பழையஏற்பாட்டில் ஆண்டவர் யாத்:3:14"
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். " I am who I am ". இருக்கிறவராக இருக்கிறேன் என்ற சொல் ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஆதியிலே வாசமாய் இருந்தவர், இப்பொழுதும் நம் மத்தியில் வாசம் செய்கிறார். அவர் நாமம் வல்லமையின் நாமம் அவர் நாமம் அதிசயமானது.
யாத்:6:2,3
பின்பு மோசேயிடம், “நான் யெகோவா. 3 நான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன். இறைவனின் திருநாமமான "யாவே",(யெகோவா) எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (
The Being) அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும்
. யாத்: 20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலேவழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். ஆண்டவரின் நாமம் மேலான நாமும். அவர் நாமத்தை நாம் சிறுமைப்படுத்த கூடாது.
யெகோவா என்ற நாமம்:
இஸ்ரேவேளர் 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்பட்டதை யெகோவா என்ற நாமத்தினால் மீட்கப்பட்டார்கள் செங்கடலை பிளந்தார்கள். வனாந்தரத்தில் அற்புதமாக நடத்தப்பட்டார்கள். பல மன்னர்களை வீழ்த்தினர் கானான் என்ற தேசத்தை அமைத்தனர். 1சாமுவேல் 17:45 " அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், “நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ, நீ இகழ்ந்த இஸ்ராயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன். " மகா வல்லமையின்நாமத்தினால் கோலியாத்தை தாவீது வீழ்த்துவதை பார்க்கிறோம்.
இயேசு என்ற நாமம்:
இயேசு என்ற திரு நாமத்திற்கு துதிகளும் தோத்திரங்களும் உண்டாகக் கடவது இயேசுவின் நாமத்தில் பிசாசுகள் ஓடி ஒளிந்தன, அற்புதங்கள் நடந்தன. மரித்தவர்உயிர்த்தெழுந்தனர்.குருடர்கள்பார்வையடைந்தனர். அது வல்லமையின் நாமமாய் இருப்பதினால் இயேசுவின் நாமத்தினால் ஊழியத்தில் வல்லமையான செயல்களை நம்மால் செய்ய முடியும். இயேசுவின் நாமத்தினால் நாம் இறைவேண்டுதல் செய்கின்ற பொழுது அதை கொடுக்க அவர் சித்தமாய் இருக்கிறார். பிலிப்பியர்: 2: 9-11. "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11 பிதாவாகிய அவருக்கு மகிமையாகஇயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும்அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லாநாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11 பிதாவாகிய அவருக்கு மகிமையாகஇயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும்அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லாநாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். யோவான் 14: 14,15 "என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்."நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.". இது சாதாரண வார்த்தை அல்ல ஆண்டவர் கூறும் மிக உறுதியான வார்த்தை. நீங்கள் எதைக் கேட்டாலும் நான் உங்களுக்கு செய்வேன். ஆனால் அவரிடத்தில் நாம் அன்பு கூறுவது என்றால் அவருடைய கற்பனைகளை கட்டாயம் கைக்கொள்ள வேண்டும்.
மத்தேயு 6:9-11 பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; அவரின் நாமம் நம்மால் மகிமைப்படுவதாக. அவர் பரிசுத்தர். பரிசுத்தம் இல்லாமல் தேவனை தரிசிக்க முடியாது.
Jesus as "Christ Jesus" or "Christ".
அதிகாரம் படைத்த நாமம்: லூக்கா 16:17,18. "விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், "சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்." உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம்முடைய சீடர்களுக்கு நற்செய்தி பரப்புவதற்காக அனுப்புகின்ற பொழுது அவருடைய நாமத்தின் உறுதியைவெளிப்படுத்தினார்.ஊழியம்செய்கின்றவர்கள் ஆண்டவரை நாமத்தினாலே வல்லமையை செய்வார்கள். திருத்தூதர்பணிகள்3:4-9. பேதுருவும் யோவானும் அவரை உற்றுப்பார்த்து, “எங்களைப் பார்” என்று கூறினர்.5.அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.6பேதுரு அவரிடம், “வெள்ளியும் பொன்னும்என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி,7அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன .8அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.9.அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.இயேசுவின் வல்லமை பெற்ற பேதுருவும் யோவான் அவருடைய பெயரினால் அற்புதத்தை செய்வதெல்லாம் பார்க்கிறோம்.. இயேசுவின் நாமம் இனிதான நாமம் இதையெல்லாம் நாமும் வல்லமையுள்ள நாமும் நம்மை வாழவைக்கும் நாமம் ஆமென்.
Comments
Post a Comment