சீடத்துவம்: வந்து பாருங்கள் சென்று பகிருங்கள் (285) Discipleship: Come and See, Go and Tell. செக்கரியா 8 : 18:23, உரோமையர் 10:9-17, திருப்பா டல் 66, யோவான்1:39-42

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள்,   இவ்வார ஞாயிறு  தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப் பது, " சீடத்துவம்: வந்து பாருங் கள் சென்று பகிருங்கள்  (Discipleship: Come and See, Go and Tell ")  என்பதாகும். 
சீடத்துவம் என்றால் என்ன,?
What is Discipleship?
அன்பர்களே!கிறிஸ்தவத்தில் சீடத்துவம் (Discipleship) என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களை (teachings) நம்பி, அவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்று க்கொண்டு, அவருடைய வழிக ளைத் தன் வாழ்நாள் முழுவ தும் தீவிரமாகப் பின்பற்றும் செயல்முறையாகும். இது வெறும் அறிவு சார்ந்த கல்வி அல்ல; இது கிறிஸ்துவைப் போலவே வாழும் ஒரு வாழ்க்கை முறையாகும்.
சீர்திருத்த திருச்சபையின் தந்தை (Protestant Church) என்று அழைக்கப்படும்  மார்ட்டின்லூத ரின் கூற்றுப்படி "சீடத்துவம் என்பது, மனிதனின் சொந்த நற்செயல்களையோ அல்லது சடங்குகளையோ சார்ந்திருப்ப து அல்ல. மாறாக, இயேசு கிறிஸ் துவின் மீது முழுமையாக நம்பிக் கை வைத்து, [விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்] என்ற நற்செய்தி  சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, அவருடையவார்த்தை களின்படி வாழும் ஒரு தொடர்ச்சி யான ஆன்மீக வாழ்க்கையாகும்.
சீடத்துவத்தின் முக்கிய அம்ச ங்கள்:Features of Discipleship.
1 கற்றுக்கொள்ளுதல் (Learning):
இயேசுவை ஒரு ஆன்மீக தலை வராக  ஏற்றுக்கொண்டு, அவரு டைய வார்த்தைகளையும் கட்ட ளைகளையும் கற்றுக்கொண்டு அதன்படி நடப்பது.
2. சுயவெறுப்பு :Self Denial.
சுயத்தை வெறுத்து, உலக ஆசை களைத் தள்ளிவிட்டு, இயேசுவி ன் குணங்களான அன்பு, பணிவு, மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை த் தன் வாழ்க்கையில் வெளிப்ப டுத்துவது.
3.அர்ப்பணிப்பு (Commitment): தன் குடும்பம், உறவுகள் மற்றும் சொந்த நலன்களை விட இயேசு வுக்கு முதலிடம் தருவது. 4.சீடர்களை உருவாக்குதல் (Making Disciples): மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவித்து, அவர்களையும் இயே சுவின் சீடர்களாக மாற்றப் பணி யாற்றுவது.இயேசுவின் வார்த் தைகளின்படி, சீடத்துவம் என்பது ஒருவருக்கு புதிய வாழ்வைத் தரும் அதே வேளையில், தியாக மும் சுய மறுப்பும் நிறைந்த ஒரு பாதையாகும். 
வந்து பாருங்கள் சென்று பகிருங்கள்.Come and See, Go and Tell.
அன்பர்களே! வந்து பாருங்கள் சென்று பகிருங்கள். என்பது  இலக்கண அடிப்படையில் ஏவல் வினை (Imperative Verb) சொற்க ளாகும்.ஒரு செயலைச் செய்யும் படி கட்டளையிடுவது ஏவல் வினை எனப்படும்(உ.ம்.வா,பார்,) இந்த மாபெறும் வார்த்தையான "வந்து பாருங்கள்" யோவான் 1:38, 39-ல் குறிப்பிடப் பட்டுள்ள  சீடர்கள் அந்திரேயா மற்றும் யோவான் நற்செய்தியை எழுதி ய திருத்தூதர் யோவான் ஆகி யோர் திருமுழுக்கு  யோவானி டம்  சீடர்களாக இருந்த இவர்கள், இயேசுவை "இதோ கடவுளின்  ஆட்டுக்குட்டி" என்று திருமுழுக் கு யோவான் சுட்டிக்காட்டியதைக் கேட்டு இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர்.அப்போது,இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, "என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், "ரபி, நீர் எங்கே தங் கியிருக்கிறீர்?" என்று கேட்டார் கள். (யோவான் நற்செய்தி 1:38)
அப்பொழுது, இயேசு அவர்களி டம், "வந்து பாருங்கள்; "என்ற 
இந்த மாபெரும் வார்த்தையே
கூறினார்.இது இயேசுவை அறிந்துகொள்ளவும், அவருடை ய அன்பை அனுபவிக்கவும் கிடைத்த ஆழமான நேரமாகும். 
இதே வார்த்தையை, திருதூதர் பிலிப் அவர்கள், நத்தானியே லிடம்  கூறினார். அதற்கு நத்தானியேல்,(பர்த்தலோமிவ்' (Bartholomew) என்று அழைக்க ப்படும் சீடரே நத்தானியேல் ஆவார்இவர் கலிலேயா பகுதியி லுள்ள கானா (Cana) ஊரைச் சேர்ந்தவர் பிலிப்பின் நண்பர் ). "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார். (யோவான் நற்செய்தி 1:46)
உயிர்த்த கிறித்துவை மகதலே னா மரியாள் கல்லறையில் தேடும்போது, ஆண்டவரின் தூதர், "அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். "
(மத்தேயு நற்செய்தி 28:6)என்றார்
சென்று பகிருங்கள்:Go and Tell. 
அன்பர்களே! லூக்கா 8:38,39 ஆம்.வசனங்களிள் தன்னை ஆட்கொண்டிருந்த கொடிய பேய் களிலிருந்து இலேகியோனை இயேசு விடுதலை தந்ததால், அந்த நன்றியுணர்ச்சியால் அம் மனிதன் இயேசுவோடு கூடவே இருக்க விரும்பினான். அவரோ டு பயணம் செய்யமன்றாடி னான்.ஆனால் இயேசுவோ , "உம்முடைய வீட்டிற்குத் திரு ம்பிப்போம்; (Go home and tell) கடவுள் உமக்குச் செய்ததை யெல்லாம் எடுத்துக் கூறும்" என்று சொல்லி அவரை அனுப் பிவிட்டார். அவரும் நகரெங்கும் போய், இயேசு தமக்குச் செய்த தை யெல்லாம் அறிவித்தார். 
இரண்டாவதாக, மத்தேயு 28:10ல்
உயிர்த்த கிறித்துவை கண்ட
மகதலேனா மரியாள், மற்றும்
மற்ற மரியாளுக்கு, இயேசு அவர் களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக் குப் போகுமாறு சொல்லுங் கள்.( Go and tell )அங்கே அவர் கள் என்னைக் காண்பார்கள்" என்றார். 
அவ்வாறே, மத்தேயு 11:2-4ன் படி
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர் களை இயேசுவிடம் அனுப்பி 
 "வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர் பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார். அதற்கு இயேசு மறு மொழியாக, "நீங்கள் கேட்பவற் றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியு ங்கள். Go and Tell) என்றார்.
திருவிவலியத்தில், இயேசுவின்  நற்செய்தி பணியில் இவ்வார்த் தை மிக சக்தி வாய்ந்த செயல் வார்த்தை சீடத்துவத்தின் அடிப்படையாகும்.வந்து பாருங் கள் சென்று பகிருங்கள்.Come and See, Go and Tell.ஒரு சாட்சி யின் வெளிப்பாடாகும்.
1.எருசலேமை வந்து பாருங் கள்.Come and see Jerusalem. சகரியா 8:18-23
அன்பர்களே! சகரியா 8:18-23-ன் காலப்பகுதி, பாபிலோனிய சிறையிருப்பிற்குப் பிறகு கி.மு. 518-ஆம் ஆண்டு (யூதர்களின் மறுசீரமைப்பு காலம்) ஆகும்.
எருசலேம் மற்றும் அதன் தேவா லயம் பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டதை நினைவு கூர்ந் து, யூதர்கள் ஆண்டுதோறும் நான்கு மாதங்கள் (4, 5, 7, 10-வது மாதங்கள்) துயரத்தோடு உபவா சம் இருந்தனர். எருசலேம் தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் தடைபட்டதால் மிகுந்த கவலையில் இருந்தனர். 
சிறையிருப்பு முடிந்து அவர்கள் தாயகம் திரும்பியபோது, இந்த துக்க நாட்கள் இனி மகிழ்ச்சி யான பண்டிகைகளாக மாறும் என்று கடவுள் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.
1 விருந்தாக மாறும் உபவாசம்; Fasting to Feasting.
எருசலேமின் வீழ்ச்சியை நினை வுகூர்ந்து இஸ்ரவேலர் கடை பிடித்த நான்கு முக்கிய துக்க/உபவாச நாட்கள், கர்த்தருடைய ஆசீர்வாதத்தால் மகிழ்ச்சியான பண்டிகைகளாக மாறும்.அதற்கு துக்கத்திற்குப் பதிலாக "சத்திய த்தையும் சமாதானத்தையும்" (Truth and peace) நேசிக்குமாறு கடவுள் கட்டளையிடுகிறார்
2. தேடிவரும் நாடுகள்:
யூதர்களுக்கு ஆறுதல் அளிப்ப தோடு மட்டுமல்லாமல், பல்வேறு தேசத்தாரும் மொழியினரும் கடவுளைத் தேடி எருசலேமுக்கு வருவார்கள் என்ற உலகளாவிய இரட்சிப்பின் காலத்தையும் (மெசியாவின் சகாப்தத்தையும்) குறிக்கின்றன.இதன் பொருள், கடவுளின் பிரசன்னத்தை மக்கள் கண்டுகளித்து, உலகிற்கு ஆசீர் வாதமாக மாறுவதாகும்.என்பதே இறைவாக்கு.
3.பத்து இனத்தாரின் செயல் கள்.
"பத்து புற இனத்தினர் ஒரு யூத னின் மேலாடையை பிடித்துக் கொண்டு, 'கடவுள் உங்களோடு இருக்கிறார்" என்று கேள்விப்பட் டோம், நாங்களும் உங்களுடன்  எருசலேம் வருவோம்' என்றுகூறு வார்கள்".பத்து  என்பது ஒரு குறிப்பிட்ட  எண்ணிக்கையைக் குறிக்காமல், உலகெங்கிலும் உள்ள எல்லா மக்களும் கடவு ளை அறியும் ஆவலோடு இருப் பார்கள் என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடாகும். 
இது இயேசு கிறிஸ்துவின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கவிருக்கும் இரட்சிப்பை யும், கடவுளுடையவார்த்தையை அறிய யூதர்களின் மூலம் மற்ற இனத்தவர் கடவுளை வந்தடைவ தையும் குறிக்கிறது.
4.இறைவாக்கினர் சகரியா காலத்து எருசலேமும் தற்போதிய 2026 எருசலேமும். Jerusalem in the time of the prophet Zechariah and the current Jerusalem of 2026.(A comperative Study)
அன்பர்களே சகரியாவின் காலத் தில் (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு) எருசலேம் பாபிலோனிய சிறை யிருப்பிற்குப் பின் மீட்டெடுக்க ப்பட்ட ஒரு சிறிய, பாழடைந்த நகரமாக இருந்தது. ஆனால், 2026-ஆம் ஆண்டில் இது உலக ளாவிய மத, கலாச்சார மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய் ந்த ஒரு நவீன, மிகவும் மக்கள் தொகை கொண்ட பெருநகரமா க உருவெடுத்துள்ளது. இஸ்ரேல்
ஒருகாலத்தில், பாபிலோனி யர்கள், பாரசீகர்கள், ரோமர்க ளால் அடிமை நாடாக இருந்தது.
சமாரியர்கள் போன்ற அண்டை இனத்தவர்களின் எதிர்ப்பை அவர்கள் எதிர்கொண்டனர் இப்போது இது பாலஸ்தீனம், சிரியா, லெபனான் போன்ற நாடுகளின் பகுதிகளை தன்
வசமாக்கி அதன்இராணுவத்தை வைத்திருக்கிறது.
இறைவாக்கினர் சகரியா காலம்: பாபிலோனியர்களால் இடிக்கப் பட்ட எருசலேம் மதில்கள் மற்றும் தேவாலயம், சகரியா மற்றும் செருபாபேலின் தலைமையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே மீண்டும் கட்டப்பட்டன. நகரம் சுற்றளவிலும் மக்கள் தொகை யிலும் மிகச் சிறியதாக இருந் தது. 2026-ஆம் ஆண்டு இன்று, எருசலேம் இஸ்ரேலின் தலைந கரமாக உள்ளது. இது பழமை யான வரலாற்றுச் சின்னங்கள் (பழைய நகரம்) மற்றும் அதிந வீன வானளாவிய கட்டடங்கள், உள்கட்டமைப்புகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட நகரமாக விரி வடைந்துள்ளது.
சகரியா காலத்தில் யூதேயாவி ற்குத் திரும்பிய யூதர்கள் மட்டு மே இதன் முக்கியக் குடிகளாக இருந்தனர்.2026-ஆம் ஆண்டு: யூதர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும், உலகெ ங்கிலும் இருந்து வரும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிக ளும் கூடும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சர்வதேச நகரமாக விளங்குகிறது
சகரியா காலத்தில் எருசலேம் என்பது யூதர்களின் ஆன்மீக மையமாக மட்டுமே இருந்தது, மேலும் அவர்கள் பாரசீகப் பேரரசின் ஆட்சியின் கீழ் ஒரு அடிமை சமூகமாக வாழ்ந்தனர். ஆனால்,2026ல் எருசலேம் உலக மதங்களின் (யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம்) மிக முக்கியமான புனிதத் தலமாகவும், அதே நேரத் தில் மத்திய கிழக்கு பிராந்திய த்தின் தீவிரமான புவிசார் அரசி யல் மற்றும் சர்வதேச விவாதங் களின் மையப் புள்ளியாகவும் உள்ளது.
இறைவாக்கினர் சகரியா காலத்தில்,  தீர்க்கர், எருசலே மின் வருங்கால மகிமையையும், மேசியாவின் வருகையையும், அங்கு சமாதானம் நிலைநிறுத் தப்படும் என்றும் முன்னறிவித் தார் (சகரியா 8:3).ஆனால்,2026-ஆம் ஆண்டில், எருசலேம் இன்றும் பல சர்வதேச மற்றும் பிராந்திய சவால்களைச் சந்தி த்து, அன்டை நாடுகளுடன் போரிட்டு மனிதநேயத்தை மீறி வருகிறது. எனினும், சகரியா தீர்க்கதரிசனம் உரைத்த "உலகளாவிய நித்திய சமாதானம்" என்ற இலக்கை நோக்கி உலக மக்கள் இன்றும் அதை ஒரு ஆன்மீக அடையாள மாகப் எதிர்பார்க்கின்றனர்.அது அமைதிக்குமாறுமா? 
அன்பர்களே!இறைவனின் அன் பும் வேதனையுமாக, "எருசலேமே, எருசலேமே, இறை வாக்கினரைக் கொல்லும் நகரே, உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக் கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்த னையோ முறை விரும்பினேன். உனக்கு விருப்பமில்லையே! 
(மத்தேயு நற்செய்தி 23:37)
ஒரு தாய் கோழி தனது குஞ்சுக ளைத் தன் சிறகுகளின் கீழ் பாது காப்பாகச் சேர்த்துக் கொள்வது போல, எருசலேமின் மக்களைத் தன் அன்பின் அரவணைப்பில் சேர்த்துக் கொள்ள இயேசு பலமு றை விரும்பினார். ஆனால்,அந்த மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
 2.சென்று பகிருங்கள்.Go and Tell.உரோமையர் 10:9-17
அன்பர்களே!திருத்தூதர் பவுல், யூதர்கள் தங்கள் சொந்த நற் செயல்களாலும், மோசேவின் சட்டங்களை (Law of Moses) பின்பற்றுவதாலும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும் என்று தவறாக நம்பியதைச் சுட்டி க்காட்டுகிறார். ஆனால்,கிறிஸ்து வே அந்தச் சட்டங்களின் நிறைவு என்று விளக்குகிறார்.
மனித மீட்பு அல்லது இரட்சிப்பு என்பது நற்செய்தியை நம்புவதி லும் (விசுவாசிப்பதிலும்), இயேசுவை ஆண்டவர் என சென்று பகிர்வதிலும்  Go and Tell  மட்டுமே அடங்கியுள்ளது என்பதை விளக்குகிறார்
இரட்சிப்புக்கான இரண்டு முக்கிய தேவைகள்:
1,வாய்மூலம் அறிக்கை செய்தல்:
இயேசுவே உண்மையான ஆண் டவர் (கர்த்தர்) என்று நம் வாயி னால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.
2. இருதயத்தில் விசுவாசித் தல்: 
தேவன் இயேசுவை மரித்தோரி லிருந்து உயிரோடு எழுப்பினார் என்பதை உங்கள் முழு இருதய த்திலும் நம்ப வேண்டும். இருதயத்தின் உண்மையான விசுவாசம், இரட்சிப்பிற்கு இட்டுச் செல்லும் நீதியை உருவாக்குகிறது.அனைவருக்கும் பொதுவான இரட்சிப்பு 
யூதர், கிரேக்கர் (புற இனத்தார்) என்ற பாகுபாடின்றி, இயேசுவின் மீது நம்பிக்கை வைக்கும் எவரு ம் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை."கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளு கிற எவனும் இரட்சிக்கப்படு வான்" (யோவேல் 2:32) என்ற வாக்குறுதி அனைவருக்கும் பொருந்தும்.
Go and Tell. சென்று பகிருங் கள்: 
மக்கள் கர்த்தரைத் தொழுதுகொ ள்ள (நம்பிக்கை வைக்க) முதலி ல் அவரைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.கேள்விப்படாமல் எப்படி நம்ப முடியும்? ஒரு பிரசங்கியார் (அறிவிப்பாளர்) இல்லாமல் எப்படி கேள்விப்பட முடியும்?கடவுளால் அனுப்பப்ப டும் தூதர்கள் நற்செய்தியை அறிவிப்பதன் முக்கியத்துவத் தை இது வலியுறுத்துகிறது.
நற்செய்தி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டாலும், இஸ்ர வேலர்கள் உட்பட அனைவரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
"விசுவாசம் கேள்வியினால் வருகிறது, கேள்வி தேவனுடைய வார்த்தையினால் வருகிறது." அதாவது, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை ஒருவர் கேட்கும் போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளத்தில் விசுவாசத்தை உருவாக்குகிறார்.கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை, நற் செய்தியை அறிவிப்பதுதான். 
சென்று பகிருங்கள் என்ற வார்த்தை ஒவ்வொரு கிறிஸ் தவர்களுக்கும், அவருக்கு சீடரா க இருக்க விரும்புவருக்கும் உள்ள தாரக மந்திர வார்த்தை அதை செயலில் காட்டுவது.
3.வந்து பாருங்கள்: Come and See.John 1:39-42.
அன்பர்களே! பிரபல இறையிய லாளர் வில்லியம் பார்க்ளே (William Barclay) அவர்களின்  விளக்கவுரையின்படி, யோவான் 1:39-42  வசனங்களில்   "வந்து பாருங்கள்" (Come and See) என்ற வார்த்தை சீடர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு வேண்டுதல் ஆகும்.இது இயேசுவின் மீது தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொள்ள திருமுழுக்கு யோவான்  வழிவிடுகிறார். அவரின்  சீடர்கள் அந்திரேயா, யோவான், இயேசுவை பின் தொடரும்போது, அவர்கள் தயங் கி நிற்பதைப் பார்த்து இயேசுவே திரும்பி வந்து, "என்ன தேடுகிறீர் கள்?" என்று கேட்கிறார். நம்மை நாடி கடவுளே முதலில் முன்வந் து அன்புடன் நம்மை அழைக் கிறார் என்பதை இது காட்டுகி றது  சீடர்கள் அவரிடம் "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்க, இயேசு "வந்து பாருங்கள்" என்கிறார். கிறிஸ்துவை அறிந் துகொள்வது என்பது வெறும் தத்துவங்களையோ, கேள்வி களையோ சார்ந்தது அல்ல; மாறாக, அவருடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்து அனுபவிப்பதே உண்மையான விசுவாசம்.
அந்திரேயா, சீமோன் பேதுருவி ன் சகோதன் ஆவார்,  இயேசுவி ன் அன்பை உணர்ந்த அந்திரே யா, முதலில் தன் சகோதரரான சீமோனை (பேதுரு) இயேசுவிடம் அழைத்து வருகிறார். தனிப்பட்ட முறையில் கடவுளைச் சந்திப்ப வர்கள், தங்களுக்கு நெருக்கமா னவர்களிடம் அந்த நற்செய்தி யைப் பகிர்ந்துகொள்வார்கள். இதுவே உண்மையான நற்செய் திப் பணியின் தொடக்கம். 
கேபா/ பேதுரு மீது இயேசு வின் தீர்க்கதரிசனம்: சீமோனைப் பார்த்த இயேசு, அவரைப் பேதுரு (பாறை எனப் பொருள்படும்) என்று அழைக்கி றார். ஒரு மனிதனின் தற்போ தைய பலவீனத்தைப் பார்க்காம ல், அவனால் எதிர்காலத்தில் என்னவாக மாற முடியும் என்ற உன்னதத் தொலைநோக்கை இயேசு அவரிடம் காண்கிறார்.
நற்செய்தியை உலகெங்கும்
எடுத்துச் செல்ல, சென்றுபகிர
விடுக்கப்பட்ட அழைப்பாகும்.
இறுதியில்,
இயேசு தனது புதிய சீடர்களைத் தம்முடன் பங்கேற்க அழைக்கி றார். அவர்கள் அறிய விரும்பும் காரியங்களைக் கண்டறிய, தம்மை மேலும் பின்தொடரும்படி அவர்களை அழைக்கிறார். நாம் "வந்து பார்த்தால்" மட்டும் போதும், நற்செய்தியின் மீத முள்ள பகுதிகள் இயேசுவின் அடையாளத்தைப் பற்றிய ஆழமான புரிதல்களை சென்று பகிர பெரிதும் உதவ ஆண்டவர்
நமக்கு அருள்புரிவாராக! ஆமேன்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com.







Andrew was the first of the twelve 

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.