பன்மை நம்பிக்கையுடைய சமுதாயச் சூழலில் கிறிஸ்தவர்களின் இருத்தல் நிலை. CHRISTIAN PRESENCE IN MULTI FAITH SOCIETY. தானி 1:1-21. திரு.பா.67. திரு.ப 10:9-16. மத்தேயு 13:31-33.

முன்னுரை: 
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இறைமைந் தன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகி றேன். பன்மை நம்பிக்கை யுடைய சமுதாயச் சூழலில் கிறிஸ்தவர்களின் இருத்தல் நிலை என்ற தலைப்பு கிறிஸ்தவர்களின் பொறுப் பையும் அன்பின் தன்மை யை விளக்கிக் காட்ட உதவும் தலைப்பாக இருக்கிறது. கடவுள் இவ்வுலகைபடை 
க்கும்போது மனிதர்களையு ம் படைத்தார்.   "கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணு லகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்ப டுத்துங்கள்;(தொட.நூல் 1:28.) என அனைத்து உயிரி னங்களையும் படைத்தார். அவர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து நாடுகளை உருவாக்கி; சமய, சமூகங்க ளை உருவாக்கி தன் விருப்ப ம் போல பல கடவுள்களை யும் ஏற்படுத்திக் கொண்ட னர். பல்வேறு சமூகத்தினர்
வாழும் நாட்டில், ஊரில் மற்றவர்களின் சமயத்தை யும் மதிக்க வேண்டியது மிக அவசியம்.நம் கடமையும் ஆகும். திருவள்ளுவர்;
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்; கல்லார் அறிவி லாதார்" இதன் பொருள்; "உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்கா தவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவி ல்லாதவர்களே ஆவார்கள்".
இதையே கொன்றை வேந்தன் ;
"ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.' என ஊர் மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும்.என ஒற்றுமையாய் வாழ வலியுறுத்துகிறார். ‌ வேதம்
தெளிவாக கூறுகின்றன;
" மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நில வுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்". திருப்பாடல்கள்(சங்கீதங்கள்: 24:1) எனவே  இந்த உலகமும் இங்கு வாழும் மக்கள் அனைவரும் கடவுளுக்கே சொந்தம். அப்படி இருக்க கிறிஸ்தவர் களாகிய நாம்அனைவருடன் நல்லுறவோடு வாழ்வது கடவுளுடைய விருப்பம். மனித நேயமே மதங்களை காட்டிலும் மகத்தானது. கிறித்தவர்கள் அனைத்து மதத்தினருடன் நல்லுறவு டன் வாழ்வதே கிறித்துவை
பிறருக்கு அறிவிப்பதாகும்.
ஆண்டவராகிய இயேசு கிறித்து நம்மை பார்த்து; "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயி ருக்க முடியாது. "
(மத்தேயு நற்செய்தி 5:14)
எனவே நாம் எப்பொழுதும் சமுதாயத்தின் மக்களுக்கு வெளிச்சத்தின் பிள்ளைக ளாய் இருந்து வழி காட்ட வேண்டும். யூதர்கள் மற்ற மதத்தினருடன் காலம் காலமாக நல்லுறவுடன் வாழ்ந்ததில்லை. பாலஸ் தீன இஸ்ரவேல் பகை  ஆயிரம் ஆண்டுகளாக தொடர்கின்றன. யூதர்களே உலகில் சாதிய முறையை
கொண்டுவந்தனர். ஏற்ற தாழ்வுகளை சமுதாயத்தில்
பின்பற்றியவர்கள் யூதர்களே. சமாரியா என்ற 
ஊருக்குள் யூதர்கள் செல்வதில்லை. அதை முறியடித்தவர் உலக இரட்சகர் இயேசு கிறித்து.
1. நிறம் மாறாத பூக்கள்: Colourless Flowers: தானியேல் 1:1-21.
அன்பின் இறை மக்களே!
தானியேலின் புத்தகம் தானியேலால் எழுதப்பட்டது. தானியேல் என்ற பெயரின் அர்த்தம் "கர்த்தரே என் நியாயாதிபதி (God is my judge)  என்பதாகும்.இவர் அரச குலத்தை சேர்ந்தவர்.
யூதாவின் பதினேழாவது இராஜாவாகிய யோயாக்கீம் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ததினால் (2இரா.23:37). இவனுடைய ஆட்சியின் மூன்றாம் வருஷத்தில் கி.மு.606-ல் நேபுகாத்நேச் சார் எருசலேமை முற்றிகை போட்டான்(தானி:1:1). அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனு டைய ஆலயத்தின் பாத்திர ங்களில் சிலவற்றையும் இஸ்ரவேல் புத்திரருக்குள் ளே அரசகுலத்தார்களிலும், துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர் களும், அறிவில் சிறந்தவர் களும், கல்வியில் நிபுண ரும், ராஜாவின் அரமனை யில் சேவிக்கத் திறமையுள் ளவர்களுமாகிய சில வாலிபரையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
நேபுகாத்நேச்சர் தான் சிறைபிடித்து கொண்டு வந்த தானியேல், அனன்யா, மீசாவேல், ஆசாரியா என்ற நான்கு யூத வாலிபர்களு க்கும் கல்தேயரின் (பாபி லோனியர்) எழுத்தையும், மொழியையும் கற்றுக் கொடுக்கவும்; தான் உண் ணும் உணவிலும் தான் குடிக்கும் திராட்சைரசத்தி லும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து அவர்களை மூன்று வருடம் வளர்க்கவும் அதன் முடிவி லே அவர்களை சோதிப்பதா கவும் பிரதானிகளின் தலை வனுக்கு (The Chief of Official) கட்டளையிட்டான். பிரதானி களின் தலைவன் தானியே லுக்கு பெல்தெசாத்தார் என்றும் அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீசாவேலு க்கு மேஷாக் என்றும் அசரி யாவுக்கு ஆபத்து நேகோ என்றும் மறுபெயரிட்டான். ‌
தானியேலுக்கும் அவன் நண்பர்களுக்கும் அரசரின்  அரண்மனையில் சேவிப் பதும்,  பெயரை மாற்றியதும்  தவறாக தெரியவில்லை. ஏனேனில், அவர்கள் யோசேப்பின் சரித்திரத்தை நிச்சயம் அறிந்திருக்க கூடும். யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்ற பெயரோடு பார்வோனுடைய அரண்மனையில் சேவித் ததை அறிந்திருக்ககூடும். கல்தேயரின் மொழியை கற்று கொள்வதும் தவறாக தெரியவில்லை. காரணம் மோசேயும் எகிப்தின் அரன் மனையில் சகல சாஸ்திரங் களையும் கற்று,வாக்கிலும் செய்கையிலும்,வல்லவனாக காணப்பட்டான் என்பதை யும் அறிந்திருபார்கள்.
ஆனால் ஒன்று இராஜாவின் உணவும், பானமும் தீட்டுள்ளது என்று ஒதுக்கு கினார்கள். காரணம் அவைகள் விக்கிரகங்களு க்குப் படைக்கப்பட்டிருக்கும்
என்ற பக்தி வைராக்கியத் திலும் (லேவி11ல்) படி, அவைகளைதொடவில்லை.என்றும் கடவுளுக்காக நிற மாறாதபூக்களாய் ஒளித்தது அவர்களின் பக்தி வைராக் கியத்தை காட்டுகிறது.
பிரதானிகளின் கண்களில் தானியேலுக்கு தயவு, இரக்கம் (தானி.1:9,10)
தேவன் தம்முடைய பிள்ளை களுக்கு தயவு கிடைக்கப் பண்ணுகிறவர். கர்ததருடைய பார்வையில் நல்லவர்களாக காணப்படும் போது தேவதயவைவும்,
மனுச தயவையும் கொடுக் கிறவர். நல்லவன் கர்த்தரி டத்தில் தயை பெறுகிறான் (நீதி.12:2).  
தானியேல், அனனியா, மீசாவேல், அசரியா என்பவ ர்கள் மேல் விசாரிப்புக்கார னாக வைக்கப்பட்ட மேல்சார் என்பவனை பார்த்து  கூறுகி றார்கள் பத்துநாள்வரைக்கு ம் உமது அடியாரைச் சோதி த்துப்பாரும். எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் அரச உணவை உண்கிற வாலிபருடைய முகங்களை யும் ஒத்துப்பாரும். பின்பு நீர் காண்கிறபடி உமது அடி யாருக்குச் செய்யும். அவன் இந்தக் காரியத்திலே அவர் களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களை ச் சோதித்துப்பார்த்தான்.
 பிரதானிகளின் தலைவனா கிய அஸ்பேனாசுவின் விசா ரிப்புகாரனாகிய மேல்சார் பத்துநாள்கள் அவர்களை சோதித்து பார்த்த பின்பு அரச உணவை புசித்த எல்லா வாலிபரைப் பார்க் கிலும் அவர்கள் முகங்களை யுள்ளதாயும், சரீரம் மிக ஆரோக்கியமாக காண ப்பட்டது. தேவன் அப்பத்தை யும், தண்ணீரையும் ஆசீர் வதிக்கிறவர் (யாத்:23:35).
அவர்கள் புசிக்கக் கட்டளை யான உணவையும், அவர் கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கி வைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும், ஞானத்திலும், அறிவையும், சமார்த்தியத் தையும் கொடுத்தார்.   இந்த ஞானமும், அறிவும் பாபி லோனிய கல்வியை கற்ற தினாலோ அல்லது அவர்களுடைய உணவி னாலோ வந்தது அல்ல. தேவனுக்கு பயந்து அசுத் தத்திற்கு விலக தீர்மானித் ததினால் தேவன் கிருபை யாய் கொடுத்தது. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். பரிசுத்தரின் அறிவே அறிவு(நீதி.9:10).ஞானம், அறிவுவோடு அவர்களுக்கு சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியேலுக்கு ஞானமும், அறிவும் மாத்திர மல்ல. சகல தரிசனங்களை யும், சொப்பனங்களையும் அறியதக்க அறிவையும் கூட்டி கொடுத்தார். கர்த்தர் தானியேலுக்கு தீர்க்க தரிசன கிருபையை கொடுத்து மகிமையான ஊழியத்திற்கு அவனை தெரிந்து கொண்டார்.   தானியேலின் புத்தகம் தானியேலை தீர்க்கதரிசி என்று அழைக்கவில்லை. ஆனால் இயேசு மத்.25:15-ல் தானியேலை தீர்க்கதரிசி என்று அழைக்கிறார்.

2.ஆண்டவரே பன்முக தன்மை!. Our God is Multi-faceted. திரு.தூதர் 10:9-16.

அன்பின் இறை மக்களே!திருத்தூதர் பேதுரு அவர் கள் தன்னை யூதர்களுக் காகவே பணி செய்ய தீர்மானமாய் இருந்தவர். யூதர்களுக்கு நற்செய்தி வழங்குவதே தன்னுடைய தலையாய கடமை என பணி செய்தார். ஆனால் ஆண்ட வரின் திட்டமோ நேர்மாறா னது, வித்தியாசமானது. பேதுரு  புறமதத்தினரை, மற்ற சாதி யினரை தீட்டுள்ளவர்களாக கருதுகிறார். ஆனால் இவர் தங்கி இருந்த  சீமோன் ஒரு தோல் பதனிடும் நபர்.  (Tanner) இறந்த மிருகங்க ளை தோலுரிக்கின்ற பணி செய்தவர் அது தீட்டாகாதா? அந்த நபருடன் தங்கலாமா?(திரு.தூதர் 9:43, 10:5) (எண்ணிக்கை 19:11-13)  வைராக்கியம் நிறைந்த யூதன் இத்தகைய நபர்களு டன் தங்க மாட்டான். இவர் களிடம் விருந்தோம்பல் பெற மாட்டான் ஆனால் பேதுரு தோல் பதனிடும் சீமோனிடம் விருந்தோம்பல் பெற்றார். ஆண்டவர் பேதுரு க்கு தரிசனத்தில் ஒரு வேண்டுதலை கொடுக்கி றார்.  வானம் திறந்திருப்ப தையும், பெரிய நான்கு கப்பற்பாய் போன்றதொரு விரிப்பு நான்கு முனைகளி லும் கட்டப்பட்டுத் தரையில் இறக்கப்படுவதையும் கண்டார். "நடப்பன, தரையில் ஊர்வன, வானில் பறப்பன அனைத்தும் அதில் இருந்தன.  அப்போது "பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.  அதற்கு மறுமொழி யாகப் பேதுரு, "வேண்டவே வேண்டாம் ஆண்டவரே, தீட்டானதும் தூய்மையற்ற துமான எதையும் நான் ஒருபோதும் உண்டதேயி ல்லை" என்றுரைத்தார். (திருத்தூதர் பணிகள் 10: 11-14) பேதுரு தீட்டாக கருதுவது புறஜாதியினர். அவரின் மனநிலையைமாற்றுகிறார் கொர்நேலியூ என்னும் ரோம நூற்றுக்கு அதிபதியை சந்திக்கும்படியாக செய்கி றார். இவர் யூதர் அல்ல. இவர் செசரியாவில் தங்கியிருக்கிறார். இது பாலஸ்தீன அரசின் தலை மை இடமாகும். கொர்நேலியூ கடவுலுக்கு பயந்தவர். தான தர்மங்க ளை செய்கிறவர். ஜெப வீரர். இவர் முழுகுடும்பமும் நற்செய்தியை கேட்டு திருமுழுக்கு பெற்றனர். ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். நற்செய்தியை கேட்கின்றவர்கள் மனமாற் றம் பெறுகிறார்கள். நற்செய்தி பொதுவானது எந்த சமயத்திற்கும் சொந்த மானது அல்ல‌; அது உலக மக்களுக்கே சொந்தமா னது.இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதும் அவரை ஏற்றுக் கொள்வதுமே நற்செய்தியின் நோக்க மாகும்.

3. இறையரசு இயேசுவை உடையவர்களுக்கே! The Kingdom of God belongs those who have Jesus: மத்தேயு 13:31-33. 

கிறிஸ்துவுக்கு பிரியமான வர்களே! இறையரசு இயே சுவை உடையவர்களுக்கே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தில் விண்ணரசை குறித்துதான் மிக முக்கிய போதனையாகும்.இயேசுவின் உவமைகளை பொது வாக மூன்று தலைப்புகளின் கீழ்அடக்கலாம்.

* விண்ணரசின் வருகை

* கடவுள்.  *நீதி மற்றும் மனிதநேயம்.என்பனவாகும். பலஸ்தீனா தேசத்தில் கடுகு விதை முளைத்து செடியாகி 12 அடி உயரம் வரை வளரும்  என்பதை மக்கள் அறிவர். இதனைப் பயன்படுத்தியே கடுகு சிறிதாக வளர்ந்து அது பின்னர் ஓர் பெரிய செடியாக மாறுகின்றது என இயேசு போதிக்கின்றார். இச்செடியில் ஆகாயத்துப் பறவைகள் கூடுகள் அமை‌ க்கின்றன என ஆண்டவர் கூறுகிறார். இங்கு ஆகாயத்து பறவைகள் என் பது உலகமக்களை குறிக் கின்றது. இறையரசும் உலக மக்கள் யார் வேண்டுமானா லும் வர அழைக்கிறது. பறவைகள் பலவிதம். மக்கள் பல விதம். இவர்கள் இயேசு என்ற இரட்ச்சகரிடம் வருகின்ற பொழுது விண்ணரசு கிடைக்கின்றது

கடுகு விதையைப் போன்றே இறையரசும் சிறிதாக ஆரம் பித்து பெரிதாக வளர்ச்சி யடைகிறது. இவ் இறையரசு எல்லோருக்கும் உரியது. கடுகு விதை ஆண்டவரு டைய  வார்த்தையை குறிக் கிறது ஆண்டவருடைய வார்த்தையை கேட்டு அதன்படி செய்கின்ற வர்களுக்கு இறையரசு நிச்சயம் உண்டு. ஆண்ட வரின் வார்த்தை நம்மை உயிர்ப்பிக்கிறது. இரட்சிக்கிறது. மனமார செய்கிறது. நம்மை புதிதாக் கிறது. எவ்வாறு கடுகு மரத்தில் பல பறவைகள் வந்து தங்குகிறதுபோல் இவ்வுலகம் பல மக்கள் வாழ உரிமை பெற்றுள்ளனர். கிறித்தவர்கள் ஆகயத்துப் பறவைகள் போல் ஒரே மரமாகிய இவ்வுலகில் அனைத்து இன மக்களுடன் அன்புடன் மத நல்லின க்கத்தோடு வாழ்வதே நம் கடமை. பன்முகத்தன்மையுடன் வாழ் வது என்பது நாம் இறைவார் த்தையை எக் காரணம் கொண்டும்  நீர்த்து போக செய்யக் கூடாது. உ.ம். விக்கிரக வழிபாடு. ஒரு இடத்தில் வசிக்கும் பெறுவாரியான மக்கள் சில இடத்தில் சிறுபான்மையி னராக இருப்பர். சில இடத்தில் இருக்கும் சிறு பான்மையினர் பல இடத் தில் பெறுவாரியராக இருப்பர்‌. எனவே இயேசுவின் அன்பின் வழியில் அனைத்து இன மக்களுடன் இனிதே வாழ்வதே! கிறிஸ்துவின் வழி. அவ்வழியில் வாழ கடவுள் நம்மை காப்பாராக.

ஆமேன்.


Prof. Dr. David Arul Paramanandam. Sermon Writer.

www davidarul blogs.com

www.davudarulsermoncentre.














கடுகு விதை உவமை

“இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? 


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.