திருமணத்தை கனப்படுத்துதல். Honour Marriage. (150). மலாக்கி: 2:13-16, திருப்பாடல் 45. 1 கொரிந்தியர்: 13:1-14.மாற்கு 10:2-9.
முன்னுரை: கிறித்துவின் அநாதி தீர்மானத்தால் இனைக்கப்பட்ட அன்பு கிறித்துவ தம்பதிகளே! மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். (தொடக்கநூல் 2:18) இதன் அடிப்படையில் திருமணம் என்ற இல்லற வாழ்வு கடவுளின் கொடை. இது இன்பம் துன்பங் களை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டிய சமமானகூட்டாண்மை என்பதை மறந்துவிடாதீர்கள். Marriage is an equal partnership. கூட்டாண்மை என்பது கூட்டாளர் களுக்கு ( கணவன், மனைவி) இடையேயானஒப்பந்தஉறவாகும். ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக செயல் படுத்தக்கூடிய உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறிப்பிடும். (Rights and duties.)சட்டப்பூர்வமாக என்பது வேதத்தின் அடிப்படையில், திருச் சபைமுன்னிலையில், போதகர் களால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உறவாகும். திருமணத்தன்று ஆலயத்தில் மணமகன் " இன்று முதல் உன்னை என் மனைவி யாக ஏற்றுக் கொண்டு. கடவுளின் பரிசுத்த சட்டத்தின்படி, மரணம் நம்மை பிரிக்கும் வரை, உன்னை நேசிப்பதற்கும், போற்றுவதற் கும், பாதுகாப்பதற்கும்; இதற்கு நான் எனது உறுதிமொழியை உனக்கு கொடுக்கிறேன். இந்த மங்கள சூத்திரம் தாலி (அ) [மோதிரம்] நிலையான நம்...