முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உங்கள் அனைவரு க்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். சீர்திருத்த ஞாயிறு என்றால் என்ன? சீர்திருத்த தந்தை என அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் அவர்கள் 1517, அக்டோ பர் 31ம் நாள் ஜெர்மனியில் உள்ள விட்டேன் பெர்க் ஆலயத்தின் கதவில் 95 சீர்திருத்த கருத்துகளை ( theses) வெளியிட்டார். பாவ மன்னிப்பு ஆண்ட வரின் கிருபையாலும் மனம் திருந்த திலும் மட்டுமே கிடைக்கும்; மாறாக பாவ மன்னிப்பு சீட்டு விற்பதினால் கிடைக் காது என்று ஆணித்தரமாக விளக்கி னார். கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக அவர் மேற்கொண்ட சீர்திருத்த கருத்துக்களுக்கு ஆதரவாக ஏற்படுத்தப் பட்டது தான் புரட்சிகர சீர்திருத்த மார்க்கம் என்பதாகும்.(Protestant) . திருச்சபையில் சீர்திருத்தங்கள் கால த்தின் கட்டாயமாகிறது. அவசியமா கிறது. எந்த சீர்திருத்தமும் வேதத்தின் அடிப்படையில், கடவுளின் போதனை யின் அடிப்படையாக அமைய வேண் டும்.. சீர்திருத்தம் என்ற பெயரில் வேதத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆண்டவர் மீது இருக்கும் பற்று உறுதியை நீர்த்து போகக்கூடாது. மாற்றம்...