PEOPLE OF GOD : SALT AND LIGHT.இறைமக்கள் : உப்பும், ஒளியும்.(146) ஏசாயா 49 :1-7, திரு.பாடல் 27. எபேசியர் 5 : 1-5. மத்தேயு 5 : 13-16.
முன்னுரை: கிறித்துவின் அன்பர்
களே! உங்க அனைவருக்கும்
இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில்வாழ்த்துக்கள். இறைமக்கள் : உப்பும், ஒளியும்.என்ற
தலைப்பை குறித்து சிந்திப்போம்.
உப்பு என்றால் இனிமை என்று பொருள். ஆக உப்பு இட்டவர் என்றால் மனதிற்கு இனிமை சேர்த்தவர் என்று அர்த்தம். ஒருவர் மனதிற்கு சொல்லாலோ, செயலா லோ மற்றும் பொருள் உதவியா லோ மகிழ்ச்சி உண்டு பண்ணிய ஒருவரை உள் அளவும் அதாவது நம்முடைய ஆழ்மனது வரையி லும் நினைத்துக் கொண்டிரு என்பதற்காகத்தான் உப்பிட்டவ ரை உள்ளளவும் நினை என்றார் கள்.அதாவது, நமக்றகு உதவி செய் தவரை என்றும் மறக்க கூடாது என்பதாகும். நம்மை எல்லா நிலை யிலும், கைவிடா காத்திடும் ஆண் டவரை நாம் உப்பாக இருந்து மறக்காமல் வாழ்வதே கிறித்துவ
வாழ்கை.
பழைய ஏற்பாடாடில், உப்பு உடன்
படிக்கை (The Covenant of Salt) என்பது, ஆரோனிய ஆசாரியத் துவத்துடன் கடவுளின் ஆசாரிய உடன்படிக்கை உப்பு உடன்படி க்கை என்று கூறப்படுகிறது. "இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்று முள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன் வழி மரபுக்கும் ஆண்டவர் திரு முன் என்று முள "உப்பு உடன் படிக்கை" ஆகும். (எண்ணிக்கை 18:19)
நியூ ஆக்ஸ்போர்டு சிறுகுறிப்பு வேதத்தின் படி , "உப்பு" என்பது பெரும்பாலும் " உப்பைப் பாது காக்கும் பொருளாகப் பயன் படுத்துவதால், ஒரு நிரந்தர உடன்படிக்கை " ,(The Everlasting Covenant) என்று அர்த்தம்.
ஆண்டவர் "நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படைய லில் கடவுளின் உடன்படிக்கை யாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோ டும் உப்பையும் படைப்பாயாக.
(லேவியர் 2:13) என கட்டளையிடு கிறார். லேவியராகமம் புத்தக த்தில் உள்ள தானியக் காணிக் கைகள் பற்றிய கட்டளைகள் கூறுகின்றன: "உங்கள் தானியப் பலியின் ஒவ்வொரு காணிக்கை யிலும் உப்பைச் சுவைக்க வேண் டும் ; உங்கள் கடவுளின் உடன் படிக்கையின் உப்பை உங்கள் உணவுப் பலியில் குறையாமலி ருக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் காணிக்கைகள் அனைத் தையும் நீங்கள் செலுத்த வேண்டு ம்.உப்புவழங்குங்கள்."இப்படிப்பட்ட ஒவ்வொரு காணிக்கைகளும் சினாய் மலையில், இஸ்ரவேல ருடன் கடவுள் செய்த உடன்படிக் கையின் நினைவூட்டல் மற்றும் கடவுளுக்கும் கடவுளின் உடன் படிக்கைக்கும் உண்மையாக இருப்பதற்கான வழிபாட்டாளரின் கடமையாகும் என்பதை மனதில்
வைத்து ஆண்டவர் ,"நீங்கள் மண் ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர் கள். (மத்தேயு நற்செய்தி 5:13) என
கூறுகிறார்.
உலகத்தின் ஒளியாகிய இயேசு, தம் சீடர்களும் இவ்வுலகின் ஒளி யாகத் திகழவேண்டுமென கூறுகி றார். அதாவது, நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பெறும்போது, நாமும் ஒளிரும் கிறிஸ்துவின் ஒளியாகி அதனைப் பரவச் செய்கின்றோம். இயேசு தொடர்ந்து, மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. “எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதி ல்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்” (மத் 5:14-15) என்கின்றார்.அவருடைய சீடர்களா கிய நாமும், மலையின் மீது அமை க்கப்பட்ட நகரத்தைப் போலவும், அணையாத விளக்கைப் போல வும் சுடர்விட அழைக்கப்பட்டுள் ளோம். ஆகவே, கிறிஸ்துவின் ஒளியால் இவ்வுலகைப் பற்றி எரியச்செய்வோம்.
1. இஸ்ரவேலின் மீட்பரே, தேசங்களின் ஒளியானவர். Israel’s Redeemer is a Light to the Nations. ஏசாயா 49 :1-7,
கிறித்துவிற்கு பிரியமானவர்களே
இஸ்ரவேலரின் மீட்பரே, தேசங்க ளுக்கு ஒளியாக இருக்கிறர்.
இந்த அதிகாரம், ஏசாயாவில் உள்ள 5 வேலைக்காரன் பாடல் களில் 2வது பாடல் இது. இஸ்ர வேல் சந்ததிகளை மீட்டெடுக்க கிறிஸ்துவின் பணியை வெளிப் படுத்துகிறது; ஏசாயா 49:1-7 தேசங்களுக்கு ஒளியாக இருக் கும்படி அழைக்கப்பட்ட கடவுளின் ஊழியரைப் பற்றி பேசுகிறது; மற்றும் புறஜாதி களுக்கு ஒரு ஒளியாகபணியாற்ற வேண்டும் என அழைக்கிறது. ஆண்டவர் ஏசாயா 41ல், "நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே! நான் தெரிந் தெடுத்த யாக்கோபே! என் அன்பன் ஆபிரகாமின் வழி மரபே! உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்; தொலை நாடுகளினின்று உன்னை அழைத்தேன்; "நீ என் அடியவன்;(Servant) நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்; உன்னை நான் தள்ளிவிட வில்லை" என்று சொன்னேன்.
(எசாயா 41:8,9) என நம்மை ஆண்டவரின் ஊழியக்காரர் களாய் அழைத்திருக்கிறார். ஆண் டவர் ஆபிரகாமை அழைத்து, “நான் உன்னைப் பெரிய ஜாதி யாக்குவேன். நான் உன்னை ஆசீர் வதிப்பேன், அதனால் நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள். பூமி யிலுள்ள எல்லாக் குடும்பங்களும் உன்னில் ஆசீர்வதிக்கப்படும்." இதுவே இஸ்ரவேலின் அடை யாளம், இதுவே இஸ்ரவேலின் அழைப்பு: கடவுளின் தேர்ந்தெடுக் கப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட மக் களாக, பூமியிலுள்ள அனைத்து தேசங்களுக்கும் ஆசீர்வாதமாகத்
தேர்ந்தெடுக்கப்படும் என்பதே
கடவுளின் அழைப்பாகும் . கடவுளின் பணியளர்களை," ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழை த்தேன்; உம் கையைப் பற்றிப் பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாக வும் பிற இனத்தாருக்கு ஒளியாக வும் நீர் இருக்குமாறு செய்வேன். (எசாயா 42:6)என நம்மை நியமித் திருக்கிறார்.உலக முழுவதும் மீட்படைய ஆண்டவர் நம்மை இயேசு கிறித்துவின் வழியாக தெரிந்து கொண்டார். எனவே, நம்மை உலகின் ஒளியாக நியமி
த்திருக்கிறார். "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலை மேல் இருக்கும் நகர் மறைவாயி ருக்க முடியாது. (மத்தேயு 5:14)"
எனவே, அன்பானவர்களே!
"எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றி யுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!
(எசாயா 60:1) இதன் மூலம், "பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; (எசாயா 60:3) இதுவே, ஆண்டவர் நம்மை தெரிந்து கொண்டதின் நோக்கமாகும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர் கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ் வார்கள்.(மத்தேயு நற்செய்தி 5:16)
2.அன்பு கொண்டு வாழ்வதே இறைமக்கள். God's people live with love.எபேசியர் 5 : 1-5.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே !, God is Love என்பர், அதாவது, அன்பே கடவுள் என்பர்.
Love is God கடவுள் அன்பாகவே இருக்கிறார்.ஆக, அன்பே இறை வன் என்றால், அந்த அன்பினால் தானே அவரை அடைய முடியும். அப்படி அன்பினால்தான் அவரை அடைய முடியும் என்றால், அந்த அன்பை ஆண்டவர்பால் செலுத் துவது தானே வழிபாடாக இருக்க முடியும்? எனவேதான்,ஆன்மீக வாதிகள் எல்லாம் உடலை வருத் திக் கொள்வதை வழிபாடாகக் கருதவில்லை. அன்பைப் பெருக் கிக் கொள்வதையே வழிபாடாகக் கருதினார்கள். அன்பின் ஆண்ட
வர், திருத்தூதர் பேதுருவைப் பார்
த்து மூன்று முறை கேட்கிறார்,
"இயேசு அவரிடம், "யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னி டம் அன்பு உண்டா?" என்று கேட் டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயரு ற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக் கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளை ப் பேணிவளர். (யோவான் 21:17)
ஆண்டவர் தன் வாழ்நாள் முழுவ தும் அன்பை விதைத்தார். தன்
சீடர்களூம் அன்பாயிருங்கள்
என்ற புதிய கட்டளையை கொடுக் கிறார். எனவேதான் பேதுருவைப்
பார்த்து மூன்றுமுறை "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று
கேட்கிறார், நம்மிடமும் இதே கேள்
வியை கேட்கிறார், உண்மையாக
ஆண்டவரிடம் அன்பு கொண் டோர் அவர் திருப்பணியான நற்
செய்தி பணியாற்ற வேண்டும்.
எனவேதான் திரு தூதர் பவுல்
அடிகளார், "ஆகவே நீங்கள் கடவு ளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். "
(எபேசியர் 5:1) என அன்பு கொண்டு வாழ அழைக்கிறார். ஏனேனில், அன்பில்லாதவன்
இறைவனை அறியான். கடவுள் அன்பாய் இருக்கிறார்.
(1 யோவான் 4:8) என வேதம்
கூறுகிறது. ஆண்டவர் நமக்காக
நறுமணம் வீசும் பலி (A fragrance of offering) யாக கடவுளிடம் ஒப்ப டைத்து, நம்மிடம் அன்பு கூர்ந்தார்.
அவ்வாறே, நாம் அன்பு கொண்டு வாழும்படி அழைக்கிறார்.
3. இறைமக்கள் : உப்பும், ஒளி யும்.PEOPLE OF GOD : SALT AND LIGHT. மத்தேயு 5 : 13-16.
கிருஸ்துவின் அன்பர்களே!
உலகிற்கு உப்பும், ஒளியாய் இருக்
கின்றவர்களே இறைமக்கள்.உப்பு
நமக்கு மிக முக்கிய உணவுப்
பொருளாகும். இதன் வேதியியல்
பெயர்," சோடியம் குளோரைடு".(NaCl) இது மட்டுமே மனித உடலின் அனைத்து உயிரணுக் களிலும் காணப்படும் ஒரே கனிம மாகும்.உப்பு மிகவும் மதிப்பு வாய் ந்தது. சில நேரங்களில் அது நாணயமாக பயன்படுத்தப்பட்டது.
உப்பு உணவின் சுவையை அதிக ரிக்கிறது. அத்துடன் எதைத் இனைத்தாலும் பாதிக்கிறது, இது உணவையும் பாதுகாக்கிறது. தன்னையே கரைத்து சுவைக் கிறது.இதேபோல், விசுவாசிகள் கிறிஸ்துவுக்கான சாட்சியத்தின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள உலகில் செல்வாக்கு செலுத்த வேண்டும். அவர்களின் வாழ்க் கையும் சாட்சியும் உலகைப் பாது காக்கிறது மற்றும் உப்பு போன்ற நேர்மறையான வழியில் உலகத் தை பாதிக்கிறது. ஆனால் உப்பு மற்ற சுவைகளை விட வித்தியாச மானது. இது அதன் தனித்துவ மான சுவை கொண்டது. நாமும் உலகத்திலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும். நாம் இறைவனுக்கு ஒரு வலுவான சுவை மற்றும் செல்வாக்கு வேண்டும். அப்படி யானால், நாம் நல்ல உப்பைப் போல மிகவும் மதிப்பு மிக்க வர்களாக இருப்போம். ஆனால் நாம் அவ்வாறு இல்லை யென்றால், நாம் பயனற்றவர்கள்.
நாம் கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளி தாங்கிகள்.( Light bearers) யோவான் 8:12, எபேசியர் 5:8. – இந்த வசனங் களில் இயேசு உலகத்தின் ஒளி என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இயேசு தம்மைப் பற்றி கூறிய ஏழு "நான்" அறிக்கைகளில் இதுவும் ஒன்றா கும் , இது உலகின் ஒளியாக இருப்பது அவரது இயல்பின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் என்பதை நமக்குக் காட்டுகிறது.
தேவன் நம்முடைய பாவங்களை நீக்கி, தம்முடைய நீதியை நம்மீது வைப்பது போல, அவர் நம்முடைய இருளை அகற்றி, அவருடைய ஒளியை நமக்குள் வைக்கிறார். நாம் உண்மையில் கர்த்தரில் ஒளியாக இருக்கிறோம்." மோசே சீனாய் மலையிலிருந்து இறங்கிச் செல்கையில், உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் தம் கைகளில் தாங்கிக் கொண்டிருந் தார். மோசே கடவுளோடு பேசியதால் அவர் முகத்தோற்றம் ஒளிமயமாய் இருந்தது. ஆனால் மோசே அதை அறியவில்லை.
(விடுதலைப் பயணம் 34:29)
மோசேயின் முகம் பிரகாசித்தது. கடவுளுடன் நேரம் செலவழித்த தால் அவரது முகம் பிரகாசமாக இருந்தது. அவர் கடவுளை சந்தித்தார். அவர் கடவுளுடன் தொடர்பு கொண்டார். கடவுளுட னான இந்த சந்திப்பு மோசேயை வேறு ஒரு நபராக மாற்றியது.உள்ளத்தில் அவர் வித்தியாசமாக இருந்தார். ஆனால் வெளிப்புறமாக அவரும் வித்தியாசமாக இருந்தார். ஏதோ விசேஷம் நடந்ததை இஸ்ரவேல் ஜனங்கள் பார்க்க முடிந்தது. மோசே வித்தியாசமானவர் என்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. இதேபோல், நீங்கள் கடவுளுடன் நேரத்தைச் செலவிட்டால் நீங்கள் மாற்றப்படுவீர்கள். நீங்கள் அவருடன் எவ்வளவு தரமான நேரத்தை செலவிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர் உங்களை உள்ளே இருந்து மாற்றுவார். உங்கள் அணுகு முறை வித்தியாசமாக இருக்கும். உங்கள் முகம் வித்தியாசமாக இருக்கும். உங்கள் வார்த்தைக ளும் குரலும் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் பேச விரும் புவது வித்தியாசமாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு, கிறிஸ்துவுக்காக மேலும் மேலும் பிரகாசமாக பிரகா சிக்கும்போது, உங்கள் குடும்பத்தி னரும் நண்பர்களும் கவனிப்பார் கள். அவர்கள் அவ்வாறு செய்யும் போது, உங்கள் நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற நம் பிதாவை மகிமைப்படுத்து வதற்காக, கர்த்தராலேயே என்று அவர்களுக்குத் தெரியப்படுத்து வதற்கான வாய்ப்பைப் பயன்படு த்துங்கள். அதாவது, ஒளியைப் பிரகாசிப்பதே குறிக்கோள் அல்ல, எனவே நீங்கள் எவ்வளவு நல்ல வர் என்பதை மக்கள் கவனிப் பார்கள். அதனால் அவர்கள் இறைவனிடம் ஈர்க்கப்படுவார்கள்.
நாம் பிரகாசமாக பிரகாசிக்க நாம் இறைவனுடன் நேரத்தை செலவிட வேண்டும்.யோவான் 1:4 இல் காணப்படுவது போல் , "அவரில் ஜீவன் இருந்தது; ஜீவன் மனிதர்களுக்கு ஒளியாயிருந்தது" என்று விளக்குவது ஜீவனாக ஆண்டவர் வரையறுக்கப்படுகி றார் . அவர் மூலம் நம்பிக்கை கொண்டவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவார்கள்.நீங்கள் உலகத்தின் ஒளி.விசுவாசிகள் உலகத்தின் வெளிச்சம்.
இது ஒரு பெரிய பாராட்டு ஆனால் ஒரு பெரிய பொறுப்பு. இது ஒவ்வொரு விசுவாசியின் தனிப்பட்ட மதிப்பு மற்றும் பணி யின் சக்திவாய்ந்த அறிவிப்பு. சங்கீதக்காரன் கூறுவதுபோல், "என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:105) நாம் பிறருக்கு ஒளி
தற ஆண்டவர் நம் பாதைக்கு
வெளிச்சமாக இருக்கிறார். நம்
வாழ்வு உலகில் உப்பாகவும், ஒளி
யாகவும் விளங்க நம் வாழ்வு மலர ஆண்டவர் அருள் புரிவாராக.
ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
Comments
Post a Comment