மாற்றம்:
மாற்றம் :. சி.எஸ்.ஐ. போலியோ மறுவாழ்வு மையத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பாக பயின்ற மாணக்கராகிய உங்களை பாராட்டி வருடா வருடம் தாங்கள் சேர்ந்து நடத்துகின்ற இந்த கூடுகைக்காக வாழ்த்துகிறேன். இதன் பிறகு கால் நூற்றாண்டு காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் உயர்வுகள் ஏற்ற தாழ்வுகள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும். உங்கள் அறிவு திறன் ஆற்றல் உங்களை உயர்நிலைக்கு கொண்டு சென்றிருக்கும். தங்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தங்களால் மட்டுமே ஏற்பட்டதாகும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" (கணியன் பூங்குன்றனார்) நமக்கு ஏற்படும் நல்லதும் கெட்டதும் பிறர் கொடுத்து வருவதில்லை. ஒருவருடைய எண்ணங்கள் தான் பண்பாட்டை தரும் மாற்றம் வரும்போது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது "change is a word never change, but everything will change." (Karl marks) என கூறினார். அது எவ்வளவு உண்மை என்பது உங்களின் வாழ்வில் புரிந்திருப்பீர்கள். அனுபவித்திருப்பீர்கள். மாற்றங்கள் ஏற்ப தன்னை முன் முன்னேற்றத்திற்காக நல்வழிகளில் மாற்றம் பெற வேண்டும். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல எல்லாம் மாறும். உங்களின் தோல்விகளும், கவலைகளும் கூட . உங்களின் மாற்றம் உங்களுக்கு மன சந்தோஷமும் ஆரோக்கியத்தை தர வேண்டும். இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையான "ஒருவருக்கொருவர் அன்பு கூறுங்கள்" (யோவான் 13: 34.) என அன்பு கூறுவதில் உங்களின் மாற்றம் முதன்மையாய் அமைய வேண்டும். நம் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயது (age factor) உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். "சுவர் இருந்தால்தான் சித்திரம் வர முடியும்" Health is wealth. ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல மாற்றங்களை கைக்கொள்ளுங்கள். மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகளை என்றும் மறந்துவிடாதீர்கள். "ஆண்டொன்று போனால் அழகொன்று போகும்" என்பர். ஆனால் நீங்கள் உங்கள் மனதளவில் என்றுமே அழகு என்றும் இளமை என்றும் நினைவு கொள்ளுங்கள். உங்கள் ஆளுமை (personality) என்றுமே உயர்வாய் கொள்ளுங்கள். "எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்" உயர்வான எண்ணங்கள் உங்களை உயர்த்தும். நீங்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தீர்கள். Born to succeed என மன உறுதியுடன் உழையுங்கள் வெற்றி பெறுவீர்கள். இறுதியாக ஒன்றை வலியுறுத்துகிறேன். எனக்கு அன்பானவர்களே! உலகிலேயே உங்களை உயர்த்துவது கல்விதான். கல்வி ஒன்றே உங்களுக்கு நல்ல மாற்றத்தை உயர்வைத் தரும். புகழையும் தரும். வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருங்கள். பட்டங்கள் பல பெறுங்கள் 'Education is the most powerful weapon which you can use to change the world." ( Nelson Mandela) உங்களால் முடியும். " if you think, you can" என உங்களை உளமாற வாழ்த்தி வாழ்க பல்லாண்டு என நல்ல மாற்றங்கள் பெற்று எல்லா வளங்களும் பெற்று வாழுங்கள் என வாழ்த்துகிறேன். அன்புடன்.Prof Dr. David.Arul Paramanandam. M Com., M Phil ,M B A., B Ed., Ph. D.
Comments
Post a Comment