Children in the Church. திருச்சபையில் சிறார் : யாத்:2:1-10, லூக்கா:18:15-17. 3.யோவான்:1:1-15.
Introduction: "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெரறின்." என்றார் திருவள்ளுவர்.
பண்புடை மக்கட் பெரறின்." என்றார் திருவள்ளுவர்.
பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால்,ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா. நல்ல பண்புள்ள பிள்ளைகளை பெற்றெடுப்பது பெற்றோருக்கு ஏற்படும் சிறப்பாக கூறுகிறார். மோசேவின் பிறப்பு அற்புதமான கடவுளின் வழிநடத்தலில் காப்பற்றப்படுகிறார். ஆனால் பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, பிறக்கும் எபிரேய ஆண்மகவுகள் அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள் என்று ஆண் பிள்ளைகளை கொள்வதை நாம் பார்க்கிறோம். போர்காலங்களிலும் பஞ்சங்களிலும் குழந்தைகள் பாதிக்கப்படுவதை பார்க்கிறோம். யாக்கோபின் குமரனான யோசேப்பு தன் சகோதரர்களாலே தூக்கி எறியப்படுகிறார் அப்போது அவருக்கு வயது 17. ஆனால் கடவுள் அவரை மேலாகஉயர்த்தினார்.
2.அரசர்கள் 5: இஸ்ரவேல் நாட்டின் சிறு பெண் அவள் தன் தலைவியை நோக்கி, “என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள். நாமான் அந்தக் குழந்தையின் சொல் கேட்டு குணம் பெற்றதை அற்புதமாக பார்க்கிறோம். ஆனால் அந்தக் குழந்தையின் பெயர் வேதத்தில் இடம் பெறாமல் இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. நாமான் அறிவித்தது "இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன்.".
திருப்பாடல்கள் 127: 3. "பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட் பேரு, அவர் அளிக்கும் பரிசில்." Children are the gift of God".
குழந்தைகள் என்பவர்கள் யார்? 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களே குழந்தைகள் என்கிறோம். இந்தியாவின் தேசிய குற்ற பதிவேற்றின்படி ஒவ்வொரு நாளும் 87 குழந்தைகள் கற்பழிக்கபடுகின்றனர். National Crime Records. உலகம் முழுவதும் 100 கோடி குழந்தைகள் இருக்கின்றனர் இவர்களில் பலரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குழந்தைகள் கடத்துதல் விபச்சாரத் தொழில்களில் ஈடுபடுத்துதல் போன்ற கொடுமையான செயல்கள் குழந்தைகளளை பாதிக்கின்றன. தெருவோர குழந்தைகள் பிச்சை எடுக்கின்ற சூழ்நிலையிலும் போதுமான கல்வி, உணவு பாதுகாப்பின்றி தவிக்கின்றனர்.
மத்தேயு 2:16-18
இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது ஏரோது பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். திருச்சபைகள் குழந்தைகளுக்கான பாட வகுப்புகள் நீதி போதனை வேதக் கதைகள் சிறு நாடகங்கள் மற்றும் ஒழுக்க நெறிகளை தொடர்ந்து கற்றுக் கொடுக்கின்ற மையமாக இருக்க வேண்டும். நீதிமொழிகள் 22:6 "நல்வழியில் நடக்க பிள்ளையை பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப். பழக்கத்தை விட்டு விட மாட்டார்". சிறு வயதில் நற்செயல்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்வில் கைகொள்ள உதவியாக இருக்கும்.
லூக்கா 18:15-17. "சிறுபிள்ளைகளை என்னிடம் வரை விடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது". "இறையாசட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்" என்று இயேசு லசீடர்களிடம் கூறினார்". விண்ணரசு சிறு பிள்ளைகளை போல் குற்றம் மற்றவர்களுக்கே உரியது.மத்தேயு 18:1-5. "நீங்கள் மனமந்திரும்பி சிறு பிள்ளையைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத்தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப்பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக் கொள்கிறார்".
மத்தேயு 18 :10
"இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாய் இருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாவலராக விண்ணின் மைந்தன் இயேசு இருக்கிறார். மாற்கு 9:36,37."பிறகு, இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,
"இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த
மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான்.என்னைஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார். குழந்தைகளை நேசிக்கவும் அன்புகூரவே ஆண்டவர் நம்மை வேண்டுகிறார்.மத்தேயு 18:6 "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவது அவனுக்கு நலமாயிருக்கும்". இந்த வார்த்தை இயேசு குழந்தைகள் மீது வைத்திருக்கின்ற பற்று உறுதியை காட்டுகிறது.
மத்தேயு 21:15,16.
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு,கோபமடைந்து,அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார். குழந்தைகளின் துதி வேதபாரர்களை கோபமடைய செய்தது. அவர்களின் துதி விண்ணை நோக்கி பாய்ந்தது. குழந்தைகள் இறைவனை துதிக்கின்ற பிள்ளைகளாய் வளர்க்க வேண்டும்.தாயின் வளர்ப்பு: எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே. தாயின் வளர்ப்பிலே தான் நல்லவராவதும் கெட்டவராவதும் உண்டு. ஜான் வெஸ்லி Methodist Church Founder என்ற மாமனிதர் "இங்கிலாந்தில் உள்ள அனைத்து போதர்களின் உபதேசங்களை காட்டிலும் என் தாயிடம் தான் கிறிஸ்துவை பற்றி அதிகம் அறிந்து கொண்டேன் என்றார்". தாய் ஒரு கோவில். தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தனில் மிகச் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் வளர்ப்பு ஒரு கூட்டுப் பொறுப்பு.
நம் இல்லங்களில் மூன்று செயல்கள் மிக முக்கியமானவைகள்:
1. நாம் எப்பொழுதும் இயேசு கிறிஸ்துவை பற்றி பேசுவதை பிள்ளைகள் கேட்க வேண்டும்.
2. பெற்றோர்கள் வேதம் வாசிப்பதை பிள்ளைகள் கண்ணார காண வேண்டும்.
3. பெற்றோர்கள் ஜெபிப்பதை பிள்ளைகள் காதார கேட்க வேண்டும். இந்த மூன்று செயல்கள் இருக்கின்ற குடும்பம் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.
லூக்கா 18 :15 -17. கிறிஸ்துவின் விண்ணரசு சிறு பிள்ளைகளுக்கு உரியது இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என இயேசு உறுதியாக கூறுகின்றார்.
நீதிமொழிகள்1: 8-10 "என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. தாய் சொல்லை தட்டாதே என்பதை உறுதி படுத்துகிறது.
நீதிமொழிகள்17:6 "பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்கள். கொலேசியர் 3: 20
" பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது."
பிள்ளைகளுக்கு கீழ்ப்படிதலுக்கான குணங்களை வளர்க்க கற்றுக் கொடுக்க வேண்டும் கீழ்ப்படிதல் கர்த்தருக்கு பிரியமானது என்பதை உணர்த்தவேண்டும்.
எபேசியர் 6:1-4 1பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக்கீழ்ப்படியுங்கள்.ஆண்டவரின்அடியாருக்கு இதுவே ஏற்புடையது.
2“உன் தந்தையையும்உன் தாயையும் மதித்து நட ”என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை.3“இதனால் நீ நலம் பெறுவாய்;மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்”என்பதே அவ்வாக்குறுதி.4தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள். இத்தகைய வழியில் முக்கியமாக வேதத்தின் படி பிள்ளைகளை வளர்த்திட வேண்டும் கடவுள் நமக்கு பிள்ளைகளை வளர்க்கின்ற அறிவையும் ஆற்றலையும் ஞானத்தையும் தருவாராக ஆமேன்.
Comments
Post a Comment