மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள்,  இவ்வாரம் நம் திருச்சபை கள் மாணவர் ஞாயிராக கொண்டாடப்படுகிறது.இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "இயேசு: நமது உன்னத வழிகாட்டி" என்பதா கும்.
மாணவர் ஞாயிறு:
அன்பர்களே! இக் கல்வியாண் டின் துவக்க மாதம் சூன்,மாணவ ர்களுக்கும், பெற்றோர்களுக்கும்
சவால் நிறைந்த மாதமாகும். முக்கியமாக, மேற் படிப்பில் சேறு
கின்றவர்கள், புதிய வகுப்பில், கல்வி நிலையங்களில் சேறும்
போது ஏற்படும் சவால்கள், தேவைகள், பிரச்சனைகள் மிக வும் கவலை அளிக்கும் செயலா கும்.
மருத்துவப்படிப்பில் சேறும் கணவில் இருந்த 2.2 மில்லியன் மாணவர்களுக்கு, NEET -UG 2026 paper தேர்வு தாள்கள் பொது வழியில் வெளியாகி மறுதேர் வுவறை சென்றதும், 
 மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (CBSE) அதன் புதிய ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) டிஜிட்டல் மதிப்பீட்டு முறைக்கு மாறியபோது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக 42 மில்லியன் மாணவர்களின் மதிப்பெண் தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இணையத்தில் பகிரங்கமாக வெளிவந்ததின்
காரணமாக ஏற்பட்ட குழப்பங்கள்
மாணவர்களுக்கும், பெற்றோர்க ளுக்கும் மிகுந்த கவலை அளித் தன.
இச்சூழலில், மாணவர்களை
ஊக்கப்படுத்தவும், ஆசிர்வதிக் கவும், இவர்களின் தேவைகளு க்காக இறைவேண்டல் செய்ய வும் இயேசு: நமது உன்னத வழிகாட்டி" என்பதை உறுதிபடு
த்தவும் இவ்வாரம் மாணவர்
ஞாயிராக நம் திருச்சபைகள் அவர்களின் எதிர்கால வாழ்க் கைக்கும், வெற்றிக்கும் இயேசு
என்றுமே அவர்களின் நல்வழி
காட்டி என்பதை உணர்ந்து
கொள்ள நாம் மாணவர்களுக் காக இவ்வாரத்தை அர்பணிக்கி
றது.
இயேசு: நமது உன்னத வழிகா ட்டி"  என்பது, இயேசு கிறிஸ்து வின் போதனைகள், அன்பு, மற்றும் ஒழுக்க நெறிகளை மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பின்பற்றி, அமைதி யான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அடைவதைக் குறிக்கும். இயேசு ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமல்லாமல், நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்புக்கான முன்மாதிரியா கவும் திகழ்கிறார்.
பழைய ஏற்பாட்டில் வழிகாட்டி யாக செயல்பட்ட கடவுள்: God was the ultimate influencer in Old
Testament.
அன்பானவர்களே! 
அன்பர்களே கடவுள் படைப்பின்
காலம் முதற்கொண்டு மனிதனு
டன் தொடர்ந்து ஒரு வழிகாட்டி யாக பயணிப்பதை நாம் காண்
கிறோம். பழைய ஏற்பாட்டில் கடவுள் தம் மக்களுக்கு பல வழி களில் வழிகாட்டியுள்ளார். இறைவாக்கிர்கள், நீதி அரசர் கள் மற்றும் தலைவர்கள் மூலம் தனது வார்த்தையை வெளிப் படுத்தி,வழிகாட்டினார்.
1. ஆகார்; Hagar. தொடக்கநூல் 16, 21.
ஆபிரகாமின் மனைவியான சாராளின் எகிப்திய அடிமைப் பெண்ணே ஆகார் ஆவார். சாரா ளின் வற்புறுத்தலால் ஆபிரகா மிற்குப் பிறந்த இஸ்மவேலின் தாயான அவர், சாராளின் துன்பு றுத்தல் காரணமாகத் தன் மகனுடன் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டார். கடுமையான தாகத்தால் தாய்-சேய் இருவரும் மரணத்தின் விளிம்பில் இருந்த போது,   கடவுள் அவர்களுக்கு ஒரு நீரூற்றைக் காட்டி உயிரைக் காப்பாற்றினார்.கடவுள் தன் மக்களை, ஏற்ற காலத்தில் ஆபத்திலிருந்து மீட்டுவழிநடத்து வதை காண்கிறோம்.
2. இஸ்ரவேலரின் விடுதலை:
The Liberation of Israelites. 
கடவுள் இஸ்ரவேலரை 430 ஆண்டுகளாக எகிப்தில் அடிமை
யாய் இருந்தவர்களை, மோசஸ்
தலைமையில் வழி நடத்தி,
ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக அவர் அவர்கள் முன் சென்று கொண்டிருந்தார். 
(விடுதலைப் பயணம் 13:21)
3.சட்டங்கள் மற்றும் கட்டளைகள். The Law and Commandments.
இஸ்ரவேல் மக்களின் ஒழுக்கத் திற்கும், வழிபாட்டிற்கும் ஏற்ற வாறு அவர்களை பத்து கட்டளை களையும், திருச்சட்டங்களையும் வழங்கினார்.இவைகளை தன்
வாழ்க்கையில் வழிகாட்டியாக 
வைத்தார்.
4 .தானியேல்: Daniel in Babylon.
பாபிலோனிய சிறையிருப்பின் போது, தானியேல் தொடர்ந்து கடவுளை நோக்கி இறை வேண் டல் செய்ததால் பல வழிகளில் வழிகாட்டினார். மன்னன் நேபுகாத்நேச்சாரின் மர்மமான கனவுகளுக்கு கடவுள் தானி யேலுக்கு அர்த்தத்தை வெளிப் படுத்தினார்.அவருக்குப் பல துறைகளில் சிறப்பான ஞானத் தையும், தரிசனங்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தந்து வழிநடத்தினார்.சிங்கக் குகையில் அடைக்கப்பட்டபோது, கடவுள் தமது தூதரை அனுப்பி தானியேலின் உயிரைக் காப் பாற்றினார்
5. தூதர்கள் (Angels):  விண்ணகத்திலிருந்து தேவ தூதர்களை அனுப்பி, தீர்க்கத ரிசிகளுக்கு முக்கியமான செய் திகளையும் எச்சரிப்புகளையும் வழிகாட்டுதல்களையும் தந்தார்.
கடவுள் உன்னத வழிகாட்டி என்பதை நிரூபித்தார்.
புதிய ஏற்பாட்டில் வழிகாட்டி யாக செயல்பட்ட கடவுள்: God was the ultimate influencer in NewTestament.
புதிய ஏற்பாட்டில், கடவுள் தம் மக்களை முதன்மையாக இயேசு கிறிஸ்து மற்றும் தூய ஆவியானவர் மூலமாக வழிநடத்தினார். இயேசு தம்மை "நல்ல மேய்ப்பன்" என்று வெளி ப்படுத்தி, அன்பின் வழியையும், நித்திய வாழ்வின் பாதையை யும் மக்களுக்குக் கற்றுக் கொடு த்தார்.
இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் மக்களுக்கு நல் வழி காட்டின. மலைப் பொழிவு (மலைப்பிரசங்கம்) போன்ற போதனைகள், கடவுளுக்கு உகந் த வாழும் முறையை வரையறுத் துக் காட்டின.தூய ஆவியானவ ரின் வழிகாட்டுதல்: இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, தூய ஆவியானவர் மக்களின் இதயங்களில் இருந்து வழிநடத் துகிறார். 
திருத்தூதர்களுக்கு ஞானத் தைத் தந்து, அவர்கள் செல்ல வேண்டிய இடங்களைச் சுட்டி க்காட்டி வழிநடத்தினார். உலகம்
எங்கும்  திருவிவிலிய வார்த்தை கள் திருமுறைச் செய்திகள் மற்றும் நற்செய்திகள் மூலம் கடவுளின் சித்தத்தை மக்களுக் குத் தெரிவித்தார்கள். இறைவாக்குகள் மற்றும்  திருச்ச பைக்குத் தலைமை தாங்கிய திருத்தூதர்கள்  வழியாகவும், இறைவாக்கினர்கள் வழியாக வும் மக்களைத் திருத்தி நேர்வழி ப்படுத்தினார்.
1. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்.The Lord will fight for you."2 குறிப்பேடு (நாளாகமம்) 20:13-19.
அன்பர்களே! 
2 குறிப்பேடு (நாளாகமம்) 20:13-19 வசனங்கள், யூதா நாட்டின் மீது பெரும் படைகள் படையெ டுத்து வந்தபோது, அரசன் யோச பாத்தும் மக்களும் கடவுளிடம் தங்களை முழுமையாக ஒப்படை த்ததை விவரிக்கின்றன. 
அரசன் யெகோஷாபாத் (King Jehoshaphat (அல்லது யோசபாத் து) என்பவர் விவிலியத்தின்படி  யூதா நாட்டின் நான்காம் அரச ராவார். இவர் கி.மு. 9ஆம் நூற் றாண்டில் யூதாவை 25 ஆண்டு கள் ஆட்சி செய்தார். இவரது தந்தை ஆசா மன்னரின் வழியை ப் பின்பற்றி, நீதியாகவும் உண் மையாகவும் ஆட்சி நடத்தினார். இவர்காலத்தில்
அம்மோனியரும், மோவாபிய ரும், சேயீர் மலைநாட்டவரும் யோசபாத்க்கு எதிராக வருகிறா ர்கள்; யோசபாத் பயந்து, கர்த்த ரைத் தேடத் தீர்மானித்து, யூதா தேசம் எங்கும் உபவாசத்தை அறிவித்தான். 
இறைவேண்டலும், உபவாசமும் வெற்றியின் வழிகள்:
அன்பர்களே!  யூதா மக்கள் கர்த் தரிடம் உதவி கேட்கக் கூடிவந் தார்கள்; தேசம் ஒன்றாகக் கூடிவந்து தேவனைத் தேடு கிறது.சிறுவர் முதல் பெரியவர் வரை ஒன்றுசேர்தல் ஆபத்தான சூழ்நிலையில், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் (பெண் கள், குழந்தைகள் உட்பட) கடவுளின் பிரசன்னத்தில் ஒன்று கூடி நிற்பதின் முக்கியத்துவத் தை இது காட்டுகிறது. யூதா தேசம் எங்கும் உபவாசத் தைப் பிரகடனப்படுத்தினார் : யோசபாத், ஒரு பொது உபவா சத்தின் மூலம் தங்கள் தாழ்மை யையும் கடவுளை முழுமையாகச் சார்ந்திருப்பதையும் வெளிப்படு த்தும்படி தேசத்தை அழைத்தார் – அதாவது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (பொதுவாக ஒரு நாள் அல்லது அதற்கு மேல்) எல்லா உணவையும் தவிர்த்து, தண்ணீரை மட்டுமே குடிப்பதா கும்.இறைவேண்டலும் உபவாச மும் நம்மை தேவனுடைய இருதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவருகிறது
ஏன் அவர்கள் போருக்கு வந்தனர்?
இஸ்ரவேலின் அரசனான ஆகாபுடன் கூட்டணி அமைத் ததால் மரணத்தின் விளிம்பிற் குச் சென்ற யோசபாத்து, மீண்டு ம் தேவனைத் தேடத் தொடங்கிய பின்னரே, அவனுக்கும் அவன் அரசிற்கும் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டது.
யோசபாத் பயந்தான் ; ஒருபுறம் மனித பலவீனத்தினாலும், மறுபுறம் தன் சொந்தக் குற்றத் தையும், அதற்காகத் தன்மேல் சுமத்தப்பட்ட தேவனுடைய கோப த்தையும் நினைத்ததினாலுமே அவன் பயந்தான்.
கடவுள் வின்னப்பத்தை கேட்கிறவர்.
தேவன் யோசபாத்தின் ஜெபத்தி ற்குப் பதிலளிக்கிறார். ஒரு தீர்க் கதரிசி மூலமாகக் கொடுக்கப்ப டுகிறது.
அப்பொழுது, ஆசாப்பின் புத்திர ரில் ஒரு லேவியனான,  சகரியா வின் மகனான யாகாசியேலின் மேல் கர்த்தருடைய ஆவி வந்தது. அவன் சொன்னதாவது:  "யூதா, எருசலேம் வாழ்மக்களே, அரசே யோசபாத்து! கவனமாய்க் கேளுங்கள். ஆண்டவர் உங்களு க்குக் கூறுவது இதுவே; இப்பெ ரும் படையினரைக் கண்டு நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; நிலை குலையவும் வேண்டாம். இப்போர் உங்களுடையது என்றான்.
யுத்தம் கர்த்தருடையது" என்பது 1 சாமுவேல் 17:47-ல் உள்ள பிரபலமான விவிலிய வசனமாகும். தாவீது கோலியா த்தை எதிர்த்துப் போரிடும் போது, "கர்த்தர் பட்டயத்தினாலு ம் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல... யுத்தம் கர்த்தருடையது" என்று உறுதியாகக் கூறினார்.
அவ்வாறே, கர்த்தர் உங்களுக் காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (விடுதலைப யணம் 14:14). உங்கள் வாழ்க்கையில் எந்தப் போராட்டமோ அல்லது கடினமா ன சூழ்நிலையோ இருந்தாலும், கர்த்தர் நம்மோடு இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். 
கடவுளின் வார்த்தையைக் கேட்ட வுடன் யோசபாத்தும் மக்களும் முகம் குப்புற விழுந்து வணங்கு கிறார்கள். யுத்தத்திற்குச் செல் லும் முன்பே, லேவியர்கள் கடவு ளை உரத்த குரலில் துதிக்கிறா ர்கள். இது நம்பிக்கையின் வெளிப்பாடு.யோசபாத் தனது இராணுவ வளங்களை விட தேவனிடம் அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.”
இறுதியில்,
யோசபாத்தும் மக்களும்  அவ்வா றே ஆண்டவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிய போது,யூதா வை எதிர்த்து வந்தவர்களான அம்மோனியரையும் மோவாபிய ரையும் சேயீர் மலைநாட்டவரை யும் ஒருவருக்கொருவர் பகைவ ராக்கி முறியடித்தார் ஆண்டவர். 
2. இயேசு துன்புறுத்தலின் மத்தியில் வழிகாட்டி.Jesus as the guide through suffering" 
திருத்தூதர் பணிகள் 18:12-22.
அன்பர்களே! திருதூதர் பவுல்
அடிகளார்  கொரிந்துவில் நற் செய்தி அறிவிக்கும்போது யூதர் களால் ஆளுநர் காலிலியோ னிடம் இழுத்துச் செல்லப்படுகி றார். ஜூனியஸ் காலியோ (Junius Gallio) என்பவர் கி.பி. முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் அகாயா (Achaia) மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றிய ஒரு உரோம அதிகாரி.
பவுலின் காலத்தில் கொரிந்து:Corinth in the  time of Paul.
அன்பர்களே!
பவுலின் காலத்தில் கி.பி 50 -52 முதலாம் நூற்றாண்டில் கொரி ந்து (Corinth) நகரம் ரோமப் பேரர சின் செல்வச் செழிப்புமிக்க, கலாச்சார மற்றும் வணிக மைய மாக விளங்கியது. இது மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பல் போக்கு வரத்தை இணைக்கும் கேந்திரமாக இருந்ததால், ஒழுக்கக்கேடான பழக்கவழக்க ங்கள் நிறைந்த ஒரு 'பாவ நகரமாக' அறியப்பட்டது பவுல் காலத்தில் இந்த நகரத்தில் சுமார் 7,00,000 மக்கள் வாழ்ந்த னர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அடிமைகளா க இருந்தனர்.
இந்தச் சூழலில்தான் பவுல் தம் இரண்டாம் மிஷனரி பயணத்தி ன்போது ஒன்றரை ஆண்டுகள் தங்கி, கொரிந்து சபையை நிறுவினார்..
இப்பகுதியில், பவுல்  நற்செய்தி அறிவிக்கும்போது யூதர்களால் ஆளுநர் கல்லியனிடம் விசார னைக்கு இழுத்துச் செல்லப்படு கிறார். யூதர்கள் பவுலை உரோமை சட்டத்திற்கு எதிரான வர் என்று குற்றம் சாட்ட முயன்ற னர்.ஆனால் கல்லியன் அதனை மதப் பிரச்சினை எனக் கூறி வழக்கை தள்ளு படி செய்கிறார். இச்சம்பவம், நற்செய்திப் பணிக்கு அரசுப் பாதுகாப்பு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.இது நற்செய்திப் பணிக்கு உரோமை அரசு மறைமுகமாகத் தடையின் றி செயல்பட அனுமதித்ததைக் காட்டுகிறது. 
மற்றும், ரோமானிய மாகாணங் களில் எந்தவொரு நபரையும் தண்டிக்கும் அதிகாரம் யூதர்களு க்கு இல்லை, எனவே அவர்கள் தங்கள் புகாரை ரோமானிய ஆளுநரிடம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்டவர்க ள் . ஒருவேலை இங்கு யூதர்கள் அதிகாரத்தைக் கொண்டிருந் தால், பவுல் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பார். கல்லியோவின் இந்த நடுநிலை மை நற்செய்தி வேகமாகப் பரவ உதவியது
இந்தியா  போன்ற நாடுகளில்
நற்செய்திப் பணிக்கு அரசுப் பாதுகாப்பு இல்லை. மாறாக
துன்புறுத்தலும் , சிறைத்தண்ட னையே.
ஆனாலும், யூதர்களின் இந்த எதிர்ப்பால் சினமடைந்த மக்கள், தொழுகைக்கூடத் தலைவரான சோஸ்தெனசைத் தாக்கினர். ஆரம்பத்தில் இவர் பவுலை எதிர் த்தாலும், பிற்காலத்தில் அவரும் ஒரு கிறிஸ்தவராக மாறினார். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட முதல் நிருபத்தின் (1 கொரிந் தியர் 1:1) தொடக்கத்தில், பவுலு டன் இணைந்து சோஸ்தெனே வும் தன் வாழ்த்து தலைத் தெரிவித்துள்ளார். கடவுளின் பணியைச் செய்யும் போது எதிர் ப்புகள் வரும் என்பதை இது காட்டுகிறது, ஆயினும் கடவுள் பவுலைத் தீங்கிலிருந்து பாதுகா த்தார்.
இயேசுவுக்காகவும் நற்செய்திக் காகவும் பாடுபடத் தயாராக இருப்பவர்களுக்கு ஒரு தனித்து வமான ஆசீர்வாதம் வழங்கப்படு கிறது என்பதை ஆரம்பகால திருச்சபை புரிந்துகொண்டது. 1 பேதுரு 4:14-ஐ நான் மேற்கோள் காட்டுகிறேன்; “கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நீங்கள் நிந்தி க்கப்பட்டாலும், நீங்கள் பாக்கிய வான்கள்; ஏனெனில் மகிமை யின் ஆவியும் தேவனுடைய ஆவியும் உங்கள்மேல் தங்கியிரு க்கிறது.” நற்செய்திக்காகப் பாடுபடுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் ஒரு விசேஷமான கிருபையை அளிக்கிறார்.
சோஸ்தேனேவும் பல ஆரம்பகா ல விசுவாசிகளும் பாடுகளினா ல் புடமிடப்பட்டு, உறுதிப்படுத்தப் பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பலப் படுத்தப்பட்டார்கள். அவர்களு டைய விசுவாசம் நெருப்பினால் புடமிடப்பட்ட பொன்னைப் போல இருந்தது. பாடுகளினால் உண்டாகும் போதனையானது நவீன மேற்கத்திய திருச்சபை யாலும், ஆசிய ஆப்ரிக்க திருச்ச பை யாலும்,  புரிந்துகொள்ளப்ப டவோ ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை.
அன்பர்களே! காரியங்கள் மாறத் தொடங்கியுள்ளன. உலகெங்கி லும் உள்ள பல அரசாங்கங்கள் காலியோவைப் போல மாறி வருகின்றன; அவை மதச் சண் டைகளைப் பற்றிக்கவலைப்படு வதில்லை. அவை நற்செய்தியி ன் காரியத்திற்கு உதவுவதும் இல்லை, எதிர்ப்பை தடுப்பதும் இல்லை.இருப்பினும், 
நம்பிக்கையுடையவர்களாய், நற்செய்திப்பணியாற்றிட, அழைக்கப்படுகிறோம்.
நவீன கொரிந்து கிறிஸ்தவர் கள் (2026):
திருத்தூதர் பவுலின் காலத்தில், கொரிந்து ஒரு பாவ நகரம். ஆனால், praise the lord.தற்கால கொரிந்துவில் உள்ள கிறிஸ்த வர்கள் பெருமளவில் கிரேக்க மரபுவழி திருச்சபை (Greek Orthodox Church) மற்றும் கத்தோலிக்கப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்கள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றி, திருவிவலியத்தையும், திருச்சபையின் பாரம்பரியங்க ளையும் அனுசரித்து வாழ்கின் றனர்.இப்பொழுது கொரிந்து நகரில், 30,000 கிறித்தவர்கள்
வாழ்கிறார்கள்.(95%).
3.இயேசு : "உலகின் ஒளி".
Jesus: "The light of the world"
யோவான் 8:12-20-.
அன்பானவர்களே! நானே என
யோவான் நற்செய்தியில் ஆண்டவர் ஏழு முறை தன்னை
அறிவிக்கிறார். அவைகளில் ஒன்று, " நானே உலகின் ஒளி"என்கிறார்.
நானே என்ற வார்த்தை,  கர்த்தர் 
மோசேவிடம், " நான் இருக்கிறவ
ராய் இருக்கிறேன்" I AM WHO I AM"என்ற வார்த்தையை அடிப்ப டியாக கொண்டது.அவ்வாறே,
"நானே உலகின் ஒளி"என்கிற வார்த்தையின் பின்னனியை முதலில் காண்போம்.
எருசலேம் தேவாலயத்தில், 
யூதர்களின் கூடாரப் பண்டிகை யின் (Sukkot/Feast of Tabernacles) போது, (லேவியர் 23).  எருசலேம் தேவாலயத்தின் பெண்களின் பிரகாரத்தில் (Court of the Women) பெரிய விளக்குகள் ஏற்றப்படும். இந்த ஒளி எருசலேம் முழுவதும் பிரகாசிக்கும்.
இது வனாந்தரத்தில் இஸ்ரவேல ர் களுக்கு ஒளி கொடுத்த கடவு ளை நினைவுகூரும் சடங்கு. நாற்பது ஆண்டுகளாக அந்தப் பாழான வனாந்தரத்தில் இஸ்ரவேலைப் பாதுகாத்து வழிநடத்துவதற்காக, கர்த்தர் பகலில் மேகத்தூணாகவும்,pillar of cloud  இரவில் அக்கினித்தூ ணாகவும் (Pillar of Fire)இருந்தார் என்பதை நினைவு கூரும் விதமாக இவ் வாறு செய்தனர். 
இந்தத் திருவிழாவின் போது தான் இயேசு, "நான்உலகத்திற்கு ஒளி" என்று பிரகடனம் செய்தார்.
1 இயேசு :உலகின் ஒளி (Light of the World) இயேசுவை பின்பற் று பவர்கள் பாவ இருளில் தடுமா ற மாட்டார்கள். உலகத்தின் தீய வழிகளில் வழிதவறாமல், நித்திய ஜீவனை நோக்கிச் செல் லும் திசையை இயேசுதருகிறார்.
கிறிஸ்து ஒருவரே மெய்யான ஒளி. நாம் அவரைப் பிரதிபலிக் கிறோம், அவ்வளவுதான். 
அவர் சூரியனைப் போன்றவர்; நாம் சந்திரனைப் போன்றவர் கள் . அவரே ஒளியின் ஆதாரம்; அவருடைய சாயலைப் பிரதிப லிக்கும்போது மட்டுமே நாம் பிரகாசிக்கிறோம். மக்கள் நம்மிடம் கிறிஸ்துவின் பிரதி பலிப்பைக் காணும்போது, ​​நாம் அவர்களை அவரிடம் வழிநடத்த முடியும்.
2.தோராவின் வெளிச்சம் (வேதத்தின் ஒளி)யூத ரபிகளின் போதனைகளில், கடவுளின் திருச்சட்டம் (Torah) இருளில் வழிநடத்தும் ஒரு ஒளியாகக் கருதப்படுகிறது. இயேசு தன்னை பின்பற்றுபவர்கள் இருளில் நடக்காமல் வாழ்வின் ஒளியைப் பெறுவார்கள் என்று கூறியதன் மூலம், யூத சட்டத்திற் குப் பதிலாக தாமே மனிதர்களி ன் இறுதியான வழிகாட்டி என்பதை நிலைநிறுத்தினார்.
இந்த எளிய வார்த்தைகளால் இயேசு தாம் யார் என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்தி னார். கூடாரப் பண்டிகையில் மக்கள் கண்ட ஒளிகளெல்லாவ ற்றிலும், அவரே மிகவும் பிரகாச மானவர். பழைய ஏற்பாட்டில் உள்ள அக்கினித் தூணின் நிறைவு அவரே. ஏசாயா தீர்க்க தரிசனம் உரைத்த தேசங்களின் ஒளி இயேசுவே. மல்கியா குறிப்பிட்ட நீதியின் சூரியன் அவரே. வரவிருந்த மேசியா அவரே.
3.இயேசுவின் சாட்சியின் உண்மைத்தன்மை.
பரிசேயர்கள் இயேசுவின் கூற்றை எதிர்த்து, "உன்னைப் பற்றி நீயே சாட்சி கொடுக்கிறா ய், உன்னுடைய சாட்சி உண்மை யானதல்ல" என்று கூறுகிறார் கள்.யூத சட்டத்தின்படி ஒருவரின் சாட்சி மட்டும் செல்லாது. ஆனால் இயேசுவின் சாட்சி மனிதனைச் சார்ந்ததல்ல. அவர் பிதாவாகிய கடவுளிடமிருந்து வந்தவர், பிதாவே அவருக்காக சாட்சி கொடுக்கிறார். எனவே, அவரது வார்த்தையும் சாட்சியும் பரிபூரண உண்மையாக இருக் கிறது
4.. கடவுளை அறிந்துகொள் ளுதல்.  
பரிசேயர்கள் இயேசுவிடம், "உன்னுடைய பிதா எங்கே?" என்று கிண்டலாகக் கேட்கிறார்கள். அதற்கு இயேசு, "என்னையும் என் பிதாவையும் நீங்கள் அறியவில்லை. என்னை அறிந்திருந்தால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்" என்கிறார். பரிசேயர்கள் வேதத் தில் மிகுந்த புலமை பெற்றவர்க ளாக இருந்தாலும், கடவுளின் உண்மையான அன்பையும் சுபாவத்தையும் அறியவில்லை. இயேசுவை ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியா கும்.
5.இயேசு கிறிஸ்துவே வாழ்வின் ஒளி. 
"நானே உலகத்துக்கு ஒளி; என்னைப் பின்பற்றி வருகிறவ ன் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டான்; அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்" (யோவான் 8:12) என்று அவரே கூறியுள்ளார். வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் சோதனை கள் மற்றும் குழப்பங்கள் என்னும் இருளை அகற்றி, சரியான வழியைக் காட்டுகிறார்.
பாவ மன்னிப்பு, நிலைவாழ்வு மற்றும் எல்லையற்ற அன்பை தந்து மனிதனின் இருண்ட வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்கிறார்.
 இறுதியாக,
அன்பு மாணவர்களே!
இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம்போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசு வோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம். நீங்கள் உலகின்
ஒளி. நீங்கள் அன்பின் அடிப்ப டையில், உங்கள் பேச்சும், வாழ்வும், கல்வியும், மன்னிப்பு,
கீழ்படிதல், முக்கியமாக பெற்ற வர்களுக்கு மதிப்பை, மகிழ்வு
தேடி தாருங்கள். அனைவரை யும் நேசியுங்கள்,  திருச்சபையி ன்  இறைபணியில் பங்கு பெறு ங்கள். நீங்கள்தான் திருச்சபை யின் தூண்கள். 
உங்கள் வாழ்க்கையை கடவுள்
பார்த்துக் கொள்வார்.
 ஆமேன்.



Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com


Note: The sermon has been prepared to deliver on7th June 2026 at CSI St.Peter's Church, Mission Compound,  Chengalpet. 







கிறிஸ்துவே மெய்யான ஒளி , ஹான்ஸ் ஹோல்பைன் தி யங்கர் , சுமார்  1526 நவ
ன்றி: விக்கிப்பீடியா. 

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

பெண் குழந்தையின் மதிப்பை உறுதி செய்தல் (235) Affirming the worth of the Girl Child.எண்ணிக்கை Numbers: 27: 1-11, திருப்பாடல் 71 : 1-12, திருத்தூதர் பணிகள் 21: 7-14, மாற்கு 5: 35-43.பெண் குழந்தைகள் ஞாயிறு The Girl - Child Sunday.