உயிர்த்தெழுத்த கிறிஸ்துவின் முதல் வாரம் லூகா 24. 13 - 35 வரை.
ஏன் நமக்கு எம்மாவு சாலையின் அனுபவம் தேவை?.
இயேசுவின் சீடர்களில் இருவர் எருசலேமிருந்து இருந்து ஏழு மையில் தூரத்தில் உள்ள எம்மாவு என்ற ஊருக்கு பயணப்பட்டு இருக்கின்றனர். ஒருவர் கிளியோப்பாவும் மற்றோரு சீடரும் ஆவர். அவர்கள் பயணம் முழுவதும் இயேசுவின் சிலுவை பாட்டை குறித்து இருந்தது பயமும் திகழளும் நிறைந்தவர்களாய் சென்று கொண்டிருந்தனர். சந்தேகமும் துக்கமும் கொண்டவர்களாக இருந்தனர். தங்களுக்குள் இயேசு உயிர்த்தெழுந்து இருப்பாரா? என்ற எண்ணத்தோடு பயணித்தனர். இவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தை பார்த்தவர்கள். அவரைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேதம் திட்ட வட்டமாக சொல்கிறது மத்தேயு 18:19,20. "ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடி இருக்கிறீர்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக சொல்கிறேன் என்றார்."அப்போது இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இயேசு அவர்களை நோக்கி வழிநடிகளும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருப்பது என்ன என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். அவர்களில் கிளயோப்பா அவரிடம் மறுமொழியாக எருசலேமில் தங்கி இருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ என்றார். இயேசு அவர்களிடம் என்ன நிகழ்ந்தது என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்கு நடந்ததை முழுவதுமாக எடுத்துரைத்தார்கள். இயேசு அவர்களை நோக்கி இறைவாக்கினர் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே என கடிந்து கொண்டு இறைவாக்கினர்கள் அவரைப் பற்றி எழுதியதை எடுத்துரைத்தார் பின்பு அப்பால் போகிறவர் போல காட்டிக் கொண்டார். அவர் அவரிடம் எங்களோடு தங்கும் மாலை நேரம் ஆகிறது என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு ஏற்ப இயேசு அங்கு தங்கி அப்பத்தை எடுத்து பிட்டு அவர்களுக்கு கொடுத்தார். அப்பொழுது அவர்கள் கண்கள் திறந்தன. இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை புரிந்து கொண்டனர் மற்ற சீடர்களுக்கும் அறிவித்தனர்.
இயேசுவின் உயிர்த்தெழுதல்:
நாம் நம்முடைய வாழ்க்கை பயணத்தில் இயேசுவோடு நடந்து செல்வோம். அவர் நம்மோடு தங்கி இருக்க அழைப்போம்.
Comments
Post a Comment