Lent: Third Friday. மீட்டுருவாக்கும் ஆண்டவர் .The Restoring Lord (254) ஏசாயா: 44:1-8.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 3ம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," மீட்டு ருவாக்கும் ஆண்டவர்".
மீட்டுருவாக்கம் என்றால்,"முன்பு வழக்கில் இருந்து பிறகு மறைந் துபோன ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் இயங்கவோ செயல்படவோ வைக்கும் நிலை
க்கு மீட்டுருவாக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டாக, ஆதாம்,ஏவாள்
ஏதேன் தோட்டத்தில், கடவுளுடன்
அனுதினமும் நல் உறவில் இருந்தனர். ஆனால் கீழ்படியா மையின் பாவத்தினால் கடவுளின் நல் உறவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் இந்த உறவை மீண்டும் புதுப்பிக்க கடவுள் விரும்புகிறார் இதுவே மீட்டுருவாக்கும் எனப்படும். மீட்டு, மீட்டெடு, மீட்பர், மீட்பு, மீண்டும், என்ற சொல்லாக்கத் தின் சுருக்கமாகும். மீட்டுருவாக் கம் ஒரு பெயர்சொல்.
மீட்டுருவாக்கும் ஆண்டவர் என்பது தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் மீண்டும் நிலைநிறுத்துவதைக் குறிக் கிறது.
1.மீட்டுருவாக்கம் செய்யும் ஆண்டவர்.ஏசாயா 44:1-8.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! மீட்டு உருவாக்கம் செய்யு ம் ஆண்டவர், இறைவாக்கினர் ஏசாயாவுக்கு, இஸ்ரவேலர்கள், ( யூதா அரசு The southern Kingdom of Judah)
பாபிலோனிய அரசர் நேபுகாத் நேசர்-II, முதல் எருசலேம் தேவா லயத்தையும், எருசலேம் நகரை யும் முற்றிலமாக கி.மு 586ல், அழித்து, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். அச்சிறையிரு ப்பின் காலத்தில் கி.மு.597-538, அளித்த உறுதி தான் எசாயா 44ம் அதிகாரம்.
கடவுள் தம் மக்களை யாக்கோபு என்றும் இஸ்ரவேல் என்றும் பெயரிட்டு அழைத்து, பயப்பட வேண்டாம் என்று தேற்றி, அவர் களின் சந்ததியினர் மீது ஆவி யைப் பொழிந்து ஆசீர்வதிப்ப தாக உறுதியளிக்கும் பகுதியா கும். கர்த்தர் இஸ்ரவேலை "என் தாசன்", "என் தெரிந்து கொண்ட வன்", "யெஷூரன்" (நீதியுள்ளவ ன்) என்று அழைக்கிறார். தாயின் கர்ப்பத்திலிருந்தே உரு வாக்கியவர், மீட்பர், சேனைகளி ன் கர்த்தர் தாமே துணை நிற்ப தால், கைவிடப்பட்ட உணர்வில் இருக்கும் இஸ்ரவேல் பயப்படத் தேவையில்லை.கர்த்தர் இஸ்ர வேலின் ராஜா, மீட்பர், சேனைக ளின் கர்த்தர். அவரே முந்தினவ ரும் பிந்தினவருமானவர் (ஆதி யும் அந்தமுமானவர்). அவருக்கு ஒப்பான தேவன் இல்லை, வேறொரு கன்மலையும் (பாது காப்பு) இல்லை.
அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர்களுக்கு, கர்த்தர் தங்களை உருவாக்கியவர், தேர்ந்தெடுத்தவர் மற்றும் தாகமுள்ள நிலத்தில் தண்ணீர் ஊற்றுவது போல ஆவியையும் ஆசீர்வாதத்தையும் அருளுவார் என ஆறுதல் கூறி, பயப்பட வேண்டாம் என தைரியப்படுத் துகிறார். அவர் ஒருவரே நித்தி யமான கன்மலை, உண்மை தேவன் என்பதை இந்தப்பகுதி வலியுறுத்துகிறது.
2.யார் மீட்டுருவாளர்? Who was the Restorer?.எசாயா 44:28
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுள் காட்டும் யார் அந்த மீட்டுருவாளர்? அடிமைப்பட்ட இஸ்ரேல் மக்களை மீட்டது யார்? காலங்களையும் பருவங்களை யும் மாற்றுபவர் அவரே! அரசர்க ளை விலக்கி, மாற்று அரசர்க ளை நிலைநிறுத்துபவர் அவரே! ஞானிகளுக்கு ஞானம் வழங்குப வர் அவரே! அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே!
(தானியல் 2:21) என இறைவாக் கினர் தானியல் கூறுவது போல, கடவுள் பாரசிக மா மன்னன்
சைரஸ் (Cyrus the Great) அவர் களை இஸ்ரேல் மக்களின் மீட்டுருவாக்கம் செய்யும் ஆயனாக நியமிக்கின்றார்.
சைரசு மன்னனைப்பற்றி, "அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்று வான் என்றும், எருசலேமைப் பற்றி, "அது கட்டியெழுப்பப்படும்" என்றும் திருக்கோவிலைப்பற்றி, "உனக்கு அடித்தளம் இடப்படும்" என்றும் கூறுவதும் நானே. (ஏசாயா 44:28) சைரஸ் மன்ன ன் பாபிலோனை கைபற்றுகி றார். இவர் அடிமைப்பட்ட இஸ்ர வேலரை விடுதலை செய்கிறார்.
அழிந்த எருசலேம் பட்டினம், ஆலயம் மீண்டும் கட்ட ஆனையி டுகிறார்.
எருசலேம் கட்டப்படுகிறது இஸ்ரேல் மக்கள் மீண்டும் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள். நண்பர்களே! நமது ஆண்டவர் மீட்டு உருவாக்கம் செய்கின்ற வர். ஆண்டவர் தம் மக்களை ஒருபோதும் கைவிடார். அவருடைய மீட்டுருவாக்கம் செயல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர் மீட்பர், நம்மை மீட்பதே அவரின் உன்னத பணி. இந்த லெந்து காலங்களில், அந்த உன்னத மீட்பரின் வார்த்தையை கேட்டு அதில் நிலைத்து நிற்க கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
| Cyrus the Great | |
|---|---|
| King of Kings King of the Four Corners of the World | |
Comments
Post a Comment