Revelation of God in Worship. திருவழிபாட்டில் கடவுளின் திருவெளிப்பாடு .

கடவுள் எங்கே இருக்கிறார்?
உன்னதமான இடத்தில் வாசம் செய்யும் இறைவன், தூனியிலும் இருப்பதில்லை துரும்பிலும் இருப்பதில்லை. அவர் படைப்பில் இறைவன் இருக்கிறான்,   இயற்கையின் அழகில் இறைவன் இருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் இறைவன் இருப்பதில்லை. He is not Omni present.
லேவியர் 26: 11,12 திடமாய் சொல்கிறது." என் உறைவிடத்தை உங்கள் நடுவில் நிறுவுவேன். நான் உங்களை வெறுப்பதில்லை. உங்கள் நடுவே நான் உறங்குவேன்.  நானே உங்கள் கடவுள்.  நீங்கள் என் மக்கள்" என இறைவன் நம் மத்தியில் வாசம் செய்கிறார்.
Is God dwell in our Temples?
நாம் கட்டும் ஆலயங்களில் கடவுள் இருக்கிறாரா? ஆண்டவரை ஒரு ஆலயத்திற்குள் அடைத்துப் போட முடியுமா? வேதத்தில் 1 அரசர்கள் 8:27,29. சாலமன் அரசர், வான மண்டலங்களும் உம்மை கொள்ள இயலாதிருக்க, நான் கட்டியுள்ள கோயில் எப்படி உம்மைக் கொள்ளும்? என்கிறார். அவரின் கூற்றுப்படி ஆலயம் விண்ணப்பங்களை ஏறெடுக்கின்ற இடமாக இருக்கிறது.
தூய மத்தேயு 18: 19, 20 வசனங்களில் உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனம் ஒத்தி இருந்தால்,  விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.  ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு ,எங்கே ஒன்றாக கூடி இருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.அதாவது நம் ஆலயங்களில் நாம் ஒன்றுபட்டு துதிக்கின்ற போது ஆண்டவர் நம் ஆலயங்களில் வாசம் செய்கிறார். ஒருமனப்பட்டு அழைக்கின்ற இருதயத்தில் வாசம் செய்கிறார். தூய பவுல் அடிகளார் திருத்தூதர் பணிகள் 17: 24. உலகையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர் மனிதர் கையால் கட்டிய திருக்கோயில்களில் அவர் குடியிருப்பது இல்லை. என்று கூறுகிறார். பவுல் அடிகளார் ஏதேன்ஸ் நகரில் ஜனங்களின் மத்தியில் உரையாற்றுகின்றார். ஏதன்ஸ் நகரம்.

Apostle Paul's sermon at the Areopagus, Athens. Greece 

  St. Paul delivering the Areopagus  Sermon in Athens, 
by Raphael, 1515.

 சிலைகளால் நிரம்பிய ஒரு நகரம். அறிவாளிகளும் தத்துவ ஞானிகளும் தோன்றிய மாபெரும் நகரம். சாக்ரடிஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகள் தோன்றிய நகரம். அரிஸ்டாட்டலின் மாணவனாக இருந்தவர் அலெக்ஸாண்டர் தி கிரேட் இந்தியா மீது படையெடுத்தவர். இந்நாட்டு மக்கள் அறியப்படாத கடவுள் என்ற பலிபீடத்தைக் கட்டி தொழுது கொண்டு வந்தனர். அவர்களுக்கு உண்மையான இறைவனை போதித்தார் ‌.
 மனுர்கள் மத்தியில் வாசம் செய்யும் இறைவன்.
 திரு வெளிப்பாடு 21: 3,4.ல் " இதோ கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்களின் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களா இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே  அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவருடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவுமிராது. துயரம் இராது.அழுகையிராது துன்பமிராது முன்பு இருந்தவை எல்லாம் மறைந்து விட்டன" என வானத்திலிருந்து உரைத்த வார்த்தையை கேட்டார். நம் இறைவன் நம் மத்தியில் வாசம் செய்ய விரும்புகிறார் உள்ளத்திலும் இல்லத்திலும் வாசம் செய்ய விரும்புகிறார் நம் உள்ளமே அவருக்கு பிரியமான இல்லம். நானும் என் வீட்டாருமே என்றால் கர்த்தரையே சேவிப்போம்.
1 கொரிந்தியர் 3:16,17. பவுல் அடிகளார் நீங்கள்  கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடி இருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? என்று கேட்டு கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில் என்கிறார். துதிகளில் மத்தியில் வாசம் செய்யும் இறைவன் நாம் நம் ஆலயங்களில் துதிக்கின்ற பொழுது இறைவன் அங்கு இருக்கிறார் நம்மோடு வாசம் செய்கிறார் துதிக்கின்ற இடங்களில் மட்டுமே இறைவன் இருப்பார். வானங்கள் துதிக்கின்றன. இறைதூதுவர்கள் துதிக்கின்றனர் அனைத்து படைப்பும் இறைவனை துதிக்கின்றன. துதிக்கு பாத்திரமானவர் இறைவன். நம் குடும்ப ஜெபங்களில் கூட்டுத் தொழுகையில் இறைவன் இருக்கிறார். நம் வாசல் படிகள் நின்று தட்டும் இறைவன் உள்ளத்தில் வாசம் செய்ய விரும்புகிறார் உள்ள கதவுகளைத் திறந்திடுவோம் உன்னதர் வாசம் செய்ய விரும்பிடுவோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.