ஆசிரியர் தின ஞாயிறு. Teachers-- Sunday. கல்வி: மனதுக்கு உரு கொடுத்து வாழ்வுக்கு திசைக் காட்டுதல்.(295) Education: Shaping Minds Changing Lives.ஏசாயா 50:4-7, தீத்து 2:1-10, திருப்பாடல் 119:9-16. லூக்கா 5:1-11.
முனனுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " கல்வி: மனதுக்கு உரு கொடு த்து வாழ்வுக்கு திசைக் காட்டு தல்" அன்பர்களே! இந்தியாவில்ஆசிரியர்தினத்தை நாம் ஏன் கொண்டாடுகிறோம்? இந்தியா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இரண்டாவது குடியரசு தலைவ ர், இவரின் பிறந்த நாளைக் குறிக் கும் வகையில் கொண்டாடப்படு கிறது.இவர் புகழ்பெற்ற தத்துவ ஞானி மற்றும் கல்வியாளர். மாணவர்களுக்கு நல் வழிகாட்டு வதற்கும், சமூகத்தை வடிவமை க்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நாள் இது. உலக ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள அனை த்து ஆசிரியர்களையும் கொண் டாடும் வகையில் நடத்தப்படுகி றது. பழைய ஏற்பாட்டில், ஆசிரியர் கள் யார்? Who were the teachers in the Old Testament, அன்பர்களே! பழைய ஏற்பாட்டில், ஆசிரியர்கள் முதன்மையாக இருந்தனர் லேவியர் , ஆசாரியர்கள் , இறைவாக்கினர் , பெற்றோர் கள் கடவுளின் சட்டங்களை . இஸ...