குடியரசு: நீதியில் வேர்கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல் .(292) Democracy: Rooted in Justice, Guided by Faith விடுதலைப்பயணம்.15:1-8, திருத்தூதர் பணிகள் 15:1-8, திருபாபாடல் 69:30-36, யோவான் 8:31-36

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"குடியரசு:நீதியில் வேர் கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல்."
அன்பர்களே குடியரசு என்பது குறித்து முன்னாள் அமெரிக்கா வின் அதிபர் ஆபிரகாம்லிங் கன் 1863-ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரையில்,(Gettysburg Address in 1863) ஜனநாயகத்தை "மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம்" என வரையறுத்தார். இந்த எளிய சொற்றொடரின் பொருள் என்ன வென்றால், அரசின் அதிகாரம் குடிமக்களிடமே உள்ளது; அவர் கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைவர் களால் சேவை செய்யப்படுகிறா ர்கள்.சொற்றொடரின் முக்கிய அர்த்தங்கள் மக்களிடமிருந்து: அரசாங்கம் தனது அதிகாரத்தை யும் இருப்பையும் குடிமக்களிடமி ருந்தே பெறுகிறது. அதிகாரத்தின் உண்மையான ஆதாரம் பொதுமக்களே தவிர, ஒரு மன்னனோ அல்லது ஒரு சிறிய ஆட்சியாளர் குழுவோ அல்ல.மக்களால்: குடிமக்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைவர்க ளைத் தேர்ந்தெடுக்க வாக்களி ப்பதுடன், நாட்டை வழிநடத்தும் விதிகளை உருவாக்கவும் உதவு கிறார்கள். அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் பொதுமக்க ளுக்கு உதவுவதே ஆகும். தலைவர்கள் தங்தங்களுக்காக மட்டும் அல்லாமல், அனைத்துக் குடிமக்களின் நல்வாழ்வு, பாது காப்பு மற்றும் நீதிக்காகப் பாடு பட வேண்டும். 
குடியரசு "demos" என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. டிமோஸ் என்றால் "மக்கள்" என்பதாகும்."kratos" "கிரோடஸ்" என்றால் "அதிகாரம்" என்பதா கும்.
அரசியலமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கர் குடியரசு (அ)ஜனநாயகம் என்பது," சமூக சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதே உண்மையான ஜனநாயகம்"
என்றார்.
குடியரசு நாள்: இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்த நாளான ஜன வரி 26-ஆம் தேதியை ஆண்டு தோறும் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.
விவிலய அடிப்படையில் குடியரசு; The Biblical based Democracy:
அன்பர்களே! 
தொடக்க நூலில், படைப்பில் குடியரசு என்பது நேரடி அரசிய ல் வடிவமாகக் கூறப்படவில்லை. மாறாக, கடவுள் மனிதனைத் தன் சாயலாகப் படைத்ததன் மூலம் மனித சமத்துவம், சுதந்திரம் மற்றும் பொறுப்புணர் ஆகிய அடிப்படை ஜனநாயகக் கூறுக ளுக்கு விவலியத்தில் அடித்தள மிடப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது.படைப்பின் சமத்து வம் ஒரே சாயலாக ஆண், பெண் இருவரும் கடவுளின் சாயலா கச் சமமாகப் படைக்கப்பட்டனர். சாதி, இன வேறுபாடின்றி மனித குலம் அனைவரும் ஒரே மூலத் திலிருந்து வந்தவர்கள்.  ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளார்ந்த மதிப்பு உண்டு. பொறுப்பும் அதிகாரப் பகிர்வும் பூமியை ஆளுகின்ற மனிதர்கள் இயற்கையைப் பராமரிக்கவும் நிர்வகிக்கவும் அதிகாரம் பெற்ற னர்.சுதந்திரச் செயலாக விளக்க ளிக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசிக்கும் அல்லது தவிர்க்கும் சுதந்திரம் மனிதனுக்கு வழங்க ப்பட்டது. அவரவர் செயல்களு க்குத் தாமே பொறுப்பாளிகள் என்ற நியாயம் நீதி படைப்பி லேயே உள்ளது.
"கடவுள் தம் உருவில் மானிட ரைப் படைத்தார்; கடவுளின் உரு விலேயே அவர்களைப் படைத் தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். 
கடவுள் அவர்களுக்கு ஆசி வழங் கி, "பலுகிப் பெருகி மண்ணுல கை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப்பறவை கள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளு ங்கள்" என்றார். (தொடக்க நூல் 1:27,28)படைப்பு அனைவரும் சமம் என்ற மக்களாட்சி கோட்பாட்டை வலியுறத்துகிறது.
1.மோசேயின் குடியரசு.The Republic of Moses. விடுதலை பயணம்: 15:1-8.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே குடியரசு என்பது மக்களுக்காக ஒரு நாடு இருக்க வேண்டும் அவர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்க  எகிப்தின் 430 ஆண்டு அடிமைதனத்திலி ருந்து மக்களைவிடுவிக்கிறார். அவர்களுக்காக தெரிந்து கொள் ளப்பட்ட கானான் நாட்டிற்கு கடவுளின் மனிதர் மோசே  தன் மக்களை வழிநடத்துகிறார் "ஒரு மக்களின் அடையாளமே ஒரு நாடு", மொழி,கலாச்சாரம் ஆகும்.கடவுள் தேர்ந்தெடுத்த நாட்டிற்கு பயணமாக செல் கின்ற பொழுது இந்தப் பகுதி ஒரு பாடலாக வருகிறது.
செங்கடலைக் கடந்து, எகிப்திய பார்வோனின் அடிமைத்தனத் திலிருந்து மீட்டப்பிறகு, மோசே யும் இஸ்ரவேல் மக்களும் பாடிய வெற்றிப் பாடல் இது. இது "கடலின் பாடல்" (Shirat ha-Yam) என்று அழைக்கப்படுகிறது. இது கடவுளின் வல்லமையையும், அவர் தம் மக்களை எவ்வாறு மீட்டார் என்பதையும் கொண்டா டுகிறது. நம் இந்திய நாடு விடுத லை பெற்ற பிறகு நமக்கென்று ஒரு தேசிய பாடலை அமைத் திருக்கிறோம் அது நம்முடைய விடுதலையை, நம் நாட்டுப்பற் றையும் கலாச்சாரத்தையும் தெரிவிக்கிறது அவ்வாறே இஸ்ரவேலர் கடவுள் கொடுத்த வெற்றியை பாடல் மூலம் கொண்டாடுகிறார்கள்.
கடவுள் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர்:God dwells in the mids of Praises.
இஸ்ரவேலர்கள் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல் அது விடுதலையை மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஒரு தருணம்
கர்த்தரைப் பாடுவேன், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்" என்று இஸ்ரவேலர்கள் பாடுகி றார்கள். இங்கு மனிதர்களின் பலம் அல்ல, கடவுளின் செயலே முதன்மையாகப் போற்றப்படு கிறது.
கடவுள் வெறும் வரலாற்று நாய கர் மட்டுமல்ல, அவர் தங்களின் தனிப்பட்ட "பெலனும், கீதமும், இரட்சிப்புமானவர்" என்று "ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல். அவரே என் விடுதலை; என் கடவுள். அவரை நான் புகழ்ந் தேத்துவேன். அவரே என் மூதாதையரின் கடவுள்; அவரை நான் ஏத்திப்போற்றுவேன்." 
கர்த்தரை "யுத்தத்தில் வல்ல வர்" (Warrior) என்று வர்ணிக் கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக் காக தீமைக்கு எதிராக கடவுளே நேரடியாகப் போரிடுகிறார் என்பதை இது காட்டுகிறது.
எகிப்திய ராணுவம் "கல்போல ஆழங்களில் அமிழ்ந்து போனது" என்று கவித்துவமாக கூறப்பட்டுள்ளது. பல தலை முறைகளாக இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்திய ஒரு வல்லரசு, கடவுளின் முன்னால் எவ்வளவு பலவீனமானது என்பதை இது உணர்த்துகிறது.
நம் இந்தியர்கள் 200 (1757 to 1947)  ஆண்டுகளாக ஆங்கிலேய ரிடம் அடிமைப் பட்டதை இங்கே நாம் நினைவு கூற வேண்டும்
படைத்தவரின் ஒரு சிறிய மூச்சுக்காற்றிற்கு முன்னால், பிரம்மாண்டமான கடலும் ஒரு சுவரைப் போல உறைந்து நின்றது. இது இயற்கையின் மீது கடவுளுக்கு இருக்கும் முழு அதிகாரத்தைக்காட்டுகிறது..
மோசேயின் குடியரசு நீதியில் வேர்கொண்டது.
Moses' Democracy or Republic is rooted in Justice.
அன்பர்களே! 
 மோசே காலை முதல் மாலை வரை தனியாகவே மக்களுக்கு நியாயந்தீர்த்து வந்தார்.
இதனால் மோசே எளிதில் சோர் வடைந்து போவார் என்று அவருடைய மாமனார் குடியருசு தலைவர்போல President எத்திரோ அவருக்கு ஆலோச னை கூறினார்.
எனவே, எளிய வழக்குகளை விசாரிக்க தகுதியான தலை வர்களை நியமிக்கவும், கடின மான வழக்குகளை மட்டும் தன்னிடம் கொண்டு வரவும் மோசேக்கு எத்திரோ ஆலோச னை கூறினார்.
தலைவர்களுக்கான தகுதிகள்,
திறமையுள்ளவர்களை தேர்வு செய்தார். தலைமைத்துவ பண்பு களும் திறமைகளும் கொண்ட ஆண்களை தேவனுக்குப் பயந்தவர்கள், உண்மையை நேசித்து, தேவனுக்கு பயந்து நடப்பவர்கள். லஞ்சத்தையும் அநியாயமான ஆதாயத்தையும் வெறுப்பவர்களை நிர்வாக  அமைப்பாக மோசே மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, அவர்களுக்குத் தலைவர்களை நியமித்தார்:
ஆயிரம்பேருக்கு அதிபதிகள்
நூறுபேருக்கு அதிபதிகள்
ஐம்பதுபேருக்கு அதிபதிகள்
பத்துபேருக்கு அதிபதிகள்
சாதாரணப் பிரச்சினைகள் அந்தந்த மட்டத்திலேயே தீர்க் கப்பட்டன. பெரிய காரியங்கள் மட்டும் மோசேயிடம் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு, மோசே வின் ஆட்சி நீதியில் வேர் கொண்டு, கடவுள் நம்பிக்கை யில் மக்களை வளர்த்தெடுத்தார்
2.திருச்சபை ஒரு குடியரசா?
Is Church a Republic?
திருத்தூதர் பணிகள் 15:1-8, 
அன்பர்களே!
திருச்சபை அரசியல் சட்டத்தின் படி இயங்கும் குடியரசு அல்ல. இதற்கான உறுதி செய்யப்பட்ட சட்டங்களால் நிர்வகிக்கப்படு கிறது. ஆனால் இது இறையர சை நிலைநிறுத்தும் மக்களின் திருஅவையாகும். இயேசு கிறிஸ்துவை தலைவராக கொண்ட ஒரு ஆன்மீக சமூகமா கும். ஆண் பெண் என்ற அனை த்து விசுவாசிகளும் சமமான வர்கள். சபை பொறுப்பாளர்கள் மக்களாட்சி முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்
அன்பர்களே! யூதேயாவிலிருந்து வந்த சில  விசுவாசிகள் பரிசே யருடைய சமயப்பிரிவைச் சேர்ந்த விசுவாசிகள் என்று அடையாளம் காணப்பட்ட அவர் கள் அந்தியோகியாவுக்கு வந்து, "நீங்கள் மோசேயின் முறைமையின்படியே விருத்த சேதனம் பண்ணப்படாவிட்டா ல் இரட்சிக்கப்படமாட்டீர்கள்" என்று சகோதரர்களுக்குப் போதி த்தார்கள்.புறவினத்து விசுவா சிகள் விருத்தசேதனம் பண்ணி க்கொள்ள வேண்டும் என்றும், மோசேயின் நியாயப்பிரமாண த்தைக் கைக்கொள்ளக் கட்டளை யிட வேண்டும் என்றும் அவர்கள் வாதாடினார்கள்.
திருதூதர்கள் பவுலுக்கும் பர்னபாவுக்கும் ( ஆளும் கட்சி) யூதேயாவிலிருந்து வந்தவர்க ளுக்கும் (எதிர்கட்சி)  இடையே கருத்து வேறுபாடு உண்டானது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போல திருச்சபையான நாடாளுமன்ற த்தில் இந்த விவாதம் எழுந்தது இச்சிக்கலைத் தீர்க்க அவர்கள் எருசலேம் ( டெல்லி தலைவர்க ளிடம் செல்வது போல்) திருத்தூதர்களிடம் சென்றனர். அங்கு. தலைமை திருதூதர்     பேதுரு (Prime Minister)  இயேசுவின் அருளால் யூத-பிற இன வேறுபாடுயின்றி அனைவரும் மீட்கப்படுகின்ற னர் என்றார்.கடவுள் உள்ளங்க ளை அறிந்தவர் என்பதால், யூதர் களைப் போலவே பிற இனத்தவ ருக்கும் தூய ஆவியைக் கொடு த்தார் எனப் பேதுரு எடுத்துரைத் தார்.
யூத சடங்குகளைத் தாண்டி இயேசுவின் அருள் மற்றும் நம்பிக்கை மூலமே மீட்பு கிடைக் கும் என்ற உண்மை உறுதிப்படு த்தப்பட்டது. 
3 நாம் விடுதலை அடைந் தோமா? Are we Liberated?
 யோவான் நற்செய்தி 8:31-36.
அன்பர்களே!
ஒரு நாட்டின் சிறந்த குடிமகன் என்பவர், சட்டங்களை மதித்து, வரிகளைச் செலுத்தி, மற்றவர் களுக்கு உதவி செய்து, தன் சமூகத்தின் முன்னேற்றத்தி ற்காக உழைக்கும் பொறுப்புள்ள மற்றும் சுறுசுறுப்பான நபரா வார். அவர்கள் நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவாக தங்களின் தனிப்பட்ட உரிமை களையும் குடிமைசார் கடமைக ளையும் சமநிலையில் கொண்டு செல்கிறார்கள்.
அவ்வாறே, திருச்சபையின் விசு
வாசிகள்,நாட்டின், மற்றும் திருச் சபையின் சட்டங்களை மதித்து, காணிக்கை  செலுத்தி, மற்றவர் களுக்கு உதவி செய்து, தன் திருச்சபையின் முன்னேற்றத்தி ற்காக உழைக்கும் பொறுப்புள்ள மற்றும் சுறுசுறுப்பான விசுவாசி யாவார். அவர்கள் நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்படுபவர்.
அவ்வாறே. இயேசுவின் சீடர்
என்பவர், ஆண்டவரின். வார்த் தைகளை நம்பி, தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மை யில் அவருக்கு சீடர்களாய் இருப்பீர்கள்; ஆண்டவருடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடக்கின்றவர்களே ஆண்டவரு க்கு சீடராகக இருக்க முடியும்.
இயேசுவாகிய உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். என்றால்,அந்த உண்மை நமக்கு விடுதலை அளிக்கும்". இறை வனின் வார்த்தையாகிய உண் மை மனிதனைப் பாவத்திலிருந் தும் அறியாமையிலிருந்தும் விடுவிக்கின்றது. நம்முடைய உடல் மரணத்துக்குரியது பாவத்தின் கூலி மரணம் யார் நம்மை இந்த மரண சரீரத்தில் இருந்து மீட்க முடியும்?
இயேசுவாகிய குமாரன் நம்மை விடுதலையாக்கினால் மெய்யா கவே நாம் விடுதலையடைவோ ம்”. விடுதலை என்றால்,
அடிமைத்தனம் என்ற பாவத்தி லிருந்து விடுதலை பெறுவதே மெய்யான விடுதலையாகும்.
யூதர்கள் யாருக்கும் அடிமை யாக இருந்ததில்லையா?Were the Jews never slaves to anyone?
அன்பர்களே! யூதர்கள் ஆண்ட வரைப்பார்த்து, நாங்கள் ஆபிர காமின் வழிமரபினர் ஆயிற்றே!" 
உங்களுக்கு விடுதலை கிடைக் கும"; என நீர் எப்படிச் சொல்ல லாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை என்று கேட்டனர்.
யூதர்கள் வரலாற்றை மறந்து விட்டார்கள். அவர்களின் கூற்று வரலாற்று ரீதியாக முரண்பா டானது. ஏனெனில் அவர்கள் எகிப்து, பாபிலோன் ஆகிய நாடுகளின் அடிமைத்தனத்தை யும், அன்றைய ரோம பேரரசின் ஆதிக்கத்தையும் முற்றிலும் மறந்து பேசினார்கள்.அவர்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்ததை உணராமல், வெறும் வம்சவழியை மட்டுமே நம்பியிரு ந்தனர்
ஆபிரகாமின் வழித்தோன்றலாக இருப்பது மட்டுமே கடவுளுக்கு முன்பாகத் தங்களுக்கு நற்சான்றை அளிக்கும் என்று அவர்கள் தவறாக நினைத்தா ர்கள்.ஒருவருடைய முன்னோர் கள் பக்திமான்களாக இருந்த தால் மட்டுமே ஒருவருக்கு இரட் சிப்பு கிடைத்துவிடாது; கிறிஸ்துவிடம் தனிப்பட்ட விசுவாசம் வைப்பது அவசியம்.
சத்தியமாகிய இயேசுவை ஏற்றா ல் மட்டுமே நமக்கு விடுதலை  உண்டு.
 இறுதியாக,
நீதி மற்றும் நம்பிக்கை ஆகிய வை ஒரு வெற்றிகரமான குடியரசின் அல்லது ஜனநாயக நாட்டின் இரு முக்கிய தூண்கள் ஆகும். மக்களின் உரிமைகளை க் காக்கும் சட்டத்தின் ஆட்சி (நீதி) மற்றும் எதிர்காலத்தின் மீதான பொதுவான கூட்டுஉறுதி ப்பாடு (நம்பிக்கை) ஆகியவை இணைந்து ஒரு வலிமையான சமூகத்தை உருவாக்குகின்றன.
அமைதி, நீதி ஒரு நாணயத் தின் இரண்டு பக்கங்கள்.. ஒரூ நாடு இந்த இரண்டில் சிறந்து விளங்குவதே சிறந்த குடியரசாகும்.ஆமேன்
.

Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer, www.davidarulsermoncentre.com. www.davidarulblogspot.com

























Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80

மாணவர் ஞாயிறு. Student Sunday. இயேசு: நமது உன்னத வழிகாட்டி (282) Jesus: The ultimate influencer. 2 குறிப்பேடு.(நாளாகமம்) 20:13-19, திருப்பாடல் 87:19-37, திருத்தூதர் பணிகள் 18:12-22. யோவான் 8:12-20.