இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும் (291)Women who trust God.: Faithful and Fearless. 2அரசர்கள்: 22: 11-20, ரோமர்: 16:1-17, திருப்பாடல்: 18:1-19, மத்தேயு: 15:21-28
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும்.Women who trust God.: Faithful and Fearless.
அன்பர்களே! இறை நம்பிக்கை யில் உள்ள பெண்கள் யார்? Who are the women of faith?"
இறைநம்பிக்கையுள்ள பெண் கள் தூய்மையான உள்ளம் கொண்டு, இறைவனின் கட்ட ளைகளைப் பின்பற்றி நடப்பவ ர்கள். அவர்கள் உண்மை பேசு தல், பொறுமை காத்தல், மற்ற வர்களுக்கு உதவுதல் மற்றும் அடக்கமாக வாழுதல் போன்ற நற்பண்புகளைக் கொண்டு திகழ்கிறவர்களே இறைநம்பிக் கையுள்ள பெண்கள்.
திருவள்ளுவர் கூறும் இறை நம்பிக்கையுள்ள பெண்கள்:
அன்பர்களே! திருவள்ளுவர் கூறும்," தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" (அதிகாரம்: இல்வாழ்க்கை, குறள் 55) -அதாவது,தனக்கெனத் தனி தெய்வம் தொழாமல், தன் கணவனே தெய்வம் எனக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்து வாழும் பெண், மழை பெய்யச் சொன்னால் மழை பெய்யும் என்கிறாள். அவள் மனத்தால், சொல்லால், செயலா ல் தூய்மையாகவும் கற்புடனும் வாழுதல் பெண்ணின் முதன் மைக் குணமாகக் கூறப்பட்டுள் ளது. குடும்பத்திற்குத் தேவை யான நற்பண்புகளுடனும், அடக்கத்துடனும், கணவனுக்குத் தகுந்த துணையாகவும் விளங் குபவரே சிறந்த பெண் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
மார்ட்டின் லூதர்,:
கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத் தின் தந்தை மார்ட்டின் லூதர், ஆன்மீக ரீதியில் பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று நம்பினார். கடவுள் முன்னிலையில் பெண்களுக்கு ம் இரட்சிப்பைப் பெறும் உரிமை சமமாக உள்ளது என்றார்.
விசுவாசத்தின் மூலம் அனைவ ரும் கடவுளின் பார்வையில் சமம் என்ற கோட்பாட்டை லூதர் உருவாக்கினார்.அதே நேரத்தில், சமுதாயத்தில் கணவரே தலை வராக இருக்க வேண்டும் என்ற பாரம்பரியக் கருத்துகளையும் அவர் ஆதரித்தார்
ஜான் கால்வியின் பார்வை யில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள்:
அன்பர்களே! சீர்திருத்தத் திருச் சபை சீர்திருத்தவாதியான ஜான் கால்வின் (John Calvin) பார்வை யில்,ஆன்மீக ரீதியாகவும் கடவு ளின் தன்மைகளைப் பிரதிபலிப் பதிலும் பெண்களும் ஆண்களு ம் சமமானவர்கள் என்று கால்வி ன் நம்பினார்.தாய்மையையும், இல்லறப் பணிகளையும், கணவ ருக்கு அடங்கி வாழ்வதையும் ஒரு பெண் கடவுளுக்குச் செய்யு ம் புனிதமான சேவையாக அவர்வலியுறுத்தினார்.திருச்சபையில் பெண்கள் போதிக்க வோ, அதிகாரம் செலுத்தவோ கூடாது என்ற பாரம்பரிய விவி லய விளக்கத்தைக் கடைப்பிடித் தார்.
நண்பர்களே திருவள்ளுவர், மார்ட்டின லூதர்,ஜான் கால்வின் இவர்கள் மூவரின் கருத்துக்க ளில் இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் என்பவர்கள் இல்லற வாழ்வில் சிறப்பாக வாழ்வதை யே குறிப்பிடுகின்றனர்.
பழைய ஏற்பாட்டில் இறை நம்பிக்கை கொண்ட பெண் கள்:Women of faith in the Old Testament:
அன்பர்களே!பழைய ஏற்பாட்டில் இறை நம்பிக்கைகொண்ட
பெண்கள் வரிசையில்;
1.தெபோராள்(நீதிதலைவர்கள்:4.)
இஸ்ரவேலின் ஒரே பெண் நீதி பதியாகவும், ஒரு இறைவாக்கி னவராகவும் இஸ்ரவேல் தேசத் தின் தாயாகவும் அறியப்பட்ட தெபோராள்தான் கடவுளின் வல்லமையாலும்ஞானத்தாலும், தன் மக்களுக்கு நீதியை நிலை நாட்டினார்.
ஆட்சோரை (ஆட்சோர் பண்டைய கானான் நகரம். இது எரிகோ நகருக்கு அருகில் அமைந்திருந் த ஒரு வரலாற்று மற்றும் விவிலி ய நகரமாகும். யோசுவா இந்நக ரை வெற்றிக் கொண்டார்) ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் இஸ்ரேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் செய்ததால் அவனிடம் ஒப்ப டைத்தார். அவனுடைய படைத்த லைவன் சீசரா அரோசத்கோயி மில் வாழ்ந்து வந்தான்.
இஸ்ரவேலர்களை 20 ஆண்டு கள் கடுமையாக ஒடுக்கினான்,
ஒரு நாள், யாபினின் இராணு வத் தளபதியான சிசெராவை பாராக்கின்(இஸ்ரவேலின் இராணுவத் தளபதி மற்றும் தலைவர், நப்தலி கோத்திரத் தைச் சேர்ந்த கேதேஷ் நகரில் வசித்த அபினோகாமின் குமா ரன் ஆவார்).கைகளில் ஒப்படை ப்பதாகத் தேவன் தெபோராளி டம் கூறினார். ஆனால், பாராக் கிற்குத் தனியாக எதிரியை எதிர் கொள்ளத் தைரியம் இல்லாததா ல், தன்னுடன் வருமாறு தெபோ ராளைக் கேட்டுக்கொண்டார். தேவனுடைய பெலத்தினால், தெபோராள் பாராக்குடன் போர் க்களத்திற்குச் சென்று, போரில் வெற்றி பெற்றனர்.
கடவுள் மீது தெபோரா கொண்டி ருந்த நம்பிக்கை, தேவனுடைய சித்தத்தைச் செய்ய அவர்கள் இருவருக்கும் தேவையான தைரியத்தைக் கொடுத்தது.தேவ னுடைய பலமான பெண்ணின் கரங்களால் இஸ்ரவேலர் தங்கள் எதிரிகளை வென்றனர்.
2. எஸ்தர்:Esther: எஸ்தர்:2.
அன்பர்களே!இந்தியா தொட ங்கி எத்தியோப்பியாவரை இருந்த நூற்றிருபத்தேழு நாடுகளையும் ஆட்சி செய்த மன்னர் அகஸ்வேரின் காலத் தில், சூசான் அரண்மனையில் (சூசான் (சூசா) அரண்மனை தற்கால ஈரான் நாட்டின் தென் மேற்குப் பகுதியில், ஜாக்ரோஸ் மலை அடிவாரத்தில் உள்ள சூசா (Shush) நகரில் அமைந்துள்ளது. இது பழைய பாரசீகப் பேரரசின் முக்கிய தலைநகரங்களில் ஒன்றாகும்)
மொர்த்க்காய் என்னும் பெயர் கொண்ட யூதர் ஒருவர் இருந் தார்.
அவர் பென்யமினைச் சார்ந்த கீசின் மகனான சிமயியின் புதல்வரான யாயிரின் மைந்தர்; இந்தக் கீசு எருசலெமில் கைது செய்யப்பட்டு, பாபிலோன் மன்னன் நெபுகத்னேசரால் சிறைப்பிடிக்கப்பட்ட யூதாவின் அரசன் எக்கோனியாவுடன் நாடு கடத்தப்பட்டவர்களுள் ஒருவர்.
யூதத் தலைவர் மொர்தெகாய் ஆவார். இவர் "அதசா" என்ற மறு பெயர் கொண்ட எஸ்தர் ராணியின் உறவினரும் வளர்ப் புத் தந்தையும் ஆவார்.இவரின் தந்தை அபிகாயிலின்" .எஸ்தர் ஜெபத்திலும் தைரியத்திலும் வல்லமையுள்ள ஒரு பெண்.
அரசர் அகஸ்வேர் ஒரு புதிய அரசியைத் தேடிக்கொண்டிருந்த தால், அவள் மற்ற பல பெண்க ளுடன் அரண்மனைக்கு அழைத் துச் செல்லப்பட்டாள். எஸ்தர் அரசரின் நன்மதிப்பைப் பெற்று, அவருடைய மனைவியாகவும் பெர்சியாவின் அரசியாகவும் ஆனார்.
யூத மக்களை அழிக்குமாறு ஆமானும் (பாரசீகப் பேரரசின் முதன்மந்திரி ஆவார்.)அரசன் அகஸ்வேர் இட்ட கட்டளையைப் பற்றி எஸ்தர் மொர்தெகாய் மூலமாகக் கேள்விப்பட்டாள். முதலில் அதிர்ந்துபோன எஸ்தர், பின்னர் மூன்று நாட்கள் உண் ணா நோம்பு இருந்து ஜெபித் தாள்; தன்னுடன் அவ்வாறே செய்யுமாறு மற்றவர்களையும் கேட்டுக்கொண்டாள்.இது முடிந்த தும், சட்டத்திற்கு விரோதமாயி ருந்தாலும், நான் அரசனிடம் போவேன். நான் மரித்தால் மரிக் கட்டும்.” – என்றாள்.
இறுதியில், எஸ்தர் தைரியமா கத் தனது யூத அடையாளத்தை அரசர் அகஸ்வேரிடம் வெளிப் படுத்தி, யூதர்களைக் கொல்ல ஆமான் தீட்டிய தீய சதியையும் அம்பலப்படுத்தினாள். கடவுள், யூத மக்களை அவர்களுடைய எதிரியிடமிருந்து காப்பாற்ற எஸ்தரைப் பயன்படுத்தினார்.
3.ரூத் Ruth: 1.
அன்பர்களே! திருவிவலியத்தில்
அசைக்க முடியாத விசுவாசமு ள்ள ஒரு வலிமையான மோவா பியப் பெண் ரூத் ஆவார்கள் (விவிலியத்தின படி, லோத்தின் மூத்த மகளின் மகன் பெண் ரூத் ஆவார்கள் மோவாபியர் தற்கால ஜோர்தான் நாட்டின் சாக் கடல் Dead Sea கிழக்குக் கரையில் வாழ்ந்த ஒரு பண்டை ய செமிடிக் இன மக்கள் ஆவர்.)
ரூத் அவர்கள் யூதர்களின் மூதா தையர்களில் ஒருவராகவும், தாவீது ராஜாவின் பாட்டியாக வும் திருவிவிலியத்தில் குறிப்பி டப்படுகிறார்.
ரூத்தின்மாமியார் நகோமி. இவள் தன் கணவன் எலிமலேக் மற்றும் இரண்டு மகன்களையும் மக்லோன், கிலியோனை இழந்த தால் கசப்புற்றிருந்தாள். ரூத் தன் கணவனை (மக்லோன்) இழந்த பிறகு தன் சொந்த ஊர்
களுக்கு திரும்பி போக நகோமி கூறினாள் ஆனால், ரூத் போகா மல்,, "உம்மோடு வராமல் உம்மை விட்டுப் பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண் டாம். நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல் லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடை ய தெய்வமே எனக்கும் தெய் வம். என உறுதியாக, தன் மாமி யார் நகோமியுடன் இருந்தாள்.
நகோமியின் பக்கத்தில் இருந்து, தங்கள் குடும்பத்தைப் பராமரி த்து அவளைக் கவனித்துக் கொண்டாள். போவாஸின் (போவாஸ் (Boaz), பெத்லெகேமைச் சேர்ந்த ஒரு செல்வந்தரும் நில உரிமையாள ரும் ஆவார். இவர் மோவாபியப் பெண்ணான ரூத்தைத் திரும ணம் செய்து கொண்டார். இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் தாவீது அரசரின் தாத்தாவாக இவர் இடம் பெற்று ள்ளார்.)
வயல்களில் மீதமிருந்த தானிய ங்களைச் சேகரிப்பதன் மூலம் அவள் அதைச் செய்தாள். அதற்குப் பதிலாக, கடவுள் அவ ளுக்குத் தேவனுக்குப் பயப்படு கிற கணவனையும் (போவாஸ்), ஒரு பிள்ளையையும், தாவீது ராஜா மற்றும் ராஜாக்களுக்கெ ல்லாம் ராஜாவான இயேசுவின் குடும்ப வம்சத்தில் சேரும் கௌரவத்தையும் அருளினார்!ரூத்தின் தன்னலமற்ற தன்மை யையும் விசுவாசத்தையும் தேவன் கண்டார். திருவிவலியத்தில் உள்ள ஒரு வலிமையான விசுவாசப் பெண் ணுக்கு அவளே சிறந்த எடுத்துக் காட்டு
4.அன்னாள் (Hannah) 1 சாமுவேல் 2
அன்பர்களே,அன்னாள் (Hannah) இவர் எல்கானா (லேவி கோத் திரத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த ராமாவில் வசித்து வந்தார்) என்பவரின் மனைவி யாவார். நீண்ட காலம் குழந்தை இல்லாமல் மனக்கவ லையில் இருந்த அவர், சீலோவிலுள்ள Shiloh தேவால யத்தில் அழுது உருக்கமாக மனம் தளராமல், தேவ சமூகத் தில் கண்ணீரோடு ஜெபித்து ஒரு மகனை வேண்டினார். . கடவுள் இவருடைய ஜெபத்தைக் கேட்டு ஒரு ஆண் குழந்தையை வழங்கினார். அதற்கு "சாமுவேல்" என்று பெயரிட்டார். சாமுவேல் என்றாள் “தேவன் கேட்டார்” என்பதாகும்.தான் நேர்ந்து கொண்டபடி, அந்தக் குழந்தையைத் தேவாலயப் பணியில்ஈடுபடுத்த ஏலி என்ற தலைமை குருவின் அருகில் விட்டுவிட்டார்
இவரே இறைவாக்கினர் சாமு வேல், இஸ்ரவேல் மக்களின் கடைசி நீதிபதியும் முக்கியத் தீர்க்கதரிசியும் ஆவார். இஸ்ரவேலில் அரச ஆட்சியைத் தொடங்க முக்கியக் காரணமாக இருந்த இவர், சவுல் மற்றும் தாவீது ஆகிய இருவரையும் அரசர்களாகத் திருமுழுக்கு செய்தார்.அன்னாவின் இறை நம்பிக்கையுள்ள இறைவேண்
டல், சாமுவேல் என்ற இறைவாக் கினரை கடவுள் கொடுத்தார்.
புதிய ஏற்பாட்டில் இறை நம்பிக்கை கொண்ட பெண் கள்:Women of faith in the New Testament:
அன்பர்களே!
1.மேரி – ஒரு வலிமையான தாய் : இயேசுவின் தாயாகிய அன்னை மரியாள் ஒரு வலிமை யான தாய் ஆவாள்.சவால்களை எதிர்கொள்ளும் தைரியம், அளவற்ற அன்பு மற்றும் அசராத நம்பிக்கை ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாகத் திகழ்கி றார்.இளம் வயதிலேயே இறை வனின் திட்டத்தை ஏற்றுக் கொண்டார், தேவதூதர் வார்த் தையை ஏற்று, "உம் சொற்படி யே எனக்கு நிகழட்டும்" என்று ஒப்புதல் அளித்ததால் மரியா இறைமகனை கருத்தாங்கும் பேறுபெற்றார்.கணவர் யோசேப் பின் மறைவுக்குப் பின் தனித்து நின்று மகனை வளர்த்தார்
தன் மகனின் சிலுவை மரண த்தை நேரில் கண்டு தாங்க முடியாத துயரத்தை எதிர்கொண் டார்.உயிர்த்த கிறித்துவின்
வல்லமையை பெற்றாள்.
திருச்சபை பிறந்த பெந்தே கோஸ்து நாளில் அன்னை மரியா, சீடர்களுடன் இணைந்து ஒருமனதாக செபத்தில் உறுதியாய் நிலைத்திருந்தார்.
திருச்சபையின் மீது தூய ஆவி இறங்கி வரக் காரணமாகத் தன் செபத்தால் உதவினார்.
திருச்சபையின் தொடக்கத்தி ற்குக் காரணமாக இருந்ததால்
இவர் திருச்சபையின் தாய்
என கருதப்படுகிறார்.
2 மரிய மகதலேனா.மாற்கு16.
அன்பர்களே! புனித மகதலேனா மரியாள் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக முக்கியமான பெண் சீடர் ஆவார். கலிலேயா வில் இயேசுவைப் பின்பற்றி னார்.ஏழு தீய ஆவிகள் நீங்கப் பெற்று இயேசுவால் குணமாக் கப்பட்டார்.சிலுவை மரணத்தின் போது உடன் இருந்தார்.பயந்து ஓடாமல் கல்லறை வரை தொடர்ந்தார்.உயிர்த்தெழுந்த இயேசுவை முதன்முதலில் பார்த்தார்.மற்ற சீடர்களுக்கு நற்செய்தியை முதலில் அறிவி த்தார்
"தூதர்களுக்குத் தூதுவர்" என அழைக்கப்படுகிறார்.உயிர்த்த ஆண்டவரின் முதல் சாட்சியாக மாறினார்.அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாள மாகத் திகழ்கிறார்.
3 லிதியா – ஒரு வலிமையான இறை நம்பிக்கையுள்ள பணியாளர்.Lydia of Thyatira, திருதூதர் பணிகள்16.
அன்பர்களே! ஐரோப்பாவில் முதன்முதலில் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணி ஆவார். இவர் தியத்தீரா நகரைச் சேர்ந்தவர்.
பிலிப்பி நகரில் தங்கியிருந்த போது பவுல் மூலம் இறைவார்த் தையைக் கேட்டு திருமுழுக்கு பெற்றார்.லிதியா ஊதா நிறத் துணிகளை வியாபாரம் செய்த ஒரு வெற்றிகரமான வணிகப் பெண்மணி ஆவார்.அவருடைய வீடு ஆரம்பகால திருச்சபையின் ஒன்றுகூடும் இடமாக இருந்தது.
திருத்தூதர் பவுலுக்கும் அவருடைய தோழர்களுக்கும் விருந்தோம்பல் அளித்து லிதியா மிகுந்த தாராள குணத்தைக் காட்டினார்.
மேற்கண்ட இறை நம்பிக்கை யுள்ள 7 பெண்கள். பற்றுமையு டனும் ,, பயமறியாமலும் செய லாற்றிய நாம் காண்கிறோம்.
1. குல்தா Huldah பற்றுமை யுள்ள இறைவாக்கினள். Huldah was a Faithful Prophetess
2.அரசர்கள் 22:11-20.
அன்பர்களே! இறைவாக்கினள் குல்தா (Huldah) யூதா நாட்டை ஆண்ட யோசியா மன்னரின் காலத்தில் எருசலேமில் வாழ்ந்த வர், இவர் கடவுளுடையட வார்த் தையைத் துணிச்சலாக அறிவித் தவர்.இவரின் கணவர் சல்லூம் (ஷாத்தூம்) ஆவார். இவர் அரண்மனை வஸ்திரங்களைப் பராமரிப்பவராக இருந்தார்.
யோசியா ராஜா தேவாலயத் தைப் பழுதுபார்க்கும் போது, தொலைந்துபோன தேவனுடைய வார்த்தையான மோசேயின் சட்டநூல் (நியாயப்பிரமாணப் புஸ்தகம்)கண்டெடுக்கப்பட்டது
அதை தலைமை குரு இல்க் கியா, அரன்மனை எழுத்தன் சாப்பானிபம் கொடுத்தான். சாப்பான் ஆந்த சட்டநூலை அவன் யோசியா அரசரிடம், "குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்"என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.
சட்டநூலில் உள்ள எச்சரிப்பு வார்த்தைகளைக் கேட்டு யோசி யா ராஜா பயந்து தம் ஆடைக ளைக் கிழித்துக்கொண்டார்.
எச்சரிப்பு வார்த்தைகளைக் கேட்டு யோசியா ராஜா பயந்து மனம் திரும்பினார். தேவன் அந்தத் தேசத்திற்குக் கட்டளையி ட் டது என்ன என்பதை அறிய தன் அதிகாரிகளை இறைவாக் கிளனி குல்தாளிடம் அனுப்
பினார்.
உல்தாளின் தீர்க்கதரிசனம்: தேசம் செய்த பாவத்தினால் தீமை வரும் என்றும், ஆனால் யோசியா ராஜா தன் மனதைத் தாழ்த்தி, தேவனுக்கு முன்பாக அழுததால், அந்த அழிவு யோசியாவின் காலத்தில் வராது, அவர் சமாதானத்தோடு அடக்கப்படுவார் என்றும் குல்தாள் இறைவனின் செய்தி யாகத் துணிச்சலாக உரைத்தார்.
இந்த உண்மையான மனந்திரும் புதல் யோசியா கடவுளுடைய வார்த்தையைக் கேட்டவுடன்அரச ன் கர்வம் கொள்ளாமல், மிகுந்த பணிவுடன் தன் இதயத்தைத் தாழ்த்தினான்.
கடவுளின் வார்த்தைக்குச் செவி சாய்த்து, பயபக்தியோடு நடப் பவர்களின் வேண்டுதல்களைக் கடவுள் கேட்கிறார்.
2. நம்பிக்கையினால் இறைவ னுக்கு ஏற்புடையவரே வாழ்வு பெறுவர்.ரோமர்: 16:1-17
நண்பர்களே திருச்சபை வரலாற்றில் பெண் ஊழியர்கள் திருச்சபையில் போதிப்பதையும், தலைமை பொறுப்பில் இருப்ப தை ஏற்றுக்கொள்ளாத காலத் தில் திருத்தூதர் பவுல் அடிகளார் ரோமாபுரி சபைக்கு எழுதிய நிருபத்தின் இறுதிப் பகுதியில் பல பெண் ஊழியர்களை பாராட்டி எழுதி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆதித் திருச் சபையின் வளர்ச்சியில் பெண் கள் ஆற்றிய கடினமான உழைப் புக்கும் பணிவிடைக்கும் இப்ப குதி ஒரு சான்றாகும்.
இதில் பவுல், செங்கிரே (Cenchrea) சபையின் ஊழியக் காரியான பெயிபாவை Phebe அறிமுகப்படுத்துகிறார், இவர்
பல விசுவாசிகளுக்குப் பல வகைகளில் உதவி செய்தவர்
பவுல் எழுதிய ரோமர் திருமுக த்தை ரோமாபுரி திருச்சபைக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சேர் த்து, அதை வாசித்து விளக்கக் கூடிய நம்பகமான தூதுவரா கச் செயல்பட்டார்.
ரோமாபுரியில் உள்ள விசுவாசி கள் இவரை அன்போடு ஏற்றுக் கொள்ளவும் கவனித்துக் கொள் ளவும் வேண்டிக் கொள்கிறார்.
ஆரம்பகால கிறிஸ்தவ திருச் சபைகளில் பெண்கள் வகித்த முக்கிய பொறுப்புக்கும், அவர் களின் சிறந்த தொண்டுக்கும் பெயிபாவை ஒரு சிறந்த உதார ணமாகத் திகழ்கிறார்.
கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலைக்காரரான பிரிஸ்கில்லாவுக்கும் Priscilla ஆக்கில்லாவுக்கும் Aquila வாழ்த்துகளைச் சொல்லுங்கள்" என்பதாகும். இவர்கள் திருத்தூ தர் பவுலுடன் இணைந்து நற்செய்தி பணியில் ஈடுபட்ட கணவன்-மனைவி ஆவார்.
பவுலின் நற்செய்திப் பணிக்காக இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தவர்கள். இவர்க ளின் வீட்டில் விசுவாசிகள் கூடி ஜெபித்த சபை இயங்கியது.
எப்பனெத்து: Epaenetus அகா யா Achaia பகுதியில் கிறிஸ்து வை ஆசியாவில் முதலில் ஏற்றுக்கொண்ட (முதற்பலனா ன) பிரியமான எப்பனெத்து இவர் கொலோசெய் நகரைச் சேர்ந்தவன். பவுல் தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறார்.
உழைப்பாளி மரியாள் ரோமா புரி விசுவாசிகளுக்குச் செய்த நன்மைகளையும், அவரின் தொண்டையும் பவுல் நினைவு கூறுகிறார்.
அந்துரோனிக்கு மற்றும் ஜூனியா: பவுலுடன் கூடச் சிறையில் இருந்த யூதர்கள் மற் றும் ஆரம்பகால விசுவாசிகள்.
இவர்கள் திருதூதர்கள் மத்தி யில் மிகவும் அறியப்பட்டவர்கள்.
பவுல் கிறிஸ்துவை அறிவதற்கு முன்பே இவர்கள் விசுவாசிக ளாக இருந்தனர் பவுலின் உறவினர்கள்.
அம்பிலியா (Ampliatus/Amplias): கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது கொண்ட அன்பினாலேயும், விசுவாசத்தினாலேயும் பவுலால் அன்புடன் குறிப்பிடப்படும் ரோமாபுரி சபையைச் சேர்ந்த ஒரு விசுவாசி.
உர்பானு: இவர் கிறிஸ்துவ பணிகளில் பவுலுடன் இணை ந்து உழைத்தவர்.
ஸ்தாக்கு: பவுலினால் மிகவும் அன்பாக நேசிக்கப்பட்ட ஒரு விசுவாசி.திருத்தூதர் பவுல் ரோமாபுரியில் உள்ள விசுவா சிகளுக்கு அனுப்பிய வாழ்த்து க்களின் ஒரு பகுதியாக, சோத னைகளில் நிலைத்து நின்று கிறிஸ்துவினால் அங்கீகரிக்கப் பட்ட அப்பெல்லேயையும், அரிஸ்தொபூலுவின் குடும்பத் தாரையும் அன்போடு நலம் விசாரிக்கிறார்.
ஏரோதியோன்: பவுல் இவரை தனது உறவினன் அல்லது இனம் சார்ந்தவர் என்று குறிப்பிடுகிறார்.
நற்சிசுவின் வீட்டார்: நற்சிசு வின் (Narcissus) குடும்பத்தாரில் அல்லது வீட்டில் வேலை செய்து கர்த்தராகிய இயேசுவை விசுவா சித்த விசுவாசிகளை பவுல் வாழ்த்துகிறார்.
ரோமாபுரியில் உள்ள சபையா ருக்கு பவுல் தனிப்பட்ட முறை யில் பல விசுவாசிகளின் பெயர்களைச் சொல்லி தன் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பது,.ஆதி திருச்சபை யில் கிறிஸ்தவர்கள் ஒருவருக் கொருவர் கொண்டிருந்த ஒற்றுமையையும் அன்பையும் இது காட்டுகிறது.விசுவாசிகள் அனைவரும் பரிசுத்த முத்தத் தோடு ஒரு வரையொருவர் வாழ்த்த வேண்டும் என்கிறார். சபை உறுப்பினர்களின் உழை ப்பைப் பவுல் தனிப்பட்ட முறை யில் பாராட்டி, அன்பை வெளிப்ப டுத்துகிறார்
அன்பர்களே!
ரோமர் 16:1-17 வரையிலான பகுதியில் 9 முதல் 10 பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். பவுல் தன் இறுதி வாழ்த்துக்களில் பெயர்சொல்லி அழைத்தவர் களில் குறைந்தது 90% தெளி வாகப் பெண்கள் மற்றும் சிலுவைச் சேவையில் தீவிர மாகப் பங்கெடுத்தவர்கள் ஆவர்.
3 இயேசுவின் இரக்கமும் எல்லையற்ற அன்பும்.மத்தேயு 15:21-28.
அன்பர்களே!இயேசு யூதர்களின் எல்லைகளை விட்டு விலகி, தீரு மற்றும் சீதோன் (Tyre and Sidon) பகுதிக்குச் செல்கிறார். இது நற்செய்தி யூதர்களுக்கு மட்டு மல்லாமல், புற இனத்தாருக்கும் உரியது என்பதற்கான முன்ன டையாகும்.
தன் மகளுக்காகத் துடிக்கும் ஒரு கானானியப் பெண்இயேசு வை நோக்கி அடக்கத்தோடு உதவி கேட்கிறாள். அவளது விசுவாசம் தடைகளையும் சோதனைகளையும் தாண்டி நிற்கிறது.
இயேசு "பிள்ளைகளின் அப்பத் தை எடுத்து நாய்க்குட்டிகளுக் குப் போடுவது நல்லதல்ல"என்று கூறுகிறார்.இங்கு பயன்படுத் தப்பட்ட சொல் பெரிய காட்டு நாய்களை குறிக்காமல், வீடுக ளில் வளர்க்கப்படும் சிறிய செல்லப் பிராணிகளை குறிக் கும் மென்மையான சொல்லா கும்.உடனே அப்பெண், "ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமை யாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே" என்றார்.
அவளது தாழ்மையும் தளராத விசுவாசமும் இயேசுவை வியக் க வைக்கிறது. இயேசு அவளது விசுவாசத்தைப் பாராட்டி, அவ ளது மகளை உடனே குணமாக் குகிறார்.
அன்பர்களே! எத்தடைகள் வந்தா லும் இறை வேண்டுதலில் சோர் வடையாமல் பற்றிக்கொள்ள வேண்டும்.கடவுளிடம் நம் தேவைகளைக் கேட்கும் போது தாழ்மையும் பெருமையும் அற்ற மனதுடன் இருக்க வேண் டும். கடவுளின் அன்பு யூதர்க ளுக்கு மட்டும் சொந்த மானத ல்ல, விசுவாசத்தோடு வரும் அனைவருக்கும் உரியது என்ப தை இப்பகுதி கற்பிக்கிறது.
கடவுளின் இரக்கம் அனைவருக் கும் உரியது என்ற உலகளாவிய உண்மையை வெளிப்படுத்து கிறது.
இறுதியாக,
அன்பர்களே! இயேசுவின் காலத் தில் தொடங்கி, இன்றுவரை திருச்சபையின் வளர்ச்சிக்கும் இறைவார்த்தை பகிர்வதற்கும் பெண்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டும்படி உள்ளது. பெண்கள்தான் ஆலயங்களில் அதிகமாக கூடுகிறார்கள் கடவு ளுக்கு உற்சாகமாக கொடுக்கி றார்கள் ஆர்வமாக இருக்கிறார் கள் என்பது மிக உண்மை. இதனால்தான், இயேசு உயிர்த் தெழுந்த நற்செய்தியை முதன் முதலில் மாகதமரியா போன்ற பெண்களுக்குத்தான் அறிவித் தார்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com

Comments
Post a Comment