இனியும் அந்நியரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்றல். (294) Strangers No more: Welcoming the Migrants and Refugees லேவியர் 19:9-10, 33-37, திருத்தூதர் பணிகள் 8:1-8, திருப்பாடல் 146, மத்தேயு 2:13-15.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, '"இனியும் அந்நியரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்றல்."
அன்பர்களே!
"இனியும் அந்நியரல்ல" என்பது திருவிவிலிய அடிப்படையில் "எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதா யத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். (எபேசியர் 2:19)
வசனத்தைக் குறிக்கிறது.இதன் மூலம் மனிதர்கள் அனைவரும் கடவுளின் குடும்பத்தினர் மற்று ம் சக குடிமக்கள் என்ற ஆன்மீக ஒருமைப்பாட்டைப் பெறுகின்ற னர். இது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அன்போடு ஏற்று அரவணைக்க வேண்டும் என்ற சமூக மற்றும் மனிதாபிமா னப் பார்வையையும் வெளிப் படுத்துகிறது.
முன்பு ஒதுக்கப்பட்டவர்கள், இப்போது கடவுளின் குடும்பத் தில் முழு உரிமையும் பெற்றுள்ள னர்.அனைவரும் தூயவர்களுட ன் சமமான சக குடிமக்கள் ஆவர். அகதிகள் மற்றும் புதியவர்களை அந்நியர்களாகப் பார்க்காமல் அன்பு செலுத்த அழைப்பு விடுக் கிறது.
ஆண்டவர்,
"நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. (மத்தேயு நற்செய்தி 25:43)என்ற வரிகள், இறுதித் தீர்ப்பு நாளில் இயேசு மனிதர்களின் செயல்க ளை எடை போடும் உவமையின் ஒரு பகுதியாகும். ஏழை, எளிய, மற்றும் ஆதரவற்றவர்களிடம் காட்டும் இரக்கமே இயேசுவு க்குச் செய்யும் தொண்டு என்பதை இப்பகுதி விளக்குகி றது.
சமூகத்தில் உள்ள எளிய மற்றும் ஒதுக்கப்பட்ட மனிதர்களில் இயேசு தன்னை அடையாளப் படுத்துகிறார்.மற்றும் வெளிநா ட்டாரை அல்லது அந்நியர்களை ஏற்பது உண்மையான விசுவா சத்தின் வெளிப்பாடு ஆகும்.
புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யத் தவறுவது இயே சுவையே புறக்கணிப்பதற்குச் சமம் என்பதை இது காட்டுகிற து.
ஆபிரகாம் ஒரு அந்நியனாக வாழ்ந்தாரா? Was Abraham lived as a foreigner,?
ஆம், ஆபிரகாம் ஒரு அந்நியனா க வாழ்ந்தார். கடவுள் ஆபிராமை
ஊர் Ur என்ற கல்தேயர் ( Chalde ans பண்டைய பாபிலோனிய பகுதி At present Iraq) பகுதியிலி ருந்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்தார்.கானான் தேசத்தில் ஒரு அலைந்து திரிப வராய் வாழ்ந்தார்.. அவர் இடத் திலிருந்து இடத்திற்குச் சென்று நிரந்தர வீடு கட்டுவதற்குப் பதிலாக கூடாரங்களில் தங்கினார்.கடவுள் ஆபிரகாமிடம் ஊர் என்ற ஊரில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி கானானுக்குச் செல்லுமாறு கூறினார். கடவுள் அவருக்கு நிலத்தை வாக்குறுதி அளித்தி ருந்தாலும், ஆபிரகாம் தனது வாழ்நாளில் அதை ஒரு நிரந்தர குடிமகனாக சட்டப்பூர்வமாக வைத்திருக்கவில்லை.
கானான் நாட்டிலுள்ள எபிரோ ன் என்ற கிரியத்து அர்பா நகரி ல் சாரா இறந்தார். அவருக்காக ப் புலம்பி அழுவதற்காக ஆபிர காம் சென்றார். (தொடக்கநூல் 23:2)
";அங்கு ஆபிரகாம் இத்தியரிடம் நான் உங்களிடையே அன்னிய னும் அகதியுமாய்இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்ல றை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்" என்று கேட்டார்.
அதன்படி,மக்பேலா குகையை 400 வெள்ளிகாசு கொடுத்து
வாங்கி சாராவை புதைத்தார்..
பெலிஸ்திய (Palestine)நாட்டில் அவர் ஜெராரில் ஒரு வெளிநாட் டவராகவும், பெலிஸ்தியரின் நிலத்தில் நீண்ட காலம் அன்னி யனாக வாழ்ந்தார்.
அப்படி வாழ்ந்த ஆபிரகாமை
அவர் சந்ததியினர் பலுகிபெரு கி கானான் என்ற நாட்டை
உரிமைப்பேராக மாற்றி இனி அந்நியர் அல்ல என்று மாற்றி னார்.
எபிரெயர் 11:9ல், ஈசாக்கு மற்றும் யாக்கோபுடன் கூடாரங்களில் தங்கியிருந்த ஆபிரகாம், அந்நிய நாட்டில் அந்நியராக வாக்களிக் கப்பட்ட நிலத்தில் விசுவாசத் தால் வாழ்ந்தார் என்று கூறுகி றார்.
1.விளிம்புநிலை மக்களைப் பராமரித்தல்.Caring for the Marginalized people.லேவியர் 19:9-10, 33-37 .
அன்பர்களே! இறைவனின் பரி சுத்தத்தை இது வெளிப்படத்து கிறது. இதில் உள்ள 9-10 மற்றும் 33-37 ஆகிய வசனங்கள், விளிம் புநிலை மக்களைப் பராமரித்தல், சமூக நீதி மற்றும் வர்த்தகத்தில் நேர்மை ஆகியவற்றை வலியுறு த்துகின்றன.
முதலாவது, திராட்சைத் தோட் டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அன்னியருக் கும் விட்டுவிட வேண்டும்.அது பறவைகளுக்கும் விலங்குகளுக் கும் உணவாகலாம். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்! என்கிறார்.இது பிச்சை எடுப்ப தைத் தவிர்த்து, ஏழைகள் உழை த்துச் சாப்பிட ஒரு வாய்ப்பளிக் கிறது. உங்களோடு வாசம் செய் யும் அந்நியர்களை ஒடுக்கக் கூடாது. உங்களில் ஒருவனாக அவர்களைப் பாவித்து உங்க ளைப்போல் நேசிக்க வேண்டும்.
எகிப்து தேசத்தில் நீங்களும் அந்நியராக இருந்ததை நினை வுகூரவேண்டும்.அளவுகளிலும், எடைகளிலும், நியாயமான தராசுகளிலும் நேர்மையாய் இருக்க வேண்டும்.
உங்களிடம் தங்கும் அன்னியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங் கள் மீது நீங்கள் அன்புகூர்வது போல் அவர் மீதும் அன்புகூருங் கள். ஏனெனில், எகிப்தில் நீங்க ளும் அன்னியர்களாய் இருந்தீர் கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
லேவியர் கோட்பாடு 19:9-10, 33-37 தற்போதய இஸ்ரவேலர் மற்றும் பாலஸ்தீனர்களிடம் எப்படி உள்ளது, ?
அன்பர்களே! லேவியராகமம் 19:9-10 மற்றும் 33-37 [6.8, 6.10] எளிய, ஏழைகள் மற்றும் வெளி நாட்டினரிடம் அன்பு காட்டவும், நேர்மையுடன் நடந்து கொள்ள வும் இஸ்ரவேலர்களுக்குக் கட்ட ளையிடுகிறது. ஆனால், இன் றைய இஸ்ரவேல்-பாலஸ் தீன மோதல், இஸ்ரவேல்-ஈரான், இஸ்ரவேல்- லெபனான், இஸ்ர வேல்- சிரியா மோதல்கள்
கடவுளின் அன்பின் கோட்பாட் டை, லேவியர் 19:9,10, 33-37 கூறப்பட்டவைகளை மீறுகின் றன. இவர்கள் யாரும் தார்மீக நெறிகளுடன், இரு தரப்பினரும் மனிதநேயம், நீதி மற்றும் கனி வுடன் நடந்து கொள்ளவில்லை
என்பது மிக வருத்தம். இஸ்ரவேலர்கள் அந்நிய தேசத் து மக்களோடு அன்புடனும் நீதி யுடனும் நடந்துகொள்ளவில்லை அரசியல் மோதல்களைத் தாண் டி, இரு தரப்பு மக்களும் ஒருவரு க்கொருவர் கருணை காட்டவும், நியாயமாக நடந்து கொள்ளவும் விவிலியத்தின் இந்தச் சட்டங் கள் அறைகூவல் விடுக்கின்ற ன. தேசத்தில் தங்கும் வெளி நாட்டினரைத் துன்புறுத்தக் கூடாது.அவர்களை உங்களைப் போலவே நடத்த வேண்டும்.
சொந்த நாட்டில் அல்லது அயல் நாட்டில் வாழும் எவரையும் வேறு படுத்திப் பார்க்காமல் சமமாகப் பார்க்க வேண்டும். இஸ்ரவேலர்
களுக்கு கடவுள் கொடுத்த பத்து கட்டளைகளில் ஒன்றான
" கொலை செய்யாதே. "
(விடுதலைப் பயணம் 20:13)
என்ற கட்டளையை யாரும்
மறக்க கூடாது. அனைவரும்
மனிதநேயத்துடன், வலிமை குறைந்த மக்களை, அண்ட நாட் டினரை, ஏழைகள் மற்றும் வசிப் பிடங்களை இழந்த மக்களை மனிதாபிமானத்துடன் நடத்த இந்த வசனங்கள் வலியுறுத்து கின்றன.
2 எல்லைகளை தாண்டிய நற்செய்தி: The Gospel beyond the borders.திருத்தூதர் பணி கள் Acts: 8:1-8
அன்பர்களே! துன்புறுத்தல் மூல மாக நற்செய்தி எவ்வாறு எல்லைகளைத் தாண்டிப்பரவி யது என்பதை விளக்குகின்றன. புனித ஸ்தேவான் கிறிஸ்தவ திருச்சபையின் முதல் இரத்த சாட்சியும், திருத்தொண்டரும் ஆவார். கி.பி. 34-ல் எருசலேமில் இந்த கொலை சவுல் (பிற்கால
த்தில் பவுலாக மாறிய திருதூதர் பவுல் அடிகளார்) தலைமையில் நகருக்கு வெளியே அவரை கல்லால் எறிந்து கொன்றனர்.
காரணம், இயேசுவே மெசியா என்றும், கடவுளின் குமாரன் என்றும் அவர் தைரியமாக சாட்சி பகன்றார். இதைக் யூத மதத் தலைவர்கள் தேவதூசணம் (கடவுளை இழிவாகப் பேசுதல்) என்று குற்றம் சாட்டினர்.
இவரின் கடைசி வார்த்தை, "ஆண்டவரே, என் ஆவியை ஏற்று க்கொள்ளும்" என்றும், தங்களை க் கொல்பவர்களை மன்னிக்கக் கோரியும் அவர் செபித்து உயிரைவிட்டார். பக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை அடக் கம் செய்து உரத்த துக்கத்துடன் ஆழ்ந்த துக்கத்தைக் காட்டினர். இதன் விளைவாக கிறிஸ்தவ ர்கள் மீது கடும் துன்புறுத்தல் வெடித்ததுடன், நற்செய்தி எருச லேமைத் தாண்டி பல இடங்களு க்குப் பரவஇதுகாரணமாயிற்று.
அதே நாளில் எருசலேமில் உள்ள தேவாலயத்திற்கு எதிராக கடு மையான தாக்குதல்கள் தொட ங்கின.எருசலேமில் திருதூதர்
கள் பின்னாளில் தங்கியிருந்த போதிலும், யூதேயா மற்றும் சமாரியாவின் பகுதிகளில் விசு வாசிகள் சிதறிக்கிடந்தனர்.
சவுல் தேவாலயத்தை அழிக்க முயன்றார். அவர் வீடுகளுக்குச் சென்று, ஆண்களையும் பெண்க ளையும் இழுத்துச் சென்று சிறை யில் அடைத்தார். எருசலேம் சபைக்கு எதிராக வெடித்த பெரிய துன்புறுத்தல் கிறிஸ்தவ ர்களை முடக்கவில்லை; மாறாக அவர்களை யூதேயா மற்றும் சமாரியா பகுதி எங்கும் சிதறடி த்தது.ஓடிப்போன விசுவாசிகள் பல இடத்திற்கு இடம் சென்று இயேசுவின் நற்செய்தியைப் பிரசங்கித்தனர்.
திருத்தூதர்கள் எருசலேமிலேயே தங்கினர்; ஏழு திருத்தொண்டர் களில் ஒருவரான பிலிப்பு சமாரியா நகருக்குச் சென்றார்.
யூதர்களுக்கும், சமாரியர்களுக் கும் இடையே நீண்டகாலப் பகை இருந்தது. ஆனால்பிலிப்புஅங்கு மெசியாவைப் பற்றிய நற் செய் தியை அறிவித்தார்.
பிலிப்பு செய்த அரும் அடையா ளங்களையும், தூய்மையற்ற ஆவிகள் நீங்கியதையும் மக்கள் கண்டு கேட்டனர். பிலிப்பு கொண்டுவந்த இறைவார்த்தை யினால் அந்தச் சமாரிய நகர மக்களுக்கு ஆன்மீக மற்றும் உடல் நிவாரணம் கிடைத்தது.
மக்களின் துயரம் நீங்கி, அந்த நகரில் பெரிய மகிழ்ச்சி உண்டா னது.
ஒருகாலத்தில், திருச்சபை எருசலேமில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது, ஆனால் அது வேறு எங்கும் வளரவில்லை. ஏன்? ஏனென்றால், நற்செய்தி வேறு எங்கும் செல்லவில்லை. நற்செய்தியும் சபையும் எருசலே மிலேயே முடங்கிக் கிடந்தன, அது ஒரு பிரச்சினையாக இருந் தது. ஆண்டவர்,
திருதூதர் பணிகள் 1:8- ல், "தூய ஆவி உங்களிடம் வரும் போது நீங்கள் கடவுளது வல்ல மையைப் பெற்று எருசலேமிலு ம் யூதேயா, சமாரியா முழுவதி லும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிக ளாய் இருப்பீர்கள்" என்ற வார்த் தை நிறைவேறாமல் இருந்ததை
எட்டாம் அதிகாரத்தில், துன்பு றுத்தலால் சபை சிதறடிக்கப் படும் வரை இந்தப் பிரச்சினை நீடித்தது. மனிதனின் தீய திட்ட மான துன்புறுத்தல், கடவுளின் பெரிய திட்டமான நற்செய்யைப் பரப்புதல் நிறைவேற்றப் பயன் பட்டது. விசுவாசிகள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தி யைத் தொடர்ந்து அறிவித்தனர்.
இயேசு சமாரியாவின் முன்னோடி:
அன்பர்களே! யோவான் 4:5ன்படி
சிக்கர் (Sychar) என்ற சமாரிய பகுதியில் யாக்கோபின் கிணற் றன்டையில் சமாரியபெண்ணை சந்தித்து தன் முதல் நற்செய்தி விதையே விதைப்பதை பார்க்கி றோம்.
சமாரியன் பெண்” தோற்றத்தை க் கருத்தில் கொண்டு, அந்த பெண் அந்த நேரத்தில் யூதர்க ளின் பார்வையில் இரட்டை சிறுபான்மையினரை பிரதி நிதித்துவப்படுத்தினார், ஒரு பெண்ணாகவும், சமாரியர்கள் யூதர்களால் ஓரங்கட்டப்பட்டவர் களாகக் கருதப்பட்டதாலும். அவளுடனான தனது தொடர்பு களில், இயேசு அவளுடன் பேசு வதன் மூலமும், மேசியாவாக தனது அடையாளத்தை வெளிப் படுத்துவதன் மூலமும் அனைத்து சமூக மற்றும் கலாச்சார தடைகளையும் உடைக்கிறார். ஒரு பெரிய ஆன்மீக எழுச்சியால் அதிர்ந்த சமாரியப் பெண்ணான இயேசு வுடனான சந்திப்பிற்குப் பிறகு, நகரத்திற்குள் ஓடி, அவளுடைய அனுபவத்தைக் பகிர்ந்துகொள் கிறாள், இயேசுவைச் சந்திக்க வும், உலகின் இரட்சகராக அவ ரை நம்பவும் பலரை வழிநடத்தி யது. இவ்வாறு, அவரது சமூக மற்றும் கலாச்சார பின்னணி இருந்த போதிலும், சமாரிய பெண் கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தையும் சாட்சியையும் எடுத்துக் காட்டுகிறார், இனியும் அந்நியரல்ல: புலம் பெயர்ந்தோ ரையும் அகதிகளையும் வரவேற் றலில் ஆண்டவர் வித்திடுகிறார். அதுபிற்காலத்தில் நற்செய்தியா
ளர் பிலிப்பின் நற்செய்தி பணி யின் மூலம் நிறைவேறுகிறது.
3.அகதிகளையும் வரவேற் றல். Welcoming the Refugees மத்தேயு 2:13-15.
அன்பர்களே!
மத்தேயு 2:13-15 பகுதியானது கடவுள் தமது செய்திகளை கனவுகள் மூலமாக யோசேப் புக்குத் தெரிவித்து, இயேசுவைக் காப்பாற்றியதைக் கூறுகிறது.
பண்டைய காலத்தில் கடவுள் கனவுகள் மூலம் பேசுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கவில்லை. ஏரோது மன்னனின் கொலைவெறித் திட்டத்திலிருந்து தப்பிக்க யோசேப்புக்கு கனவு மூலம் வழி காட்டப்பட்டது. எகிப்துநாட்டிற்குச் சென்றது முற்றிலும் இயல்பான மற்றும் பாதுகாப்பான ஒரு தங்கு மிடமாக இருந்தது. ஏரோது இறக் கும் வரை அந்தக் குடும்பம் அங் கே தங்கியிருந்தது. திரூவிவலியம் நிறைவேற,
" இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். "
(ஓசேயா 11:1)என்ற பழைய ஏற்பாட்டின் இறைவாக்கு நிறை
வேற இது இயேசுவின் மூலம் நடந்தது.என்பதை மத்தேயு இதன் மூலம் சுட்டிக்காட்டுகிறார்.
எகிப்து, பெத்லேகிமிலிருந்து
சுமார் 400 மைல் தூரத்தில் உள்ளது.இது விலங்கின் உதவி
யுடன் சொல்லும்போது சுமார்
ஒருமாத காலமாகும்.
யோசேப்பு கடவுளின் தூதனின் வார்த்தைக்கு கீழ்படிந்து உடனே எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப் பட்டுச் சென்றார். இந்த நீண்ட பயணத்திற்கு ஞானிகளின் பரிசுபொரூட்கள் உதவியது.
கி.மு. 4 இல் நடந்த ஏரோதின் மரணத்திற்குப் பிறகு யோசேப் தனது குடும்பத்தை எகிப்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார் ஏரோது இறந்தபோது இயேசு இரண்டு வயதாக இருந்திருப் பார்
வந்தாரை வாழவைக்கும் எகிப்து.
அன்பர்களே! தொடக்கநூலில்
இஸ்ரவேலர் முதன்முதலில் எகிப்து சென்றனர்.கானான் தேசத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் காரணமாகவும், யாக்கோ பின் மகனான யோசேப்பு எகிப் தின் ஆளுநராக இருந்ததாலும் இஸ்ரவேலர்கள் எகிப்து சென்ற னர்.
கானான் தேசத்திலும் உலகெங் கிலும் ஏழு ஆண்டுகள் கடுமை யான பஞ்சம் உண்டானது. உணவு இல்லாமல் யாக்கோபின் குடும்பம் கஷ்டப்பட்டது.
தானியங்கள் வாங்குவதற்கு எகிப்தில் யோசேப்பு முன்கூட்டி யே சேமித்து வைத்திருந்த தானியங்கள் பற்றி கேள்விப் பட்டு, யாக்கோபு தன் மகன்களை எகிப்துக்கு அனுப்பினார்.
நைல் நதி (Nile River) பாய்ந்து வளம் சேர்க்கும் எகிப்து நாடு, பண்டைய காலம் தொட்டே அங்கு குடியேறியவர்களுக்கும் விவசாயத்திற்கும் வாழ்வளித்து வருவதால் "வந்தாரை வாழவைக்கும் எகிப்து" என்று அழைக்கப்படுகிறது.
முற்பிதாக்களின் தந்தையான
ஆபிரகாம் கானானில் ஏற்பட்ட
பஞ்சம் காரணமாக தன்குடும்பத் திற்கும், விலங்குகளுக்கும் தானியம் வாங்க எகிப்து சென்றார்(தொடக்க நூல் 12)
ஆபிரகாமின் வம்சத்தில் வந்த இயேசுவும் குழந்தையாக எகிப்து சென்றார். எகிப்து அனைவரையும் தன் பால் ஏற்று க் கொண்டது. அன்னியரையும்,
புலம்பெயர்ந்தோரையும் அகதி களையும் வரவேற்றது.
இது ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல; இஸ்ரவேல் ஜனங்களைப் பெருகச் செய் வதற்கும், அவர்களை ஒரு பெரிய இனமாக மாற்றுவதற்கு ம் கடவுள் செய்த முன் ஏற்பாடா கும்.உலக இரட்சகரை பாதுகாக் க எகிப்து கடவுளால் தேர்வு செய்யப்பட்டது.
இனியும் அவர் அந்நியரல்ல:
உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி.
உலக மக்கள் மீது தீராத அன்பு கொண்டதினால் தம் உயிரை தியாகம் செய்தார் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் யாராய் இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் அனைவரும் மீட்பு பெறுவார் என்பது இதன் முக்கி ய கருத்தாகும்.
அன்பர்களே!
ஆப்ரிக்க அகதிகள் ஐரோப்பா விற்கு ஆபத்தான கடல்வழியே செல்லுதல்உலகின் மிகப்பெரிய மனித உரிமை மற்றும் பாதுகாப் புப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
போர் மற்றும் வன்முறை காரண மாகவும் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள்,பொருளாதார நெருக்கடிகள், வறுமை, வேலை வாய்ப்பின்மை மற்றும் பஞ்சம்.
விவசாயம் பொய்த்துப் போகு தல் மற்றும் இயற்கை இடர் பாடுகள் காரணமாக மத்திய தரைக்கடல் வழியாக (Central Mediterranean Route): லிபியா மற்றும் துனிசியா போன்ற நாடுகளில் இருந்து இத்தாலி மற்றும் மால்டா செல்லும் மிகவும் ஆபத்தான பாதை வழி யாகவும், அட்லாண்டிக் வழி (Atlantic Route): ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளை (Canary Islands) அடைவதும் பாதுகாப்பற்ற மற்றும் அதிக எடை கொண்ட ரப்பர் படகுகள் கவிழ்ந்துஆயிரக்கணக்கானோர் கடலில் மூழ்கி இறக்கின்றனர்.
மனிதக் கடத்தல்காரர்கள்: அகதிகளிடம் அதிக பணம் பறித்து, அவர்களை மோசமான சூழ்நிலையில் ஆபத்தானபயண ங்களுக்கு உட்படுத்துகின்றனர். இதனால் சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள்:ஐரோப்பிய நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவதாலும், அகதிகளை ஏற்பதில் தொடர்ந்து அரசியல் குழப்பங்கள் நிலவு கின்றன.
ஐ.நா அகதிகள் முகமை UNHCR,
உலகளாவிய ரீதியில் அகதிகளு க்கு பாதுகாப்பு மற்றும் மறு வாழ்வு அளித்து இனியும் அந்நி யரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்று மனித மாண்புகள் சிறக்க அனை த்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட கடவுள் அருள்புரிவா ராக.ஆமேன்
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com
91/9965685511.
Comments
Post a Comment