நற்செய்தியை கொண்டாடுதல் (170)Celebrating the Good News. விடுதலை பயணம் 2:1-10 திருப்பாடல்:117, திருத்தூதர் பணிகள் 9:10-18, லூக்கா 1:46-56 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு.The first Sunday on Advent.
முன்னுரை: கிறித்துவின் அன்பு
விசுவாசிகளே! "நற்செய்தியை கொண்டாடுதல், " இவ்வார தலைப்பாகும். "நற்செய்தி" என்றால் என்ன? கிரேக்க புதிய ஏற்பாட்டில், யூவாஞ்செலியன் ("நற்செய்தி") என்ற பெயர்ச்சொல் எழுபது முறைக்குமேல்வருகிறது.
நற்செய்தி என்ற வார்த்தைக்கு "நல்ல செய்தி" என்று பொருள்.
நற்செய்தி என்பது கடவுளிட மிருந்து வருவது. மாற்கு நற்செய்தியாளர், "கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்; (மாற்கு நற்செய்தி 1:1)
என கூறுகிறார்.நற்செய்தி என்ற வார்த்தை ஆங்கிலோ-சாக்சன் வார்த்தையிலிருந்து பெறப் பட்டது.
430 ஆண்டுகள் அடிமைப்பட்ட
இஸ்ரவேலரை எகிப்திலிருந்து
மீட்டு வாக்குதத்தின் நிலமாகிய
கானானில் குடியமர்த்துவதே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட
நற்செய்தியாகும்.
புதிய ஏற்பாட்டில், நற்செய்தி என்பது வெறுமனே ஒரு புத்தகத்தைக் குறிக்கவில்லை, மாறாக கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் அறிவித்த செய்தி.நற்செய்தி, என்பது, இயேசு கிறித்துவின் பிறப்பை
அடிப்படையாக கொண்டது, வானதூதர் அவர்களிடம்,(மேய்ப்பர்களிடம்) "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.
(லூக்கா நற்செய்தி 2:10,11) இதுவே , நற்செய்தியின் ஆரம்பமாகும்."இயேசு" என்ற
இரட்சகரின் உலக வருகையை,
வாழ்வை கொண்டாடுவதே நற்செய்தி.
1.இஸ்ரவேலருக்கு அளிக்கும்
மீட்பின் நற்செய்தி.The gospel of redemption to Israel.விடுதலை பயணம் Exodus: 2:1-10
கிறித்தூவுக்கு பிரியமானவர் களே! ஆதியாகமம் என்ற தொடக்க நூலின் இறுதி பகுதி
யின் காலத்திற்கும் விடுதலை
பயணம் என்ற யாத்திராகமத்தி
யின் தொடக்க நிகழ்வுகளின்
இடையே உள்ள காலங்கள்
300 ஆண்டுகளை கடந்தவை
என்பதை நாம் மனதில் கொண்டு
இப்பகுதியை நாம் தியானிப் போம். The end of Genesis and the
beginning of Exodus was 300 years old.
விடுதலை பயணம் கடவுளின்
மீட்பின் நற்செய்தியாகும். உண்மையான மீட்பரும் இரட்சகருமாகிய இயேசு கிறித்து வரும்போது, உலகை எப்படிக் இரட்சிக்கப் போகிறார் என்பதை எகிப்தில் நடக்கும் சம்பவங்கள் மூலம் கடவுள் இஸ்ரவேலுக்குக் முன்னுரையாக (Preamble to Salvation) காட்டுகிறார். இதன் இரண்டாவது அத்தியாயம் இருள், அழிவு மற்றும் மரணத்தின் நேரமாகத் திறக்கிறது. எபிரேயர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு மகனும் நைல் ஆற்றில் தள்ளப்பட வேண்டும் என்ற கட்டளை தேசத்தின் வழியாக அனுப்பப்பட்டுள்ளது (1:22).
விடுதலை பயணம் தேவனுடைய மீட்பின் பாடமாகும்.வி.ப 2ம் அதிகாரம், மோசேயின் பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்க் கையை பதிவு செய்கிறது.
மோசே ஒரு பேழையில் வைக்கப்பட்டு தண்ணீரின் மேல் வைக்கப்பட்டார். நோவாவையும் அவனது குடும்பத்தையும் தண்ணீர் மூலம் கடவுள் காப்பாற்றியது போல் கடவுள் மோசேயை தண்ணீரின் மூலம் காப்பாற்றுகிறார். நைல் நதி மரணத்தின்ஆதாரமாக இருந்தது. ஆனால் கடவுள் பாதுகாப்பையும் விடுதலையையும் தருகிறார். பார்வோன் தேர்ந்தெடுத்த அழிவுக்கான கருவி (நைல்) மோசேயைக் காப்பாற்றுவதற் கான வழிமுறையாகும். ரோமர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மரணத்தின் கருவி (சிலுவை) உலகைக் காப்பாற்றுவதற்கான வழிமுறையாக மாறும் இயேசுவை இதன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. மிக முக்கியமாக,
மோசேயைக் காப்பாற்றும் பார்வோனின் மகளாக மாறும்போது, இரட்சிப்பின் முரண் இன்னும் வலிமையானது. . பார்வோனின் மகள், எல்லா மக்களிலும், ஒரு எபிரேய பையன் கூடையில் மிதப்பதைக் கண்டாள். ஆனால் அழிவைக் காட்டிலும், இது பார்வோனின் மகள் மூலம் கடவுளின் கையால் ஏற்படுத் தப்பட்ட விடுதலையாகும். இரட்சகராகிய இயேசுவின் விடுதலை பணியில் உதவி வழங்குபவர்களாக, தங்கள் பொருள்களால் தாங்கியது பெண்களே என்பதை மீண்டும் அடையாளப்படுத்தப்படுவதை கவனியுங்கள்.
கடவுள் நோவாவை தண்ணீர்
மூலம் காப்பாற்றுகிறார். அவ்வாறே, மோசே தண்ணீர்
மூலமாக காப்பாற்றப் படுகிறார்.
மரணத்தின் கருவியாக கருதப் பட்ட நைல், கடவுளால் அது
பாதுகாக்கும் மற்றும் விடுவிக்கும்
கருவியாக மாற்றுகிறார். எகிப்து
மன்னன் பாரோவின் அழிவு
கருவியான நைல், மோசேவை
காப்பாற்றும் கருவியாக மாறிப்
போனது."விசுவாசத்தினாலே மோசே பிறந்தபோது, குழந்தை அழகாக இருப்பதைக் கண்டு, ராஜாவின் கட்டளைக்குப் பயப்படாமல், அவனுடைய பெற்றோர் மூன்று மாதங்கள் மறைத்து வைத்திருந்தார்கள். (எபிரெயர் 11:23 ESV)இந்த குழந்தை கடவுளின் பார்வையில் அழகாக இருந்தது, அவர் கடவுளுக்கு ஏதாவது செய்யப் போகிறார். மோசஸ் "கடவுளைப் பிரியப்படுத்தினார்" என்று NKJV இதை வழங்குகிறது, இது மற்றொரு சாத்தியமான அர்த்தமாகும். எனவே, மோசஸ் அழகாக இருப்பதைப் பெற் றோர்கள் பார்த்தார்கள், பார்வோனின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை. மாறாக, மோசே கடவுளுக்கு வேண்டியவர் என்பதையும், பார்வோனுக்குக் கீழ்ப்படியாத விசுவாசம் இருப்பதையும் அவருடைய பெற்றோர் கண்டார்கள். இந்தக் குழந்தைமூலம் கடவுள் ஏதாவது செய்யப் போகிறார். அற்புதமான ஒன்றைச் செய்ய குழந்தையுடன் கடவுள் இருப்பது போன்ற இந்த பாடம் பின்வரும் வசனங்களில் தொடர்கிறது.அதன்படி,
மோசே எகிப்தியர்களுடைய எல்லா ஞானத்தையும் கற்றுக்கொண்டார், மேலும் அவர் தனது வார்த்தைகளிலும் செயல்களிலும் வல்லவராக இருந்தார். (திருதூதர் Acts: 7:22)
கடவுள் நோவாவை வெள்ளத்தின் மூலம் காப்பாற்றினார். கடவுள் மோசேயை நைல் நதி வழியாகக் காப்பாற்றினார். கடவுள் செங்கடல் வழியாக இஸ்ர வேலைக் காப்பாற்றினார். கடவுள் யோர்தான் நதி வழியாக இஸ்ரவேலைக் காப்பாற்றினார். ஜோனா தீர்க்கதரிசி தண்ணீரின் மூலம் காப்பாற்றப்பட்டார். தீர்க்கதரிசிகள் தண்ணீர் மற்றும் ஆவியை ஊற்றும் செயலாகவும் இரட்சிப்பு மற்றும் விடுதலையை உறுதியளிக்கிறது.மோசே மூலம்
இஸ்ரவேலருக்கு மீட்பின் நற்
செய்தியை வழங்குகிறார்.
2.கிறித்தூவின் அழைப்பே நற்செய்தி.The calling of Christ is good news.Acts: திருதூதர் பணிகள் 9:10-18.
கிறித்துவுக்கு மிக பிரியமாணவர் களே!
சந்தேகத்திற்கு இடமின்றி, கிறித்துவ திருச்சபையின் வரலாற்றில் மறக்கப்பட்ட திருத்தூதர்களில் அனனியாவும் ஒருவர். திருச்சபை ஸ்தேவானின் ஜெபத்திற்கு பவுலுக்கு கடன்பட்டிருக்கிறது என்பது உண்மையாக இருந்தால், அனனியாவின் சகோதரத்து வத்திற்கு திருச்சபை பவுலுக்கும் கடன்பட்டிருக்கிறது.
அன்பு நணாபர்களே! தமஸ்கு(டமாஸ்கஸ்)வில் அனனியா என்று ஒரு சீடர் இருந்தார், கர்த்தர் அவருக்கு ஒரு தரிசனத்தில், "அனனியா" என்றார். அவர், "இதோ நான் ஆண்டவர்" என்றார். கர்த்தர் அவனிடம், "நீ எழுந்து நேரான தெருவுக்குப் போ; யூதாஸ் என்கிற
விசுவாசியின் வீட்டில் தர்சஸ் ஊரானாகிய சவுல் என்னும் மனுசனைக் கேள்; பார், அவன் ஜெபம்பண்ணுகிறான் என்றார்.. அனனியாவை வரவழைத்து, அவன் பார்வை திரும்பும்படி அவன்மேல் கைகளை வை என்றார்." அதற்கு அனனியா, "ஆண்டவரே, இவரைப் பற்றி நான் பலரிடமிருந்து கேள்விப்பட்டேன்; எருசலேமில் உள்ள புனிதர் களுக்கு இவன் செய்த துன்பங் களையெல்லாம் என்னிடம் சொன்னார்கள்; விசுவாசி களையெல்லாம் கைது செய்ய தலைமைக் குருக்களால் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கும் சொன்னார்கள் என்றார்.." கர்த்தர் அனினியாவை நோக்கி: போ, அவர் என் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவி, அவர் என் நாமத்தை, புற
இனத்தாருக்கும், ராஜாக்களுக் கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் முன்பாகச் அறிவிக்க தெரிந்து கொள்ளப்பட்டவர்; என் நாமத்தினிமித்தம் அவன் அனுப விக்க வேண்டிய எல்லா துன்பத் தையும் நான் அவனுக்குச் சொல் வேன். " அப்படியே அனனியா போய் சவுல் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தார். அவன் மேல் கைகளை வைத்து, “சகோதரன் சவுலே, நீ போகிற வழியில் உனக்குத் தரிசனமான கர்த்தராகிய இயேசுவே, உன் பார்வையைத் திரும்பப் பெறவும், நீ தூய ஆவி பெறவும் என்னை அனுப்பினார் என்றார். அப்போது அவரது கண்களில் இருந்து செதில்கள் போன்ற பொருட்கள் விழுந்து மீண்டும் பார்வை கிடைத்தது. அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்; அவர் உணவை எடுத்துக் கொண்டார் மற்றும் அவரது வலிமை அதிகரித்தது.சில நாட்கள், சீடருடன் தமஸ்குவில் தங்கினார்.
Implications: (உட்குறிப்பு)
1.அனனியாவுக்கு கடவுளிடமிருந்து ஒரு நற்செய்தி வந்தது, அவர் பவுலுக்கு உதவி செய்ய வேண்டும்; மேலும் அவர் "நேர்த் தெரு (Straight" )என்று அழைக்கப்படும் தெருவுக்கு அனுப்பப்படுகிறார். இது தமஸ்குவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நேராக ஓடிய ஒரு பெரிய தெரு. இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, ஒரு மையப் பகுதி போக்குவரத்து இயங்கும், மற்றும் இரண்டு பக்க நடைபாதைகள், பாதசாரிகள் திரண்டனர் மற்றும் வணிகர்கள் தங்கள் சிறிய சாவடிகளில் அமர்ந்து தங்கள் வியாபாரத்தை நடத்தினர்.
2. அனனியாவுக்கு அந்தச் நற் செய்தி வந்ததும் அது அவனுக்குப் வருத்தமாக தோன்றியிருக்கும். அவர் ஒரு விரும்பத்தகாத பணியைச் செய்பவராக, பவுலை சந்தேகத்துடன் அணுகியிருக் கலாம்; அவர் பழிவாங்கல் களுடன் தொடங்கியிருக்கலாம்; ஆனால் இல்லை; அவரது முதல் வார்த்தைகள், "சகோதரர் சவுல்".
என அன்புடன் அழைக்கிறார்.
3. இதில் அன்பின் வரவேற்பு இருந்தது! இது கிறிஸ்தவ அன்பின் உன்னதமான உதாரணங்களில் ஒன்றாகும். அதைத்தான் கிறிஸ்துவால் உருவாக்க முடியும். இதுவே கிறிஸ்தவத்தின் சாராம்சம். கிறிஸ்துவில், மிகக் கடுமையான எதிரிகளாக இருந்த பவுலும் அனனியாவும் சகோதரர்களாக ஒன்று சேர்ந்தனர்.
4. கிறிஸ்துவுக்காக பவுல் சாட்சி கொடுத்தல் உடனடியாக அவர் இயேசுவே இறைமகன் என்று தொழுகைக் கூடங்களில் பறைசாற்றத் தொடங்கினார்.
(திருத்தூதர் பணிகள் 9:20)
ஆண்டவர், அனனியா மூலம்
திருதூதர் பவுல் அடிகளாரை
நற்செய்தி பணிக்காக அழை
க்கும் செயல் அடிப்படையில்
கொண்டாடப்பட வேண்டியது.
3.புரட்சியை ஏற்படுத்தும் நற்செய்தி: A revolutionary gospel.
லூக்கா 1:46-56.
கிறித்துவுக்கு பிரியமானவர்
களே! லூக்கா நற்செய்தியாளர்
ஒரு மருத்துவர். சிரியா நாட்டின் அந்தியோகியா பட்டணத்தை சேர்ந்தவர். திருத்தூதர் பவுல் அடிகளாருடன் திருப்பணி யாற்றியவர். இவர் யூதரல்
லாதவர்.பிறயினத்தவரிடம்
நெருங்கியதொடர்புடையவர்.
லூக்கா நற்செய்தி "உலகளாவிய நற்செய்தி" (Universal Gospel) என
அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழி நடையில் எழுதப் பட்டுள்ளது. மற்றும் கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் எழுதும் முன்னுரை பாணியை பின்பற்றியிருக்கிறார். மற்ற மூன்று நற்செய்திகளைவிட தனித்துவமானது.இந்த நற் செய்தியை எழுதும்போது, லூக்கா அவர்கள், "நானும்" ("I") என்ற பிரதி பெயர்ச்சொல்லை (Pronoun)
பயன்படுத்தியிருக்கிறார்.
மற்ற நற்செய்திகளில்
இது இல்லை." அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதி யானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,
(லூக்கா நற்செய்தி 1:3)
என உறுதியாய் அவர் களத்தில் இறங்கி, திட்டமாய் விசாரித்து, (Investigative Research) அறிந்து இந்த நற்செய்தியை எழுதி ரோம அரசின் ஆளுநர் தியோப்பளஸ் அவர்களிடம் அதிகாரபூரமாக
அளிக்கிறார்.
இந்த முதல் அதிகாரத்தில் 1:46-56
ல், மூன்று புரட்சிகர கருத்துக் களை வலியுறுத்துகிறார்.
1. தார்மீகப் புரட்சி. Moral Revolution:கிறிஸ்தவம் ஒவ்வொரு மனிதனிலும் ஒரு புரட்சியையும் உலகில் புரட்சியையும் ஏற்படுத்து கிறது.ஆண்டவர், பெருமையுள்ள வர்களை அவர்களுடைய இருதயத்தின் திட்டங்களில் சிதறடிக்கிறார். அது ஒரு தார்மீகப் புரட்சி. கிறிஸ்தவம் என்பது பெருமையின் மரணம். ஏன்? ஏனென்றால், ஒரு மனிதன் கிறிஸ்துவிற்காக தன் சுய வாழ்க்கையைப் புறக்கணித்து விட்டால், அது அவனிடமிருந்த பெருமையின் கடைசிச் சின்னங்களைக் அழித்துவிடும்.
2. சமுக புரட்சி.Social Revolution:
ஆண்டவர் வலிமைமிக்க வர்களை வீழ்த்துகிறார் - அவர் தாழ்மையானவர்களை உயர்த்துகிறார். இது ஒரு சமூகப் புரட்சி. கிறித்துவம் உலகின் முத்திரைகள் மற்றும் கௌரவத் திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது.
3. பொருளாதார புரட்சி: Economic Revolution:
ஆண்டவர், பசித்தவர்களை நிரப்பினார்... பணக்காரர்களை வெறுமையாக அனுப்பிவிட்டார். அது ஒரு பொருளாதாரப் புரட்சி. ஒரு கிறிஸ்தவரல்லாத சமூகம் என்பது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்றதைச் சேகரிக்கும் ஒரு கையகப்படு த்தும் சமூகமாகும். ஒரு கிறிஸ்தவ சமூகம் என்பது எந்த மனிதனும் அதிகமாக வைத்திருக்கத் துணியாத ஒரு சமூகம், மற்றவர்களுக்கு மிகக் குறைவாக உள்ளது, அங்கு ஒவ்வொரு மனிதனும் விட்டுக்கொடுக்க மட்டுமே பெற வேண்டும்.
நற்செய்தி ஒரு இரட்சிப்பின்
திட்டமாகும், எனவே. அது கொண்டாடப்பட வேண்டும்.
நற்செய்தி எல்லா மக்களுக்கு மானது. அமைதி, மகிழ்ச்சி
நிறைந்தது.எனவே, அது கொண்
டாடப்படவேண்டும்.
நற்செய்தி, அனைத்து படைப் பிற்குமானது, எனவே, அது கொண்டாடப்படவேண்டும்.
நற்செய்தி', இயேசுவின் இரட்சிப்பு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய அறிவிப்பு. அது கொண்டாடப்பட
வேண்டும்
இந்த Advent காலம், நம்மை
ஆண்டவரின் பிற்ப்பின்
மகிழ்வை கொண்டாட கடவுள்
கிருபை அருள்வாராக. ஆமேன்.
Prof. Dr.David Arul Paramanandam
Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
Comments
Post a Comment