக்கத்தைக் குறிக்கிறது ( தி. தூ. ப. 8:26–39 ). பின்னர், பிலிப்பு தீர்க்கதரிசனம் சொல்லு ம் தனது நான்கு மகள்களுடன் செசரியா மரிட்டிமாவில் வசித்து வந்தார் ,இங்கு தீர்க்கத ரிசிகளாக இருந்த பிலிப்பின் மகள்களைப் பற்றி லூக்கா அறிவிக்கிறார். ஆனால் அவர் கள் பெயர்களை பதிவு செய்யவி ல்லை.அவர்கள் சிறிய பெண்க ளாக (கன்னிப்பெண்களாக Virgins) இருந்தபோதிலும், அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கும் ஊழி யத்தில் பெண்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது இங் கே நமக்குக் கற்பிக்கப்படுகிற து.இந்தத் தீர்க்கதரிசனங்கள் பரிசுத்த ஆவியின் சான்றாக இருந்தன. பிலிப்பின் குடும்பம் கடவுளின் இல்லமாக இருந்தது பிலிப்பு நற்செய்தியை வழங்கி னார் அவருடைய அன்பான பெண் பிள்ளைகள் நால்வரும் கடவுளக்கான தீர்க்கதரிசன த்தை உரைத்தார்கள். பெண் பிள்ளைகளை பக்தியில் வளர் ப்பது பெற்றோரின் கடமை அல்லவா..  
 1 கொரிந்தியர் 7:34- ல் , புதிய ஏற்பாட்டு திருச்சபையில், கர்த்த ருடைய சேவைக்கு தங்களை முழுமையாக அர்ப்பணிக்க, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த பெண்கள் இருந்தனர் என்பதை திருத்தூதர் பவுல் வெளிப்படுத்துகிறார். இவர்கள் கிறிஸ்துவுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கள் புனிதர்கள், தீர்க்கர்கள். திரு தூதுவர்கள். கடவுளின் திருப்ப ணியை இவர்கள் ஆற்றியதால் சமூகத்தில் மதிப்பு மிக்க பெண் களாக அறியப்படுகிறார்கள்.
3.பிள்ளைகளை காப்பதே பெற்றோரின் கடமை. The duty of the parents is to save their children.மாற்கு 5: 35 -43.
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! மாற்கு நற்செய்தியில் தன் அன்பான மகளுக்காக யவீரு 
என்ற ஒரு யூத தொழுகைக் கூடத் தலைவன், ஆண்டவரை தேடி வருவதை பார்க்கின்றோம்.
இக்காலத்தில் யூதர்கள் இயேசு விடம் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆகினும் தன் அன்பான 12 வயது மக்களு க்காக தன் அந்தஸ்தை, யூத கட்டுப்பாட்டை விட்டுவிட்டு ஆண் டவரின் காலில் விழுந்து வணங் கி வருந்தி கேட்டுக்கொண்டான்
 இவன் மனாசே கோத்திரத்தை ச் சேர்ந்த யூதன். கப்பர்நாகூ மில் வசிப்பவன். இவன் மிகவும் கனத்துக்குரியவன், வசதி படை த்தவன்.   
"என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள் மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார். 
 அவர் வருகின்ற வழியில் ரத்தப்போக்கில் பாதிக்கப்பட்ட  பெண்ணுக்கு சுகம் கொடுத்தார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண் டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம் முடையமகள்இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக் கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர் என்று கூறினார். யூத பரம்பரையில் மரித்தவர்களை அன்றே அடக்கம் பண்ண வேண் டும். அங்கு அனைவரும் கூடி துக்கத்தோடு அழுது கொண்டிரு ப்பதைப் பார்த்தார். அவர்களைப் பார்த்து பிள்ளை மரிக்கவி ல்லை நித்திரையாயிருக்கி
றாள் என்றார்.
இயேசு தம்மோடு வீட்டிற்குள் நுழைவதற்கு சீடர்களில் யாக் கோபு, பேதுரு, யோவானை மட்டும் தான் அழைத்தார். உடன் பெற்றோரோடு சென்றார்.
தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறு பெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.” தலித்தா கூமி என்ற வார்த்தை ஆண்டவர் பேசிய அராமிக் வார்த்தையா கும்.. ஆனால் கிரேக்க மொழி யில் நற்செய்தியை எழுதிய மாற்கு அவர்களுக்கு இந்த வார்த்தை பேதுரு மூலம் கேட்டு பெற்றிருக்கலாம் என்பதே உண்மை. 
அன்பர்களே! கிறிஸ்துவும் பெற்றோரும் ஒன்றாக நின்றால், குழந்தைகளில் எந்த உயிரற்ற நிலையும்உயிர்பெறும்.பெற்றோ ர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து கடவுளின் கைக ளில் ஒப்படைக்க வேண்டும்.
பெண் குழந்தைகளின் பாதுகா ப்பு முதன்மையாக குடும்பங் களில் சாத்தியமாக்கப்பட வேண் டும். திருத்தூதர் பவுல் அடிக ளார்,"தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டா தீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்து வாருங்கள். 
(எபேசியர் 6:4) என்கிறார்.
இந்திய கலாச்சாரத்தின்படி, திருமணத்திற்குப் பிறகு பெண் பிள்ளைகள்  வேறொரு வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். அவள் குழந்தைப் பருவத்திலிருந்தே தன் சொந்த வீட்டில் ஒரு அந்நிய னாக இருக்கிறாள்,பெண் குழந் தையின் வாழ்க்கையைப் பாது காக்க இறைவன் நமக்கு நினை வூட்டுகிறார்.
அன்பர்களே! இயேசு கிறிஸ்துவி ன் நற்செய்தி அன்பு, சுதந்திரம், அமைதி, நீதி மற்றும் பாது காப்பின் செய்தி. ஒடுக்கப்பட்ட எந்த சமூகத்திற்கும் நற்செய்தி விடுதலையை அறிவிக்கிறது. அவர்களின் குணாதிசயமாக வழங்கப்படும் பெண் குழந்தை களின் மதிப்பு உறுதிப்படுத்தப் பட வேண்டும்.   இது நம் ஒவ் வொருவரின் கடமை அல்லவா?  அவ்வழியில் நம்மை செயலாக்க கடவுள் அருள் புரிவாராக ஆமென்.

Prof. Dr David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com


Note: The sermon has been prepared to deliver at CSI  St. Peter's Church on 16th November, at Mission Compound, Chengalpet. TN.












Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

நோய்களை குணமாக்குதல் . (182) Healing in Sickness. விடுதலை பயணம் 4:10-17,22, திருப்பாடல் 103:1-10, 2 கொரிந்தியர் 12:1-10, யோவான் 9:1-7. நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு.