திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.
முன்னுரை: கிறித்துவின் அன்பு நற்செய்தி பணியாளர்களே! உங்க
அனைவருக்கும் துன்புறும் கிறித்
துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல் என்ற
தலைப்பை சிந்திப்போம். திருப் பணி என்றால் என்ன?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
அறிவிப்பதே நற்செய்தி.
கிறித்தவர்கள் உலகெங்கும் செய்யும் சமயப்பணியைக் குறிக் கிறது. கிறித்தவ சமயத்தைப் பரப்புதல், மனித நேய நடவடிக் கைகள், ஏழைகள் மற்றும் இயலா தோருக்கு உதவுதல் ஆகிய செயல்பாடுகள் மறைப்பணியில் (அ) திருப்பணியில் அடங்கும்.
திருப்பணி ஞாயிறுவை Mission Sunday முதன் முதலில் அறிவித் தவர் போப் பியூஸ் XI அவர்கள் 1926ம் ஆண்டு உலக முழுவது முள்ள திருச்சபைகள் கொண்டாட
அறிவிப்பு செய்தார். இது வேதத்
தின் அடிப்படையில், ஆண்டவரின்
அருள் வாக்கான," எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரை யும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழு க்குக் கொடுங்கள்.
(மத்தேயு நற்செய்தி 28:19) திருப் பணியாகும். உலகில் திருப்பணி
யாற்றுவது மிக எளிதல்ல; கடின
மானது.ஆனாலும், இரண்டாயிரம்
ஆண்டுகளாக பல நற்செய்தியா
ளர்களின் உயிர்பலிகளுடன்,
நற்செய்தி பணி ஆண்டவரின்
கட்டளைப்படி நடந்தேறி வருகி றது.திருப்பணி ஞாயிறு அன்று
நற்செய்தி பணிக்காக நாம் சிறப்பு காணிக்கை அளிப்போம்.
நற்செய்தி பணியை தாங்குவது
நம் தலையாய கடமையாகும்.
"போ" (Go), ஆண்டவரின் கடைசி
கட்டளை.(மத்தேயு 28).ஆனால்,
"அனுப்பு", (send) என்பதுஆண்டவர் கட்டளையல்ல. வேதத்தில் இருவர்களே மிக அழகானவர் களாக ஆண்டவர் அறிவிக்கிறார்.
" நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக் கவும், விடுதலையைப் பறைசாற் றவும், சீயோனை நோக்கி, "உன் கடவுள் அரசாளுகின்றார்" என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!
(எசாயா 52:7) நற்செய்திபணி யாளனின் பாதங்களே மிக அழகு.
இரண்டாவதாக, சகோதரர் எமில்
ஜெபசிங் பாடிய "அழகாய் நிற்கும்
யார் இவர்கள்" பாடல் திருவெளிப்
பாடு 7 ம் அதிகாரத்தை13,14 வசனத்தின் அடிப்படையாக கொண்டது. திருப்பணியாற்றுப
வரே அழகானவர்கள். கடவுளின்
வலியை (Pain), பகிர்வோரே
உண்மையான நற்செய்தி பணி
யாளர்.
1 யாரை நான் அனுப்புவேன்.
Whom shall I send?ஏசாயா: 6:1-8
கிறித்துவின் திருப்பணியாளர் களே! உசியா தன்னுடைய பதினாறு வயதில் யூதாவின் மேல் ராஜாவானான்,(காலம்கி.மு 783–742 ) ஐம்பத்திரண்டு வருஷங்கள் ஆட்சி செய்தான்.( 2 குறிப்பேடு 2.Chronicles 26:3) அவன் தன்னு டைய ஆட்சியின் நாட்களில் கர்த் தருடைய பார்வைக்குச் செம்மை யானதைச் செய்து, தேவனைத் தேடுவதற்கு மனதிணங்கியிரு ந்தான். ஆகையால் அவன் காரியங்களைக் கர்த்தர் வாய்க்கப் பண்ணினார்.தேவன் அவனுக்குத் துணைநின்று எதிரிகளை மடங் கடிக்கும்படிக்குச்செய்து, அவனு டைய கீர்த்தி வெகு தூரம் பரப் பும்படிக்குச் செய்தார். ஆனால் அவன் பலப் பட்ட போது அவனுடைய இருதயம் மேட்டி மைக் (pride) கொண்டது, ஆகை யால் கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்தான். ஆசாரியர்கள் மாத்திரம் தேவாலயத்தில் தூப பீடத்தின் மேல் தூபம் காட்ட வேண்டும், ஆனால் இவன் தூபம் காட்டுப் படிக்கு உட்பிரவேசித் தான், ஆசாரியர்கள் தடுத்தும் கேட்காமல்,அவர்கள் மேல் கோபம் கொண்டான். அதினிமித்தம் கர்த்தர் அவனை குஷ்ட ரோகத்தி னால் வாதித்தார்,அந்த வியாதினி மித்தம் மரித்துப் போனான். மேட்டி
மையான உசியா நம்மில் மரிக்க
வேண்டும். மேட்டிமை மரித்தால் தான் ஆண்டவரின்திருப்பணிக்கு
தகுதியாவோம்.
உசியா ராஜா மரணமடைந்த வருடத்தில் கிமு 740-739 வரை ஆண்டவர் உயரமும் உன்னதமு மான சிங்காசனத்தின் மேல் வீற் றிருக்கக் ஏசாயா கண்டார், அவரு டைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது
ஏசாயா தீர்க்கதரிசியின்
காலம் முதல் இக்காலம் வரையி
லும் ஏக்கத்துடன் ஆண்டவர் அழைக்கும் வார்த்தை," "யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். இது ஏசாயவிற்கு
மட்டும் விடப்பட்ட வார்த்தை அல்ல, நாம் அனைவருக்கும் விடப்
பட்ட வேண்டுகோள். ஏசாயா ஆண்டவரை காண்கிறார் அவர்
இருந்த இடம் தேவாலயம். தீர்க்க
தரிசி சாமுவேலை ஆண்டவர்
அழைத்த இடமும் தேவாலயம்.(1சாமுவேல் 3:3-10) மோசேவால் கூட பார்க்கமுடியாதஆண்டவரை அவர்கண்கள்கண்டன."அப்பொழுது நான்; "ஐயோ, நான்அழிந்தேன், ஏனெனில் தூய்மையற்ற உதடு களைக் கொண்ட மனிதன் நான்; தூய்மை யற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைக ளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்ட னவே" என்றேன். (எசாயா 6:5) ஆண்டவரின் திருப்பணிக்கு தூய்மை மிக முக்கியம்
எனவே, ஏசாயாவை சேராபீன் மூலம் தூய்மைப் படுத்துகிறார். தூய்மையடைந்தவுடன்;"இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன் (எசாயா 6:8) என்று கடவுளின் வார்த்தைக்கு
கீழ்படிந்தார்.மேலும் அவர் உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகிய ராஜாக்களின் ஆட்சியின் காலங்களில் சுமார் தொண்ணூறு ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்தார்.
அவர் காலத்தில், இஸ்ரவேலர் "ஐயோ, பாவம் நிறைந்த மக்களி னம் இது; அநீதி செய்வோரின் கூட்டம் இது; தீச்செயல் புரிவோரி ன் வழிமரபு இது; கேடுகெட்ட மக்கள் இவர்கள்; ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்; இஸ்ர யேலின் தூயவரை அவமதித்து விட்டார்கள்; அவருக்கு அன்னி யராய் ஆகிவிட்டார்கள்.
(எசாயா 1:4) இத்தகைய மக்க ளிடம் ஏசாயா திருப்பணியாற்று வது கடவுளின் வலியை பகிர்ந்து கொள்வதாகும்.
2 அனனியாஸ் பிரிக்கப்பட்ட வேலைக்காரன்.Ananias The Separated Servant. திருதூதர் பணிகள்.9:10-18
கிறித்துவின் திருப்பணியாளர் களே!
தமஸ்குவிலே அனனியா (Ananias of Damascus) என்னும் பேருள்ள ஒரு சீடன் இருந்தான். வேதப்பிர மாணத்தின்படியே பக்தியுள்ளவ னும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சி பெற்றவனுமாகிய “அனனியா என்னும் ஒருவன்” (அப்.22:12) என்று பவுலடியார் அற்புதமான சாட்சி ஒன்றைக் கூறியுள்ளார். இவர் காலத்தில் ஆயிரக்கணக் கானோர் இரட்சிக்கப்படுகிறார் கள், கடவுள் அவர்களை அற்புதங் களையும் அடையாளங்களையும்
கொண்டு ஆசீர்வதிக்கிறார். தேவாலயங்கள் நிரம்பி வழிகின் றன.ஆனால், சவுல் என்ற ஒரு மனிதன் தேவாலயத்தில் அழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தான், அவர் ஆரம்பகால கிறிஸ்தவர் களை துன்புறுத்துவதற்காக இடம் விட்டு இடம் பயணம் செய்தார். அவர் அவர்களைக் கைதுசெய்து,
அவர்களின் மரணத்திலும் பங்கு கொண்டார், (திருதூதர் 7:58; 8:1)
இதற்காக, அதிகமான விசுவாசிக ளைக் கைது செய்ய தமஸ்க்குப் பயணித்த சவுலை, கர்த்தர் சந்திக்
கிறார். இவ்வாறு அவர் புறப்பட்டு ச்சென்று தமஸ்குவை நெருங்கிய போது திடீரென வானத்திலிருந்து தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியது. அவர் தரையில் விழ, "சவுலே, சவுலே, ஏன் என் னைத் துன்புறுத்துகிறாய்?" என்று தம்மோடு பேசும் ஆண்டவரின் குரலொன்றைக் கேட்டார். அதற்கு அவர், "ஆண்டவரே நீர் யார்?" எனக்கேட்டார். ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசு நானே. என்
றார்.ஆண்டவருக்கும், திருப்பணி யாளருக்கும் விரோதமாக செய் யும் செயல்கள் ஆண்டவரை துன்
புறுத்துவதாகும்.சவுல் கர்த்தரு டைய பிரகாசத்தைக் கண்டபின், அவன் குருடனாயிருந்தான் என்று நமக்குக் கூறுகிறது. சவுல் டமாஸ் கஸுக்கு அழைத்துச் செல்லப்பட் டார், மேலும் அவர் மூன்று நாட்க ளுக்கு அந்த நிலையில் விடப்ப ட்டார்.சவுல் அந்த மூன்று நாட்க ளை ஜெபத்திலும் உபவாசத்தி லும் கழித்தார்,
கர்த்தர் அனனியாவிற்கு தரிசன மாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். அனனியாஸ் தயங்காத வேலைக்காரன்.
அப்போது ஆண்டவர் அவரிடம், "நீ எழுந்து நேர்த் தெரு என்னும் சந்து க்குப் போய் யூதாவின் வீட்டில் சவுல் என்னும் பெயருடைய தர்சு நகரத்தவரைத் தேடு. அவர் இப் போது இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். இது அனனி யாவிற்கு அதிர்ச்சி அளிக்கிறது.
மறுமொழியாக, "ஆண்டவரே, இம்மனிதன் எருசலேமிலுள்ள இறைமக்களுக்கு என்னென்ன தீமைகள் செய்தான் என்பதைப் பற்றிப் பலர் கூறக் கேட்டிருக்கி றேன். அனனியா ஒரு இரட்சிக்கப் பட்ட மனிதர். ஒரு சீடராக இருப் பது அவர் ஒரு மனமாற்றம் செய் யப்பட்ட மா மனிதர் என்று நம்பு வதற்கு நம்மை வழிநடத்துகிறது. "Obedience is better than sacrifice...", 1 Sam. 15:22.)
ஆனால், சவுல் ஊர் அறிந்த கிறித்
துவின் எதிரி.இவன் கண்ணெதி ரில் ஸ்தேவான் கொள்ளப்பட்டார்
பல கிறித்தவர்களை சிறையில்
அடைத்தவர்.அனனியாஸ் தி ரெலக்டண்ட் சர்வண்ட் என்று நாம் இங்கு
காண்கிறோம். ஆனால்,கடவுளின்
வார்த்தைக்கு கீழ்படிகிறார்.
"நீ செல். "You Go". ,இந்த வார்த்தை
அனனியாவிற்கு மட்டமல்ல; நம்
அனைவருக்கும் திருப்பணியாற் றும் அழைப்பாகும். சவுல் அவர் களை ஆண்டவரின் "பிற இனத்த வருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவி யாய் இருக்கிறார்." அழைப்பு துன்பத்தின் அடிப்படையானது. திருப்பணி, கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல் Sharing the pain in the ministry is the Mission.
சவுல் "என் பெயரின்பொருட்டு அவர்எத்துணைதுன்புறவேண்டும் என்பதை நான் அவருக்கு எடுத் துக்காட்டுவேன்" என்றார்.
(திருத்தூதர் பணிகள் 9:16) அன்பானவர்களே! ஆண்டவரின்
திருப்பணிக்கு அழைக்கும்போதே,
துன்பத்தை முன் வைத்தே அழை க்கிறார்.அனனியா சவுலுக்கு
திருமுழுக்கு கொடுக்கிறார். இத னால் சவுலாகிய பவுலுக்கு, யூதர்கள் மத்தியிலும் எதிர்ப்பு,
கிறித்தவர்கள் மத்தியிலும் எதிர்
ப்பு.எருசலேமில் இந்தப் பெயரை அறிக்கையிடுவோரை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? என்றனர். எதிர்ப்புகளின் மத்தியி
ல் இறையரசை இவ்வுலகில் தூய
பவுல் அடிகளார் நிறுவினார்.
3.கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதலே திருப்பணி.
Sharing God's pain is Mission. லூக்கா:10:1-11
கிறித்தவின் வலியை பகிரிந்து
திருப்பணியாற்றும் அன்பர்களே!
ஆண்டவர் முதன்முதலாக பன்னி ரண்டு முதன்மை சீடர்களை குண ப்படுத்தவும், பேய்களை விரட்ட வும், கடவுளுடைய அரசு வரப்போ கிறது என்று பிரசங்கிக்கவும் அதற்கான வல்லமையையும், அதி காரத்தையும் கொடுத்து அனுப்பி னார் ( லூக்கா 9:1-6 ).
இப்போது, இயேசு எழுபத்திரண்டு கூடுதல் சீடர்களை இந்த வேலை யில் சேரஅழைக்கிறார்."அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறை வு." எனவே, புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டி களை அனுப்பு வதுபோல் உங்க ளை நான் அனுப்புகிறேன். என
அவர்களை அனுப்பினார்.இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் நேரம் குறைவாக இருந்தது என்பதையும், அவருடைய செய்தி யைக் கேட்காத பல கிராமங்கள் இன்னும் உள்ளன என்பதையும் இயேசு அறிந்திருந்தார். இயேசு தம்முடைய தூதர்களாக இருக்க, இந்த இடங்களைத் தமக்கு முன்னால் ( அவர் தாமே செல்லவி ருந்த இடத்திற்கு ) தயார் படுத்து வதற்காக, அவருடைய சீடர்களின் இந்தப் பெரிய குழுவை அனுப்பி னார்.பணப்பையோ வேறு பை யோ மிதியடிகளோ எதுவும் நீங் கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். மற்றும் சீடர்கள் அவர்களின் விருந்தோம் பலைப் பெற வேண்டும். அவர்கள் நோயுற்றவர்களைக் குணப்படுத்த வேண்டும், மற்றும் கடவுளின் அரசைப் பற்றிய அவர்களுக்கு எடுத்துரைக்க கூறினார். ஆண்டவரின் திருப்பணியில் அவர் பல அற்புதங்களைச் செய் வதைப் பார்த்தாலும், கோராசி னும், பெத்சாய்தாவும், கப்பர்நகூ மும் அவரை நிராகரித்தார்கள். சமாரியரும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தநகரங்களுக்கு இயேசு நியாயத்தீர்ப்பை அறி விக்கிறார்.எழுபத்திரண்டு பேரும் திரும்பி வரும்போது, பேய்களைத் துரத்த முடிந்தது என்று பரவசப்ப டுகிறார்கள். இயேசு அவர்களின் பார்வையை மறுசீரமைக்கிறார்: சாத்தான் ஏற்கனவே தோற்கடிக்க ப்பட்டான். திருப்பணியாற்றுபவ
ருக்கு ஆண்டவர் துன்பங்கள்
மட்டுமே தருவதில்லை, மாறாக, அவர்களின் பெயர்கள் விண்ண கத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார். நற்செய்தியை எதிர்ப்ப வர்களிடமிருந்து சீடர்கள் எதிர்ப் பையும் துன்புறுத்தலையும் எதிர் பார்க்க வேண்டும்.உயிர் இழப்பு
கள், துன்பங்கள் மத்தியில்தான்
ஈராயிரம் ஆண்டுகளாக கிறித்த வம் வளர்ந்துக் கொண்டிருக்கி றது.விவசாயிகளுக்கு எல்லா
நேரத்திலும் நல்ல அறுவடை
கிடைக்காது, அவ்வாறே, திருப்
பணியிலும் சில நேரங்களில்
ஆத்தும அறுவடை கிடைக்காது.
ஆனாலும், முயற்சி தளராமல்
திருப்பணியாற்ற வேண்டும். இறைசெய்தியை அனைவரும்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற
கட்டாயம் இல்லை. இதை ஆண்ட
வரின் நற்செய்திபணியிலும்
பார்கிறோம். காது உள்ளவன்
கேட்ட கடவன் என்றார். திருப்பணி
கோதுமை மணி போன்றது,
இயேசு, 'கோதுமை மணி மண் ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்.அது மடிந்தால்தான் மிகுந்த விளைச் சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (யோவான் 12:24) திருப்பணியாளர்கள், இறை வார்த்தையை அறிவிக்க. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு; மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
(2 திமொத்தேயு 4:2), சிலுவையை
முன்னிறுத்தி திருப்பணியாற்று
வதே திருப்பணியாளர்களின்
கடமையாகும்.
Prof. Dr David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com
Comments
Post a Comment