Peace in the Context of Violence. 1.சாமுவேல் 24:1-12. ரோமர்12:14-21. மத்தேயு 5:38-48.

முன்னுரை: 
"வன்முறை வன்முறையை பிறப்பிக்கும். அமைதி அமைதியை பிறப்பிக்கும்" (violence bigets violence and peace bigets peace). உலகில் இரண்டு வித மக்கள் உள்ளனர் ஒருவர் அமைதியை விரும்புவர் மற்றொருவர் வன்முறையை செய்பவர் இறைவன் புயலுக்கு பின் அமைதி என்பதை விரும்புவோர் அல்ல. இந்த உலகம் வன்முறைகள் நிறைந்த சண்டைகள் நிறைந்த உலகமாய் இருக்கிறது அமைதி அமைதியின் சட்டங்கள் நீர்த்துப் போக செய்கிறது. நாட்டிற்கு நாடு வீட்டிற்கு வீடு அமைதியை தேடி அலையும் மக்கள். இறைவன் ஒருவரே நிரந்தர அமைதியை நிலை நாட்டுவபர்.
ஏசா தன் பிறப்புறிமையை விற்றல்:
Hendrick ter BrugghenEsau Selling His Birthright, c. 1627.
1.Peace in the Old Testament: தொன்மை நூல்களில் அமைதி.
துவக்க நூல்: 33 : 4.
ஏசா தமது சகோதரனாகிய யாக்கோபிடம் இரண்டு முறை ஏமாற்றப்பட்டார். ஆனாலும் ஏசா தானே எதிர்கொண்டு ஓடி அவரை அரவணைத்து இருக கட்டித் தழுவி முத்தமிட்ட காட்சியை பார்க்கிறோம். இவற்றில் ஏசாவின் மன்னிப்பு தன்மை மறக்கின்ற தன்மை அன்பின் தன்மை சகோதரர் தன்மையை பார்க்கின்றோம். என்ன பொறுத்த வரையில் ஏசாவே எனக்கு பிரியமானவனா இருக்கிறான். மத்தேயு 5:22-24. இயேசு கிறிஸ்து திட்டவட்டமாய் கூறுகிறார் தம் சகோதரன் சகோதரிகள் மீது சினம் கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் என்கிறார். முதலில் நல்லுறவு பிறகு காணிக்கை என்கிறார். இதன் அடிப்படை காரணம் அமைதியை ஏற்படுத்தல்.
1.சாமுவேல் 24: 6-10. தாவீதிற்கு சவுலை கொள்ள வாய்ப்பு கிடைக்கும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் அவர் மேல் கை வைக்கக் கூடாது என்று வன்முறையை தவிர்க்கிறார். 
2. Peace in the new testament: புதிய ஏற்பாட்டின் நாயகன் இயேசு கிறிஸ்து சமாதான பிரபு, சாந்தமும் , அன்பும் நிறைந்தவராய் இந்த உலகில் வாசம் செய்தார். லூக்கா 2:13 ,14. இயேசு கிறிஸ்துவால் மட்டுமே உலகில் அமைதியை உண்டாக்க முடியும் என்று கூறப்பட்டது . 1888 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி லண்டனில் படித்துக் கொண்டிருந்த போது புதிய ஏற்பாட்டில் மலைப்பொழிவு அவருக்கு மிகவும் பிடித்தது. மத்தேயு 5:9 ஆம் வசனம், அமைதி ஏற்படுத்துவோர் பேர் பெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். Let us be a peacemaker, rathar than a destroyer. காந்தியடிகள் பழைய ஏற்பாட்டை சண்டைகள் நிறைந்த ஏற்பாடு என்று கூறுகிறார். மோசேவின் சட்டத்தின்படி கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்றால் உலகமே இருண்டு விடும்.( Blindness). புதிய ஏற்பாட்டை, The Apostle of non-violence என கூறுகிறார். "அன்பின் சட்டமாகிய இயேசு அளவிடாத மகிழ்ச்சியை எனக்கு கொடுத்தது" என்று மகாத்மா கூறியிருக்கிறார்.
குருத்தோலை ஞாயிற்றில், சகரியா 9:9,10  ஏன் இயேசு கிறிஸ்து குதிரையை தன் பவனிக்கு தேர்ந்தெடுக்காமல் கழுதை குட்டியை தேர்ந்தெடுத்துக் கொண்டார். கழுதை சாந்தத்தின் அடையாளம் அமைதியின், தாழ்மையின் சின்னம். குதிரை யுத்தத்தின் அடையாளம் சண்டையின் சின்னம். யோவான் 14 27 என் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன் என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்கு தரும் அமைதி உலகம் தரும் அமைதியை போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். என் இயேசு நமக்கு அமைதியை போதிக்கின்றார். யோவான் 20 :19 உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு முதலாவது அறிவித்த வார்த்தை "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என வாழ்த்தினார். Shalom - peace unto you. Muslims greet each other as, "Shalam aluk Kum". 
3. நிருபகங்களில் அமைதி:
Peace on Epistles.
உரோமையர் 14: 17. இறையாச்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாக கொண்டதல்ல மாறாக தூய ஆவி அருளும் நீதி அமைதி மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்கு பணிபுரிவோர், கடவுளுக்கு உகந்தோராயும், மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர். உரோமையர் 12 :17, 18. "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள். இயலுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள்.
கொலொசையர் 3:15. கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ் அமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள் நன்றி உள்ளவர்களாக இருங்கள் . கலாத்தியர் 5: 22 தூய ஆவியின் கனியாக அமைதியை மூன்றாம் நிலையில் வைத்துள்ளார். அமைதி மன்னிப்பிலும் மனம் திரும்புதலிலும் கிடைக்கிறது. தூய ஆவியின் துணையால் என்றும் வாழ்வோம். கிறிஸ்துவை போற்றுவோம், வணங்குவோம். கடவுள் உங்களை அதிகம் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.

.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.