Lead by the Holy Spirit. தூய ஆவியாரின் தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தபெறல். Gen 36:1-7, Romans 8:12-17, St John 14:25-31
Introduction:. தலைமை பண்பில் சிறந்து விளங்குபவரே தலைவராக முடியும். அத்தகைய தலைவர் ஒருவரே இறைமகன் இயேசு கிறிஸ்து. அவரே தூய ஆவியினால் வழி நடத்தப்பட்டவர். தூய ஆவியினால் நடத்துகின்றவர்.
1. படைப்பில் தூய ஆவியின் செயல் பாடுகள்: ஆதியாகமம்1:2 படைப்பில் இறைவன் தூய ஆவியால் செயல்பட்டதை நாம் பார்க்கிறோம்.விடுதலைப் பயணத்தில் தூய ஆவியானவர் 430 ஆண்டு கால அடிமை தனத்தில் இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ததும் தூய ஆவியின் செயல்பாடுகளே. மற்றும் தூய ஆவியினால் மக்களை தீர்க்கர்கள் மூலமாகவும்,நியாயதிபதிகள் மூலமாகவும் வழி நடத்தியவர்.
Testament it is identified with the Spirit of Christ, the Spirit of Truth, the Paraclete and the Holy Spirit.[7][8][9]
2.தூய ஆவியானவர் புதிய ஏற்பாட்டில் :
புதிய ஏற்பாட்டில் 90 முறை தூவி ஆவியானவர் என்ற சொற்றொடர் வருகிறது. இயேசுவின் பிறப்பை மத் 1:18 தூய ஆவியின் செயல்பாடுகள் மூலம் இயேசு பிறந்ததை அறியலாம். இயேசுவின் திருமுழுக்கு மத்தேயு 3:16,17ல் தூய ஆவியினனால் செயல்பட்டதை காணலாம்.
லூக்கா 4:18,19ல் இயேசு கிறிஸ்து தூய ஆவியினால் செயல்பட்டதை காணலாம்.
மத்தேயு 28: 18 - 20ல் தூய ஆவியின் நாமத்தினால் ஞானஸ்தானம் கொடுங்கள் என்று கட்டளைகளை பிறப்பித்தார்.
3.தூய ஆவியின் பயன்கள்:
அப்போஸ்தலர் 1.8 தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையை பெற்று சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று ஆண்டவர் உரைப்பதை பார்க்கலாம். தூய ஆவியின் உதவி இல்லாமல் ஊழியம் செய்ய யாராலும் கூடாது. திரு தூதுவர்கள் வல்லமையுடன் ஊழியம் செய்தது தூய ஆவியின் வழிநடத்துதல் என்பதை நாம் மறுக்க முடியாது. தூய ஆவியானவரை நம் வாழ்வில் பெற உபவாசம், ஜெபம்,துதி பாடல்கள், வேத வாசிப்பு மற்றும் நற்செயல்கள் செய்வது மூலமாக நாம் தூய ஆவிய பெற முடியும். தூய ஆவி நம் வாழ்வில் செயல்படுவதற்கு இடம் கொடுப்போம் ரோமையர் 8 : 9,11,14. கடவுளின் ஆவி உங்களுள் குடி கொண்டிருந்தால் நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல் ஆவிக்குரிய இயல்பை கொண்டு இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியை கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. யார் கடவுளின் மக்கள்?
கடவுளின் ஆவியால் இயக்கப்படுபவர்களே கடவுளின் மக்கள் என புரிந்து கொள்ள வேண்டும்.
யோவான் 14 : 26, என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியா ராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார் என்பதை நாம் நினைவில் கொள்வோம் தூய ஆவியை வாரும். ஆமென்.
Comments
Post a Comment