அருட்பொழிவு திருப்பணி: கிறித்துவின் காயங்களால் அடையாளப்படல்.(149) Ordained Ministry: Marked by the wounds of Christ. 1.சாமுவேல் 22:12-23. திருப்பாடல்: 56. கலாத்தியர்: 6:11-18. யோவான்: 21:15-19.

முன்னுரை: கிறித்துவின் திருப்பணியாளர்களே! இறைமை
ந்தன் இயேசுவின் இனியநாமத்தி ல்வாழ்த்துக்கள்."அருட்பொழிவு"(Ordained)என்பது தனிநபர்களை புனிதப்படுத்தப்படும்செயல்முறை யாகும்.இந்த புனித படுத்தும் செயல்  இயேசுவின் ஐந்து காயங் களை தன் இறை பணியில் சுமப் பதாகும். "மெசியா" என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள். (யோவான் நற்செய்தி 1:41)
"திருப்பணி" (Ministry) (அ) "ஊழி யம்"என்பதுகிரேக்கவார்த்தையான டையகோனியோ என்ற வார்த்தையிலிருந்து வந்தது, அதாவது "சேவை செய்வது" .
திருப்பணி என்பது கடவுளுக்கும் அவருடைய பெயரால் மற்ற எல்லா மக்களுக்கும் செய்யும் சேவையாகக் கருதப்படுகிறது. கிறிஸ்தவ திருப்பணி ஆண்டவரா கிய இயேசு கிறித்துவின் " இவ் வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்பு க்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்ப தற்கும் வந்தார்" என்று கூறினார். (மத்தேயு  நற்செய்தி 20:28) என்ற வார்த்தையின் அடிப்படையிலா னது .திருப்பணி கடவுள் அருளும் ஒரு வரமாகும். ஒருவரை திருத் தூதராகவும்( Apostels), தீர்க்கரா கவும் (prophet), நற்செய்தியாள ராகவும் (Evangelist), போதகரா கவும் (Pastor), மற்றும் சமய  பயிற்சியாளர் (,Catechist)ஆக
திருப்பணியாளர்களை பிரிக்க லாம்.ஆக, அருட்பொழிவு திருப் பணியாளர் என்பவர் ஒரு திருச் சபையால் அங்கிகரிக்கப்பட்ட நப
ராவர்.இவர்களே திருமுழுக்கு (Babtismal ceremony), திருமணம், 
இறுதி சடங்கு, (Funeral) மற்றும்
அருளுரை வழங்குதல் போன்ற
மதசடங்குகளை செய்பவர்கள்.
A shepherd who looks after the flock
in the Congregation.சமயப்பணியில் அதற்கெனக் குறிக்கப்பட்டுள்ளப் பயிற்சியை நிறைவு செய்த பின், ஒருவருக்குஅளிக்கப்படுவதுதான் அருட்பொழிவு.
கிறிஸ்துவின் திருப்பணி என்பது இறையரசுப்பணியாகும். இவ்வுல கில் இறையரசை கட்டமைப்பதா கும். இறையரசை நிறுவ கடவு ளாள் தெரிந்துகொள்ளப்பட்டவர் களே அருட்பொழியாளர்கள். இவர்
கள் ஏசாயா தீர்க்கரின் வாக்குப்படி "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்;ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்ப டுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பி
யுள்ளார். (எசாயா 61:1) அருட் பொழிவாளர்களின் நான்குவித
கடமையாகும். இதை முழுமை யாக ஆற்றாதோர் அருட்பொழி வாளர் அல்ல. 
 இறையரசை கிறித்துவின்
காயங்களால் அடையாளப்படுத் தும் திருப்பணியே அருட்பொழி வாளர்களின் தலையாய கடமை
யாகும். ஆண்டவராகிய  இயேசு கிறித்துப்போலதூயஆவியின்
வல்லமை பெறுவது அருட்பொழி வாளர்களுக்கு கட்டாயமாகும். "கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமை யைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகை யின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். (திருத்தூதர் பணிகள் 10:38) நன்மை செய்து துன்பம்
வாங்கும் உள்ளமே அருட்பொழி
யாளர்களின் உள்ளமும்,பணியு
மாகும்.

1.அருட்பொழிவு திருப்பணி ஆபத்தான இறைபணி.The Ordained Ministry is a dangerous work of God.1 சாமுவேல் 23:12-23.
கிறித்துவின் அநாதி தீர்மானத் தால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்
களே! அருட்பொழிவு திருப்பணி
என்பது கத்திமுனையில் நடப்பது
போன்றது. "The Ordained Ministry is  walking on the razar edge".அரசர் சவுலுக்கு பயந்து தாவிது காத் என்ற ஊரைவிட்டு அதுல்லாம்
 Adullamஎன்றகுகைக்குதப்பியோடி னார்; அதுல்லாம் என்ற பெயருக் கு அடைக்கலம் என்று பொருள் ,அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வி யுற்று அங்கு அவரிடம் சென்றார் கள். ஒடுக்கப்பட்டோர், கடன் பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்;அவர் களுக்கு தாவீது தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் 400  பேர் இருந்தனர். யூதாவின்மலைக ளில் தாவீது கோலியாத்தை தோற் கடித்த இடத்திலிருந்து அதுல்லம் குகைவெகுதொலைவில்இல்லை.
இஸ்ரவேலரால் 40 நாட்கள் வெள்
ளப்படாத காத்து நகரை சேர்ந்த
கோலியாத்தை கொன்ற தாவீது
உயிருக்கு பயந்து இன்று குகை
யில் இருக்கிறார். வெற்றி, தோல் விகள், இன்ப, துன்பஙகள் நம்
வாழ்வின் விருந்தினர்கள், இவை
கள் ஓடும் மேகங்கள்.Passing clouds.நிரந்தரமானவைகள்அல்ல.துன்பங்களின்மத்தியிலும்  கடவுளிடம் சங்கீதம் 57, 142 மூலம்  அதுல்லாம் குகையிலிருந்து மன்றாடுகிறார். தான் துன்ப படும்
வேலையிலும்தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்ன னைப் பார்த்து, "கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்ப தை நான் அறியுமட்டும் என் தந் தையும் தாயும் உம்மிடம் தங்கி யிருக்க எனக்கு அனுமதி தாரும், என்று வேண்டினார். அவர்
களை காப்பாற்றினார். மற்றும்
தன்னை நம்பி வந்த 400 பேர்கள்
 துன்பத்திலும், கடனிலும், அதிருப் தியிலும் வந்தார்கள் , ஆலனால் அவர்கள் அப்படியே இருக்கவில் லை . தாவீது அவர்களை 1 நாளாக மம் 12:ல் Chronicles) விவரிக்கப் பட்டுள்ள மனிதர்களாக ஆக்கி னார் : வலிமைமிக்க மனிதர்கள், போருக்குப் பயிற்சி பெற்றவர்கள், கேடயத்தையும் ஈட்டியையும் கையாளக்கூடியவர்கள், அவர்களி ன் முகங்கள் சிங்கங்களின் முகங் களைப் போலவும், விண்மீன்க ளைப்  போல வேகமாகவும் இருந் தன.தாவீது இந்த 400 பேரை சவுல் மன்னருக்கு எதிராக கிளர்ச்சிப் படையாக( Revolt army) மாற்ற அனுமதிக்க வில்லை.இதுதான்
கடவுள் தாவிதுமீது அன்பு வைத்து
என் இதயத்திற்கு ஏற்றவன் என்
றார். ஆண்டவராகிய இயேசு கிறித்தும், " ஆனால் நான்உங்களு க்குச் சொல்கிறேன்; உங்கள் பகை வரிடமும் அன்பு கூருங்கள்; உங்க ளைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 
(மத்தேயு நற்செய்தி 5:44) என்றார்.
தாவிதுக்கு மூன்று முறை வாய்ப்
புகள் கிடைத்த போதும், அரசன்
சவுலை கொள்ளவில்லை. தாவிது தம் ஆள்களை பார்த்து, "ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலை வருக்கு எத்தீங்கும் செய்யாத வாறு ஆண்டவர் என்னைக் காப் பாராக. ஆண்டவரால் திருப்பொழி வு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக் கூடாது" என்றார். (1 சாமுவேல் 24:6) அந்த
மேலங்கியின் ஓரத்தை அறுத்தற்
கே மிகவும் வருந்தினார். கோலி யாத்தையும், 200 பாலஸ் தீனர்க ளையும் கொன்ற தாவீதுசவுலை ஏன் கொள்ளவில்லை?
அதுதான் ஆண்டவரின் அருட் பொழிவு பெற்றவர்களின் அரவ ணிப்பாகும். The Ordained belong to God. ஆனால் இஸ்ரவேலரின் முதல் அரசர் சவுல் தாவிதுக்கு உதவியதற்காக அருட்பொழிவு பெற்ற குருமார்கள் அகித்தூபின் மகனாகியகுருஅகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தை யின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்து, அரசர்தோயோகிடம், "நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து", என்று கட்ட ளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று அருட்பணி யாற்றிய  குருக்கள் 85 பேரை வெட்டி வீழ்த் தினான். மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான். (1 சாமுவேல்22:19)ஆக,அருட்பொழிவு திருப் பணி ஆபத்தானது அன்றுமுதல் இன்றுவரை. 
2.சிலுவையா? திருச் சட்டமா?
The Cross or the Law.கலாத்தியர்: 6:11-18
கிறித்தூவின் அன்பு பற்றுறுதி
யாளர்களே! கலாத்திய திருச்சபை
யில் யூத மயமாக்கும் கிறித்தவர்
களின் போதனைகளை முறியடிக்
க திருதூதர் பவுல் அடிகளார் மிக
கடுமையாக கண்டித்து இத்திருமு
கத்தை கி.பி 52- 53ல் எழுதினார்.
இயேசு கிறித்துவின் திருத்தூத ராக தம்மை அடையாளப்படுத்த
விரும்புகிறார். தன் அருட்பொழிக்
கான அழைப்பு எந்த மனிதனிடமி
ருந்து வரவில்லை, மாறாக அது
கடவுளிடமிருந்தே வந்தது என்கி
றார்.தன்கையினாலேஉங்களுக்கு எழுதுகிறேன் என இயேசு கிறித்துவின் பாடுகளின் அடை யாளமான சிலுவையை குறித்தே
மேன்மை பாராட்டுகிறார். அவர் கள் கிறிஸ்துவின் சிலுவையை முன்னிட்டுக்தாங்கள்துன்புறுத்தப் படாமல்இருக்கவேஅவர்கள்விருத் தசேதனம் செய்து கொள்ளும்படி உங்களைக் கட்டாயப் படுத்துகி றார்கள்.இவர்கள் உலகத்தின் முன் நல்லவர்களாய் நடிக்க விரும்புகிறவர்கள். கிறிஸ்துவின் சிலுவையைமுன்னிட்டுக் தாங் கள் துன்புறுத்தப்படாமல் இருக் கவே அவர்கள் இப்படிச் செய்கிறா ர்கள். அருட்பொழிவு திருப்பணி கிறித்துவின் காயங்களால் அடை யாளப்படுதலாகும்.விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களே திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்ப தில்லை.தாங்கள் பெருமை பாராட்டிக் கொள்வதற்காகவே நீங்கள் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பு கிறார்கள். நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின்சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். சிலுவையின் உப தேசமா? திருச்சட்டமா? விருத்த சேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே.உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக் கிறேன். இதுவே, புதிய படைப் பாகும்.நாம்கிறிஸ்துவின்சிலுவை யின் வேலையால் மட்டுமே இரட்சிக்கப்படுகிறோம் .ஒருவன்
கிறித்துவுக்குள் இருந்தால் மட்டு
மே புதிய படைப்பாக முடியும். திருச்சட்டமோ விருத்தசேதனமோ
கிறித்தவராகளாகிய கலாத்தியர் களை தூய்மைபடுத்தாது. திரு 
தூதர் பவுல் அடிகளார்,
"எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக் கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறை வனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல் களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. 
(கலாத்தியர் 2:16) என திட்ட வட்ட மாக கூறுகிறார். அவ்வாறே, 
அருட்பொழிவாளர்களும் கிறித் துவின் காயங்களால் தன்னை 
அடையாளப்படுத்துவதே அருட்
பணியாகும்.
3.இவர்களிலும் அதிகமாய் நீ என்னை நேசிக்கிறாயா” ?Do you love me too much more than these? ”யோவான்: 21:15-19.
கிறித்துவின் அன்பர்களே! உயிர்த்த கிறித்து மூன்றாவது
முறையாக சீடர்களூக்கு தோன்றி 
னார். இது கலிலேயா கடல். இதற்கு திபேரியா கடல் என்றும்,
கின்னேரேத் கடல் என்றும் மறு 
பெயர்கள் உண்டு.  இதே கலி லேயா கடலில் மீன் பிடித்த பேதுரு
வையும் அவன் சகோதரன் அந்தி 
ரேயுவையும் மூன்றரை வருடங்க ளுக்கு மூன்பு "என் பின்னேவாரு ங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்று
அழைத்தார்.  அந்த உன்னத அழை
ப்பை மறந்தனர்.மீண்டும் மீன்
பிடிக்க தன்னுடன் ஆறு சீடர்களூ டன் பேதுரு கடலில் சென்றார்.மீன்
ஒன்றும் கிடைக்க வில்லை. அன்றும் மீன் கிடைக்க வில்லை 
இன்றும் மீன் கிடைக்கவில்லை. 
ஆண்டவரின் வார்த்தையை கேட்ட
தினால் அற்புதம் நடந்தது மீனும் 
கிடைத்தது. ஆண்டவர் என்பதை
அறியவும் செய்தனர்.அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், "உயிர்த்த
கிறித்து ஏன் என்னை மூன்று முறை மறுதலித்தாய்?என கேட்கவில்லை. அவன் தவற்றை மன்னித்து விட்டார், மறந்தும் விட்டார். To Err is human,
to forgive is divine. மன்னிப்பே
ஆண்டவரின் மான்பாகும்.அந்த ஏழு சீடர்களில் ஏன் ஆண்டவர் பேதுருவை மட்டும், யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத் துகிறாயா?" என்று கேட்டார். அவர் இயேசுவிடம், "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!"என்றார். இயேசு அவரிடம், "என் ஆட்டுக் குட்டிகளைப் பேணி வளர்" என்றார். (யோவான் நற்செய்தி 21:15) இவரை சீடர்களின் தலைவராய் நியமித்தார்.
"நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். "கேபா" என்றால் "பாறை" என்பது பொருள். (யோவான் நற்செய்தி 1:42) (பேதுரு என்றால்
கிரேக்க மொழியில் " பாறை" என்றும் ஆண்டவரின் தாய் மொழி
யான அராமிக்கில் " கேபா" Cehpas
என பொருள்படும்) இவரே, திருச்சபையின் முதல் தலைவர்,
The first Pope, ரோம, அந்தியோகிய
திருச்சபைகளை நிருவியவர். நீரோ மன்னனால் தலைகீழாக
(தன் விருப்படி) சிலுவையில்
அறையப்பட்டார். எனவே, இவர்
திருச்சபையின் அடித்தள கல்.
இவரின் கல்லரையில்தான் வாடிகன் நகரில் தேவாலயம்
கட்டப்பட்டுள்ளது.)
எனவே, இவர் திருச்சபையின்
வளர்ச்சிக்கு பாறை போன்று
உறுதியாய் செயல்பட வேண்டும்
என்ற நோக்கத்தில்தான் சீமோ னை கேபா என அழைத்தார். இவரே, சீடர்களுடன் மீன் பிடிக்க
சென்றுவிட்டது கடவுளுக்கு மிக
வருத்தம்.  எனவே, ஆண்டவர்
மூன்றுமுறை மற்றும்" மூன்றாம் முறையாக அவரிடம்,"யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னி டம் அன்பு உண்டா?" என்று கேட் டார். "உனக்கு என்னிடம் அன்பு உண்டா?" என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், "ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?"" என்றார். இயேசு அவரிடம், ""என் ஆடுகளைப் பேணிவளர். 
(யோவான் நற்செய்தி 21:17) ஆண்டவர் அருட்பொழிவை
பெற்றவர்களை பார்த்து இன்றும்
கேட்கும் கேள்வி.ஆண்டவர், ‘என் ஆடுகளை மேய்ப்பாயாக’  உண்மையான அன்பினாலேயே தான் இறைபணிசெய்ய முடியும். அருட்பொழிவாளர்களே! அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது;தீங்குநினையாது. 
இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. 
எனவே, அருட்பொழிவு திருப் பணிய் கிறித்துவின் காயங்க ளால் அடையாளப்பட; ஆண்டவர் மீது உண்மையான அன்பு கொண்டு பணி செய்கிறோமா? அல்லது கடமைக்காக ஏனோ தானோ என்று பணியாற்று கிறோமா? சிந்திப்போம்!. கடவுள் தாமேஆண்டவரின் அருட்பணிக்கு
நம்மை புத்துயிருடன் செயல்பட
கிருபை புரிவராக! ஆமேன்



Prof. Dr. David Arul Paramanandam Sermon Writer www.davidarulsermoncentre.com www.davidarulblogspot.com. 


















பேதுரு
Saint Peter the Apostle
முதலாம் திருத்தந்தை பேதுரு.
ஓவியர்: பீட்டர் பால் ரூபென்ஸ் (1577-1640). ஓலாந்து.









 



Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.