ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, "ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற
வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து
வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும்.
கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்'
(athetes) என்பது, "கற்றுக்கொள்"
என்ற பொருளாகும்.
உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும், (life) போத னையையும் (teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில்
"டால்மிடிம்" (talmidim) என்ற வார்
த்தை சீடர் என்பதை குறிக்கிறது.
லத்தின் மொழியில், சீடர் (disciple)
என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற
வார்த்தையாகும்.
இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்த இரட்டை சகோதரர்கள். இந்த நான்கு பேருமே மீனவர்கள். யோனாவின் குமார்களான சீமோன் பேதுரு, அந்திரேயா மற்றும் செபுதேயுவின் பிள்ளை கள் யாக்கோபு யோவான். இவர் களைவைத்து தான்,' என்னை
பின் பற்றி வாருங்கள், இனிமனுசர்களைபிடிப்பீர்கள் என்று கூறினார். பொதுவாக மீனவர்கள் ஒரு முறை வலை வீசினால் அதிக மாக மீன் பிடிப்பார்கள் அவ்வாறு மீனவனாகிய சீமோன் பேதுரு ஒரே பிரசங்கத்தில் 3000 பேரை திருச்சபையில் சேர்த்துக் கொண் ட வரலாறும் உண்டு.ஆண்டவரின்
ஆண்டவரின் 12 சீடர்களும் யூத வம்சத்தை சேர்ந்தவர்கள். வேறு இனத்தார், (Gentiles) தாழ்ந்த சமுக த்தை சேர்ந்த சமாரியர்கள் யாரு மே சீடராக இல்லை. பன்னிருவ ரில் பெண்களும் இல்லை.
சீடர்கள் ஆண்டவரின் வாழ்வை
யும், போதனைகளையும் பிரதி
பலிக்கின்றவர்கள். இவர்கள்
தங்கள் சொந்த வாழ்க்கையை
விட்டு, 3 -1/2 ஆண்டுகள் ஆண்ட வரிடமே இருந்தனர். நாடு, நகரங்கள், கிராமங்கள் என பல இடங்களில் சுற்றித் திரிந்தனர். ஆண்டவர் சென்ற இடங்களில் எல்லாம் பின் சென்றனர். இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி முதலில் யூதமக்களுக்குத்தான்.இவர்களை காணாமல் போன இஸ்ரவேல் வீட்டார்கள் என்று ஆண்டவர் குறிப்பிட்டார். இதுதான் மேசியா வின் முதல் இறை பணியாய் இருந்தது.இதற்காகவே, அவர் சீடர்
களை யூதர்களாகவே தேர்வு
செய்தார்.
ஏன் ஆண்டவர் பெண் சீடர்க ளைநியமிக்கவில்லை? Why did Jesus not appoint any female disciples?
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! ஆண்டவர் ஏன் பெண்சீடர்
களை தேர்வு செய்யவில்லை?
1. அக்காலத்தில் நிலூவிய யூத கலாச்சாரத்தின் படி பெண்கள் போதிக்க அனுமதிக்கவில்லை இதையே திருத்தூதர் பவுலடிகி றாறும் தன் நிரூபங்களில் கூறி யிருக்கிறார்.
2. இயேசுவுக்கு சீடராக இருக்கி ன்றவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை தன் தொழிலை விட்டு விட்டு ஆண்டவரோடு இருக்க வேண்டும்.
3 ஆண்டவர் இரவு பகலாக நாடு நகரங்கள் கிராமங்கள் என்றும் வனாந்தரமான இடங்களிலும், காடு, மலைகள், கடற்கரை களிலும் சுற்றித்திரிந்தார். இதற்கு பெண்கள் பொருத்தமானவர்கள் அல்ல. இரவு நேரங்களில் தங்கு வதற்கு அவர்களுக்கு இடம் பார்க்க வேண்டும் புது இடங் களில் மிக கடினமானது
4. ஆண்டவருடைய சீடர்கள் இவ்வுலகில் தன்னை போல் மரிக்க இருக்கிறார்கள் சிலர் சிறைச் சேதம் பண்ணப்படுவார் கள், சிலுவையில் அறையப்படு வார்கள் , கல் எரிந்து கொள்ளப்ப டுவார்கள், நாடு கருத்தப்படுவார் கள், சிறைகளில் அடைக்கப்படு வார்கள், விசாரணைசங்கத்துக்கு முன்பாக நிற்கவைக்கப்படுவார் கள் எனவே, இத்தகைய துன்பங் களுக்கு பெண்கள் பொருத்த மானவர்கள் அல்ல
5 யூத சமூகம் ஒரு ஆணாதிக்க சமூகம் பெண்களை மதிப்பதில் லை எனவே பெண்கள் சொல்வ தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள்
6. ஆண்டவர் சீடர்களை 12 கோத்திரத்தின் அடிப்படையில் தேர்வு செய்தார் அந்த 12 கோத்தி ரங்களில் ஒருவர் கூட பெண்கள் இல்லை.
7 யூத சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல ஆண்களே குடும்பத்தின் தலைவர்
8 பெண்கள் வேதத்தை படிக்க அனுமதி கிடையாது
9. பெண்கள் சமய நீதிமன்றங் களில் ஒரு சாட்சியாக கூட நிற்க முடியாது
10 பெண்களுக்கு எருசலேம் தேவாலயத்திற்கு உள்ள சென்று வணங்க அனுமதி இல்லை வெளி ப்புறத்தில் உள்ள இடத்தில் தான் அவர்கள் கடவுளை வணங்க வேண்டும்
11 யூத ஜெப ஆலயங்களில் பெண்கள் தனியாக தான் கடவுள் வழிபாடு செய்வார்
12. பெண்களுக்கு சொத்தில் முழு உரிமை கிடையாது இவர்கள் குழந்தை வளர்ப்பதிலும் குடும் பத்தை பாதுகாக்க மட்டுமே உரிமை பெற்றனர். எனவே ஆண்டவர் பெண்களை சீடர்களாக நைரிடையாக ஏற்றுக் கொள்ள வில்லை..
13.யூத மத குருக்களான ரபீக்கள் பெண்களுடன் பொது வெளியில் பேசக் கூடாது மற்றும் அவர்களை ச் சீடர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது என்பது யூத சமயச் சட்டம்.
1.ஏன் எழுபது பேரை அனுப்ப
வேண்டும்? Why should Jesus send
70 or72? Luke:10:1-11.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே ஆண்டவர் ஏன் புதியதாக 70 அல்லது 72 சீடர்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டவர் சிலுவையில் அறையப்படுகின்ற காலம் மிக சீக்கிரத்தில் வர இருக்கிறது இவர் நற்செய்தி அளிக்க வேண்டிய நாடுகள், ஊர்கள், இடங்கள் மிகப் பறந்து விரிந்தவை. எனவே, எல்லா தேசத்திற்கும் நற்செய்தி அனுப்ப வேண்டும் என்ற ஒரே காரணத் திற்காகவும், அப்போது இருந்த வேரு இனத்து ஆட்கள் வசிக்கும் 70 நாடுகளுக்கும், நற்செய்தி அளிக்க வேண்டும் என்ற நோக் கத்திற்காகவும், வேறு இனத்தா ரின் 70 நாடுகளுக்காக யூதர்கள் கொண்டாடும் ஆசாரிப்பு பண் டிகை (Tabernacle) காலங்களில் எழுபதுகாளைகளைபலி செலுத்துவார்கள் அதற்காக ஆண்டவர் 70 பேரை தெரிந்து கொண்டார்.தன்னுடைய சீடர்கள்
நேரிடையாக அந்தந்த ஊர்களு க்கு செல்ல வேண்டும் என்ற
நோக்கத்திற்காக, அவர்களை
அனுப்பினார்.இறையாட்சிபற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார். அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண் டாம். ஓர் அங்கி போதும். உங்களை ஏற்றுக் கொண்டவர்கள் என்னை ஏற்றுக் கொண்டவர்கள் உங்களை ஏற்றுக் கொள்ளாத வர்களுக்கு கொடுமையான தண்டனை வரும் என்று அறிவுறு த்திச் சொன்னார். அவர்கள் சென்றார்கள் ஆண்டவருடைய வார்த்தையை விதைத்தார்கள். மகிழ்ச்சியோடு திரும்பி வந்தனர்.
2. இயேசுவின் பெண் சீடர்கள்.
The female disciples of Jesus Christ.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே ஆண்டவராக இயேசு கிறிஸ்துவினுடைய இறை பணியில் பெண் சீடர்களும் மிகத் தீவிரமாகபங்குபெற்றனர்ஆனால், ஆணாதிக்க யூத நற்செய்தியாளர் கள் இவர்களின் பெயர்களை சரியாக பதிவு செய்யவில்லை.
புதிய ஏற்பாட்டில் ஏராளமான பெண்கள் இயேசுவை பின்பற்றி னார்கள். இப்பெண் சீடர்கள் திருத் தூதர்களைப்போல பணிதளங்க ளில் நேரடியாக காட்சியளிக்கவி ல்லை எனினும் மறைமுகமாக இருந்து எல்லாச் சூழலிலும் இயேசுவிற்கு உதவினர். இப்பெ ண்கள் இயேசுவின் வாழ்வில் இறுதிவரை உடனிருந்தார்கள் என்பதை நான்கு நற்செய்தியா ளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
1.மகதலா மரியா:
இயேசு இவரிடமிருந்து 7 பேய்களை ஓட்டியிருந்தார் (மாற்கு 16:9)
இயேசு உயிர் துறக்கும்போது, சிலுவை அருகில் நின்ற சீடர் களுள் இவரும் ஒருவர். (யோவா 19:25, மாற் 15:40)அடக்கம் செய்த இயேசுவின் உடலில் நறுமணத் தைலம் பூசச் சென்றவர் (மாற்கு 16:1)மருந்து செய்து விற்பவர்.
.இயேசுவின் கல்லறை காலியாக இருந்ததை முதலில் கண்டவர் (யோவா 20:1) இவர்தான்.
உயிர்த்த ஆண்டவரை முதலில் கண்டவர் இவரே (மாற்கு 16:9)
இவர்தான் முதல் நற்செய்தி யாளர். இயேசு உயிர்த்த செய்தியை அப்போஸ்தலர்கள் பதினொருவருக்கும், மற்ற அனைவருக்கும் முதலில் அறிவித்தவர் (லூக் 24:9,10)
(2.)சூசன்னா மற்றும் 3.யோவன்னா:
இவர்கள் ஏரோது மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவியர். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய் சென்று இறையாட் சிப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தபோது இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள் (லூக் 8:1-3). இயேசு உயிர்பெற்றெழுந்த செய் தியை முதலில் மற்ற 11 சீடர்களுக் கு அறிவித்த பெண்களில் யோவ ன்னாவும் உடன் இருந்தார் (லூக் 24:10)
4.மரியா சலோமி
இவர் செபதெயுவின் மனைவி (மத் 27:56)இவர் பிள்ளைகள்தான் இயேசுவின் சீடர்களான யோவா னும் , யாக்கோபும் (மத் 20:20, மத் 27:56) சிலுவை அடியில் மற்ற பெண்களோடு தொலையில் நின்றுகொண்டிருந்தவர் (மாற்கு 15:40)அடக்கம் செய்த இயேசுவின் உடலில் மற்ற பெண்களோடு நறுமணத்தைலம் பூசச் சென்றவர் (மாற்கு 16:1)மேரி சலோமி தூய அன்னாவின் மகள்களான மூன்று மேரிகளில் ஒருவராகக் கருதப்ப ட்டார், எனவே இவர் இயேசுவின் தாயான மரியாவின் ஒன்றுவிட்ட சகோதரியாவார்.
5.குளோப்பாவின் மரியா:
இவர் சிலுவை அடியில் மற்ற பெண்களோடு நின்று கொண்டிருந்தவர் (யோவா 19:25) மேற்குறிப்பிட்ட பெண்களைத் தவிர மேலும் பல பெண்கள் இயேசுவின் சீடர்களாக இருந்தா ர்கள் என்பதை லூக்கா நற்செய்தி 8 ஆம் அதிகாரத்தில் நாம் அறிகி றோம்.
6.பெத்தானியா மரியா:
இவர் பெத்தானியா என்னும் ஊரில் தன் சகோதரி மார்த்தா வுடன் வாழ்ந்து வாழ்ந்தவர் (யோவா 11:1)
இவர் இலாசர் மற்றும் மார்த்தா வின் சகோதரி (யோவா 11:21)
இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர் (யோவா 11: 1-2).
இயேசு அவள் வீட்டிற்கு வந்த போது அவர் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். மரியா நல்லப் பங்கை தேர்ந்தெடுத் துக்கொண்டாள் என்று இயேசு அவளை பாராட்டினார். (லூக் 10:42) இயேசுவின் ஊழியங்களில் பங்கு பெற்ற பெண்சீடர்கள் ஆறு பேருக்கு மரியா என்ற பெயர் உள்ளது. அன்பர்களே! இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவரும் சீடர்கள் தான். நீங்களும் நானும் ஆண்டவரின் அன்புக்குரிய சீடர்கள். நம்முடைய பயணம் சிலுவையை நோக்கியே இருக் கட்டும். ஆண்டவரின் வார்த்தை படி, " எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமு ழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு நற்செய்தி 28:19) என்ற
உன்னத கட்டளையை நிறை வேற்றுவோம். லெந்து நாம்
யார் என்பதை உணர்த்தும் திரு
நாள்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermon centre
www.davidarulblogs.com.
fully formed disciple a living copy of the master.
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment