தூய.அந்திரேயர் திரு நாள். November 30. St. Andrew's Day.
அந்திரேயர் இயேசுவின் சீடர்களில் ஒருவர் சீமோன் பேதுருவின் சகோதரர் இவர்களின் தந்தை யோனா. கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்ற ஊரில் கிபி. 5 ம் ஆண்டு ரோமர்கள் ஆட்சியில் பிறந்தார். அந்திரேயா என்றால் “மனிதத்தன்மை” என்று பொருள். மீன் பிடிப்பது இவர்கள் தொழில். அந்திரேயர் முதன் முதலில் யோவான் ஸ்நானகனின் சீடராக இருந்தார். யோவான் ஸ்நானகனின் இயேசுவை தன் சீடர்களுக்கு, இவர்தான் என்னிலும் பெரியவர் என பெருந்தன்மையுடன் இயேசவைஅறிமுகப்படுத்தினார்.
யோவான் 1:35-41 இதன் பிறகு இயேசுவாகிய மெசையாவை பார்த்தவுடன். தன் சகோதரர் சீமோன் பேதுருக்கு இயேசு கிறிஸ்துவை காண்பித்தார். இவர்கள் மீன் பிடிக்கும் போது இயேசு இவர்களை இனி நீங்கள் "மனுஷரை பிடிப்பீர்கள் "The catcher's of men" என்று முதலா வதாக சீடராக மாற்றினார். Andrew was the first disciple and Peter was the Prime disciple of Jesus Christ.
மத்தேயு 4:18-20 இரு சீடர்களும் ஆண்டவருக்கு மிக முக்கியமாக கருதப்பட்டவர்கள்.ஐந்து அப்பம் இரண்டு மீன் 5000 பேருக்கு பகிர் ந்த பொழுது அந்தசிறுவனை அந்திரேயர் இயேசுவிடம் அறிமு கப்படுத்தினார்.யோவான் 6:4-10.
யோவான் 12:20-22. அந்திரேயா கிரேக்கர்களை இயேசுவிற்கு அறி முகப்படுத்தினார். கிரேக்கர்கள் ஞானிகள், அறிவாளிகள். சாக்ர ட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற தத்துவ ஞானிகளின் பிறப்பிடம் கிரேக்கம். கிரேக்கர்கள் இயேசுவை சந்தித்தது. அந்தி ரேயரின் முயற்சியால்தான்.
மாற்கு 13:3-4. வரப்போகும் கேடு பற்றி சீடர்களுக்கு ஏசு ஒலிவ மலை மீது அமர்ந்து கொண்டு அந்திரேயா, பேதுரு, யாக்கோபு, யோவான்போன்றவர்களுக்குஅறிவிக்கின்றார்.கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே. அவ்வளவு முக்கியமாக அந்திரேயா இயேசுவுக்கு வேண் டப்பட்டவராக இருந்தார். திருத் தூதுவர் பணிகள்1:1314.பேதுரு, யோவான், யாக்கோபு, அந்தி ரேயா, பிலிப்பு, தோமா, பர்த்த லமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல் மாடி க்குச் சென்றார்கள்.அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின்சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரேமனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொண் டிருந்தார்கள். சீடர்கள் பல இடங்களில் பிரிந்து சென்று ஊழியம் செய்தனர். அந்திரேயா கருங்கடல் வடபகுதி ருமேனியா, கப்பதோசியா,மாசிதோனியா மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார்.இதன்பின்னர் அந்தி ரேயா கிரீஸ் நாட்டில் திரேஸ், மாசிடோனியாப் பகுதிகளில் ஊழியஞ் செய்து இறுதியாக அகாய் மாநிலத்தின் பாட்ராசு (Patras) கிரேக்க நாட்டில் உள்ளது .அப்போது ரோமர் ஆட்சி நடைபெற்று வந்தது பட்ராஸ் பட்டணத்தில் ஊழியம் செய்தார். அகாய் மாநிலத்தின் ஆளுநர் ஏகீசுஎன்பரின் மனைவி மரண த்தை நெருக்கும் நிலையில் இருந்தாள். அந்திரேயா கிறிஸ் துவின் நாமத்தினால் அவளை சுகப்படுத்த அவள் இயேசுவை சொந்த இரட்சகராக எற்று கொண்டாள். இது ரோம ஆளுநர் ஏகீசுக்கு பிடிக்கவில்லை. அந்திரேயாவை சிறையில் அடைத்தான்.ஏழு ரோம சேவகர் கள்அந்திரேயாவைச் சாட்டையால் அடித்து துன்புறுத்தினர். அந்தி ரேயா, “என் ஆண்டவர் மரித்த சிலுவை வடிவில் நான் மரிக்க தகுதியற்றவன். என்னை பெருக்கல் (X) வடிவ சிலுவையில் அறையவேண்டும்” என்றார். அந்தபடியே 'X'(solitaire)வடிவ சிலுவையில் கயிறுகளால் இறுக்கி கட்டினார்கள். அவர் சிலுவை யில் இரண்டு நாட்கள் வேதனை மத்தியிலும், சிலுவையை சுற்றி நின்றவர்களுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து இரத்த சாட்சியாக கிரீசு நாட்டின் பாட்ராசு (Patras) நகரில் கி.பி 60ம் ஆண்டு மரித்தார். அவருடைய எலும்புகள் (Relics) இன்றளவும் மேற்கத்திய நாடுகளில் பாது காக்கப்பட்டு வருகின்றன. ஸ்காட்லாந்து ருபீடியா ரஷ்யா கிரீஸ் உக்ரைன் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் பாதுகாவல் Patrons Saint.தெய்வமா இருக்கி றார். நவம்பர் 30ம் நாள் ஸகாட் லாந் நாட்டின் தேசிய நாள் ஆககொண்டாடப்படுகிறது. ஸ்காட்லாந்து திருச்சபையினர் சென்ற இடங்களில் எல்லாம் அந்திரயர் St. Andrew's Church ஆலயம் கட்டினர். செங்கல்பட்டு, அரக்கோணம், சென்னை எக்மோர் போன்ற இடங்களில் ஸ்காட்லாந்து திருச்சபயினர் அந்திரேயர் பெயரில் ஆலயம் கட்டியிருப்பது இன்றளவும் சாட்சியாக இருக்கிறது. கர்த்தராகியஇயேசு கிறிஸ்துவின் கிருபை, அமைதி உங்கள் அனைவரையும் ஆட்கொள்வதாக. ஆமென்
Prof. Dr.David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulblogspot.com
www.davidarulsermon centre.com.
Readers are requested to contribute relevant messages with regard to St.Andrew's to be added to the article. Suggestions are. requested.
ReplyDelete