ஆசிரியர் தின ஞாயிறு. Teachers-- Sunday. கல்வி: மனதுக்கு உரு கொடுத்து வாழ்வுக்கு திசைக் காட்டுதல்.(295) Education: Shaping Minds Changing Lives.ஏசாயா 50:4-7, தீத்து 2:1-10, திருப்பாடல் 119:9-16. லூக்கா 5:1-11.
முனனுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "கல்வி: மனதுக்கு உரு கொடு த்து வாழ்வுக்கு திசைக் காட்டு தல்"
அன்பர்களே!
இந்தியாவில்ஆசிரியர்தினத்தை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இரண்டாவது குடியரசு தலைவ ர், இவரின் பிறந்த நாளைக் குறிக் கும் வகையில் கொண்டாடப்படு கிறது.இவர் புகழ்பெற்ற தத்துவ ஞானி மற்றும் கல்வியாளர்.
மாணவர்களுக்கு நல் வழிகாட்டு வதற்கும், சமூகத்தை வடிவமை க்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நாள் இது.
உலக
ஆசிரியர் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள
அனை த்து ஆசிரியர்களையும் கொண் டாடும் வகையில் நடத்தப்படுகி றது.
பழைய ஏற்பாட்டில், ஆசிரியர் கள் யார்? Who were the teachers in the Old Testament,
அன்பர்களே!
பழைய ஏற்பாட்டில், ஆசிரியர்கள் முதன்மையாக இருந்தனர் லேவியர், ஆசாரியர்கள், இறைவாக்கினர், பெற்றோர் கள் கடவுளின் சட்டங்களை . இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத் தியவர்கள். யாக்கோபுக்கு உம் நீதிமுறைமைகளையும் இஸ்ர யேலுக்கு உம் திருச்சட்டத்தை யும் கற்றுத்தருபவன் என லேவியர்களை ஆசிரியர்களாக (இணைச் சட்டம்) உபாகமம் 33:10).நியமிக்கப்பட்டனர்.
பழைய ஏற்பாட்டில், கடவுள் தன்னை முதல் மற்றும் இறுதி ஆசிரியராக முன்வைக்கப்படு கிறார், மனிதகுலத்தை அறிவுறு த்துகிறார் மற்றும் லேவியர், ஆசாரியர்கள், இறைவாக்கின ர்களுக்கு தெய்வீக ஆசிரிய ராய் கற்பித்து வழிநடத்தினார்.
பழைய ஏற்பாட்டில் உள்ள மனித ர்களில், மோசேயே முதல் பெரி ய மனித ஆசிரியராக பரவலா க அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மோசேயிடம் கடவுள் , "நீ என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உனக்குக் கற்பிப்பேன்" (விடுதலை பயணம் யாத்தியா மம் 4:15).
மோசே தோராவின் இறுதி மனி த மத்தியஸ்தராக செயல்பட்டு, கடவுளின் கட்டளைகளைப் பெற்று, இஸ்ரவேலர்களுக்கு தீவிரமாக அறிவுறுத்தினார்.
விடுதலைபயணம்(யாத்திராகமம்), லேவியர், எண்ணிக்கை, இணை சட்டம் (உபாகமம்) முழுவதிலும், மோசே தொடர்ந்து கற்பிக்கிறார்,மிக முக்கியமாக
கடவுளிடம் 10 கட்டளைகளை
நேரிடையாக பெறுகிறார்.
மோசே சினாய் மலையில் மோசேயின் நியாயப்பிரமாண த்தைப் பெற்று, இந்த தெய்வீகக் கட்டளைகளை இஸ்ரவேல் சமுதாயத்திற்குக் கற்பித்தார்
மோசே இஸ்ரவேலருக்குப் பிறகு நியாயப்பிரமாணத்தைக் கற்பிப் பதன் மூலம் தனது அறிவுறுத் தல் ஆசிரியர் பணியைத் தொட ருமாறு ஆசாரியர்களுக்கும் லேவியருக்கும் வெளிப்படை யாகக் கட்டளையிட்டார் (இணை சட்டம் உபாகமம் 31:10-13).
எஸ்ரா ஒரு நல்லாசிரியர்: Esra
was a good Teacher in Old Testament.
அன்பர்களே! எஸ்ரா பழைய ஏற்பாட்டில் மோசே போன்று கி,மு 458 இல் எருசலேமில் நாடுகடத்தப்பட்டவர்களுக்கு கடவுளின் சட்டத்தை கற்பித் தார்.ஒரு யூத பாதிரியாராகவும் எழுத்தராகவும் இருந்தார் ஆன்மீக புதுப்பித்தலை வழிநடத் திய நபர் ஆவார்.ஆரோனின் நேரடி வழித்தோன்றலாக, அவர் மோசேயின் சட்டத்தில் ஆழ்ந்த நிபுணத்துவத்தைக் கொண் டிருந்தார் "திருச்சட்ட வல்லு னர்." மற்றும் வெளிறிய சமூகத் திற்கு ஒரு முக்கியமான பால மாக பணியாற்றினார்.
பாரசீக மன்னர் ஆர்டாக்சர்க் ஸால் நியமிக்கப்பட்ட எஸ்ரா, சரியான வழிபாட்டை மீட்டெடுக் கவும், வேதங்களை கற்பிக்க வும், உடன்படிக்கை கீழ்ப்படித லைச் செயல்படுத்தவும் பாபி லோனில் இருந்து நாடுகடத்தப்ப ட்ட ஒரு குழுவைவழிநடத்தினார்.
"எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத் தைக் கற்று அதன்படி நடப்பதி லும், சட்டத்தையும், முறைமை யையும் இஸ்ரயேல் மக்களுக்கு க் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத் தினார். (எஸ்ரா 7:10)
இஸ்ரேல் மக்களுக்கு மறுமலர் ச்சியை ஏற்படுத்திய நல் ஆசானாக எஸ்ரா இருந்தார்.ஒரு ஆசிரியர் என்பவர் நன்றாக கற்றவராக இருக்க வேண்டு்ம் என்பதற்கு எஸ்ரா ஒரு முன்
உதாரணமாகும்.
1 ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும். How should be a Teacher?,ஏசாயா 50:4-7, Based on வில்லியம் பார்க்லே (William Barclay Commentary)
நண்பர்களே ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்ப தை இறைவாக்கினர் ஏசையா 50:4-7ல் இங்கு விளக்கமாக வெளிப்படுத்துகிறார்.இந்தப்
பகுதி,பழைய ஏற்பாட்டில் வரும் புகழ்பெற்ற "துன்புறும் ஊழி யக்காரன் பாடல்களில்" (Suffering Servant Songs) மூன்றா வது பாடலாகும்.
ஊழியக்காரனுக்குக்(ஆசிரியர்) கொடுக்கப்பட்ட நாவு, அவராகத் தேடிக்கொண்டது அல்ல. அது கடவுளால் அருளப்பட்டது.
ஒரு நற்செய்தியாளன் அல்லது தலைவன், அல்லது ஆசிரியர் முதலில் நல்ல சீடனாக இருக்க வேண்டும். அதாவது, பிறருக்குப் போதிப்பதற்கு முன்பு கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்க வேண்டும்.
கடவுள் "காலைதோறும்" எழுப்பி, செவிகளைத் திறக்கிறார். கடவுள் செவியைத் திறந்த போது, இந்த ஊழியக்காரன் முறுமுறுக்காமல், பின்வாங்கா மல் முழுமையாகக் கீழ்ப்படிந் தார். இறையியலாளர் பார்க்லே இதைக் குறிப்பிடும்போது, ஆன் மீக பலம் என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல; அது கடவுளோடு தினமும் செலவிடும் நேரத்தின் மூலமே புதுப்பிக்கப்படுகிறது என்கிறார். இந்த ஞானத்தின் நோக்கம்,"இளைப்படைந்தவனுக்கு" (துன்பப்படுபவர்களுக்கு) தகுந்த வார்த்தைகளால் ஆறு தல் கூறுவதே ஆகும்.
உண்மைக்குக் கீழ்ப்படிவது எப்போதும் எளிதானதல்ல, அதற்கு ஒரு விலை உண்டு" என்று விளக்குகிறார்.
" அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. "
இந்தத் இறைவாக்கு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அடைந்த பாடுக ளோடு (மத்தேயு 26, 27) நேரடியா கப் பொருந்துகிறது என்பதை பார்க்லே சுட்டிக்காட்டுகிறார்.
ஊழியக்காரன் தனது சொந்த பலத்தை நம்பவில்லை; மாறாக, "ஆண்டவராகிய கர்த்தர் எனக் குத் துணைசெய்கிறார்" என்ற அசைக்க முடியாத விசுவாசத் தைக் கொண்டிருந்தார்
என் முகத்தைக் கற்பாறை யைப் போலக் கடினமாக்கினே ன்" (Face like Flint) என்ற சொற் றொடருக்குப் பார்க்லே அழகான விளக்கம் தருகிறார். இது பிடி வாதத்தைக் குறிக்கவில்லை; மாறாக, எவ்வளவு பெரிய துன் பங்கள், அவமானங்கள் வந்தா லும், கடவுள் கொடுத்த இலக் கிலிருந்து மாறாமல் நேராக முன்னேறிச் செல்லும் துணிச் சலையும், அசைக்க முடியாத மன உறுதியையும் குறிக்கிறது. கடவுள் தன் பக்கமிருப்பதால், இறுதி வெற்றி தமக்கே என்ப தை ஊழியக்காரன் அறிந்திருந் தார். உலகத்தாரால் அவமான ப்படுத்தப்பட்டாலும், கடவுளின் பார்வையில் அவர் வெட்கப்ப ட்டுப் போவதில்லை.
ஒரு உண்மையான கிறிஸ்தவ ஊழியரின் அதாவது ஆசிரிய ரின் அடையாளம் என்ன என்ப தை விளக்குகிறார். ஒரு நற் செய்தியாளர் அல்லது விசுவாசி அல்லது ஆசிரியர் என்பவர் தினமும் இறைவனின் வார்த் தையைக் கேட்கும் ஆர்வமுள்ள செவியைக் கொண்டிருக்க வேண்டும்.
துயரப்படுபவர்களுக்கு ஆறுதல் சொல்லும் அன்பான நாவைக் கொண்டிருக்க வேண்டும்.
துன்பங்களைக் கண்டு பின் வாங்காத மன உறுதியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஆசிரியர் தின நன்னாளில்
ஆர்வமுள்ள செவியையும், அன் பான நாவையும்,பின் வாங்காத மன உறுதியைக்கொண்டிருக்க
கடவுள் நமக்கு உதவி செய்வா ராக.
2.கிறிஸ்தவக் குணம் மற்றும் நற்செய்தியை அழகாக்குதல்" Christian Character and Beautifying the Gospel, தீத்து 2:1-10.
நண்பர்களே திருத்தூதர் தீத்து என்பவர் பிற இனத்து கிறிஸ் தவர். அவர் திருத்தூதர் பவுல் அடிகளாரோடு இணைந்து நற் செய்தி பணியாற்றிய ஆவிக்கு ரியமகன்(Spiritual Son) கிரேத்து தீவு (Crete) என்பது மத்திய தரக் கடலில் அமைந்துள்ள கிரீஸ் நாட்டின் மிகப்பெரிய தீவாகும்)
திருச்சபையின் ஆயராக விளங் கினார். கிரேத்து திருச்சபையி ன் வளர்ச்சி மிகவும் குறைந்திரு ந்ததால் அங்கு ஒரு சரியான உதவியாளரை நியமிக்க வேண்டும் என்பதை இவருக்கு பணியாக திருத்தூதர் பவுல் இந்த திருமுகத்தின் மூலமாக எழுதி பணிக்கிறார். காலம் கி.பி 62-64.
திருத்தூதர் பவுல் அடிகளார் தன் ஆவிக்குரிய மகனான தீத்து எவ்வாறு கிரேத்து திருச்சபை யை நடத்த வேண்டும் என்று ஒரு ஆசானாக ஆலோசனைகளை யும் அறிவுரைகளையும்,இத் திருமுகத்தில் போதிக்கிறார்
தீத்து கிரீட தீவிலுள்ள கள்ளப் போதகர்களுக்கு மனம் மாற, "ஆரோக்கியமான உபதேசத் திற்கு" (Sound Doctrine) ஏற்ற வைகளைப் பேச வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார்.
இறையியலாளர் பார்க்லே இதைப் பற்றி கூறும்போது:
கிறிஸ்தவப் போதனை என்பது வெறும் தத்துவக் கோட்பாடு அல்ல, (Philosophical Doctrine)அது ஒரு மனிதனின் வாழ்க்கை முறையை ஆரோக் கியமாக மாற்றும் மருத்துவ மாக இருக்க வேண்டும். உண்மையான விசுவாசம் எப்போதும் நற்செயல்களில் வெளிப்பட வேண்டும். ஒரு
நல்ல ஆசிரியர் என்பவர் தன்
மாணவர்களுக்கு என்றும் மறவாத நல்ல செயல்களை செய்ய வேண்டும்.அந்த மாண வர் உங்களை நினைத்தாலே
உங்கள் நற்செயல்கள் அவர் களை அடையாளப்படுத்த
வேண்டும்.You are the symbol of
Good Deeds.
முதியவர்கள் தெளிந்த புத்தியு ள்ளவர்களாகவும், மரியாதைக் குரியவர்களாகவும், விசுவாசத்தி லும் அன்பிலும் பொறுமையி லும் உறுதியுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். திருச்சபை
யில், மூத்த குடிமக்கள் வயது முதிர்வது ஒருவருக்குக் குறுகிய மனப்பான்மையையோ அல்லது சகிப்புத்தன்மையற்ற குணத்தை யோ தந்து விடக்கூடாது. மாறாக, கடந்து வந்த ஆண்டுகள் அவர் களுக்கு அனுதாபத்தையும், பிறரது தவறுகளைப் பொறுத் துக் கொள்ளும் மாண்பையும் தந்திருக்க வேண்டும். அது திரு
சபைக்குரிய நல்லது.
அவ்வாறே,
முதிர்ந்த வயதுள்ள பெண்கள்
அவதூறு பேசாதவர்களாகவும், மதுவுக்கு அடிமையாகாமல் நல்வழிகாட்டும் ஆசிரியை களாகவும் திகழ வேண்டும். அவர்கள் இளம் பெண்களுக்குக் குடும்பக் கடமைகளைக் கற்று க்கொடுக்க வேண்டும்.
முதிய பெண்கள் சபையில் வீண் வதந்திகளைப் பரப்பாமல், தங்கள் நடத்தையால் இளம் பெண்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும்.
"இந்த உலகத்தில் ஒரு நல்ல இல்லத்தை (Home) உருவாக்கு வதை விட பெரிய பொறுப்போ, பாக்கியமோ அல்லது உன்னத மான பணியோ வேறு எதுவும் இல்லை" என்று பார்க்லே இல்லறத்தின் முக்கியத்துவ த்தை உயர்த்திக் காட்டுகிறார்.
கிறிஸ்தவப் பெண்களின் தவறான நடத்தை தேவனுடைய வார்த்தை தூசிக்கப்படுவதற்கு (Word of God blasphemed) காரணமாகிவிடக் கூடாது.
அவ்வாறே,
வாலிபர்கள் மற்றும் தீத்துவின் முன்மாதிரி (வசனங்கள் 6-8)
வாலிபர்களை இச்சையடக்க முள்ளவர்களாக இருக்க அறிவு றுத்த வேண்டும். அதே நேரத் தில், தீத்து நற்செயல்களில் தனக்குத்தானே முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
வாலிபர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, அவர்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கை யைக் காட்டுவதே மிகச் சிறந்த போதனை.
சபை விசுவாசிகளின் பேச்சு மற்றும் செயல் எதிராளிகள் குற்றம் சொல்ல முடியாதபடி (Beyond Reproach) தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்ப்பவர்கள் வெட்கப்ப டுவார்கள்.
இறுதியாக,
அடிமைகள் / ஊழியர்கள் (வசன ங்கள் 9-10)ன்படி,
தங்கள் எசமான்களுக்குக் கீழ்ப் படிந்து, திருடாமல், உண்மையு ள்ளவர்களாக நடக்க வேண்டும். ரோம சாம்ராஜ்யத்தில் இருந்த சுமார் 6 கோடி அடிமைகளின் சமூகச் சூழலை பார்க்லே இங்கே சுட்டிக்காட்டுகிறார்.
அன்பர்களே!
கிறிஸ்தவ விசுவாசம் என்பது இருக்கும் சமூக அமைப்பை உடனடியாக வன்முறையால் புரட்டிப் போடுவது அல்ல; மாறாக, இருக்கும் இடத்திலேயே தங்களின் உன்னத நடத்தை யால் மாற்றத்தைக் கொண்டுவ ருவது. முதலில் நாம் பணி செய்யும் இடங்களிலும் நாம் வாழும் குடும்பங்களிலும் நம்மோடு இணைந்த சமூகத் தின் மக்களோடும் அன்பு அமை தியே நிலைநாட்டும் நபர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்
விசுவாசத்தை அழகாக்குதல் (Adorning the Doctrine) என்பது ஒரு அடிமை உண்மையாக உழைக்கும் போது, அவன் இரட் சகராகிய கடவுடைய உபதேச த்தை மற்றவர்களின் கண்களு க்கு அழகாகக் காட்டுகிறான்.
இன்றைய சூழலில், இது பணியிடங்களில் ஊழியர்கள் தங்களின் முதலாளிகளுக்குச் செய்யும் விசுவாசமான வேலைக்கு ஒப்பிடத்தக்கது.
எனவே,
கிறிஸ்தவத்தின் உண்மைத்த ன்மை அதன் கோட்பாடுகளில் மட்டுமல்ல, அதை பின்பற்றுபவ ர்களின் அன்றாட வாழ்க்கையில் தான் நிரூபிக்கப்படுகிறது. நம்முடைய ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவைப் பிறருக்கு ஈர்க்கும் மாபெரும் சாட்சியாக அமைய வேண்டும் என்பதே .
3.இயேசு ஒரு உலகளாவிய ஆசிரியரா? Is Jesus a Universal Teacher? லூக்கா 5:1-11
அன்பர்களே! ஆம், இயேசு ஒரு உலகளாவிய ஆசிரியர். அதாவது "ஆசிரியர்களுக்கெல் லாம் ஆசிரியர்." A Master of All Teachers".
உலகில் இவரை "ரபி "Rabbi "என்றே அழைத்தனர்.இது எபிரேய வார்த்தை "என் எசமா னர்" அல்லது "என் ஆசிரியர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள் ளது.
சீடர்கள் அவரது போதனைகள் மற்றும் அவரது அதிகாரத்திற்கு ஆழ்ந்த மரியாதை காட்ட மக்கள் இயேசுவை "ரபி" என்று அழைத் தனர். திரு விவிலியத்தில் முதன் முதலாக திருமுழுக்கு யோவானின் சீடர்களான செபுதேயுவின் மகனான யோவான் ( யோவான் நற்செய் தியை எழுதியவர்) அவர்களும் மற்றொரு சீடரும் தான் இயேசு வை ரபி என்று அழைத்தனர் (யோவான் 1:38) இதைத் தொடர் ந்து இரண்டாவதாக நத்தானி யேல் இயேசுவை ரபி என்று அழைத்தனர் (யோவான்1:49)
அதுமட்டுமல்ல, நத்தனியேல் இயேசுவைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார்.
(யோவான் நற்செய்தி 1:49) இவர் ரபி என்றும்,இறைமகன் என்றும்
மற்றும் இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றும் மூன்றுவிதமாக
ஆண்டவரை வெளிப்படுத்தும்
ஒரே நபர் ஆவார்.
ஆனால், திருமுழுக்கு யோவான் ஆண்டவரை,"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். (யோவான் நற்செய்தி 1:36)
இவர்கள் இவ்வாறு அழைத்தா லும், அவர் உலகளாவிய தத்து வங்களை, மனித நேய பண்புக ளை, இறையியல் கொள்கைக ளை போதிக்க மலை பிரசங்கம், உவமைகள், அற்புதங்கள், பழ மொழிகள் போன்றவைகளை போதித்தார்.
ரபி என்றாலே சீடர்கள் இருக்க
வேண்டும். இயேசுவும் திருமுழு க்கு யோவானும் ரபீகள். எனவே,
இருவருக்கும் சீடர்கள் இருந்த னர்.
நற்செய்தியாளர்கள் மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூவரும் ஆண்டவரை ரபீ என்ற வார்த்தையோடு பயன்படுத்துகி ன்றனர் ஆனால் லூக்கா நற்செய்தியாளர் ரபீ என்ற வார்த்தைக்கு பதிலாக மாஸ்டர் (master) a Greek word epistates என்ற வார்த்தையைஅதாவது எசமானர்,அல்லது தலைவர் என்று பயன்படுத்துகிறார்.
இயேசு ஒரு உலகளாவிய ஆசிரியராக இருந்தாரா?
ஆம், இயேசு ஒரு உலகளாவிய ஆசிரியராக பலரால் பார்க்கப் படுகிறார் யாருடைய அன்பு, மன்னிப்பு மற்றும் கடவுளின் அரசு பற்றிய செய்தி குறிப்பிட்ட கலாச்சாரங்களையும்,சகாப்த ங்களையும், நாடுகளையும் கடந்து எல்லைகளை மீறுகிறது.
ஒரு யுனிவர்சல் ஆசிரியராக இயேசுவை மாற்றுகிறது.புதிய ஏற்பாட்டில் அவர் “ஆசிரியர்”என நாற்பத்தைந்து முறை அழைக் கப்படுகிறார். “ரபி” என்ற அரமேய தலைப்பு இயேசுவிற்கு பதினான்கு முறை பயன்படுத் தப்படுகிறது
1, இறுதி ஆணையம் ;
The Great Commission:
அன்பர்களே! ஆண்டவரின்
இறுதி மற்றும் பெரியகட்ட ளைபடி,"எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திரு முழுக்குக் கொடுங்கள்.
(மத்தேயு நற்செய்தி 28:19)
நான் உங்களுக்குக் கட்டளையி ட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்க ள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.
(மத்தேயு நற்செய்தி 28:20)
இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப் பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். (மாற்கு நற்செய்தி 16:15)எனவே, அவர்
உலகமக்களுக்கான, அனைத்து படைப்பிற்கும் அவர் ஆசிரியர். இன்று அவரது போதனைக ளைப் பின்பற்ற உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களை வழிநடத் தியது.
இவரைப் போல் யாரும் அனை த்து படைப்பிற்கும் ஆசிரியராக
இருந்ததில்லை.எதிரிகள் மீதான அன்பு மற்றும் ஏழைகளுக்கான கவனிப்பு போன்ற கருத்துக்கள் முறையான கிறிஸ்தவ எல்லை களுக்கு அப்பாற்பட்ட பல்வேறு மனித சமூகங்களில் எதிரொலி க்கின்றன.
2.இயேசு பயன்படுத்திய கற்பித்தல் கருவிகள், Teaching Aids used by Jesus:
அன்பர்களே! இயேசு தான் ஒரு
சிறந்த ஆசிரியர் என்பதற்கு
உதாரணம் அவர் போதனை களில் கற்பித்தல் கருவிகளை
அதிகம் பயன் படுத்தினார்
1 வரிசெலுத்துவதற்காக தினார்
என்ற நாணயத்தை பயன்படுத் தினார்(மத்தேயு: 22:15-22)
2 தாழ்மையை போதிக்க குழந் தையை பயன்படுத்தினார்
(மத்தேயு 18: 2:-6)
3.தூய ஆவியை மற்றும் நிலை வாழ்வைப்பற்றி போதிக்க தண்ணீரை உருவகப்படுத்தி னார்.(யோவான்4:7-14)
4.அப்பமும், திராட்சை இரசமும்:
ஆண்டவர் தான் காட்டி கொடுக் கப்படும் இரவில் அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்" என்றார். பின்பு திராட் சை ரச கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத் தம்; பலருடைய பாவ மன்னிப் புக்காகச் சிந்தப்படும் இரத்தம். (மத்தேயு நற்செய்தி 26:26,27)
5.இயற்கையில் உள்ள காட்டு
மலர்கள், புற்கள்,அத்தி மரங்கள்,
பறவைகள்,விதைவிதைக்கும்
மனிதர்கள் இவைகளை கற்பித்
தல் கருவிகளாக பயன்படுத்தி
னார்.ஆசிரியர்களாகியா நாம்
இவைகளை போதிக்கும் போது
ஆண்டவர் போல் பயன்படுத்து
கிறோமா என்பதை சுயபரிசோத னை செய்ய அழைக்கப்படு கிறோம். ஆண்டவர் மனதுக்கு உரு கொடுத்து வாழ்வுக்கு திசைக் காட்டும் வகையில்
போதித்தார்.
4.கலிலேயா கடல் ஆண்டவ ரின் பள்ளி. The Sea of Galilee was the School of God
அன்பர்களே! கலிலேய கடல்
ஆண்டவர் போதிக்கும் இடமா கவும், தன் சீடர்களை தேடும் இடமாக இருந்தது. அவர் சீமோனின் படகை பிரசங்க மேடையாக (pulpit) பயன் படுத்தி னார்.
அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார். அதற்கு சீமோன், "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுப ட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக் கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்" என்றார்.
ஒரு மாணவர் ஆசிரியருக்கு கீழ்படிவது போல, சீமோன்
கீழ்படிந்தார்.அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன் களைப் பிடித்தார்கள்.The School of fish or shoal of fish.
வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றவர்களின் உதவியை
நாடினார்.செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் உடன் வந்தனர்.
இந்த அற்புதத்தை கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்ட வரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.
ஆனால்,இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்" என்று சொன்னார்.
நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்று சொன்ன சீமோன்தான் ஒருநாள் ஆண்ட வர் "மானிடமகனை யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று சீடர்களை கேட்ட போது. ஆண்ட வரிடம் பயிற்சி பெற்றப்பிறகு, சீமோன் பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளி ன் மகன்" என்று உரைத்தார். ஆண்ட வரின் பயிற்சி, போத னைகள் அவரை மாற்றியது.
இறுதியாக,
அன்பர்களே!
கல்வி: மனதுக்கு உரு கொடுத்து வாழ்வுக்கு திசை காட்டுதல்
என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்தி, அவனை ஒரு முழுமையான மனிதனாக மாற்றுவது கல்வி மட்டுமே. கல்வி என்பது வெறும் புத்தக அறிவை மட்டும் தருவதல்ல; அது ஒரு மனிதனின் மனதைச் செதுக்கி, அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணத் திற்கும் சரியான பாதையைக் காட்டும் ஒரு வழிகாட்டி ஆகும்.
மனிதன் தன் வாழ்க்கையில் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கல்விதான்.
கல்வி என்பது ஒரு மனிதனின் அகக்கண்ணைத் திறக்கும் அற்புதக் கலை. இயேசு இதை தான் செய்தார். அவருடைய போதனையை கேட்டமக்கள்,
"காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்.
என்று மத்தேயு நற்செய்தியாளர் கூறுகிறார்.திருவிவிலியம் சிந்தனைகளை உருவாக்கி, அவனது வாழ்வை ஒளிரச் செய் கிறது. சிறந்த கல்வியைப் பெற்ற ஒரு மனிதன் தனக்கு மட்டும் வழிகாட்டியாக இல்லா மல், தான் வாழும் சமூகத்திற்கும் ஒரு நல்வழிகாட்டியாகத் திகழ் கிறான். இந்த ஆசிரியர்
தின ஞாயிற்றில் ஆசிரியர்கள்
எல்லா வளமும் ஆசியும் பெற்று
சிறப்புடன் செயல்பட ஆண்டவர்
அருள் புரிவாராக ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511.
Note:The sermon has been prepared
to deliver at CSI.Bishop Azariah Memorial Church, Pulipakkam, Chengalpet on 6th Sept,2026.
Comments
Post a Comment