Cost of Discipleship. சீடத்துவத்திற்கான விலை. (145) தானியேல்: 6:11-23, திருப்பாடல் 34, 2 கொரிந்தியர் 6:1-10 மாற்கு 10: 35-45.
முன்னுரை:கிறித்துவின் அநாதி தீர்மானத்தின்படி தெரிந்து கொள் ளப்பட்ட அன்பர்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்து வின் இனிய நாமத்தில் வாழ்த்து
க்கள்.சீடத்துவத்துவம் என்றால்
என்ன? What is discipleship?கிறிஸ்தவத்தில்,ஒரு சீடர் இயேசு வை அர்ப்பணித்து பின்பற்றுபவர் . "disciple" என்ற வார்த்தை லத்தீ னில் discipulus என்பதன் மூலம் ஆங்கிலப்பயன்பாட்டில் வந்தது.
ஒரு சீடர் ஒரு ஆசிரியர் அல்லது ரபியின் (Rabbi) கீழ் கற்றுக் கொண்டு பயிற்சி பெறுபவர் ,
"ஒரு கிறிஸ்தவ சீடர் கிறிஸ்து வைப் பின்பற்றி, பிறர் பின்பற்று வதற்கு முன்மாதிரியாக கிறிஸ் துவைப் பின்பற்றும் ஒரு விசுவாசி (1 கொரிந்தியர் 11:1)."
நான்கு நியமன நற்செய்திக ளிலும், மேரி மக்தலீன் இயேசுவி ன் சிலுவையில் அறையப்பட்ட தற்கு சாட்சியாக இருக்கிறார், காலியான கல்லறையை முதன் முதலில் பார்த்தவள் , உயிர்த்த கிறித்துவை முதலில் கண்டவள் மகதலேனா மரியாள்.
இயேசுவோடு இனைந்து அவரின் ஊழியத்தை தன் பொருளாள் தாங்கிய பெண் சீடகி என்பதை நாம் அறிவோம்.
புதிய ஏற்பாட்டில் பெயரிடப்பட்ட இயேசுவின் ஒரே பெண் சீடர் தபிதா (டோர்காஸ்).என கான்கி றோம்.(திருதூதர் பணிகள் Acts: 9:36) சீடத்துவத்திற்கான விலை? என்பது,"பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கி க்கொண்டு என்னைப் பின் பற்ற ட்டும். (மத்தேயு 16:24) என்கிறார்
Self denial
சுய மறுப்பு என்பது,"கடவுளின் சித்தத்தைச் செய்வது, கடவுளு க்குக் கீழ்ப்படிவது, கடவுளுக்கு ஆம் என்று சொல்வது ஆகியவை சுய மறுப்பு." சுய மறுப்பு என்பது நாம் என்ன செய்ய விரும்புகிறோ மோ அதை வேண்டாம் என்று சொல்வதும் கடவுளின் விருப்பத் திற்கு ஆம் என்று சொல்வதும் ஆகும். உ.ம். இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில், கெத்செமனே தோட்டத்திற்குச் சென்று ஜெபம் செய்தார். அவரு க்கு முன்னால் அவரது கைது, விசாரணை மற்றும் மரணதண் டனை இருந்தது. அவர் ஜெபித் தார், 'என் தந்தையே, முடிந்தால், இந்த கோப்பை என்னிடமிருந்து எடுத்துவிடும். ஆயினும் நான் விரும்பியபடி அல்ல, நீ விரும்பிய படியே.' இரண்டாவது முறையாக," மீண்டும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக் கிண்ணம் அகல முடியா தென் றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்" என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். (மத்தேயு நற்செய்தி 26:42) 'நான் விரும்புவது போல் அல்ல, உங்கள் விருப்பப்படி' என்பதே சுயவெறுப்பாகும்.
அடுத்த எடுத்துக்காட்டாக; ஆண்டவரின் தாய் மரியாள், "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். (லூக்கா நற்செய்தி 1:38).
சீடத்துவத்திற்கான விலை முழு
தியாகத்தை குறிக்கிறது.
1.சீடத்துவத்திற்கான விலை. Cost of Discipleship. தானியேல்: 6:11-23
கிறித்துவின் அன்பு சீடர்களே! யூதா அரசன் யோயாக்கிமின் மூன்றாம் ஆட்சியாண்டில் பாபி லோனிய அரசன் நெபுகத்னேசர் எருசலேமுக்கு வந்து முற்றுகையி ட்டு, அழகுமிக்க, எல்லா ஞானத்தி லும் தேர்ச்சி பெற்ற, அறிவிலும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த இளைஞர்களை அரசனின் அரண் மனையில் பணியாற்ற திறமை பெற்றவர்களை பாபிலோனியா
விற்கு கொண்டுசென்றான்.இதில் 3000 பேர் முதலில் கொண்டு செல்லப்பட்டனர் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண் டும். அரசன் தான் உண்டு வந்த சிறப்புணவிலும், பருகிவந்த திராட்சை,இரசத்திலும்,நாள்தோறும் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுக்கும்படி ஏற்பாடுசெய்தான்.
ஆனால் திராட்ச்சை இரசத்தை தானியேலும், நண்பர்களும் குடிக்கவில்லை. இவ்வாறு மூன் றாண்டுகள் பயிற்சி அளித்த பின், இறுதியில்அரசன்முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தவேண்டும் என்று ஆணையிட்டான். இப்படித் தேர்ந்த தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானி யேல், அனனியா, மிசாவேல், அசரியா என்பவர்களும் இருந்தார் கள். அலுவலரின் தலைவன் கல்தேய மொழியில் தானியேலு க்குப் "பெல்தசாச்சர்" என்றும் அனனியாவுக்குச் "சாத்ராக்கு" என்றும் மிசா வேலுக்கு"மேசாக்கு" என்றும், அசரியாவுக்கு "ஆபேத் நெகோ" என்றும் மாற்றுப் பெயரி ட்டான். இவர்களுக்கு பெயர் மாறியதே தவிற; தங்கள் கடவு ளையும், எபிரேய கலாச்சாரத் தையும் மறக்கவே இல்லை. தானி யேல் நேபுகாத்னேசர்,(Nebuchadne zzar,)பெல்சாசர், (Belshazzar) மேதியனான தரியு (Darius the Mede)(BC 538-536)Darius ruled only two years) இவருக்குCyrus the Great என்ற பெயரும் உண்டு. இவர்கள் காலம் கி,மு 520 -486.இந்த மூன்று
அரசரிடம் தானியேல் பணி செய்தார். இவருக்கு கனவுகளின்
மறைபொருள்களை வெளிப்படுத் தும் ஆற்றல் பெற்றிருந்தார். (Interpretation of Dreams)
தானியேலும் அவருடைய தோழர் களும் கடவுள்மீது அசையாத நம் பிக்கை கொண்டு அவர்தம் கட்ட ளைகளுக்குப் பணிந்துநடந்ததால் தங்கள் எதிரிகளை மேற் கொண் டனர். மேதியனான தரியு அரசா ண்ட காலத்தில் தானியேல் மற்ற வர்களைவிட திறமைசாலியாக இருந்ததை தரியு அரசன் பார்த்தா ன். அதனால், தன்னுடைய தேசத் தில் இருந்த மிக முக்கியமான ஆட்களுக்கு தானியேலை அதிகா ரியாக வைத்தான். அவர்கள் தானியேலைப் பார்த்து பொறா மைப்பட்டார்கள். அவரை எப்படி யாவது ஒழித்துக்கட்ட நினைத்தா ர்கள்.அவர்தினமும் மூன்று தடவை கடவுளிடம் ஜெபம் செய்வது அவர்களுக்குத்தெரியும்.அதனால் அவர்கள் தரியுவிடம் போய், ‘ராஜாவே, மக்கள் உங்களைத் தவிர வேறு யாரிடமும் வேண்டிக் கொள்ளக் கூடாது என்று ஒரு சட்டம் போட வேண்டும். இந்தச் சட்டத்தை யாராவது மீறினால், அவர்களைச் சிங்கக் குகையில் போட வேண்டும்’ என்று சொன்னா ர்கள். அவர்கள் சொன்னது தரியு வுக்குப் பிடித்திருந்தது. அதனால், அவன் அந்தச் சட்டத்தில் கையெ ழுத்து போட்டான்.
தானியேல் அந்தப் புதிய சட்டத் தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் உடனடியாக, தன்னுடைய வீட்டுக் குப் போனார். திறந்த ஜன்னல் முன்னால் முட்டிபோட்டு ஆண்ட வரிடம் ஜெபம் செய்தார். அவர் மேல் பொறாமைப்பட்ட ஆட்கள் அவருடைய வீட்டுக்குள் நுழைந்து
அவர் ஜெபம் செய்வதைப் பார்த்தார்கள். அவர்கள் தரியு விடம் ஓடிப்போய், ‘தானியேல் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை. அவர் தன்னுடைய கடவுளிடம் தினமும் மூன்று தடவை ஜெபம் செய்கிறார்’ என்று முறையிட்டனர்
அரசன் தரியுவுக்கு தானியேலை ரொம்பப் பிடிக்கும். அவரைக் கொல்ல அவன் விரும்பவில்லை. அதனால், தானியேலை எப்படி யாவது காப்பாற்றுவதற்காக சாயங்காலம் வரை முயற்சி செய்தான். ஆனால், ராஜா ஒரு சட்டத்தில் கையெழுத்து போட்டு விட்டால், அவரால்கூட அதை மாற்ற முடியாது. வேறு வழியில் லாமல், தானியேலைப் பயங்கர மான சிங்கங்கள் இருக்கிற குகைக்குள் போடச் சொல்லி தன் ஆட்களிடம் சொன்னான்.அன்று ராத்திரி, தானியேலை நினைத்து தரியுவுக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. அவனால் தூங்கவே முடியவில்லை. காலையில், அவன் சிங்கக் குகைக்கு ஓடிப் போய், ‘தானியேலே, உன் கடவுள் உன்னைக் காப்பாற்றினாரா?’ என்று கேட்டான்.
குகைக்குள் இருந்து ஒரு குரல் கேட்டது. அது தானியேலின் குரல்தான்! ‘கடவுளின் தூதர் இந்தச் சிங்கங்களின் வாயை அடைத்துவிட்டார். அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை’ என்று தரியுவிடம் சொன்னார். தரியு வுக்கு ஒரே சந்தோஷம்! தானி யேலைச் சிங்கக் குகையிலிருந்து தூக்கிவிடும்படி உத்தரவு போட்டான். அவர் உடலில் சின்னக் கீறல்கூட இல்லை. அப்போது ராஜா, ‘தானியேல்மேல் பழி போட்ட ஆட்களை இந்தக் குகைக் குள் போடுங்கள்’ என்று கட்டளை போட்டான். அவர்களைக் குகைக் குள் போட்டபோது, சிங்கங்கள் அவர்களைக் கடித்துத் தின்றன. இதுதான் தானியேலுக்கு ஆண்டவரின் சீடனாக இருப்பதின் விலையாகும்.
2. மக்களுக்காக சேவை செய் வதே சீடத்துவத்தின் விலை. Service to people is the Cost of discipleship. 2 கொரிந்தியர் 6:1-10.
கிறித்துவின் அன்பு சீடர்களே! சீடத்துவின் விலை என்பது, ஆண்டவரின் வார்த்தையின்படி;
"மானிடமகன் தொண்டு ஏற்பத ற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்று வதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடு ப்பதற்கும் வந்தார்" என்று
(மாற்கு நற்செய்தி 10:45) மானிட
சமுதாயத்திற்கு தொண்டாற்று வதே சீடத்துவத்தின் பணியாகும்..
சேவை இரண்டுவகை, ஒன்று
கடவுளுக்கு சேவை செய்வது,
மற்றொன்று மனித சமுதாயத்தி ற்கு சேவை செய்வது. கிறித்துவ
அன்பின் அடிப்படையில், மனித
ர்களுக்கு சேவை ஆற்றுவது. கடவுளுக்கான சேவை, ஊழியர்
களை தாங்குவது, ஆலயங்கள்
கட்டுவது, நற்செய்தி அறிவிப்பது
திருச்சபையோடு இணைந்து
பணியாற்றுவதே ஆண்டவருக் கான சேவைகளாகும். கடவுளின் ஊழியர்களுக்கு மிகுந்த சகிப்புத் தன்மை தேவை.கொரிந்திய சபை யில் பவுல் அடிகளாருக்கு சில குறிப்பிட்ட மற்றும் வேதனையான சிரமங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அதிகாரத்தை எழுதினார் என்பதை நாம் நினை வில் கொள்ளவேண்டும். அவரு டைய அப்போஸ்தலிக்க ஊழியத் தைப் பற்றி வதந்திகள் பரப்பப்ப ட்டன, மேலும் சபையிலுள்ள சிலரோடு அவருடைய உறவும் சீர்குலைந்தது (2 கொரிந்தியர் 1-7). கூடுதலாக, அவர் ஜெருசலேம் தேவாலயத்திற்காக பணம் திரட்ட வேண்டியிருந்தது (2 கொரிந்தியர் 8-9) மேலும் " நாங்கள் அடிக்கப்ப ட்டோம்; சிறையில் அடைக்கப்பட் டோம்;குழப்பங்களில்சிக்கினோம்; பாடுபட்டு உழைத்தோம்; கண் விழித்திருந்தோம்; பட்டினி கிடந்தோம்; (2 கொரிந்தியர் 6:5) என ஊழியத்தில் தங்களுக்கு
ஏற்பட்ட இன்னல்களை தூய பவுல்
அடிகளார் பட்டியலிடுகிறார். இதுவே சீடத்துவத்தின் விலை.
The Cost of discipleship is not based on a bed of roses, but on the bed of
Thorns. பாடுகளை ஊழியத்தில்
அனுபவிக்காமல் ஆண்டவருக்கு
சீடனாக முடியாது. தூய பவுல் அடிகளார் திமொத்தேயுவிற்கு அறிவுருத்தும்போது," கிறிஸ்து இயேசுவின் நல்ல படை வீரனைப் போன்று துன்பங்களில் பங்கு கொள். (2 திமொத்தேயு 2:3) என
ஆண்டவரின் சீடன் துன்பப்பட
அழைக்கின்றார். இதனால் நாம்
கடவுளுடன் இணைந்து செயல் படுவதால், கடவுளின் அருளை வீணாகப் பெற வேண்டாம் என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என பவுல் அடிக ளார் கூறுவது, கடவுள் நிமித்தம்
மனித சேவை செய்வதே! இதன்மூலம் ஏற்படும் பாடுகளை
தாங்குவதே சீடத்துவின் விலை
யாகும்.
கொரிந்தியர்களைப் போலவே, இன்று சர்ச்சுகளும் எவ்வாறு உண்மையாக வாழ்வது என்பதை அறிய போராடுகின்றன. சில சமயங்களில் அந்தப் போராட்டம், சர்ச் உறுப்பினர்கள் உண்மையாக வாழ உதவும் உறவுகளில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. 2 கொரிந்தியர் 6 இல், பவுல் அந்த உறவுகளை சரியான கண்ணோட் டத்தில் வைக்கிறார். பவுலைப் பொறுத்தவரை, ஒருவரை யொருவர் நேசிக்கத் தவறுவது கடவுளின் கிருபையை "வீணாக" ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறி யாகும். இப்போதே இரட்சிப்பின் நாள். வெறுமனே வார்த்தை களால் அல்ல, செயலின் மூலம் உண்மைத்தன்மையை வெளிப்ப டுத்துவதற்கான நேரம் இது. எனவே, கடவுளின் சீடனாக வாழ நம் ஊழியத்தின் இன்னல்களை
ஆண்டவருக்கு விலையாக கொடுப்போம்.
3.முதன்மையானவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் அடிமையாக இருக்க வேண்டும்.He who wants to be first must be the slave of all.
மாற்கு 10: 35-45l
கிறித்துவின் அன்பு சீடர்களே!
ஆண்டவராகிய கிறித்து,
இயேசு நாசரேத்தின் சிறிய, முக்கியமற்ற நகரத்தில் வளர்ந்தார். அவருடைய வருங் கால சீடர்களில் ஒருவர் கூட, “ நாசரேத்திலிருந்து ஏதாவது நல்லது வருமா? ” இயேசு ஒரு மதத் தலைவராக இருக்கப் பயிற்றுவிக்கப்படவில்லை. அவர் ஒரு தச்சரின் மகன், அதைச் செய்ய பயிற்சி பெற்றார். அவர் தனது வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்களை யாராலும் கவனிக்கப்படாமல் கழித்தார். அவர் தனது பொது ஊழியத்தைத் தொடங்கிய போதும், அவர் இஸ்ர வேலின் கிராமப்புறங்களில் சுற்றிச் சென்றார், மகத்துவத் தைத் தேடவில்லை; ஆனால் சேவை, கற்பித்தல்; மற்றும் பிரசங்கம். இம் மூன்றையும் முழுமையாக செய்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எருசலேமுக்குச் சென்றார், ஒரு பெரிய ராஜாவாக ஏற்றுக்கொள் ளப்படாமல், மரணத்திடம் ஒப்படை க்கப்பட்டார். அவர் தம் சீடர்களின் கால்களைக் கழுவினார். அவர் தன்னை கைது செய்யவும், சித்தி ரவதை செய்யவும், சிலுவையில் அவமானப்படுத்தவும் அனுமதித் தார். அவமானகரமான சூழலி லும் தந்தையின் கட்டளையை
நிரைவேற்றினார். ஒருநாள்
இயேசுவின் சீடர்களில் இருவர் மகத்துவத்தைப் பற்றி புரிந்து கொள்வதில் தொடங்குகிறது. யாக்கோபும், யோவானும், இயேசு மகிமைக்குள் வரும்போது அவரு டைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உட்கார விரும்புகி றார்கள். அவர்கள் பரலோக ராஜ்ய த்தில் பெரியவர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அது என்னவென்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இயேசு அவர்களுக்கு மகத்துவத் திற்கான பாதையை வழங்கு கிறார், ஆனால் அது அவர்கள் மனதில் இருந்த பாதையை விட மிகவும் வித்தியாசமான பாதை. அவர் தம்முடைய சீடர்களை அழை த்து, அவர்களிடம், “ உங்களில் பெரியவனாக ஆக விரும்புகிற வன் உங்கள் வேலைக்காரனாக இருக்க வேண்டும், உங்களில் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறவன் அனைவருக்கும் அடிமையாக இருக்க வேண்டும். என போதிக்கிறார். ஏனென்றால், மனுஷகுமாரன் ஊழியம் செய்யப் படுவதற்கு அல்ல, ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் . (மாற்கு 10:43-45) என தெளிவுப்
படுத்துகிறார்.அதாவது,மற்றவர்களுக்கு சேவை செய்வதே உண் மையான சீடத்துவத்திற்கான பாதை (Service is the way to discipleship) என்று இயேசு கூறுகிறார். சேவை செய்வதன் மூலம் தானே முன்மாதிரியாக இயேசு தனது சொந்த வாழ்க் கையை வழங்குகிறார். எனவே தான், அருட்பணியாளர்கள் நற்
செய்திபணியுடன் சேவை பணியை சிறப்பாக செய்தனர்.
இதனால் உலக வரலாற்றின் போக்கை இயேசுவை விட வேறு யாரும் மாற்றியதில்லை என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கூட அதை ஒப்புக்கொள்வார்கள். ஏறக்குறைய எந்த தரநிலையிலும் இயேசு சிறந்தவராக இருந்தார். ஆனால் இந்த நற்செய்தி வாசிப்பி ல், அவர் மிகவும் தீவிரமான ஒன் றைச் செய்கிறார்: அவர் நம் அனைவருக்கும் மகத்துவத்தை மறுவரையறை செய்கிறார். உண்மையான சீடத்திற்க்கான பாதை சேவையில் உள்ளது என்று அவர் கூறுகிறார். மேலும் சீடத்துவத்திற்கான இந்தப் புதிய பாதையை அவர் நமக்குக் கற்பிப் பது மட்டுமல்ல ; அவர் அதில் வாழ்கிறார் : மனுஷகுமாரன் சேவை கொள்ள வரவில்லை, சேவை செய்ய வந்தார்.சேவை செய்ய கிருபை நிரைந்த இதய மும், அன்பை உருவக்கும் ஆன்மாவே தேவை.இதற்கு கல்லூரி பட்டமும், பதவியோ தேவையில்லை. கிறித்துவின் அன்பர்களே! சீடத்துவத்தின் எடுத்
துக்காட்டாக மார்ட்டின் லூத்தர் கிங் Jr.(1929-1968) ஐக்கிய அமெரி க்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் Babtist, ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக் க அமெரிக்க மனித உரிமை இயக் கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்ட த்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படு கிறார். பாப்டிஸ்ட் போதகராக இருந்த கிங் தனது இளமைக் காலத்திலேயே சமூக உரிமை வாதியாக இனங்காணப்பட்டார்.
அவர் ஒருமுறை இந்த நற்செய்தி வாசிப்பில்( மாற்கு 10:35-45)ஐ மிகவும் பிரபலமான பிரசங்கத் தைப் பிரசங்கித்தார்,நீங்கள் முக்கியமானவராக இருக்க விரும்பினால் - அற்புதம். நீங்கள் அங்கீகரிக்கப்பட விரும்பினால் - அற்புதம். நீங்கள் சிறந்தவராக இருக்க விரும்பினால் - அற்புதம். ஆனால் உங்களில் பெரியவர் உங்கள் வேலைக்காரராக இருப் பார் என்பதை அறிந்து கொள் ளுங்கள். அது சீடத்துவத்தின் புதிய விளக்கம். அனைவருமே
தலைவர் ஆகலாம், அனைவருமே
சேவை செய்யலாம். You will become a greatness, by serving humanity. By serving humanity, you
are a disciple to God.என முடிக்கி றார்.
உங்களுக்கு கருணை நிறைந்த இதயம் மட்டுமே தேவை, அன்பினால் உருவாக்கப்பட்ட ஆன்மா சேவையின் அடிப்படை. சேவை செய்யும்போது, ஏற்படும்
விளைவுகளே சீடத்துவத்தின்
விலையாகும். மனுச குமாரன் ஊழியம் கொள்ள வரவில்லை, ஊழியம் செய்ய வந்தார். நம்மையும் அவ்வாறே செய்யும்படி அழைக்கிறார். கடவுளின் மகிமைக்கு. ஆமென்.
Prof.Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
Comments
Post a Comment