PEOPLE OF GOD : SALT AND LIGHT.இறைமக்கள் : உப்பும், ஒளியும்.(146) ஏசாயா 49 :1-7, திரு.பாடல் 27. எபேசியர் 5 : 1-5. மத்தேயு 5 : 13-16.
முன்னுரை: கிறித்துவின் அன்பர் களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில்வாழ்த்துக்கள். இறைமக்கள் : உப்பும், ஒளியும். என்ற தலைப்பை குறித்து சிந்திப்போம். உப்பு என்றால் இனிமை என்று பொருள். ஆக உப்பு இட்டவர் என்றால் மனதிற்கு இனிமை சேர்த்தவர் என்று அர்த்தம். ஒருவர் மனதிற்கு சொல்லாலோ, செயலா லோ மற்றும் பொருள் உதவியா லோ மகிழ்ச்சி உண்டு பண்ணிய ஒருவரை உள் அளவும் அதாவது நம்முடைய ஆழ்மனது வரையி லும் நினைத்துக் கொண்டிரு என்பதற்காகத்தான் உப்பிட்டவ ரை உள்ளளவும் நினை என்றார் கள்.அதாவது, நமக்றகு உதவி செய் தவரை என்றும் மறக்க கூடாது என்பதாகும். நம்மை எல்லா நிலை யிலும், கைவிடா காத்திடும் ஆண் டவரை நாம் உப்பாக இருந்து மறக்காமல் வாழ்வதே கிறித்துவ வாழ்கை. பழைய ஏற்பாடாடில், உப்பு உடன் படிக்கை (The Covenant of Salt) என்பது, ஆரோனிய ஆசாரியத் துவத்துடன் கடவுளின் ஆசாரிய உடன்படிக்கை உப்பு உடன்படி க்கை என்று கூறப்படுகிறது. "இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்று முள நியமமா...