Word of God: Double Edged Sword. கடவுளின் திருமொழி இருபுறமும் கூர்மையான வாள். எரேமியா 36:1-10, எபிரேயர் 4:11-13 . லூக்கா1:5-17. திருப்பாடல்கள் 118:89-96.

1  கடவுளின் வார்த்தையே கட்டளை:
உபாகமம் 4:2 
"நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற 
வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். என்ற சிந்தனையோடு நாம் தேவ வார்த்தைகளை தியானிக்க வேண்டும். வசனங்களை அதன் வரலாற்றின் பின்னணியில் உள்ள கருத்துகளின் அடிப்படையில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
வார்த்தை சொல்லப்பட் காலம் சூழ்நிலைகளையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளவது அவசியம்.
மோசஸ் பத்து கட்டளைகளை பெறுதல்:
1896 illustration depicting Moses receiving the commandments.
2. உயிர் உள்ள வார்த்தை:அது ஒரு அயூதம்:
சங்கீதம் 119:105  "உம்முடை வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்குவெளிச்ச
முமாயிருக்கிறது "  கடவுளின் வார்த்தை இருளைப் போக்கி ஒளியை தரும்.இயேசுவே ஒளி. இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தை கண்டனர் என யோவான் இயேசுவை வெளிச்சமாக சித்தரிக்கிறார்.
நீதி மொழிகள்: 4;6. "கடவுளின் வார்த்தையை  விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.".துன்பங்கள், வேதனைகள், சோதனைகள் வருகின்ற போது கடவுளின் வார்த்தையை நாம் வாய்விட்டு சோல்வோம், அந்த வார்த்தையே நம்மை காக்கும். அவர் வார்த்தையே நம்மை காக்கும் கரங்கள்.

யோவான்1:1. தொடக்கத்தில் வாக்கு இருந்தது;அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.:
கடவுள் என்றால் வார்த்தை; வார்த்தை என்றால் கடவுள். 2.வார்த்தையும் கடவுளையும் பிரிக்கமுடியாது.
3.கடவுளின் வார்த்தை ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது. இந்த உலகம் கடவுளின் வார்த்தையினால் படைக்கப்பட்டது.கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது;ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின்சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது"   உள்ளத்தில் அவர் பால் பேரன்பு கொண்டோர் எண்ணத்தில் தெளிவை பெறுவர். அன்புள்ளவன் இயேசுவை அறிவான். இயேசு அன்பாக இருக்கிறார் அவர் இந்த உலகத்தின் மீது அன்பு கொண்டவர். அவரே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார். சத்தியத்தை அறிந்தவர்கள் சத்தியத்தினால் விடுதலை பெறுவார்கள். அந்த சத்தியமே வார்த்தை; ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌வார்த்தயே கிறிஸ்து. இயேசுவின் வார்த்தை வாழ்வு தரும்.
யோவான் ..1:2
சீமோன் பேதுரு கடவுளை நோக்கி; " யாரிடம் செல்வோம் இறைவா,  வாழ்வு தரும் வார்த்தை உம்மிடம் மட்டுமேஉண்டு என்று வேண்டுவதை" நாம் பார்க்கிறோம். இயேசு பாலைவனத்தில் சாத்தானால்சோதிக்கப்பட்டபோதுசாத்தானைஎதிர்த்துப் போரிடுவதற்கும் விரட்டுவதற்கும் வார்த்தை என்ற ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்தார்:
திருப்பாடல்கள்: 119:9 "உமக்கெதிராய் நான் பாவம் செய்யாதவாறு
உமது வாக்கை என் இதயத்தில் இருத்தியுள்ளேன்." நாம் பாவம் செய்வதை தடுக்கின்ற ஆயுதமாக வேத வார்த்தைகள் நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும்.
50. உம் வாக்கு என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது;
ஏனெனில், அது எனக்கு வாழ்வளிக்கின்றது. இரைவனின் வார்த்தை வாழ்வளிக்கும் வார்த்தை. அந்த வார்த்தையை நாம் உலகம் முழுவதும் சுமந்து செல்வோம். விதையாய் விதைப்போம்.அறுப்போ மிகுதி ஆட்களோ கொஞ்சம் அத்தகைய விண்ணரசின் பணியிலே நம்மை முழுமையாக ஈடுபடுத்துவோம்.
திருப்பாடல்கள்:19:91
ஆண்டரைப் பற்றிய அச்சம்தூயது;அது
எந்நாளும்நிலைத்திருக்கும்.ஆண்டவரின்நீதிநெறிகள்
உண்மையானவை;அவை முற்றிலும் நீதியானவை.
10அவைபொன்னினும்,பசும் பொன்னினும் மேலான விலைமிக்கவை; தேனினும்,தேனடையினின்று சிந்தும்தெளி தேனினும் இனிமையானவை.
11அவற்றால்அடியேன்எச்சரிக்கப்படுகின்றேன்;அவற்றைக்கடைப்பிடிப்போர்க்குமிகுந்த பரிசுண்டு.
  எபி 4:12. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவிதைகளுக்குஒப்பானோர்இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் 30 மடங்காகவும் பயனளிப்பர். வார்த்தை என்பவர் மனிதராகப் பூமிக்கு வந்தார். “அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம்மத்தியில்குடியிருந்தார்.” 
3.இயேசுவே வார்த்தை:
யோவான்: 20:31
கடவுளின் வார்த்தை இயேசுவே மையமாக கொண்டு எழுதப்பட்டது.
"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
1பேதுரு: 2: 2,3புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்றவார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமு ள்ளவர்களாயிருங்கள். 
3 இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள். 
4.இயேசுவின் வார்த்தை குணமாக்கும்:
யோவான் 4: 49-51 "அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார். 50 இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப் போம். உம் மகன்     பிழைத்துக்கொள்வான்”
என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப்போனார். 
51அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்குஎதிர்கொண்டு
வந்து மகன் பிழைத்துக் கொண்டான் என்று கூறினார்கள். நம்பிக்கை உடையவர்களுக்கு ஏசுவின் வார்த்தை பயனளிக்கிறது.
5.கடவுளின் வார்த்தை மனமாற செய்யும்:
எரேமியா 36:5-7
5. பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடையஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.
6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள்பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும்கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
7 ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான். ஆண்டவரின் வார்த்தையை கேட்டு இஸ்ரேல் மக்கள் மனம் திரும்புவார்கள் என்று எரேமையாவின் வார்த்தை உணர்தப்பட்டது.
 6.கர்த்தரின் வார்த்தையை புரிந்து கொள்ளுதல்:
ஏசாயா 55:8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
9. பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என்வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என்நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. எனவே அன்பானவர்களே நாம்;
கர்த்தருடைய எண்ணங்களை புரிந்துகொள்ளவேண்டுமானால் அதை நம்முடைய சிந்தையாலோ, அறிவினாலோ புரிந்து கொள்ளமுடியாது. வேத வசனங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
யோவான் 5:39 "வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச்சாட்சிகொடுக்கிறவைகளும்அவைகளே.
7.கடவுளின் வார்த்தை உள்ளத்தில் வாசமாக இருப்பதாக:
கொலேசியர்:3:16
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துபுத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;கடவுளைப் போற்றுங்கள்.
அப்போஸ்தலர் 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.இதை அவர்கள் கேட்டபொழுது,இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். ஆண்டவரின் வார்த்தை வல்லமை உள்ளது. இருதயத்தை மென்மையாக்கும்
2தீமோத்தேயு 3:16 
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. எனவே அன்பானவர்களே! இறை வார்த்தையில் உறுதியாய் நம்பிக்கை கொள்வோம்.
கடைசியாகபிரியமானவர்களே!.
2.பேதுரு 1:20,21.
ஆனால் மறைநூல் உள்ள எந்த இறைவாக்கும் எவரது சொந்த விளக்கத்திற்கும் உட்பட்டதல்ல. என்பதை நீங்கள் முதலில் அறிய வேண்டும். 21. தூய ஆவியால்ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உறைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானதல்ல.
வெளிப்படுத்தின விசேஷம் 22:19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து 
எதையாகிலும் எடுத்துப் போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். (உபாகம்:4:2) யோவான் உபாகமத்தை இங்கு பிரதிபலிக்கிறார்.
பாடல்: சத்திய வேதம்.
இயேசு கிறிஸ்துவின் காக்கும் கரங்கள் உங்களை எப்போதும் காப்பதாக. நம்முடைய வாயின் வார்த்தை ஆண்டவருக்கும் மனிதர்களுக்கும் பிரியமாய் இருப்பதாக. ஆமென்.

Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.