திருமணத்தை கனப்படுத்துதல். Honour Marriage. (150). மலாக்கி: 2:13-16, திருப்பாடல் 45. 1 கொரிந்தியர்: 13:1-14.மாற்கு 10:2-9.
முன்னுரை: கிறித்துவின் அநாதி
தீர்மானத்தால் இனைக்கப்பட்ட
அன்பு கிறித்துவ தம்பதிகளே!
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். (தொடக்கநூல் 2:18) இதன் அடிப்படையில் திருமணம்
என்ற இல்லற வாழ்வு கடவுளின்
கொடை. இது இன்பம் துன்பங் களை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டியசமமானகூட்டாண்மை என்பதை மறந்துவிடாதீர்கள். Marriage is an equal partnership.
கூட்டாண்மை என்பது கூட்டாளர் களுக்கு ( கணவன், மனைவி) இடையேயானஒப்பந்தஉறவாகும்.
ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக செயல் படுத்தக்கூடிய உரிமைகள் மற்றும் கடமைகளைக் குறிப்பிடும். (Rights and duties.)சட்டப்பூர்வமாக என்பது வேதத்தின் அடிப்படையில், திருச் சபைமுன்னிலையில், போதகர் களால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த உறவாகும். திருமணத்தன்று
ஆலயத்தில் மணமகன் "இன்று முதல் உன்னை என் மனைவி யாக ஏற்றுக் கொண்டு. கடவுளின் பரிசுத்த சட்டத்தின்படி, மரணம் நம்மை பிரிக்கும் வரை, உன்னை நேசிப்பதற்கும், போற்றுவதற் கும், பாதுகாப்பதற்கும்; இதற்கு நான் எனது உறுதிமொழியை உனக்கு கொடுக்கிறேன்.
இந்த மங்கள சூத்திரம் தாலி (அ) [மோதிரம்] நிலையான நம்பிக்கை (Eternal faith)மற்றும் நிலையான அன்பின்(eternal love) அடையாள மாக நான் உங்களுக்கு தருகிறேன். என் உடலால் நான் உன்னை மதிக் கிறேன், என் உலகப் பொருட் கள் அனைத்தையும் உன்னு டன் பகிர்ந்து கொள்கிறேன். அன்பு நண்பர்களே! நாம் இந்த உறுதி மொழியை முழுமையாக மதித்து நடந்தாள், இதுவே கிறித்துவஇல்லறமாகும். திருமணம் ஆயிரம் காலத்து பயிர்’. ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’. ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ போன்ற பழ மொழிகளை நாம் கேட்டிருப்போம். இயற்கையில் பயிர்கள் குறுகிய காலம்தான்வாழ்கின்றன, ஆனால் நம் முன்னோர்கள் திருமணத்தை
ஆயிரம் காலத்திற்கு கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த காலங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். எனவே தான் ஆண்டவராகிய இயேசு கிறி
த்து,"படைப்பின்தொடக்கத்திலேயே கடவுள்."ஆணும்பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவ ர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார். (மாற்கு நற்செய்தி 10:7-9)
திருமணத்தால் மட்டுமே ஆண்ட
வரின் கட்டளையான, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங் கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத் தையும் ஆளுங்கள்" என்பது
(தொடக்கநூல் 1:28) நிறைவேறும்
1. விவாகரத்து - நம்பிக்கை
துரோகம்.Divorce is the act of treachery. Malachi: 2:13-16
கிறித்துவிற்கு பிரியமானவர் களே! மலாக்கி பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம். மலாக்கி என்றால்," ஆண்டவரின் தூதர்" என்று பொருள்படும். ஆண்டவர் மல்கியா தீர்க்கர் மூலமாக, விவாக ரத்து செய்தல், தன் மனைவிக்கு செய்கின்ற நம்பிக்கை துரோகம் என்று கண்டிக்கிறார். யார் அந்த நம்பிக்கை துரோகம் செய்தார்கள் ஆண்டவருக்கு பணியாற்றும் இறை மக்களே. இஸ்ரவேல் குருக்களும், மக்களும் தன் சமயக் கடமைகளை தவறினர். காணி க்கை செலுத்துவதிலும் பலி செலு த்துவதிலும் நேர்மையாக அவர் கள் இல்லை. தன்னுடைய சொந்த வாழ்விலும் அவர்கள் ஒழுக்கம் அற்றவர்களாக இருந்தார்கள்.
ஆண்டவர் அவர்களின் துரோகத் தை அம்பலப்படுத்துகிறார் மற் றும் அவர்களை கண்டனம் செய் கிறார் முக்கியமாக அவர்களின் திருமணங்களில் இஸ்ரவேலின் ஆசாரியர்கள் துரோக நடவடிக்கை கடவுள் கண்டிக்கிறார். ஆண்டவர் கேட்ட கேள்வி நாம் அனைவரும் ஒரு தந்தையின் பிள்ளைகளில் லையா? இஸ்ரவேலின் குருக்க ளும், மக்களும் அந்நிய பெண் களை திருமணம் செய்ததினால் கடவுளுக்கு துரோகம் செய்தனர் யூதா கடவுளுக்கு துரோகம் செய் தார். ஆண்டவர் அந்நிய கடவுளின் நாட்டின் பெண்களை மணப்பது தனக்கு செய்கின்ற துரோகம் என்பதை வலியுறுத்தினார். ஆண்டவரின் முதல் கட்டளையான "என்னைத்தவிரவேறுதெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
(விடுதலைப் பயணம் 20:3) இது அன்னிய தெய்வங்களை வணங் கும் மக்களை திருமணம் செய் வது கடவுளுக்கு அருவருப்பான து, கட்டளையை மீறும் செயல்.
ஆண்டவர் திருமணத்தை புனித மாக கருதுகிறார் அது ஒரு உடன் படிக்கை என நினைவு படுத்து கிறார். நாம் நம்முடைய திருமண உறுதி மொழிகளில் மீறுகின்ற பொழுது கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்கிறோம் என்பதை தெளிவாக கூறுகிறார் ஏனென்றால் திருமணம் கடவு ளால் உருவாக்கப்பட்டது(தொடக்க நூல்:2:20-25) அரசர் சாலமன் அன்
னிய கடவுளை வணங்கும் பெண்
களை மணந்தார். அதனால் அவர்
விசுவாசிகளின் பட்டியலில் இடம்
பெறவில்லை.( 1 அரசர்கள் 11:1-10) அரசர் ஆகாப், அன்னிய கடவு ளை வணங்கும் யேசபேலை
மணந்தார்.அதனால், இஸ்ர வேலை சீரழிவுக்கு கொண்டு சென்றாள்.(1அரசர்கள் 16:29-33)
ஆண்டவராகிய இயேசுவின் வம்ச
வரலாற்றில், மோவாபிய பெண்
ரூத், யூதவம்ச போவாசை மணந் தார்.ஆனால் ரூத் அவர்கள் மோவாபிய தெய்வங்களை கடவு ளுக்காக மறந்தாள். இயேசுவின்
வம்ச வரலாற்றில் இவர்கள் இடம்
பெற்றனர்.(ரூத் 1:16, மத்தேயு 1:5)
திருமணத்தில்,விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் ஒன்றாக இணைக்கக் கூடாது என்று பவுல் கூறுகிறார் ( 2 கொரிந்தியர் 6:11-18 ).விவாகரத்து தீங்கு விளைவிக் கும்என்பதால்கடவுள்அதைவெறுக்கிறார்.கடவுள் திருமணத்தின்
மூலம் தம் மக்களை தன்னுடைய மகனின் சாயலாக மாற்ற விரும்பு கிறார்.கடவுள்,சமூகத்தில்செய்யும் நன்மைக்காகதிருமணத்தை விரு ம்புகிறார்.ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைக ளைப் பூர்த்தி செய்யும் விதத்திற் காக கடவுள் திருமணத்தை விரும் புகிறார் . ஆண்டவர்,விவாகரத்தை
வெறுக்கிறார். ஏனேன்றால், திரு
மணம் தூயதாக ஆண்டவர் கருது
கிறார்.முலாவதாக, விவாகரத்து ஆண்டவரின்உடன்படிக்கையான "கடவுள் இனைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக"என்பதை மீறுகிறது.
இரண்டாவதாக, விவாகரத்து சமு
தாயத்திற்கும், ஆண்களுககும்,
பெண்களுக்கும், இவர்களின்
குழந்தைகளுக்கும் தீங்கு விளை விக்கும் எனவே, கடவுள் விவாகர
த்தை வெறுக்கிறார்.
மூன்றவதாக, விவாகரத்து நம்பிக்
கை துரோகம், எனவே கடவுள் விவாகரத்தை வெறுக்கிறார்.
ஆண்டவரின் இதயம், அன்பு, மன்னிப்பு, மனம் திரும்புதலில்
நிலைத்திருக்கிறது.
தீர்க்கர் அவர்கள் இஸ்ரவேலரின் குருக்களுக்கு எச்சரிப்பது, ஆண்ட வரது பலிபீடத்தைக் கண்ணீரால் நிரப்புகிறீர்கள்.அது யாருடைய கண்ணீர்? குருக்களாள் தள்ளி விடப்பட்ட அபளை பெண்களின் கண்ணீர. எனவே, உங்கள்
காணிக்கையை ஆண்டவர் ஏற்று க் கொள்ளவில்லை. ஏனேனில்,
ஆசாரியர்கள் தங்கள் இளம் வயது மனைவிகளுக்கு நம்பி க்கை துரோகம் (treachery) செய்தா ர்கள்.இவர்களது திருமணத்திற்கு
ஆண்டவரே சாட்சியாக இருந்தார்.
எவனும், தன் இளம் வயதின் மனைவிக்கு நம்பிக்கை துரோகம்
செய்யாதிருப்பானக. ஏனெனில், "மணமுறிவை நான் வெறுக்கி றேன்" என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகியஆண்டவர்."மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடையாக கொண்டு மறைக் கிறான்" என்கிறார்(Covers violence with garments) படைகளின் ஆண்ட வர். ஆகையால் எச்சரிக்கையாயி ருங்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள். (மலாக்கி 2:16)
அன்பர்களே! தீர்க்கரின் காலத்
தில், திருமணத்தின் போது கணவ
ன் தன் மனைவிக்கு பாதுகாப்பின்
அடையாளமாக தன் மனைவியை தன் ஆடையால் மூடுவதை குறிக்கிறது. இது ஒரு திருமண
சடங்காகும்.ஆனால் இப்போது அவர்களின் ஆடைகள் வன்முறை யால் மூடப்பட்டிருந்தன. ஒரு மனைவி கைவிடப்பட்டாலோ அல்லதுதவறாகநடத்தப்பட்டாலோ, ஆண் தனது சொந்த ஆடையை வன்முறையால் மூடுகிறான் .என தீர்க்கர் பெண்களுக்கு எதிரான மணமுறிவையும், நம்பிக்கை துரோகத்தையும் கண்டிக்கிறார். "நம்பிக்கையற்றஇஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள். (எரேமியா 3:8)
விபச்சாரம் என்ற ஒரே காரணத் திற்காக கடவுள் ஏன் தனது ஆன்மீக மனைவியான இஸ் ரேலை விவாகரத்து செய்தார் என்பதை இந்த உறுதியான உண்மை விளக்குகிறது (எரேமியா 3:6-8).
2.அன்பு இழிவானதை செய் யாது. Love does not do what is despicable.1கொரிந்தியர்: 13:1-14
அன்பிற்குறிய தம்பதியரே! திரு
மணம் என்பது அன்பின் நறும ணம்.Marriage is the scent of fragrance.ஆண், பெண் இருவறுமே
ஆண்டவரின் நறுமணங்கள்.
எனவே, அது திருஎன்றமுன்னீடை( prefix) பெற்றிருக்கிறது.இருவரும்
அன்பு கூறுவது என்பது கனிவாக,
சாந்தமாக இருப்பதை வளியுருத் துகிறது.பிறருடன் கனிவாக பேச வும், தேவைப்படும் போது அமைதி காக்கவும் நம் மனதையும், உணர் வுகளையும் கட்டுப்படுத்துவதற்கு கற்றுத்தருகிறது.நம் அன்பு எவ்வ ளவு ஆழமானதோ, அந்த அளவு க்கு, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கவும், அவர்கள் நமக்காக தங்கள் இதயக்கதவுகளைத் திறக் கும்வரைகாத்திருக்கவும்கற்றுத்தருகிறது."அமைதியாகப் பேசுவ தால் குணப்படுத்த முடியாத காயம் இல்லை" என்று கூறினார் ஒரு அறிஞ்சர். அன்புஎன்பது ஒரு விதையாகும். ஆண்டவர் நம் இதயத்தில் விதைத்திருக்கிறார். ஆண்டவர் அன்பாகவே இருக் கிறார்.அதனால்தான் அவர் மனிதனாக தோன்றினார்.
(யோவான் 3:16)அன்பு அனைத் தையும் பொறுத்துக்கொள்ளும், அனைத்தையும்நம்பும்.ஒருவரோடொருவர் சண்டையிடாமலும், பிரிந்து போகாமலும், பரிசுத்த மான அன்புடனும், சமாதானத்துட னும், தங்கள் வாழ்க்கையின் இறுதிவரை, ஏன் ஒன்றாகத் தொடர வேண்டும் என்பதேஆண்ட வரின் அழைப்பாகும்.நீங்கள் சண்டையிட்டால், நீங்கள் தூங்குவ தற்கு முன் அதைத் தீர்த்துக்கொள் ளுங்கள். அன்பின் பண்புகளான
பொறுமை, இரக்கம், பொறாமை யற்ற குணங்கள் குடும்பத்தை ஆளட்டும். எதிர்மறை சிந்தனை களான தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிவு, தன்னலம், எரிச்சல்,தீங்கு, இல்லா இல்லமாக அமையட்டும். மிக முக்கியமாக அனைத்தையும் பொறுத்துக்கொள். குற்றங்களை பெரிதுபடுத்தாதே! மன்னித்து விடுங்கள்மறந்துவிடுங்கள்.நல்லவைகளை பாராட்டுங்கள். குடும்ப ஜெபம் ஆலயம் செல்வது மிக முக்கியகடமை என்பதை மறந்து விடாதீர். தற்போது ஆண், பெண் இருவருக்குமே சந்தேக எண்ணம் அதிக அளவில்வருகிறது.இதனை சந்தேக நோய்கள் என்பர். இது
வந்துவிட்டால் நிம்மதி இருக்காது.
குடும்பம் உணர்வுகளின் கூடாரம்
Family is the tent of feelings. ஒவ் வொருவரின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இது அன்பின் கடமை. வாழ்க்கை பற்றிய சரி யான புரிதல், தெளிவு இருந்தாள், ஆண்களும், பெண்களும் விவாக
ரத்துவரை வரமாட்டார்கள்.அன்பே
நம் இல்லங்களிள் மையமாகட்டும்
ஏனேனில், அன்பு ஒரு காலமும்
ஒழியாது அது என்றும் இழிவா னதை செய்யாது.
3.விவாகரத்து கடின உள்ளத் தின் பிரதிபலிப்பு. Divorce is the reflection of the hard hearted.
மாற்கு 10:2-9.
அன்பிற்கினிய நண்பர்களே! ஆண்டவராகிய இயேசுவை குற்றம் காண வந்த பரிசேயர்கள்,
"கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவதுமுறையா?"என்று கேட்டு அவரைச் சோதித்தனர். மோசேயின்காலத்தில் ஆண்களு க்கு மட்டுமே விவாகரத்து செய்யும்
அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதை பயன்படுத்தி மிக எளிதாக
இவர்கள் தன் மனைவிமார்க ளுக்கு தள்ளுதல் சீட்டை எழுதி
கொடுத்தனர்.இதை கண்டிக்கவே
ஆண்டவர் உங்கள் கடின உள்ளத் தின் பொருட்டே அவர்இக்கட்டளை யை எழுதி வைத்தார் என்று
கூறினார்.படைப்பின்தொடக்கத்தி லேயே கடவுள். "ஆணும் பெண்ணு மாகமக்களைபடைத்தார்.இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.இருவரும்ஒரே உடலாய் இருப்பர். 'இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
கடவுள் விவாகரத்தை எதிர்க் கிறார். இது விபச்சாரம் என்கிறார்
கடவுளின் ஏழாம் கட்டளையான
"விபசாரம் செய்யாதே. " என்ற
(விடுதலைப் பயணம் 20:14)
கட்டளையை மீறுகிறது.ஆண்டவர்
திட்டவட்டமாக கூறுகிறார் "தன் மனைவியைவிலக்கிவிடுகிறவன் எவனும் மணவிலக்குச்சான்றி தழைக்கொடுக்கட்டும்"எனக்கூறப் பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவ ரும் தம் மனைவியைப் பரத்தை மைக்காக (adultery)அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக் கிவிடக் கூடாது. அப்படிச் செய் வோர் எவரும் அவரை விபசாரத் தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.
(மத்தேயு நற்செய்தி 5:31,32)
"ஏதேன் தோட்டத்தில் இருந்து இன்று வரை விபச்சாரம் மட்டு மே சட்டப்பூர்வமான விவாக ரத்துக்கான ஒரே காரணம்." எனவே, கடின இருதயத்தை கைவிட்டுகனிவான உள்ளத்தோடு அன்புடனும், மகிழ்வோடும், விட்டு
கொடுத்து, ஒருவர் பாரத்தை
ஒருவர் சுமந்து திருமண நாளில்
கொடுத்த உறுதி மொழிபடி வாழ
ஆண்டவர் வழிநடத்துவாரக!
4. ஏன் விவாகரத்து பெண் களைவிட ஆண்களுக்கு பாதக மாகஉள்ளது? Why, divource is very painful to men than women?
அன்பிற்குறியோரே! விவாகரத்து
இருவருக்குமே பாதகமான விளை
வுகள் உண்டு. ஆனால் ஆராய்ச்சி யின் அடிப்படையில், ஆண்கள்
மன அழுத்தத்தில் (stress) அதிகம்
பாதிக்கப்படுகின்றனர்.ஆண்களின் மன, உடல், உணர்ச்சி மற்றும் உறவுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது, ஆனால், பெண்கள்
விவாகரத்து நிகழும்போது, அவர் கள் துக்கப்படுவதற்கும் மீட்கப்ப டுவதற்கும் ஒரு ஆதரவு நெட் வொர்க் உள்ளது.இவர்கள் துக்கத்
தை சமாளிக்க வேலைக்கு செல்
கிறார்கள்.ஆண்கள் தொழில் முறை உதவியை நாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு.அதற்கு பல
காரணங்கள்.ஆண்கள் தங்கள்
குழந்தைகளை அடிக்கடி பார்க்க
முடியாது.விவாகரத்து பெண்க ளை விட ஆண்களின் ஆரோக்கி யத்தை அதிகம்பாதிக்கிறது.விவா கரத்துக்குப் பிந்தைய மனச் சோர் வினால் பாதிக்கப்படுவது பெண் களை விட ஆண்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும். இதய நோய், நீரிழிவு, புற்று நோய்களால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர். விவாகரத்திற்கு மிக முக்கிய காரணம் நிதி பற்றக்குறை.Finance is a life blood of any family. இதில் ஆண்களுக்கு பலவித நிதி பொறு ப்புகளை நிறை வேற்ற வேண்டும். விவாகரத்திற்கு பிறகு அந்த காயங்களை மறப்பது ஆண்களு க்கு மிககடினம். சமூகத்தில் ஒரு தலைகுனிவான செயலாக நோக்கப்படுவார்.மிக முக்கிய மாக, விவாகரத்தான குடும்ப குழந்தைகள் படும் மனவேதனை நினைத்துப் பார்க்க முடியாது. இவர்களுக்கு துன்பம் கொடுப்ப வர்களின் கழுத்தில் எந்திர கல்லை கட்டி நடு சமுத்திரத்தில் நடுவே போடுவது மிக நலமாயி ருக்கும் என்கிறார்.(மத்தேயு18:6) எனவே, அன்புக்குரியவரே, நீர் ஆன்ம நலந்தோடியிருப்பது போல் உடல் நலத்தோடு இருக்கவும் அனைத்தும் இனிதே நிகழவும் வேண்டுகிறேன். (3 யோவான் 1:2)
கடவுள் அமைத்த திருமணத்தை கனப்படுத்துதல் நம் கடமையன் றோ.விவாகரத்திற்கு விலகி ஓடு.
அன்பு அனைத்தையும் பொறுத் துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர் நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.
(1 கொரிந்தியர் 13:7) கடவுள் நம்
ஒவ்வொருவரின் திருமண வாழ்
வை காப்பாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com.
"இருப்பினும், உங்களில் ஒவ்வொருவரும் தன்னை நேசிப்பது போல் தன் மனைவியையும் நேசிக்க வேண்டும், மனைவி தன் கணவனை மதிக்க வேண்டும். –" (எபேசியர் 5:33, )
(To be delivered at CSI St.Peter's Church on 28-07-2024.) Thankful to
Rev.Sam Eliza.
கானாவில் திருமணம்
Comments
Post a Comment