கிறிஸ்துவை இந்தியாவில் அறிவிப்பது எப்படி.
இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்று கோடி
கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் . இந்தியாவில் கிறிஸ்தவம் பல நூற்றாண்டுக்கு முன்பே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. நம்முடைய வேதாகமம் உலகத்தில் உள்ள 2000 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. உலகில் முதன்மையான மதமாக கிறிஸ்துவம் இருக்கிறது. இந்தியாவில் முதலாம் நூற்றாண்டிலேயே தூய தோமா அவர்கள் மூலமாக கிறிஸ்தவம் இந்தியாவில் பரவியது. ஆனால் அது வெகுவாக பரவாமல் மார்த்தோமா என்ற குறிப்பிட்ட சபைக்கு உரிமையாய் இருந்தது.
மார்க் 16 வசனம் 15 இயேசு கிறிஸ்து சீடர்களை நோக்கி திட்டமாய் சொன்னது என்னவென்றால் "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்" என்று கட்டளையிட்டார். அதன்படியே இன்று வரை நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. லூக்கா நற்செய்தி நூல்
இரண்டாம் அதிகாரம் பத்தாம் வசனத்தில் வயல்வெளியில் இருந்த இடையர்களுக்கு வானதூதர்கள் "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்" என்றார். இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதே நற்செய்தி.
திருத்தூதர் பவுல் அடிகளார் 1கொரிந்தியர் 9 ஆம் அதிகாரம் 16 ஆம் வசனத்தில், "நான் நற்செய்தியை அறிவிக்கிறேன். என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை இதை செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்க விடில் ஐயோ எனக்கு கேடு."
நற்செய்தியை அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமை. ஏனெனில் திருத்தூதர் பணிகள் 9: 31."ஒருவன் எனக்கு தெரிவிக்காவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்து கொள்ள முடியும்" என்ற வார்த்தையை பார்க்கிறோம்
யார் அழகானவர்:
ஏசய்யா தீர்க்கதரிசி 52: 7 வசனத்தின் படி நற்செய்தி அறிவிக்கிறவர்களின் பாதங்கள் மலைகள் மேல் எத்தனை அழகாய் இருக்கின்றன" என்று கூறப்பட்டு இருப்பதை நாம் காணலாம். எனவே கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே நற்செய்தி அறிவிப்போம் இறை அரசை இவ்வுலகில் படைப்போம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Comments
Post a Comment