Lent: Third Friday. மீட்டுருவாக்கும் ஆண்டவர் .The Restoring Lord (254) ஏசாயா: 44:1-8.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 3ம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," மீட்டு ருவாக்கும் ஆண்டவர்". மீட்டுருவாக்கம் என்றால்,"முன்பு வழக்கில் இருந்து பிறகு மறைந் துபோன ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் இயங்கவோ செயல்படவோ வைக்கும் நிலை க்கு மீட்டுருவாக்கம் எனப்படும். எடுத்துக்காட்டாக, ஆதாம்,ஏவாள் ஏதேன் தோட்டத்தில், கடவுளுடன் அனுதினமும் நல் உறவில் இருந்தனர். ஆனால் கீழ்படியா மையின் பாவத்தினால் கடவுளின் நல் உறவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் இந்த உறவை மீண்டும் புதுப்பிக்க கடவுள் விரும்புகிறார் இதுவே மீட்டுருவாக்கும் எனப்படும். மீட்டு, மீட்டெடு, மீட்பர், மீட்பு, மீண்டும், என்ற சொல்லாக்கத் தின் சுருக்கமாகும். மீட்டுருவாக் கம் ஒரு பெயர்சொல். மீட்டுருவாக்கும் ஆண்டவர் என்பது தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் மீண்டும் நிலைநிறுத்துவதைக் குறிக் கிறது. 1.மீட்டுருவாக்கம் செய்யும் ஆண்டவர்.ஏசாயா 44:1-8. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மீட்டு உருவாக்கம் செய்யு ம...