நற்செய்தியை கொண்டாடுதல் (170)Celebrating the Good News. விடுதலை பயணம் 2:1-10 திருப்பாடல்:117, திருத்தூதர் பணிகள் 9:10-18, லூக்கா 1:46-56 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு.The first Sunday on Advent.
முன்னுரை: கிறித்துவின் அன்பு விசுவாசிகளே! " நற்செய்தியை கொண்டாடுதல், " இவ்வார தலைப்பாகும். "நற்செய்தி" என்றால் என்ன? கிரேக்க புதிய ஏற்பாட்டில், யூவாஞ்செலியன் ("நற்செய்தி") என்ற பெயர்ச்சொல் எழுபது முறைக்குமேல்வருகிறது. நற்செய்தி என்ற வார்த்தைக்கு "நல்ல செய்தி" என்று பொருள். நற்செய்தி என்பது கடவுளிட மிருந்து வருவது. மாற்கு நற்செய்தியாளர், "கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்; (மாற்கு நற்செய்தி 1:1) என கூறுகிறார்.நற்செய்தி என்ற வார்த்தை ஆங்கிலோ-சாக்சன் வார்த்தையிலிருந்து பெறப் பட்டது. 430 ஆண்டுகள் அடிமைப்பட்ட இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மீட்டு வாக்குதத்தின் நிலமாகிய கானானில் குடியமர்த்துவதே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நற்செய்தியாகும். புதிய ஏற்பாட்டில், நற்செய்தி என்பது வெறுமனே ஒரு புத்தகத்தைக் குறிக்கவில்லை, மாறாக கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அறிவித்த செய்தி.நற்செய்தி, என்பது, இயேசு கிறித்துவின் பிறப்பை அடிப்படையாக கொண்டது, வானதூதர் அவர்களிடம்,(மேய்ப்பர்களிடம்) "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும...