இளையோர் ஞாயிறு. Youth Sunday. பொருளுள்ள வாழ்வைத் தேடும் இளைஞர்(143) Youth in Search of Meaningful life.தொடக்க நூல் Genesis 39:1-23. திருப்பாடல் 17. எபிரேயர் 12:1-11 , யோவான் 1:43-51.
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமானவர்களே! இயேசு கிறித் துவின் இனிய நாமத்தில்வாழ்த்து
க்கள். இளையோர் ஞாயிறு.. Youth
Sunday நம் தென்னிந்திய திருச்ச பைகளில் கொண்டாடப்பட இருக் கிறது. அதன் தலைப்பு ,"பொரு ளுள்ள வாழ்வைத் தேடும் இளைஞர்" (Youth in Search of Meaningful life) இளைஞர் என்பவ ர்கள் 16 வயது முதல் 35 வரை உள்ளவர்கள். திருச்சபையின்
முக்கிய பணி என்ன வெனில்:
இளைஞர்கள் ஆண்டவரின்
வார்த்தையை தெளிவாக, உறுதி யாக அறியசெய்வது. ஆண்டவரு டன் நெருங்கிய உறவை ஏற்படு த்தி திருச்சபைக்கு சாட்சியாக உறுவாக்குவதே. ஒவ்வொருவரும்
திமொத்தேயு தன் வாலிப வயதில் எவ்வாறு எபேசு திருச்சபையை நடத்தினாரோ அவ்வாறு நம்
இளைஞர்கள் செயல்பட திருச் சபை முன் வரவேண்டும்." நீ இளைஞனாய் இருப்பதால் யாரும் உன்னைத் தாழ்வாகக் கருதாதிரு க்கட்டும். பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை,தூய்மைஆகியவற்றி ல் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரி யாய் விளங்கு. (1 திமொத்தேயு 4:12) அன்பு வாலிபனே! நீரே எதிர்கால திருச்சபையை வழிநடத் தும் ஒளி, இந்த ஐந்து பண்புகளில்
நிலைத்திடஉம்மைதயார்செய்வது திருச்சபையின்மற்றும்பெற்றோர்களின் தலையாய கடமையாகும். இளைஞர்களே நீங்கள்தான்
திருச்சபையின் எதிர்காலம். உங்க
ளின் உன்னத வழிகாட்டிகள் யோசேப்பு, தாவிது, சாத்ராக், மேசாக், ஆபேத்நெகோ, தூய மரியாள், திமொத்தேயு, 30 வயது
இளைஞனாக உலகை இரட்சிக்க
வந்த இயேசு கிறித்துதான். அதனால் தான்நீதிஅரசர்சாலமன், "ஆகையால், உன்னைப் படைத்த வரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. "வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே" என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும்வருமுன் அவரை உள்ளத்திலே நினை.(பிரசங்கி.)(சபை உரையாளர்12:1).
இக்கால இளைஞர்களுக்கு பல
சவால்கள் இருக்கின்றன. அவர் களை ஆண்டவரின் வழியில்
நடத்துவது பெரிய சவாலகும். அதிகரிக்கும் குற்ற பின்னனிகள்
நம் கிறித்துவ இளைஞர்களை பாதிப்பது மிக கவலை அளிக் கிறது. 5 குற்றவாளிகளில் ஒருவர்
கிறித்துவறாக இருப்பது மிகவும்
கவலை அளிக்கிறது.
" பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய்கற்பிப்பதைத்தள்ளிவிடாதே; அவை உன் தலைக்கு அணிமுடி; (Ornament of Grace) உன் கழுத்துக்கு மணிமாலை. (Chains)
பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போகஇணங்காதே.
(நீதிமொழிகள் 1:8-10) என சாலமோன் அரசர்தரும், அறிவுரை கள் காலத்தால் என்றும் அழியா தது.
1. ஆண்டவர் யோசேப்போடு இருந்தார். The Lord was with Joseph.தொடக்க நூல் Genesis 39:1-23.
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! யாக்கோபு ,(Jacob) ராக்கே ளுக்கு (Rachel)பிறந்தவர்தான்
யோசேப்பு (Joseph). இவரை "கனவுகளின் மன்னன்"(The King of
Dreams) என தன் சகோதரர்களால்
அழைக்கப்பட்டார். தன் முதிர் வயதில் யோசேப்பு பிறந்ததால்
அவன் மீது அதிக பாசம் கொண்டி ருந்தார் யாக்கோபு. இது மற்ற
சகோதரர்களுக்கு யோசேப்பு மீது
பொறாமை ஏற்பட்டது. மற்றும்
தன் அண்ணன்களிடம் சொல்லு வார். அவர் கனவில் சூரியனும் நிலாவும் பதினொரு நட்சத்திரங்க ளும் தன்னை வணங்கியது என்றார் (ஆதியாகமம் 37: 9) அறுவடை செய்து அரிகட்டுகள் கட்டி கொண்டிருந்தோம். அப்போது என் அரிகட்டு நிமிர்ந்து நின்றது . உங்கள் அரிகட்டுகள் என் பக்கமாய் சாய்ந்து வணங்கி நின்றது என்றார். நாங்கள் உன்னை வணங்க வேண்டுமா
என சகோதர்கள் பொறாமை கொண்டனர். பொறாமை அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி. (தொடக்கநூல் 37:24)பிறகு
20 வெள்ளி காசிற்கு மிதியான் நாட்டு வணிகர்கள் இஸ்மயேல ரிடம் விற்றனர். அவர்களும் யோசேப்பைஎகிப்திற்குக்கொண்டு சென்றனர். அவரை பார்வோ னின் அதிகாரிகளுள் ஒருவனும் மெய்க்காப்பாளர் தலைவனுமான போத்திபாரிடம் யோசேப்பை விற்றனர். அவரின் வயது 17.
" ஆண்டவர் யோசேப்புடன் இருந் தார். எனவே, அவர் சிறப்புற்றவரா கத் தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
(தொடக்கநூல் 39:2) ஆண்டவர் அவரோடு இருந்ததையும் அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர் துலங்கச் செய்தார். ஆனால், போத்திபார் மனைவி
மூலம் அவனுக்கு சோதனை
வந்தது, "இந்த வீட்டில் என்னை விட அதிகாரம் பெற்றவர் ஒருவரு மில்லை. நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால், உங்க ளைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்று தன் மேலாடையை கழட்டி
விட்டு வெளியே ஓடிவிட்டார். தன்
மனைவியின் தவறான புகாரின்
பேரில் அவன் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டான்.இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
அன்பு இளைஞர்களே! நமக்கு
பாதளத்தில் தள்ளப்படும் சூழ்நி லை வந்தாளும் சிறைச்சாலை
தண்டனை வந்தாலும் நம் பொறு மையினால், நம் பற்றுறுதியை
உறுதிசெய்யும்போது,அரன்மனை வாழ்வை தருவார். சிறைச்சாலை யிலிருந்து,அரன்மனை அதிகாரி யாக உயர்தப்பட்டார்.
"Unless we experience the pit and the prison, we could not dwell in the palace. " அரசருக்கு அடுத்த இடத்
திற்கு உயர்த்தப்பட்ட யோசேப்பி
ற்கு வயது 30. எல்லா நிலைகளி லும் ஆண்டவர் அவருடன் இருந்
தார். எந்நிலையிலும் அவர் பாவம்
செய்யவில்லை. கர்த்தருக்கு பிரி யமானமான வாழ்க்கை வாழ்ந் தார். Pit to Prison to Palace.
ஆண்டவர் உன்னை வாலாக்கா மல் தலையாக்குவார். தீங்கிற்கு
விலகி ஓடு. அவர் உன்னை
உயர்த்துவார்.
2.நீயே கிறித்துவின் சாட்சி. You
are the Witnesses of God. ,எபிரேயர்
12:1-11.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மேகம் போன்ற திரளான சாட்சிகள் (The cloud of witness) நம்மை சூழ்ந்து இருக்கின்றன. இவ்வேலையில், நாமும் ஆண்டவ ருக்கு சாட்சிகளாக இருக்க எபிரேய நிரூபத்தில் அழைக்கி றார். அன்பான இளைஞர்களே!
உலகம் ஒரு கடல், நாமோ அதில் பயணிக்கும் கப்பல்’ என்ற வார்த் தையின்படி கிறிஸ்தவ வாழ்வை ஒரு ஓட்டத்திற்கு ஒப்பிட்டுள்ளதை நாம்வேதாகமத்திலேகாண்கிறோம். உபத்திரவங்கள்,பிரச்சனைகள், துன்பங்களைக் கண்டு இலக்கை நோக்கிய கிறிஸ்தவ ஓட்டத்திலே இளைஞர்களாகிய நாம்பின்னடை யவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இவை எல்லாவற்றையு ம் அனுபவித்து வெற்றிக்கண்ட கிறிஸ்து இயேசு நமக்கு முன்மாதி ரியாக இருக்கிறபடியால்; விசுவா சத்தை துவக்குகிறவரும் முடிக்கி றவருமாகிய அவரையே நோக்கி ஓடும்படி நம் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதே எபிரெய நிருப ஆசிரியரின் நோக்கமாயிரு க்கிறது.ஓட்டம் இளைஞர்களுக் கானது. நாம் ஓடிக்கொண்டிருக் கின்ற இந்த கிறிஸ்தவ ஒட்டத்தை க் குறித்து நம்பிக்கையற்றவர் களாய், உறுதியற்றவர்களாய் ஓடவேண்டியதில்லை.முன்நோக்கி ஓடிய அன்றைய மற்றும் இன்றைய நம் முன்னோர்களின் முன்மாதிரியே நமக்கு சிறந்த சாட்சியாகவும் பலனாகவும் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்து வதாகவும் இருக்கின்றது. நாம் நமக்கே உரிய விசுவாச ஓட்டத்தை நமது முன்னார்களைப்போல விடாமுயற்சியோடும் எதிர்பார்ப் போடும் ஓடிமுடிக்க வேண்டியவர் களாய் இருக்கிறோம்.நமக்கு நியமித்திருக்கின்ற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்”. தோட்டத்திலே ஆயிரம் மரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் என்பதுபோல அநேக கிறிஸ்தவர்களோடே நாம் ஓடிக் கொண்டிருந்தாலும் நமக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் ஓட்டம் தனித்துவமும் முக்கியத்துவமும் வாய்ந்ததென்பதை மனதிற் கொள்வோம்.அன்பு சகோதரனே! சகோதரியே! வாழ்க்கையில் நீ கண்ட துன்ப துயரங்களால் கிறித் தவ ஓட்டத்தை இடை நடுவிலேயே நிறுத்திக் கொண்டாயோ? ஊழியத்திலே முகங்கொடுத்த பொய் குற்றச்சாட்டு, வெட்டு கொத்து போட்டி, பொறாமைக ளால் ஒதுக்கித் தள்ளப்பட்டதால் கைவிடப்பட்டதால், போதும் இனி ஒன்றும் வேண்டாம் என்று தீர்மா னித்து விட்டாயோ? தனிமையில் தவித்துப்போய் ஊழியமோ, சபையோ, கிறிஸ்தவ வாழ்க் கையோ ஒன்றுமே வேண்டாம் என எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு வெளி யேறிவிட்டாயோ? அல்லது அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தோடு இருக்கின்றாயோ? இளைஞனே!
நீ உண்மையுள்ளவன் என்று எண்ணியல்லவோ ஆண்டவர் உன்னை தெரிந்துக்கொண்டார். எத்தனை போராட்டங்களையும் சகித்து எனக்காக நிலைத்து நிற்பாய் என்று நம்பியல்லவோ வரங்களையும் வல்லமையையும் கொடுத்து இத்தனை தூரம் நடத்தி வந்தார். அவர் உன்மீது வைத்த நம்பிக்கையை நீ உடைப் பது தகுமா? ஓட்டப் பந்தயத்திலே ஒருவர்ஓடிக்கொண்டிருக்கும்போது கத்துவதும் கைத்தட்டி உற்சாக ப்படுத்துவதுமே பார்வையாளர்க ளால் செய்யக்கூடியகாரியம். மேகம்போல் இருக்கின்ற சாட்சி களை நினைத்துக்கொண்டு, நம்மை நெருங்கி நிற்கின்ற பாவபாரத்தை உதறி தள்ளிவிட்டு, நல்லமுன்மாதிரியாய்இருக்கின்ற இயேசுவையே நோக்கி பொறுமை யோடே தொடர்ந்து ஓட ஒரு தீர்மானம் செய்வோம்.
3.கபடற்ற உத்தம இஸ்ரவே லன். A true Israelite without hypocrisy. யோவான் 1:43-51
கிறித்துவின் அன்பு நண்பர்களே!
ஆண்டவரின் சீடர்களில் ஒருவரா ன நத்தனியேல் என்கிற பர்த்த லோமேயு கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்தவர் மற்றும் சக சீடர் பிலிப்பின் நண்பர். இவரு க்கு "உழுதநிலத்தின் மகன்’, ‘நத்தனியேல்’ என்று அழைக்கப் பட்டவர். இவரைக் குறித்துத்தான் ஆண்டவர் இயேசு, “இவரே உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் (யோவா 1:47) என்று குறிப்பிடுகிறார். இது மிக முக்கிய
வார்த்தையாகும். நம் சமுதாயம்
ஒரு கண்ணாடி போன்றது. A society is a Mirror. நம்மை யார் என்று சரியாக காட்டும். இயேசு
நத்தனியேலைப் பார்த்து கூறிய
சிறப்பு வார்த்தைதான் "இவரே உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் "என்று. நம்மை பார்த் து ஆண்டவர் எப்படி அழைப்பார்?
சமுகம் என்ன நம்மை அழைக்கி
றது. நம் அடையாளம் என்ன? என
சிந்திக்கவேண்டும். பிலிப்பும்,
அந்திரேயா மற்றும் பேதுருவைப் போல பெத்சாயிதாவைச் சேர்ந்த வர். (1:43–44)நத்தானியேல் என அழைக்கப்பட்ட திருத்தூதரான பர்த்தலமேயுவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியவர் பிலிப்புவே
அக்காலத்தில் பிலிப்பு நத்தனியே லைப் போய்ப் பார்த்து, “இறை வாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள் ளவரை நாங்கள் கண்டு கொண் டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.
உடனே, அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று
கேட்டார். பின்பு, நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார்.
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ர யேல் மக்களின் அரசர்” என்றார்.
இயேசுவை "இஸ்ரவேலரின் அரசர்" The King of Israel. என்றார் அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரிய வற்றைக் காண்பீர்” என்றார்.
பிரியமானவர்களே! ஆண்டவரால்
ஒரு மனிதனை கபடற்றவன் என
கூறவது எவ்வளவு முக்கியமானது
நம்மையும் ஆண்டவர் உண்மை
யானவன், உத்தமன். கபடற்றவன்
என அழைக்கப்பட நம் வாழ்வும்
செயலும் அமைய கடவுள் அருள்
புரிவராக! ஆமேன்.
Prof. Dr David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment