கல்வி ஞாயிறு. விடுதலையின் முகவர்கள் - ஆசிரியர்கள். TEACHERS - THE AGENTS OF LIBERATION. நீதி 8:1-12; திரு.பாடல் 119:97-104; திரு.தூதர் 8:26-38; மாற்கு 6:34-44.
முன்னுரை:
கிறித்துவின் அன்பு சகோ தரர்களே! "ஆசிரியர்கள் விடுதலையின் முகவ ர்கள்" என்ற தலைப்பில் சிந்திக்கஇருக்கின்றோம். விடுதலை என்பது அறியா மை என்ற இருளிலிருந்து அறிவுடமையாக்குவதே விடுதலை. முகவர் என்பவர்
ஒரு நிறுவனத்தின் சார்பில் செயல்பட அதிகாரம் படைத் தவர். தமிழர்களின் பண்பா ட்டில் ஆசிரியர்கள் தெய் வத் திற்கு சமமாக கருதப்படுகி ன்றனர் மாதா, பிதா, குரு என ஆசிரியர்களை மூன்றா வது கடவுளாக வணங்குவது தமிழர்களின் பண்பாடு. அதனால் தான் "எழுத்தறிவி த்தவன் இறைவனாகும்" என்ற ஔவையாரின் இலக் கிய வரிகளுடன் ஒப்பு நோக் கத்தக்கதாக அமைந்திருப் பது குறிப்பிடத்தக்க ஒன்றா கும். ஆசிரியர்களை மதிக் காத வணங்காத மாணவர் கள் ஒருபோதும் சமுதாய த்தில் நல்லவர்களாக இருக் க முடியாது."ஆசிரியர்கள் கதவைத்திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே நுழைய வேண்டும்". - (சீன பழமொழி)
கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமானபணியாகும், கற்பித்தலில் ஒருவரின் தன்மை, திறமை மற்றும் ஒரு தனிநபரின் எதிர் காலம் வடிவமைக்கப்படுகிறது. Teachers are the builders of the Nation. கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் "நான் யாருக்கும் எதையும் கற்பி க்க முடியாது, என்னால் அவர்களை சிந்திக்க வைக்க முடியும்". - என்று ஒரு நல்லாசிரியர் எப்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்கிறார். "மாற்றத்தின் பிரதான முகவர் ஆசிரியர் ஆவார்"
"Teachers are the Prime Agents of Changers _ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றலின் ஆற்றலை வெளிப்படுத்து வதுடன் சுயமாக சிந்திக்கி ன்ற தன்மையை உருவாக் குவதே முக்கிய கடமையா கும். சீன பழமொழி கூறுகி றது "மீன் வேண்டாம் மீன் பிடிக்க கற்றுக்கொடு"என்று.
ஆசிரியர்கள் மாணவர்களு க்கு சமூக சிந்தனை, சமுக பொறுப்பு, மனித நேயம், சுகாதாரம், நேர்மை, நட்புறவு போன்றவற்றை ஆரம்பத் தில் இருந்தே கற்றுக் கொடு க்க வேண்டும். மாணவர்கள் தூய சிந்தனைகள் வளர்க்க வும், தீய பழக்கங்களில் இருந்து முற்றிலுமாக விடுத லை பெற ஆசிரியர்கள் பணி மிக அவசியமானது. அறிவு மட்டத்தை உயர்த்துவது மட்டுமே ஆசிரியரின் கடமையன்று. மாணவப் பருவத்திலிருந்தே சமூகத் திறன்களை விருத்தி செய்வதும்; திறமைகளை வெளிக் கொண்டு வருவது மே மிக அவசியமானது. சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள், ஏற்ற தாழ்வுகளை, இனபாகுபாடு களை, சாதிய வன்மங்களி லிருந்து மாணவர்களை விடுவிக்கின்றமுகவர்களாய் செயல்படுபவரே ஒரு நல் ஆசிரியரின் நற்பணி யாகும்.
1. அறிவுமீது அன்பு கூர்ந் த சாலமோன்: Solomon loved Wisdom. நீதி 8:1-12.
அன்பின் இறை மக்களே! இஸ்ரவேலின் மூன்றாவது அரசனாகிய சாலமோன் அறிவில் சிறந்தவர். அவர் கடவுளிடம் வேண்டி பெற் றுக் கொண்டது எக்காலத் திலும் அழியாத அறிவும் ஆற்றலும் தான்.
உலகில் முதன்முதலாக அறிவாற்றலும், தத்துவத்தி லும் சிறந்து விளங்கியவர் கள் கிரேக்கர்கள்; சாக்ரடீஸ், உலகத்தின் முதல் தத்துவ ஞானி என்றும் போற்றப்படு கிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு. இவரை சுற்றி எப்போதும் இளைஞர் பட்டாளம் சூழ்ந்திருந்தது.
காரணம் அறிவின் வேட்கை. ஏன் ஏன் என்ற கேள்வியின் தாக்கம். இவரின் மாணவர் பிளாட்டோ சிறந்த ஆசிரியர். அறிவு, வீரம், நிதானம், நேர்மை ஆகிய நான்கும் நல்ல ஒழுக்க ங்கள்." என்றார் .பிளாட்டோவின் ஏதென்ஸ் நகரத்து அகாடமியில் கல்வி பயின்ற மாணவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாணவரே அரிஸ்டாட்டில் இவர் .அலெக்சாண்டர் என்ற மாவீரனுக்கு12 ஆண்டுகள் ஆசிரயராக இருந்து அறிவு, வீரத்தை கற்றுக் கொடுத்தவர். ஏன் இவர்களை குறிப்பிடு கிறேன் என்றால் உலகை மாற்றும் சக்தி ஆசிரியர்கள் என்ற படைப் பாளிகளிடம் உள்ளது. கிரேக்க தத்து வஞானிகளுக்குப்பிறகு சுமார் 500 ஆண்டுகள் இடைவெளியில்கி.மு 970 ல் அறிவாற்றல் மிக்க ஞானியாய் தோன்றியவர் தான் சாலமன் அரசர்.
ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப் புகுமுகம் செய்து வைக்கிறது என்றார்
ஞானத்தின்மேல் நான் அன்பு கூர்ந்தேன்: என் இளமைமுதல் அதைத் தேடினேன்: என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன் என்றார். ஞானத்தைவிட சிறந்த செல்வம் எதுவுமே இல்லை என்றார்.ஏனெனில் தன்னடக்கம், விவேகம், நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது. நான் நன்மை செய்ய என்னை தயார் படுத்தும் ; கவலைகளிலும், துயரத்தி லும் எனக்கு ஆறுதல் தரும் என ஞானத்தின் மீது நாட்டம் கொள்ள நமக்கு கற்றுத் தருகிறார்.
கொரி 1: 22 ல் யூதர்கள் அதிசயங்களைச் சாட்சி யாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை தேடுகின்றனர்.
2.அறிவுள்ளவனாக்குவதே கடவுளின் கட்டளை; The Commandment of God is to make wise திரு.பாட.119:97-104. கிறித்துவின் அன்பு நிறைந்தவர்களே! வேதம் கூறுவது; "ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை யே இழப்பாரெனில் அவரு க்குக் கிடைக்கும் பயன் என்ன? " (மாற்கு நற் 8:36)
ஆண்டவர் கேட்கிறார். சங்கீதகாரன் உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாய் இருக்கிறேன் உம்முடைய வேதம் நாள் முழுவதும் என் தியானமாய் இருக்கிறது என்கிறார். ஆண்டவரின் கட்டளைகள் விரோதிகளின் அறிவைக் காட்டிலும் அதிக அறிவைத் தருகிறது. எனக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களின் அறிவைக் ,காட்டிலும் முதியோர்களின் அனுபவ அறிவு எனக்கு அதிகமாய் இருக்கிறது என்கிறார். ஏனெனில் அவர் இரவும் பகலும் ஆண்டவரின் கட்டளையில் பிரியமாய் இருக்கிறார். ஆண்டவர் நீரே எனக்கு ஆசிரியராய் இருந்து கற்றுக் கொடுத்ததி னால் நான் நீதி நியாயங் களில் என்றும் நிலைத்தி ருப்பேன். தீமையை விட்டு என் கால்களை விலக்கு வேன்.உம்முடைய வார்த் தைகள் தேனிலும் இனிமை யானது.நான்அனைவரிடமும் இனிமையாக பேச கற்றுத்தாரும்.என் நலமான வாழ்விற்கு உம் கட்டளை களே காரணம். ஆண்டவர் தரும் ஞானம் உண்மை யிலேயே நம்மை விடுவிக் கும் தீங்கை காணாதிருப் போம்.
3. யாராவது விளக்காவிட் டால் எவ்வாறு எனக்கு தெரியும்:How can I, unless someone Explains me?” திரு தூதர் 8: 26:38.(Acts):
கிறிஸ்துவின் அன்பர்களே!
தூய ஆவியானவர் எவ்வாறு திருத்தூதர்கள் மூலம் செய ல்பட்டதை இப்பகுதியில் நாம் காண்கிறோம். ஒரு மாணவன் தன் ஆசிரியரை பார்த்து, ஐயா! எனக்கு புரியவில்லை விளக்கமாய் சொல்லுங்கள் என திரு தூதர் பிலிப்பை பார்த்து எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் கேட்கிற கேள்வியாய் நாம் காண்கி றோம். இவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் தன் தேரில் திரும் பிச் சென்று கொண்டிருந் தார். அவர் ஓர் அலி; ஆனால் மிகவும் அறிவும் ஆற்றலும் பெற்றவர் எனவே அவருக்கு நிதி அமைச்சர் பதவி. இவர் ஏசாயாவின் இறைவாக்கு
நூலை சத்தமாக படித்துக்
கொண்டிருந்தார். அப்பொழு து; தூய ஆவியார் பிலிப்பி டம், "நீ அந்தத் தேரை நெருங் கிச் சென்று அதனோடு கூட வே போ" என்றார். அவ்வாறு
அவர் சென்று அவரிடம்
, "நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார். அதற்கு பதிலாக கூறிய வார்த்தை தான், "யாராவது விளக்கி க்காட்டாவிட்டால்எவ்வாறு என்னால்தெரிந்துகொள்ள முடியும்?" என்றார். விளக்கி புரிய வைப்பது ஒரு நல்ல ஆசிரியரின் கடமை. இதைதான் ஆண்டவர் பிலிப்பின் மூலமாக அந்த மந்திரிக்கு கிறிஸ்துவை பற்றி விளக்கமாய் புரிய வைக்கின்றார். இதன் கார ணமாக அவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு திருமுழு க்கு பெறுகிறார்.
4. இயேசுவே அனைவரு க்கு மான நல் ஆசிரியர். Jesus is the good teacher of all . மாற்கு 6:34-44
கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உலகில் ஆசிரியர்கள் என்பவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் எல்லாவற்றிலும், எக்காலத்திற்கும், அனைவ ருக்கும் பொருத்தமான நல்லாசிரியர் இயேசு கிறித் து ஒருவரே. இயேசுவின்
போதிக்கும் தன்மைகள் வித்தியாசமானது. நாடு, நகரங்கள் ,கிராமங்கள் தோறும் நடந்து மக்களுக்கு
பல வித உவமானங்கள் மூலமாகவும், அற்புதங்கள்
செய்தும் இறையரசின் போதனைகளை மக்களுக்கு புரியும் படி விளக்கினார். அவர் குரு என்றும் ரபி என்றும், போதகர் என்றும்
அழைக்கப்பட்டார்.இயேசுவின் கற்பிக்கும் தன்மை " அதிகாரம்" (Authority) நிறைந்ததாக இருந்தன. ஏனெனில் இயேசு அதிகா ரத்தினுடையவர். ஒலி ஒளி வசதிகள் இல்லாத காலத் தில் 5000 பேர்களுக்கு மேல்
தன் கருத்துக்களை மக்களு க்கு எடுத்துறைதார். வரிசை வரிசையாக 50,100 ஆக அமர வைத்து உணவளித் தார். இதன்மூலம் அனை வருக்குமான நல் ஆசிரி யராக கருதப்படுகிறார். மக்கள் மேய்ப்பர் இல்லாத ஆடுகள் போல இருப்பதை குறித்துகவலைகொள்கிறார்.இயேசுவின் கற்பிக்கும் முறை வியப்பானது;
1. அவர் கதைகள் மூலம் விளக்குவது
2 அதிர்ச்சியான போதனை;
(Hyperbole) உ.ம். மத்தேயு 5:29,30. 7: 3-5.
3. கவிதை வரியில் (poetic)
உம்: லூக்கா 6 : 37,38.
4 கேள்வி கேட்டு கற்பித்தல் உ.ம்.மத்தேயு 16:26.
5. பொருட்பாட முறை (Object Lesson). உ.ம் யோவான்13:3-17.
6 திரும்ப திரும்ப சொல்லுதல்.(Repetition)(உம். மாற்கு8:31,9:31,10:33,34.)
இயேசு இருதரப்பு மக்களி டம் கற்பிக்கின்றார். முதலாவது தன்சீடர்களுக்கு, இரண்டாவதாக அனைத்து
மக்களுக்குமானதாக இருந்தது.கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! நம்முடைய மக்கள் ஆசிர் வாத பிரசங்கங்களை அதிகமாக நேசிக்கிறார்கள். ஆனால் கடிந்து கொண்டு பேசுகின்ற பிரசங்களை விரும்புவதில்லை. கசப்புள்ள மருந்து தான் பிணியை இரட்சிக்கும். இயேசு கிறிஸ்து நடமாடும் ஆசிரியர் peripatetic (a walking Teacher) இதன் மூலம் பல நாடுகளை கடந்தார். பாலஸ்தீனம் முழுவதும் சுற்றித்திரிந்தார். பலரை தன் சீடராக மாற்றினார்.
Jesus followed a teacher as in the Aristotelian school) style.
யோவான் 3:2 நிக்கதோம் என்ற பரிசேயர், வேத பண் டிதர். இயேசுவின் ஆற்றலை மிகவும் புகழ்ந்தவர்.ஆற்றல்
மிக்க ஆசிரியர்கள் அனைவ ருமே விடுதலையின் முகவர் கள். சமூக மாற்றத்தின் செயல்வீரர்கள் .இயேசு தேவாலயத்தில் பிரசங்கிக் கின்ற போது; அவரின் அறிவு, ஞானத்தை குறித்து வேதப்பாரர்கள், பரிசேயர், சதிசேயர்கள் ஆச்சிரப்பட் டனர். அவர்களின் கேள்விக ளுக்கு வியக்கத்தக்க வகை யில் பதில் கொடுத்தார்.( மத்:13:54, யோவான் 7; 14,15.)
இயேசு கிறிஸ்து உலகத்தை விடுதலையாக்கும் முக வராக செயல்பட்டார்
Jesus was an agent of Universal Liberation and Transformation.
ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய உலக புகழ் பெற்ற கடிதத்தில் அவர் வேண்டு வது; தன் மகன் கற்றுக் கொள்ள வேண்டியது; "அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்ல;
அனைத்து மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் மனிதர்களில் கெட்டவர்களுக்கு மத்தியில் நல்ல தலைவர்களும் இருக் கிறார்கள் என்பதையும்; சுயநல அரசியல்வாதிகள் மத்தியில், அர்ப்பணிப்பு மிக்க நல்ல தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதை யும், பகைவர்களுக்கு மத்தி யில், நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதை யும் அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.. என பொதுநலமிக்க மாணவ னாக தன் மகனை மாற்ற அவனுடைய ஆசிரியருக்கு லிங்கன் அவர்கள் எழுதிய கடிதம் மிகவும் புகழ்வாழ் ந்தது. ஒரு ஆசிரியர் ஒரு மாணவனுக்கு என்ன கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக ஆபிரகாம் லிங்கன் தன் கடிதத்தில் எழுதி இருக்கி றார்.மிகவும் பிரயமானவர் களே! ஆசிரியர்கள் சமுக விடுதலைக்கான முகவர் கள். இந்தியாவின் எதிர் காலம் நல்ல மாணவர் களை உருவாக்கும் ஆசிரியர்களின் கரங்களில்
தான் உள்ளது. கடவுள் தாமே இப்பணிகளில் தண்ணியே ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும், போத னையாளர்களுக்கும், கற்பி ப்பாளர்களுக்கும் நல் வாழ்வு தருவாராக!. ஆமேன்.
பேரா.முனைவர். டேவிட் அருள் பரமானந்தம்.
பிரசங்க எழுத்தர்.
www.davidarulblogs.com
www davidarul sermon centre.com
Comments
Post a Comment