கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.
அறிமுகம்: கிறித்துவின் அன்பர் களே! இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, கிறித்துவை அர்ப்பணித்தல் (The Presentation of Christ ) அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Dedication, Devotion என்று பொருள். " ஒருவருக்காக அல்லது ஒரு பணிக்காக தன்னை க் கொடுப்பது, முழுமையாக ஈடு படுவது."அர்ப்பணிப்பு என்பதா கும். அர்பணிப்பின் அடிப்படை, வேதத்தின் படி,"உன் முழு இதயத் தோடும், உன் முழுஉள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!"(இணைச் சட்டம் 6:5) ஒருவரின் ஆன்மாவை கடவுளு க்கு அர்ப்பணிப்பது அல்லது கடவுளின் சேவைக்கு அர்ப்பணி ப்பது அர்பணிப்பாகும். கிறித்தவர்களாகிய நாம், நம்மை நாமே கடவுளின் இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நம் வாழ்வின் மூலம் செயல்படுத்தி காட்டுவதே கிறித்துவின் அர்ப் பணிப்பாகும். 1. சாமுவேலை அர்பணித்தல். Presentation of Samuel to God. 1 சாமுவேல் 1:19-28. கிறித்துவுக்கு பிரியமானவர்களே! எப்பிராயீம் என்ற மலை தேசத்தி ல் ராமதாயீம் என்ற ஊரில் எல்க்கானாவின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். எல்க்கானா என்றால், " தேவன் உன்னை படைத்தி...