அனைத்து புனிதர்களின் திருநாள். (165) All Saints Day. எரேமியா: 31:31-34, திருப் பாடல்: 150.திருவெளிப்பாடு: 7:24; 9 -17. மத்தேயு 5: 1-12.
முன்னுரை: கிறித்துவின் இரத்தத் தால் மீட்க்கப் பட்டோரே, உங்க அனைவருக்கும் இயேசு கிறித்து வின் நாமத்தில் வாழ்த்துக்கள். அனைத்து புனிதர்களின் திரு நாள் நவம்பர் 1ம் நாள், திருச் சபையின் அனைத்து புனிதர்க ளின் நினைவாகக் கொண்டாடப் படும் ஒரு கிறிஸ்தவப் பெருவிழா ஆகும், கிறித்துவ வரலாற்றில் கிறித்துவுக்காக இரத்த சாட்சி யாக மரிததவர்களுக்காகவும், தூய வாழ்க்கை வாழ்ந்து இறை பணியாற்றியவர்களுக்காகவும் கொண்டாடப்படுகிறது. இது கத்தோலிக்க போப் கிரிகரி III அவர்களால் கி.பி 731-741 கால த்திலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த நாள், நவம்பர் 2, உயிர்த்தெழுதலின் நம்பிக்கை யோடு மரித்த அனைத்து "விசு வாசிகளுக்காகவும்,உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இப்போது வாழாத அந்நியர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் நினை வாக கல்லறை திருநாள், " சகல ஆன்மாக்களின் திருநாளாக கொண்டாடப்படுகிறது.கல்லறைகளை மலர்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் மாலைகளால் அலங்கரித் தல்; மற்றும் தாராள உணவுகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தி னருடன் பகிர்ந்து கொள்ளப்படும். வேதத்தின் அடிப்படையில், "நீதியின் பொருட்டுத் துன்புறு த்தப் படுவோர் பேறு ...