Reformation Sunday. 30:10:2022. சீர்திருத்த ஞாயிறு.Celebration of God's Sovereignty, Justice and Peace.விடுதலை பயணம் 7:1-7. யோவான் 18:33-38, ரோமர் 13:1-7.
சீர்திருத்த ஞாயிறு என்றால் என்ன?
சீர்திருத்த தந்தை என அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் அவர்கள் 1517, அக்டோபர் 31ம் நாள் ஜெர்மனியில் உள்ள விட்டேன் பெர்க் ஆலயத்தின் கதவில் 95 சீர்திருத்த கருத்துகளை ( theses) வெளியிட்டார். பாவ மன்னிப்பு ஆண்டவரின் கிருபையாலும் மனம் திருந்ததிலும் மட்டுமே கிடைக்கும் மாறாக பாவ மன்னிப்பு சீட்டு விற்பதினால் கிடைக்காது என்று ஆணித்தரமாக விளக்கினார். கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக அவர் மேற்கொண்ட சீர்திருத்த கருத்துக்களுக்கு ஆதரவாக ஏற்படுத்தப்பட்டது தான் புரட்சிகர சீர்திருத்த மார்க்கம் என்பதாகும்.(Protestant) . திருச்சபையில் சீர்திருத்தங்கள் காலகட்டத்தில் அவசியமாகிறது. எந்த சீர்திருத்தமும் வேதத்தின் அடிப்படையில் கடவுளின் போதனையின் அடிப்படையாக அமைய வேண்டும்.. சீர்திருத்தம் என்ற பெயரில் வேதத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஆண்டவர் மீது இருக்கும் பற்று உறுதியை நீர்த்து போகக்கூடாது. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. தொடர்ந்து மாற்றங்கள் பெறும். உலகம் மாறக்கூடியது. மனிதர் மாறக் கூடியவர்கள். ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.
The father of Reformation.
2. விடுதலைப் பயணத்தில் ஆண்டவரின் இறையாண்மை. ( வி. ப 7:1-7) Liberation from Slavery.
இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் 430 ஆண்டுகள் அடிமை பட்டிருந்தனர். அவர்களை விடுவிக்க மோசே, ஆரோனை தேர்வு செய்தார். நானே ஆண்டவர் என எகிப்திய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பத்து வாதைகளை உருவாக்கி, மோசையை பார்வோனுக்கு கடவுளாக வைத்தும் ஆரோனை தீர்க்கதரிசியாகவும் ஏற்படுத்தினார். விடுதலை பயணத்தின் மையப் பொருளே "நானே ஆண்டவர் என எகிப்தியர் அறிந்து கொள்வர்" என்பது ஆண்டவரின் இறையாண்மையை எடுத்துரைக்கிறது. திருப்பாடல்கள் 113:7-9. கடவுளின் இறையாண்மை ஏழைகளை தூசியில் இருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார் வரிய வரை குப்பை மேட்டில் இருந்து கை தூக்கி விடுகின்றார்.
3. இயேசுவின் இறையாண்மை: The sovereignty of Jesus Christ:
யோவான் 18: 33-38.
இயேசுவின் இறையாண்மை இவ்வுலக ஆட்சியைப் போல் அல்ல . உண்மையை எடுத்திருப்பதற்காக நான் பிறந்தேன் இதற்காகவே உலகத்திற்கு வந்தேன் உண்மையைச் சார்ந்தவர்கள் அனைவரும் என் குரலுக்கு செவி சாய்க்கின்றனர். யோவான் 13: 34 இல் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்கு கொடுக்கிறேன். நான் உங்களிடத்தில் அன்பு செலுத்தது போல நீங்களும் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.அதன் மூலம் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் என்று இயேசு தன் அன்பின் வழியாக இறையாண்மையை வெளிப்படுத்தினார். ஆண்டவரின் இறையரசு அமைதி, மன்னிப்பு, அன்பின் அடிப்படையாகக் கொண்டது. யோவான் 8: 4,7,10,11 இவைகளின் அடிப்படையில்," நானும் தீர்ப்பு அளிக்கவில்லை, நீர் போகலாம், இனி பாவம் செய்யாதீர்"என்றார். இயேசுவின் இறையாண்மை, no judgement but acquittal.
4. அதிகாரத்திற்கு கீழ்ப்படிதல்: Submission to GoverningAuthority. உரேரமையர்13:1-3.
ஆண்டவரின் இறையாண்மை கீழ்ப்படிதலை அடிப்படையாகக் கொண்டது. ஆளும் அதிகாரம் உள்ளவர்களுக்கு எல்லாரும் பணிந்து நடக்க வேண்டும். ஏனென்றால் கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை. ஆட்சிப் பொறுப்பை கடவுளே ஏற்படுத்தினார். ரோமர் 14: 17,18. இறையாச்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது.
5. இயேசுவின் இறையாட்சி உலகில் வந்து விட்டதா? Mark :1:15,
இயேசுவின் இறையரசு அவர் காலத்திலேயே அவரால் இந்த உலகில் உண்டாக்கப்பட்டது பிதாவே உம்முடைய இறையரசு இந்த உலகில் வருவதாக என்று நமக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தார் இறையரசு என்பது இங்கே என்றும், அங்கே என்றும் அல்ல, அது நம்மிடையே உண்டு. இறையருசை ஆண்டவர் நம் உள்ளத்தில் தொடங்கி வைத்தார். நாம்தான் அந்த இறையரசை உலகில் நிலைநாட்ட வேண்டும், அமைத்திட வேண்டும். பிலிப்பியர் 2':10,11 படி அனைவரும் இயேசுவின் அறியும் போது அவரின் இறையருள் வந்தாயிற்று. Jesus has already laid the foundation of the kingdom of God on this earth , it's our ministry and duty to spread the kingdom of God in individuals. Anen
Comments
Post a Comment