சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.
முன்னூரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or
"ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று
பெயர். இந்தியாவில் உச்ச நீதி
மன்றமும் (Supreme Court) மாநில அளவில் (உயர்நீதி மன்றம்'(High Court) இருப்பது போல ஒவ்வொரு
நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது
இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன்
தலைமையிடம் எருசலேம்.மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge)தலைமை தாங்கப்பட்டது. இந்த நாசிதான் மிஸ்னாவை
(யூத வாய்மொழி சட்டங்கள்)
திருத்தி எழுதுகிறவர் (Redactor).
சமய வழக்குகளை விசாரித்தது.
இச்சங்கம் எருசலேம் கோவிலில் ஓய்வு நாள் மற்றும் யூத விழா நாட்களைத்தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் கூடியது. உரோ மையரின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தலைமைச் சங்கம் வலிமைமிக்கதாக விளங்கியது. யூத மக்களின் சமூக-சமய-அரசிய ல் வாழ்வில் இச்சங்கத்தின் தாக் கம் அதிகமாக இருந்தது. கைது செய்யும் அதிகாரமும் நீதி வழங் கும் அதிகாரமும் யூதத் தலைமைச் சங்கத்திற்கு இருந்தது. மரண தண்டனை தவிர, பிற தண்டனை விதிக்கும் அதிகாரமும் அதற்கு உண்டு.
வரலாற்றுப்படி இவ்வகை சங்கத் தால் எடுக்கப்பட்ட முடிவுகளில் இறுதியானது. சுமார் கி.பி 358இல் எபிரேய நாட்காட்டியினை யூத சமயத்தின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்ததுஇநன் சிறப்பு ஆகும். உரோமைப் பேரரசி ன் யூத அடக்குமுறை சட்டங்களி னாலும், கிறுத்துவ சமயத்தின் பரவலாலும், இவ்வகை சங்கங் கள் இல்லாமல் போயின. ஆயினும் பிரான்சின் முதலாம் நெப்போலியன் Grand Sanhedrin என்னும் பெயரில் இச்சங்கத்தை மீன்டும் ஏற்படுத்த முயன்றாலும் அது வெற்றி பெறவில்லை. இதேபோல தற்கால இசுரேலிலும் இவ்வகைச்சங்கங்களை ஏற்படு த்த முனைந்துள்ளனர்.
சனகரீன் சங்க உறுப்பினர்கள்:
இத்தலைமைச் சங்கம் மூன்று வகையில் இயங்கியது. முதல் வகையினர் முக்கிய குடும்பங் களிலிருந்தும் இனக்குழுக்களி லிருந்தும் வந்த மூப்பர்களைக் கொண்டது.
இரண்டாம் வகையில் பெரிய குருக்களும், குருக்கள் குடும்ப பிரதிநிதிகளும் அடங்கியிருந் தனர்.
மூன்றாம் வகையினர் மறைநூல் அறிஞர்கள் இருந்தனர். புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கத்தின் மற்ற உறுப்பினர்கள் இரண்டு கிறிஸ்தவர்கள் மட்டுமே. அவர்கள் அரிமத்தியாவைச் சேர்ந்த நிக்கோதேமு ( யூதர்க ளின் ஆட்சியாளர்")மற்றும் யோசேப்பு (யோவான் 3:1; மாற்கு 15:43; லூக்கா 23:50-51)
இவர்கள் ஆண்டவரின் விசார ணையில் கலந்து கொள்ளவில் லை. இவராகள் சனகரீன் சங்க உறுப்பினர்கள் என்ற அதிகாரத் தினால் தான் சிலுவையில் மரித்த இயேசுவின் உடலை பிளாத்து விடம் சென்று கேட்டு அடக்கம் செய்தார்கள்..
இயேசுவை சனகரீன் சங்கம் எப்படி விசாரித்தது?
நற்செய்திகளில்இயேசுஇவ்வகை தலைமைச் சங்கத்தினர் முன் விசாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.
இயேசு பொதுவாக அமைதியாக இருந்தார், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளவில்லை, குற்றச்சாட்டுகளுக்கு அரிதாகவே பதிலளித்தார், மேலும் குற்றவாளி எனக் கண்டறியப்படுகிறார்:
சனகரீசங்கத்தில் சாட்டிய குற்றங்கள்:
இது யூதர்களின் மிக உயர்ந்த ஆளும் குழுவாகும் . 70 உறுப்பின ர்கள் இருந்தனர், பெரும்பாலும்
சதுசேயர்கள்.
1.ஓய்வுநாளில் குணப்படுத்து வதன் மூலம் இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுதல்.
2. யூத கோவிலை அழிப்பதாக அச்சுறுத்துதல்.
3 சூனியம் செய்தல் , பேய்களின் சக்தியால் மக்களை விரட்டுதல்.
4 தெய்வ நிந்தனை செய்தல், தேவனுடைய குமாரன் மற்றும் மேசியா என்று கூறுதல் .
5. அவர் யூதர்களின் ராஜா என்று கூறினார். விசாரணைக்காக ரோமானிய யூதேயாவின் ஆளுந ரான பொன்டியஸ் பிலாத்துவிடம் கொண்டு செல்லப்படுகிறார் .
நியாயசங்கத்தில் இயேசுவின் விசாரணை (மத்தேயு 26:57-68)
இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனா கிய காய்பாவின் வீட்டிற்குக் கொண்டுபோனார்கள். யார் இந்தகாய்பாஸ், இவரின் முழுப் பெயர், ஜோசப் காய்பாஸ். ஒரு சதுசேயர்,இவரின் பிரதான ஆசாரியனாக இருந்த காலம் கி. பி. 18 முதல் 36 வரை. எருசலேம் கோவிலில் யூத பிரதான ஆசாரிய ராக செயல்பட்டார், மேலும் இயேசு பூமியில் இருந்த காலத்தில் அவர் சன்ஹெட்ரினுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத க்கது.
இயேசுவின் இளமைப் பருவத்தில் பிரதான ஆசாரியராக இருந்த காய்பா , கிபி 18 முதல் 36 வரை , ரோமானிய காலத்தில் வேறு எவரையும் விட நீண்ட காலம் பதவி வகித்தார் , இது அவர் ஒரு வெற்றிகரமான மற்றும் நம்பக மான ராஜதந்திரி என்பதைக் குறிக்கிறது. கர்த்தரால் கட்டளை யிடப்பட்டபடி, ஆரோனின் சந்ததி யினர் மட்டுமே உண்மையான பிரதான ஆசாரியர்களாக இருக்க முடியும், மேலும் காய்பாவும் அவர து மாமனார் அன்னாவும் ரோமா னிய ஆளுநர்களால் இவர்களின் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
இந்த காய்பாதான் தலைமை குரு இவனிடம்தான் யூதாஸ் காரியத் இயேசுவைகாட்டி கொடுத்தால்
எவ்வளவு தருவீர்கள் என்பதற்கு 30 வெள்ளி காசை கொடுத்தவன்.;
இவன் வீட்டில் அங்கே வேதபாரக ரும் மூப்பரும் கூடிவந்திருந்தார் கள்; பேதுரு தூரத்திலிருந்து காய்பாவின் வீட்டு முற்றம்வரைக் கும் இயேசுவை பின் தொடர்ந் தான்.
யூதத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராகப் பொய்யான ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தனர், ஆனால் அவர்களால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இறுதியில், காய்பா இயேசுவிடம், “நீர் தேவ னுடைய குமாரனாகிய மெசி யாதானா என்று எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட் டார். இயேசு அவருக்குப் பதிலளி த்தார், “அப்படியே நீ சொல்லுகி றாய். ஆனால் நான் உங்கள் அனைவருக்கும் சொல்கிறேன்: இனிமேல் மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பக்க த்தில் அமர்ந்திருப்பதையும் வானத்தின் மேகங்கள் மீது வருவ தையும் நீங்கள் காண்பீர்கள்!” உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, "இவன் கடவுளைப் பழித்து ரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரை யைக் கேட்டீர்களே. (மத்தேயு நற்செய்தி 26:65) என்றான்.
காய்பா இதுதெய்வ நிந்தனை
(Blasphemy),அதனால், இவன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் இயேசுவின் முகத்தில் துப்பி, அவரை அடித்தனர்.
ஏன் யூதத் தலைவர்கள் இயேசு வைக் கொல்ல விரும்பினர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து, சனகரீன் சங்கத்தின் தலைவர்களின் அதிகாரத்தை சவால் செய்தார் , அவர்களை நயவஞ்சகர்கள் என்று அழைத் தார் .
ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பது பற்றிய அவர்களின் சட்டங்களை அவர் மீறினார் . இயேசு ஓய்வு நாளில் மக்களைக் குணப்படுத் தினார், ஆனால் யூதத் தலை வர்கள் இதை ஓய்வு நாளில் செய்த'வேலை' என்று வரைய றுத்தனர், இது மோசேவின்நியாய சட்டத்தால் தடைசெய்யப்பட்டது.
யூதத் தலைவர்கள் 'அசுத்தமான வர்கள்' என்று கருதிய மக்களுடன் - பாவிகள், விபச்சாரிகள் மற்றும் வரி வசூலிப்பவர்களுடன் - அவர் பழகினார் உணவருந்தினார், அவர்களையும் நேசித்தார்.
யூதத் தலைவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத தன்னைப் பற்றி அவர் கூறிய கூற்றுக்கள் - அவர் கடவுளின் மகன் என்றும் வாக்கு றுதியளிக்கப்பட்ட மீட்பர் என்றும். யூதத் தலைவர்களால் இயேசு தெய்வ நிந்தனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் . ஒருவர் கடவுளுக்கு அவமரியாதை என்று கருதப்படும் ஒன்றைச் சொன்னா லோ செய்தாலோ அது தெய்வ நிந்தனை என்பதும் மதக் குற்ற மாகும். யூதத் தலைவர்களின் பார்வையில், இயேசு தன்னை கடவுளின் மகன் என்று கூறிக்கொண்டபோது அவர் கடவுளை அவமதித்தார். தெய்வ நிந்தனை மிகவும் தீவிரமாகக் கருதப்பட்டது, அதற்கான தண்ட னை கல்லெறிந்து கொல்லப்ப டுதல் .
இயேசு கைது செய்யப்பட்ட பிறகு, அவர் நியாயசங்கத்தால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார் .
சனகரீ சங்கத்தின் சட்ட விதி கள் :
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!
தங்கள் சொந்த விசாரணைகளை நடத்துவது தொடர்பாக சன்ஹெட் ரின் பல விதிகளை விதித்திருந் தது:
1 இரவில் அல்லது ஒரு முக்கிய மான பண்டிகையின் போது விசாரணை நடத்த முடியாது.
2 ஒருவர் குற்றவாளி என நிரூபி க்கப்பட்டால் உடனடியாக மரண தண்டனையை நிறைவேற்ற முடியாது,
3.தீர்ப்பை வழங்க சன்ஹெட்ரின் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது.
4 அனைத்து விசாரனகளும் கோவிலில் அமைந்துள்ள அதிகா ரப் பூர்வ விசானை இடமான வெட் டப்பட்ட கற்களின் மண்டபத்தில் நடைபெற வேண்டியிருந்தது.
5 இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் தேவைப்பட்டனர், மேலும் அவர்கள் ஒவ்வொரு விவரத்திலும் உடன்பட வேண்டியிருந்தது.
6. பொய் சாட்சியம் அளிக்கும் எவருக்கும் விசாரணையில் உள்ள நபருக்கு கிடைக்கும் அதே தண்டனை வழங்கப்படும்.
அன்பானவர்களே! இந்த சனகரீ சங்கம் தான் திருத் தூதர் பணி கள் (Acts) நூலில் பலமுறை இச்சங்கத்தினர் திருத்தூதர்க ளைக் கைது செய்து விசாரித் ததாகவும், பெரிய சங்கக் கூட்டம் ஒன்றில் கமாலியேல் (திருத்தூதர் பணிகள் 5:34-35,) கலந்து கொண்டதாகவும், இச்சங்க கூட்டம் ஒன்றில் இவர்கள் ஸ்தேவானை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் கல்லெறிந்து கொன்றதாகவும் குறிக்கப்பட்டு ள்ளது.
கி.பி 358இல் சனகரீன் சங்கம் தான் எபிரேய நாட்காட்டியினை (Calendar)யூத சமயத்தின் அதிகா ரப் பூர்வ நாட்காட்டியாக அறிவித் தது ஒரு சிறப்புஆகும். உரோமைப் பேரரசின் யூத அடக்குமுறை சட்டங்களினாலும், கிறுத்துவ சமயத்தின் பரவலாலும், இவ் வகை சங்கங்கள் இல்லாமல் போயின.
2. உரோம பேரரசு:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே இவ்வுலகில் எத்தனையோ பேரரசுகள் தோன்றின மறைந்தன ஆனால் இந்த ரோம பேரரசின் ஆட்சியின் கீழ் தான் ஆண்டவ ராகிய இயேசு கிறிஸ்து பிறந்தார் இவர்களால் பாடுகள் பட்டு மறித் தார். ஆனால் உயிர்த்தெழுந்தார் இன்றளவும் நம்மில் வாசமாய் இருக்கிறார்.
அன்பர்களே, அனைத்து சாலை களும் ரோமுக்கு இட்டுச் செல்கின்றன: All Roads lead to Rome. என்று கூறுவர். ஏனெனில், இது உலகின் மையத்தில் உள்ள தலைநகரம்.
உரோம பைரரசு ரோமுலஸ் என்னும் பேரரசனால் கி.மு.63 வது ஆண்டில் ரோம பேரரசு ஏற்படுத் தப்பட்டது. கி.மு.63வது ஆண்டில் பாம்ப்பே என்னும் ரோம அரசன் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றி னான். இக்காலத்தில் ரோமப் பேர ரசு உலக வல்லரசாக மாறியது. இதற்கு முன்பு வல்லரசாக விளங் கிய கிரேக்கப் பேரரசு வீழ்ச்சியுற் றது. ரோம பேரரசில் அரசர்களு க்கு இராயன் என்றும் அதிபதி
என்றும் பெயர் சூட்டப்பட்டது. இவன் அன்றிபேற்றர் என்னும் இதுமேயனை (ஏசா வழி வந்தவன்) யூதரின்மேல் ஆட்சி செய்யும்படி ஏற்படுத்தினான்.
பாம்ப்பே மன்னனைத் தொடர்ந்து , ஜூலியஸ்சீசர், ஆண்டனி போன்ற ரோம அரசர்களின் காலத்தில் யூதர்கள் தனி நாட்டு மக்களாக அங்கீகாரம் பெற்றனர். என்றா லும், ரோமரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபடியால் ரோமப் பேரரசுக் குக் கப்பம் கட்டினர். அன்றிபேற் றாருக்குப் பின்பு அவன் தனது மகன் மகா ஏரோதுவை பாலஸ் தீனத்தின் கலிலேயாப் பகுதியை ஆளும்படிவைத்தான். மகா ஏரோது கி.மு.37 - கி. பி 3 வரை பாலஸ்தீனத்தை ஆண்டான்.யூத குலத்துடன் சம்பந்தங் கலந்தான். எருசலேம் தேவாலயத்தைப் புதுப் பித்துக் கட்டினான்.நமதாண்டவர் இயேசு பிறந்தபோது பாலஸ்தீன த்தை ஆண்டவன் இந்த மகா ஏரோதுவே.இயேசுவைக் கொலை செய்ய வகைதேடி குழந்தைகளை க் கொன்றுகுவித்தவனும்இவனே.
இவன் குருநில மன்னன். லூக்கா நற்செய்தியின்படி 2: 2-20, இயேசு
கிறித்து உரோம பேரரசன் அகஸ் டஸ் சீசர் காலத்தில் பிறந்தார்.
திபேரிய ராயன் (Tiberius) காலத் தில் (கி. பி 14 - 37 ) இயேசு சிலு
வையில் அறையப்பட்டார், சிரியா, யூதேய பகுதிக்கு ஆளுநராக இருந்தவர் பொந்தியு பிளாத். (Pontius Pilot).இவரே ஆண்டவரே விசாரித்து சிலுவையில் ஒப்புக் கொடுத்தான். சிலுவை மரணம் ரோமர்களுக்கு கிடையாது. மற்றவர்களுக்கே சிலுவை மரணம்.
யூதேயா (எருசலேம் உட்பட) பெய ரளவில் பிலாத்துவால் ஆளப்பட் டது, ஆனால் எருசலேமின் உண் மையான தினசரி ஆட்சி கயபா மற்றும் அவரது ஆலோசனைக் குழுவின் சனகரீம் கைகளில் இருந்தது.
இயேசு அவர்களை (சீடர்களை)
வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் (ரோமர்கள்) மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டு கிறார்கள். (மாற்கு நற்செய்தி 10:42) ஆண்டவர் இயேசு கிறிஸ்து ரோமர்களை குறித்து பேசியது இதுதான். இந்த ரோமா அரசு உலகத்தை இணைக்கின்ற பாதையை அமைத்ததினால் தான் 268 ஆண்டுகள் துன்ப பட்ட கிறிஸ் தவம் உலகம் முழுவதும் பரவியது இதை முன் நின்று எடுத்துச் சென் றவர் திருத்தூதர் பவுல் அடிகளார்.
முதல் துன்புறுத்தல் கி.பி 64 இல் ரோமின் பெரும் தீ விபத்துக்குப் பிறகு பேரரசர் நீரோவின் கீழ் நடந்தது.ரோமானிய பேரரசர் கலேரியஸால் 311 இல் வெளியிடப்பட்ட செர்டிகாவின் ஆணை , கிழக்கில் கிறிஸ்தவத் தின் துன்புறுத்தலை அதிகாரப் பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்தது . கி.பி 313 இல் மிலன் அரசாணை வெளியிடப்பட்டதன் மூலம் , ரோமானிய அரசால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்த ப்படுவது நிறுத்தப்பட்டது.
கிறித்துவை ஏற்றுக் கொண்ட முதல் ரோம பேரரசன் :
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நீதியரசர் கூறுகிறார் "நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது’ (நீதி 23:18) என்கிறது விவிலியம். அவ்வாறே, நம்முடைய கிறிஸ்த வத்தினுடைய துன்புறுத்தல்கள் முடிவுக்கு வந்தன இந்த உலகில் எதுவுமே நிலைத்திருப்பதில்லை துன்புறுத்தல்கள் கிறிஸ்தவர் களுக்கு தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் ஆண்டவர் நம்மை காத்து வருகிறார்.
கான்ஸ்டன்டைன் தி கிரேட் என்றும் அழைக்கப்படுபவர் , கி.பி 306 முதல் 337 வரை ரோமானிய பேரரசராகவும் , கிறிஸ்தவத்திற்கு மாறிய முதல் ரோமானிய பேரரச ராகவும் இருந்தார் . ரோமில் கிறிஸ்தவத்தின் நிலையை உயர்த்துவதிலும், கிறிஸ்தவ நடைமுறையை குற்றமற்றதா க்குவதிலும் , கிறிஸ்தவ துன்புறுத்தலை நிறுத்துவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இது ரோமானியப் பேரரசின் கிறிஸ்தவமயமாக்கலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . அவர் கான்ஸ்டான்டினோபிள் நகர த்தை நிறுவி அதைப் பேரரசின் தலைநகராக மாற்றினார், அது ஒரு ஆயிரமாண்டுக்கும் மேலாக நீடித்தது. கடவுள் தாமே விரைவில் அவரின் அரசு இந்த உலகில் கொண்டுவர உழைப்போமாக! ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
Comments
Post a Comment