சுற்றுச்சூழல் ஞாயிறு Environment Sunday.படைப்பு பேசுகிறது: . இயற்கையில் கடவுளின் குரலை கவனித்தல் (284) ,Creation speaks : Listening to God's voice in Nature. யோபு 12:7-12, திருவெளிப்பாடு 22: 1-6 திருப்பாடல் 19, லூக்கா 12:22-34

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள்,   இவ்வாரம் "சுற்றுச்சூழல் ஞாயிறு" Environment Sunday. அதன்  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " படை ப்பு பேசுகிறது: . இயற்கையி ல் கடவுளின் குரலை கவனித் தல்் " என்பதாகும் . 
ஏன் சுற்றுச் சூழல் ஞாயிறு தென்னிந்திய திருச்சபை கொண்டாடுகிறது.?
அன்பர்களே! திருச்சபைகள் ஒவ்
வொறு வாரமும் ஒரு சிறந்த
தலைப்பை வைத்து அதன் முக் கியத்துவத்தை உணர்ந்து,இறை மக்களுக்கு இறை செய்தி வழங்
கிவருகிறது.அதன் அடிபபடையி ல் தான் இவ்வாறு சுற்றுச்சூழல் வாரமாக கொண்டாடுகிறோம்.
சுற்றுசூழல் என்பது," மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழும் மற்றும் வளரும் நிலம், காற்று, நீர் போன்றவை உள்ளட ங்கிய இயற்கைசூழலே சுற்றுச் சூழல்". நாம் வாழும் உலகில்,
சுற்றுச்சூழல் சீர்கேடு உலக உயி ர்களுக்கு பெரும் அச்சுறுத்தலா க  உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடை ந்து வருகின்றது.  இம்மாசுபாடு களால் உலக உயிர்களின் வாழ் நாள் சுருங்கிக் கொண்டேயிருக் கிறது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை இது தடுக்கிறது. சுற்றுச்சூழலை மாசுபடுத்து வதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன. மாசுபாட்டை நீக்கி நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு சுற்றுச்சூழலைச் சிறந்த முறையில் பாதுகாத்தல் அவசியம் என்பதை நம் திருச் சபைகள்  உணரந்துள்ளது.இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்த மானது அல்ல அனைத்து உயிரி னங்களுக்கும் சொந்தமானது ஒவ் வொன்றும் சார்ந்து வாழ தான் கடவுள் படைத்திருக்கிறார்.
தென்னிந்திய திருச்சபை சினாட் Synod and (CSI) சென்னை பேராயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரா ன விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. இயற்கையை மீட் டெடுப்பதையும், கார்பன் உமிழ் வைக் குறைப்பதையும் தங்கள் முக்கிய இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1. பசுமை நெறிமுறை (Green Protocol): தேவாலயங்கள், பள்ளி கள் மற்றும் சமூகக் கூடங்களை 'காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் திறன் கொண்டவை யாக' (Climate-Resilient) மாற்றும் திட்டங்களை சிஎஸ்ஐ சினாட் (Synod) வழிகாட்டுதலின்படி சென்னை பேராயம், தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
2, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் நீர் மேலாண்மை: சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எதிராக கிராமப்புறங்களிலும், நகர்ப்புற ங்களிலும் .மரக்கன்றுகள் நடுத ல், நீர்நிலைகளைப் பாதுகாத் தல் போன்ற பணிகளில் தேவா லய இளைஞர்கள் மற்றும் மாண வர்கள் ஈடுபடுத்தப்படுகின்ற னர்.
3.சுற்றுச்சூழல் கல்வி: ஆயர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சுற்று ச்சூழல் விழிப்புணர்வு பயிலரங் குகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் 'பசுமை பிரசங்கங் கள்' (Green Sermons) மூலமாக இறை வழிபாடுகளில் இயற்கை பாதுகாப்பின் அவசியம் வலியு றுத்தப்படுகிறது.இசன் அடிப்ப டையில் சுற்றுச்சூழல் ஞாயிறு
கொண்டாடப்படுகிறது.
4.காலநிலை நீதி (Climate Justice): சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் சமூக சேவை மட்டுமல்லாமல், அது ஒரு ஆன்மீ கக் கடமை என்பதை வலியுறுத் தி, இயற்கை வளங்களைச் சுர ண்டும் நவீன வளர்ச்சிப் போக்கு களுக்கு எதிரான விழிப்புணர் வை ஏற்படுத்தி வருகிறது.
சென்ற ஆண்டு பிச்சாட்டுர் குரு மண்டலத்தை சேர்ந்த காளத் தூர் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு சென்னை பேராயத்தின் சார்பாக மிக சிறப் பான நிவாரண பணி பேராயர் தலைமையில் நடை பெற்றது.
படைப்பு பேசுகிறது:Creation Speaks.
அன்பர்களே தொடக்க நூலில் (ஆதியாகமம்) படைப்பு என்பது வெறுமனே பொருள்கள் உருவா க்கப்பட்டதை குறிக்கவில்லை மாறாக கடவுளுடைய வார்த்தை யின் வல்லமை அவருடைய மாபெரும் திட்டம் மற்றும் மனித னுடைய உறவு ஆகியவற்றை அது தெளிவாகப்பேசுகிறது.
கடவுளின் படைப்பு முதல் ஐந்து
நாட்கள், உயிரினங்கள் வாழ
அவசியமான மரம், செடி, கொடி கள், நீர் நிலைகள், வானமும், பூமியும் மனித வாழ்விற்கு ஏற்ற வாறு படைத்தப்பிறகுதான் மனிதனை ஆறாம் நாள் படைத் தார்,  மனிதன் உயிர்வாழதேவை யான பிராணவாயு(O2) மரங் கள் கொடுப்பதால், மனிதன் உயிர் வாழ்கிறான் மனிதன் வெளியிடும் கரிமளவாயு (Carbon Dioxide - CO₂) ) வை தாவரங்கள்  காற்றில் இருந்து உறிஞ்சி, சூரிய ஒளி மற்றும் நீரின் உதவியுடன் 'ஒளிச்சேர் க்கை' (Photosynthesis) மூலம் தங்களுக்கான உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இந்தச் செயல்பாட்டின் போது, தாவரங்கள் கரியமில வாயுவை உள்ளிழுத்து, மனிதர்களுக்குத் தேவையான பிராண வாயுவை (ஆக்சிஜன் - O₂) வெளியிடுகி ன்றன. இதன் மூலம் தட்பவெட்ப சமநிலையை காத்து உலகையே பாதுகாக்கிறது.மரங்கள்இல்லை யேல் மனிதன் இல்லை. பகலில் உணவைத் தயாரிக்க கரியமில வாயுவை உறிஞ்சும் தாவரங்கள், இரவு நேரங்களில் சூரிய ஒளி இல்லாதபோது மனிதர்களைப் போலவே ஆக்சிஜனை சுவாசித் து, கரியமில வாயுவை வெளியி டுகின்றன (Cellular respiration). கடவுள் தான் படித்த முதல் மனிதனுக்கு இந்த மண்ணை பாதுகாக்கவும் பண்படுத்தவும் கட்டளையிட்டார் இதை நாம் மறந்து விடக்கூடாது.
"வெளிச்சம் உண்டாகக்க டவது" என்று கடவுள் பேசிய போது, இவ்வுலகில்இல்லாதவை அனைத்தும் தோன்றின.படைப்பு ஒவ்வொன்றும் கடவுளின் வார்த் தைக்குக் கீழ்ப்படிந்து செயல்ப டுகிறது.மனிதன் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் லை. அவரின் படைப்பை அழித் துவருகிறான்.
மனிதன் மற்ற படைப்புகளில் இருந்து மாறுபட்டவன். கடவுள் அவனைத் தமது சாயலாகவும் உருவமாகவும் படைத்தார்.
சூரியன், சந்திரன், நட்சத்திரங் கள் உட்பட அனைத்தும் தேவனு டைய மகிமையையும், அவரு டைய நித்திய வல்லமையையும் மனிதனுக்கு எடுத்துரைக்கி ன்றன.
ஆபிரகாமுக்கு தேவன் அளித்த வாக்குறுதியின்படி, அவரது சந்ததியினர் வானத்து நட்சத் திரங்களைப்போலவும், கடற் கரை மணலைப்போலவும் எண்ண முடிuயாதபடிக்கு பலுகிப் பெருகுவார்கள் என்று திருவிவ லியம்  கூறுகிறது. இது இயற் கையோடு மனிதன் இனைந்து வாழ்வான் என்பதை உருவக ப்படுத்துகிறது.
இயேசுவும் சுற்றுச் சூழலும்:
Jesus and Environment. 
இயேசுவின் போதனைகளும் வாழ்க்கையும் இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையவை. மனிதர்கள் சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் பொறுப்பாள ர்கள் (Stewardship) என்றும், பூமி யின் மீது அன்பு செலுத்துவது இறைவனின் படைப்பை மதிக் கும் செயல் என்றும் கிறிஸ்தவம் வலியுறுத்துகிறது.
இயேசு மக்கள் கூட்டத்தை விட்டு விலகி, தனியாக இறைவேண் டல் செய்ய மலைகளுக்கும், சோலைகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இயேசு ஆன்மீக உண்மைகளை விளக்க, விவசாயம், விதைப்பு, மரங்கள், கடுகு விதை மற்றும் பறவைகளை உவமைகளாகப் பயன்படுத்தினார்.இயற்கையின் மீது தனக்கிருந்த இறை அதிகாரத்தை நிரூபிக்கும் வகை யில், புயலை அடக்குதல், தண் ணீரை திராட்சை ரசமாக மாற்று தல், மற்றும் மீன்களைப் பெருக் குதல் போன்ற செயல்களைச் செய்தார்.சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வாக "வானத்துப் பறவைக ளையும், காட்டு மலர்களையும் கவனியுங்கள்" என்று கூறி, கவலைகளைத் தவிர்த்து இயற் கையோடு இனைந்த எளிமையா ன வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட் டோரின் நலனுடன் நேரடியாகத் தொடர்புடையது; ஏனெனில் இயற்கைச் சீரழிவால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் அவர்க ள்தான்.
1.படைப்பு போதிக்கிறது.
Creation Teaches. யோபு 12:7-12.
அன்பர்களே! யோபுவுக்கு துன்பங்கள் வந்தபோது அவரை ஆறுதல்படுத்த வந்த மூன்று முக்கிய நண்பர்கள் 1.தேமானியனான எலிப்பாஸ்: இவர் மூத்தவராகவும், ஞானமுள் ளவராகவும் பேசும் இவர், யோபு வின் மீது ஏதோ ஒரு ரகசிய பாவம் இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்.
 2  சூகியனான பில்தாத்: இவர் பாரம்பரியத்தை அடிப்படையாக க் கொண்டு, கடவுள் ஒருபோதும் நீதிமான்களைத் தண்டிப்பதில் லை என்ற வாதத்தை முன்வைப் பவர். 
3.நாமாத்தியனாகிய சோபார்: யோபுவின் துயரங்களுக்குக் கடவுளின் நியாயத்தீர்ப்பே கார ணம் என்று கடுமையாக வாதிடு பவர்.யோபு தன் நண்பர்களுக்கு எதிராகப் பேசுகிறார். "நீங்கள் சொல்வதுதான் மிகப் பெரிய ஞானம் என்று நினைக்க வேண்டாம்.பூமியிலுள்ள உயிரி னங்களும், அனுபவமிக்கபெரிய வர்களும் கடவுளின் இறையா ண்மையைப் பற்றித்தான் பேசுகி றார்கள்" என்று யோபு அவர்களு க்குப் பதிலளிக்கிறார்.
மிருகங்கள், பறவைகள், மீன்கள் மற்றும் பூமி ஆகிய அனைத்தும் கடவுளின் வல்லமையைவெளிப் படுத்துகின்றன. இயற்கையைப் பார்த்தாலே, கடவுளின் படைப் புத் திறனை அறியலாம்.இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் உயிரும், மனிதனின் சுவாசமும் கடவுளின் கையில்தான் இருக்கின்றன.
நாக்கு எப்படி உணவின் சுவை யைச்சரியாகப்பகுத்தறிகிறதோ, அதேபோல மனிதனின் காதுகள் மற்றும் மனம் நல்ல வார்த்தை களையும் போதனைகளையும் சோதித்தறிய வேண்டும். வயதான முதியவர்களிடம் ஞானம் இருக்கும் என்று பொது வாகக் கூறப்பட்டாலும், உண்மை யான ஞானமும் நீதியும் கடவுளி டமிருந்தே வருகிறது.
யோபு தன் நண்பர்களைநோக்கி, மிருகங்கள், பறவைகள், மற்றும் இயற்கையிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இயற்கையின் செயல்பாடுகள் மூலம் கடவுளின் கட்டுப்பாடும், அவரது கரத்தின் வல்லமையும் மிகத் தெளிவாகப் புலப்படுகி றது.
விலங்குகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டி யவை.
நாய்:
மனிதர்களுக்கு மிகச்சிறந்த நன்றிக்கு உதாரணமாகத் திகழும் விலங்கு நாய் ஆகும்
காகம் எப்போதும் ஒற்றுமை யின் சின்னமாக இருக்கிறது. ஒரு காகம் தனக்கு உணவு கிடைத்தால், அதை அமைதியாக தனியாக தின்று விட்டு செல்லா து. அது தனது கூட்டத்தினரை கரைந்து அழைத்து தனது கூட்டத்தினருடன் உணவருந் தும்.
எறும்புகளும் தேனீக்களும் தமக்கென உணவைச் சேமிப்ப திலும், கூட்டாக வாழ்வதிலும் அசாத்தியமான ஒழுக்கத்தையு ம், கூட்டுழைப்பையும் கொண்டு ள்ளன.
சிங்கம், புலி: விலங்குகள் பசி யாக இருக்கும்போது மட்டுமே வேட்டையாடுகின்றன. இயற்கையின் சமநிலையைப் பேணவும், தங்களின் எல்லைக ளைக் காக்கவும் அவை மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்படுகி ன்றன.
யானைகள் தங்களின் குடும் பத்தை (மந்தை) மிகவும் நேசிப் பவை. குட்டிகளைப் பாதுகாப்ப திலும், ஆபத்தில் உதவும் பண்பி லும் மனிதர்களுக்கு இணையா னவை.
பூனைகள் தங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள் ளும் பழக்கம் கொண்டவை.
இதைதான் யோபு தன் நண்பர்
களுக்கு விலங்கிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்கி றார்.பூமியின் உயிரினங்கள் கூட தேவனுடைய இறையாண் மையையும் ஞானத்தையும் புரிந்துகொள்கின்றன, ஆனால் அவருடைய நண்பர்களால் அதைப் புரிந்துகொள்ள முடிய வில்லை என்பதை இது வலியுறு த்துகிறது.
2.படைப்பு புது வாழ்வு தருகி றது. Creation brings new life. திருவெளிப்பாடு 22:1-6
அன்பர்களே! திருத்தூதர்யோவா னுக்கு வானதூதர்  வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த ஓர் ஆற்றை  காட்டினார். இந்த வாழ்வளிக்கும் தண்ணீர் இயேசு கிறிஸ்துவை யை குறிக்கிறது.
அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிரு ந்து புறப்பட்டு, நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றி ன் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தன. மாதத்திற்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்க ளைக்குணப்படுத்தக்கூடியவை. 
இலைகளிலிருந்து மருந்து:
அன்பர்களே! தாவரங்களின் இலைகளில் உள்ள மருத்துவ குணங்களை பல்வேறு செயல் முறைகள் மூலம் பிரித்தெடுத்து மருந்துகள் தயாரிக்கப்படுகின் றன. இலைகளை உலர்த்துதல், கொதிக்க வைத்தல் (Decoction), ஊறவைத்தல் (Infusion), மற்றும் ஆவி பிடிக்கும் முறை (Steam distillation) போன்ற பல முறை கள் இதற்குப் பயன்படுத்தப்ப டுகின்றன. இது இயற்கையின் பரிசு.கடவுளின் படைப்பு.
புதிய எருசலேம்:
அன்பர்களே! கடவுளின் புதிய எருசலேமில் மீட்படைந்தவர்கள் அனுபவிக்கவிருக்கும் நித்திய வாழ்வை, தூய்மை மற்றும் பேரின்பத்தை விவரிக்கின்றன. ஆதியாகமத்தில் இழந்த ஏதேன் தோட்டம், இங்கு முழுமையான மீட்பின் நிறைவாக, தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் வீற்றி ருக்கும் மகிமை வாய்ந்த நகர மாக மீட்டமைக்கப்படுவதை இந்தப்பகுதி காட்டுகிறது.
 வாழ்வளிக்கும் தண்ணீர் ஒடும்  நதியும் River of Life, வாழ்வளிக் கும் மரமும் Tree of Life):): இது முடிவற்ற வாழ்வையும், பரிசுத்த ஆவியானவரின் புதுப்பிக்கும் வல்லமையையும் குறிக்கிறது. ஆற்றின் இருகரைகளிலும் உள்ள வாழ்வு மரம், மாதந்தோ றும் காய்த்து, சாகா நிலையைத் தருகிறது. இதன் இலைகள் "மனிதர்களைக் குணமாக்குவ தாகும்".நித்திய வாழ்வு அல்லது முடிவில்லா வாழ்க்கையைத் தரும் ஆன்மீக மரம்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத் தால் மீட்கப்பட்டவர்கள் தேவனு டைய முகத்தைத் தரிசிப்பார் கள். அவர்களின் நெற்றியில் அவருடைய பெயர் எழுதப்பட்டி ருக்கும். இது அவருடைய சொந் த மக்கள் என்ற முழுமையான உரிமை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும்.எனவே தான், திருமுழு க்கின்போது நம் ஆயர்கள் நம்
நெற்றில் சிலுவையின் அடையா ளத்தை இட்டு, நாம் கிறித்துவை உடையவர்கள் என்பதை உரிமை
பேராக திருச்சபையில் சேர்த்துக்
கொள்ளப்படுகிறோம்.
 புதிய எருசலேமில்,இங்கு இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்ட வர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சி புரிவார்கள். 
கடவுளே அவர்களுக்கு ஒளியாக இருப்பார்.இது ஆதியாகமத்தில் இழந்த பரதீசின் மீட்டெடுப்பாகும் இந்த நித்திய நகரம் மக்களினங் களுக்கு ஈடாக கொடுக்கப்படும். விசுவாசிகள் கடவுளின் முகத் தைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுவார்கள். இதுவே மனிதனி ன் படைப்பின் தலையாய நோக் கம் ஆகும்.
கடவுளின் நாமம் நெற்றியில் இருப்பது, அவர்கள் முழுமை யாக தேவனுக்கே சொந்தமான வர்கள் என்பதை உறுதிப்படுத் துகிறது.ஏதேன் தோட்டத்தில் மனிதனின் பாவத்தால் ஏற்பட்ட சாபம், இங்கு முற்றிலும் அழிக்க ப்பட்டு, மீட்பு முழுமை பெறுகி றது.
3.படைப்பு இறையரசை தேடு வதே.Creation is about seeking the Kingdom of God.லூக்கா 12:22-34
அன்பர்களே! கடவுள் தம் சீடர்க ளிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார், கவலைப்படு வது மனிதனின் இயல்பான போக்காகும்.  நாம் அதைவிட மேலானவர்கள் . நாம் கவலைப் படுவதற்கான காரணங்களில் ஒன்று, நம்மைப் பற்றி நாம் ஒரு பொருள் சார்ந்த கண்ணோட்டத் தைக் கொண்டிருப்பதுதான். ஆனால் நாம் உணவை விட மேலானவர்கள், நம் உடல் ஆடை களை விட மேலானது. 
இஸ்ரவேலர் பாலைவனத்தில் அலைந்த அந்த 40 வருடங்களும் அவர்கள் அணிந்திருந்த உடை கள் பழமையாகவோ கிழியவோ இல்லை; அவர்களின் கால்க ளும் வீங்கவில்லை அவர்களின் பசியைப் போக்க அதிசயமான உணவையும்,கொடுத்தார் என்று திருவிவலியம்  கூறுகிறது.
உணவைவிட உயிரும், உடை யைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? என்பதை சிந்திக்க வேண்டும்
காகங்கள் விதைப்பதோ, அறுவ டை செய்வதோ, உணவு சேமிப் பதோ இல்லை. ஆனாலும் இறை வன் அவற்றிற்குத் தேவையான உணவை தினமும் வழங்குகி றார்.பறவைகளுக்கே உணவளி க்கும் கடவுள், தம்மை நம்பும் மனிதர்களைக் கைவிட மாட்டார். மனிதர்கள் பறவைகளை விடவும் எவ்வளவோ மேலான வர்கள்.நம்முடைய தேவைகளுக் காக நாம் தேவையற்ற கவலை களைக் கொள்ளக் கூடாது என்பதை இந்த வசனம் உணர்த் துகிறது.
காட்டு மலர்கள் தமக்காக உழை ப்பதோ அல்லது ஆடை நெய்வ தோ இல்லை. ஆனாலும், பூமியி ன் மிகச் சிறந்த செல்வமும் கம்பீ ரமும் படைத்த சாலொமோன் மன்னன் கூட அவற்றைப் போல அழகாக அலங்கரிக்கப்படவி ல்லை. சிறிய பூக்களுக்கே இவ் வளவு அழகைத் தரும் கடவுள், தமது பிள்ளைகளான உங்களு க்குத் தேவையானவற்றை நிச்சயமாகத் தருவார் என்று இந்த வசனம் விவரிக்கிறது
வயலில் இன்று மட்டுமே இருந் து, நாளை அடுப்பில் எரிக்கப்ப டும் புல்லுக்கும் பூக்களுக்கும் கூட கடவுள் அழகிய ஆடையை (மலர் மற்றும் செடிகளை) அளிக்கிறார்.அற்பமான தாவரங் களுக்கே இவ்வளவு நேர்த்தி யாகவும் அழகாகவும் செய்கிறார் என்றால், அவருடைய படைப்பில் மிகச் சிறந்தவர்களாகிய உங்க ளுக்கு எவ்வளவு அதிகமாகத் தேவையானவற்றை வழங்கு வார்?
வாழ்க்கையின் தேவைகளுக் காக தொடர்ந்து கவலைப்படுப வர்களை இயேசு அன்புடன் கடிந்துகொண்டு, "நம்பிக்கை குன்றியவர்களே" என்று அழைக் கிறார். 
முதலாவது,
இறை அரசை தேடுங்கள்; 
அன்பர்களே! 
அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப் படும்" . கடவுளின் வழிகளை முத லில் தேடும்போது, நமது அடிப் படைத் தேவைகள் அனைத்தை யும் அவரே கவனித்துக்கொள் வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த வார்த் தைகள் நமக்குத் தருகின்றன.
இறையரசை (கடவுளின் அரசு) தேடுவது என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அன்பு, நீதி, மற்றும் அமைதிக்கு முதலி டம் தருவதாகும். "முதலாவது தேவனுடைய அரசையும் அவரு டைய நீதியையும் தேடுங்கள்" என்று திருவிவிலியம் கூறுகி றது.இறையரசை நம் வாழ்வில் முழுமையாகப் பெற இந்த வழிமு றைகளைப் பின்பற்றலாம்: அன்பிற்கு முதலிடம்: சுயநலத்தை விடுத்து, பிறர்மீது அன்பு காட்டுவதே இறையரசின் முக்கிய அடையாளமாகும். நீதியைப் பின்பற்றுதல்: சமூகத்தில் நேர்மை, சமத்துவம் மற்றும் இரக்கம் ஆகிய நற்பண் புகளை கடைப்பிடிக்கவேண்டும். தெய்வீக வழிகாட்டுதல்
நம் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் கடவுளின் ஆட்சி யையும், அவருடைய சித்தத்தை யும் முதன்மையாகக் கொள்ள வேண்டும்.
சுற்றுசூழலை பாதுகாத்தல்: 
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் என்பது இயற்கை வளங்களைப் பேணி, புவி வெப்பமயமாதல் மற்றும் மாசுபாட்டைக் குறைத்து, எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை உறுதி செய்வதாகும். படைப்பு கடவுளு
டையது, அதை பாதுகாப்பதும்,
பராமரிப்பும் நம் ஒவ்வொருவ
ரின் கடமையல்லவா.
இயற்கையில் கடவுளின் குரலைக் கேட்பது எவ்வாறு?
How to hear God's voice in nature?
அன்பர்களே! இயற்கையில் கடவுளின் குரலைக் கேட்பது என்பது அமைதியான மனதுடன் இயற்கையை உற்று நோக்கு வதாகும். பறவைகளின் பாட்டு, காற்றின் சலசலப்பு, மலர்களின் நறுமணம், மற்றும் சூரியனின் ஒழுக்கம் ஆகியவை இறைவனி ன் படைப்பாற்றலையும், அன்பை யும் அமைதியான முறையில் நமக்கு உணர்த்துகின்றன. வானங்கள் இறைவனின் மாட்சி மையை வெளிப்படுத்துகின்றன; ஸ(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:1)
இயற்கையின் வழியே இறை வனின் குரலை கவனிப்பதற் கான சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அமைதியும் கவனமும் (Silence and Solitude): 
உங்கள் அன்றாட இரைச்சலில் இருந்து விலகி, அமைதியான சூழலில் அமருங்கள். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, இறைவனின் பிரசன் னத்தை உணர உதவும் 1 அரசர் கள் 19:11-13: கடவுள் பெரும் காற்றிலோ, பூகம்பத்திலோ, நெருப்பிலோ பேசவில்லை; மாறாக ஒரு "மெல்லிய அமைதி யான குரலில்" (Gentle whisper) எலியாவிடம் பேசினார்.   படைப்புகளை உற்று நோக்கு தல்: 
மரங்கள், மேகங்கள், மற்றும் மலர்களை அவதானியுங்கள். ஒவ்வொரு படைப்பிலும் இறைவன் தனக்கென ஒரு அழகை ஒளித்து வைத்துள்ள தை நீங்கள் உணரலாம். கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தை யும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. (தொடக்க நூல் 1:31)
புலன்களைத் திறத்தல்: இயற்கையின் நறுமணம், பற வைகளின் கீச்சொலி, மற்றும் காற்றின் பரிசம் ஆகியவற்றை முழுமையாக அனுபவியுங்கள். இவையே கடவுள் நம்மிடம் பேசும் மென்மையான மொழி யாகும்.ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானது மான எல்லா வகை மரங்களை யும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். (தொடக்கநூல் 2:9)
நன்றியுணர்வு காட்டுதல்: இயற்கையின் கொடைகளுக்கா கவும், அதன் அழகிற்காகவும் அதை அழகாக படைத்த கடவு ளுக்கு நன்றி செலுத்துங்கள். இது நம் ஆன்மீக இணைப்பை அதிகமாக்கும்."ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. (திருப்பாடல்க ள்(சங்கீதங்கள்) 104:24)
இறுதியாக, அன்பர்களே!
கடவுளின் பார்வையில், படைப் பின் அழகு என்பது கடவுளின் மாபெரும் கைவண்ணமாகவும், அவருடைய அன்பின் வெளிப்பா டாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஒவ்வொரு படைப்பும் நேர்த்தி யாகவும், ஒழுங்காகவும், முழுமையான நன்மையுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதை திருவிவலியம் அழகாக விவரி க்கிறது.நாம் மிக பொருமை யாக, அவரின் குரலை கேட்க
ஆண்டவர் அருள்புரிவாராக
ஆமேன்..


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com




Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.