கிருஸ்தவர்களின் புத்தாண்டு ஜனவரி -1.லூக்கா 2: 21- 24.


இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி " ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. கிரகோரியின் நாட்காட்டியானது 'சூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் .அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன்நாட்காட்டியில் இருந்து கழிக்கப்பட்டது.

கிழக்கித்திய பழமை வாய்ந்த கிறிஸ்தவ திருச்சபைகளும், ஆங்கில மற்றும் லூத்தரன் திருச்சபைகளும் ஆங்கில வருட ஜனவரி 1 ம் நாளை குழந்தை ஏசுவை டிசம்பர் மாதம் 25ம் நாள் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு 8ம் நாளில் விருத்த சேதனம் (Circumstance) பன்னபட்ட நாளை ஜனவரி - 1 ஐ கிருஸ்தவர்களின் புத்தாண்டு உலகமுழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி-1.புத்தாண்டுவிழா கொண்டாட்டம்.

புத்தாண்டு வானவேடிக்கை

இயேசுவின் விருத்தசேதனம் என்பது லூக்கா 2: 21-24. நற்செய்தியின் படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஆகும். இதன் படி இயேசு பிறந்த எட்டாம் நாள் தூய்மைச் சடங்கை நிறைவேற்றி அவருக்கு விருத்த சேதனம் செய்து அவரை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவரின் பெற்றோர் எருசலேமுக்குக் அவரை கொண்டு சென்றார்கள். இந்தநாளிலேயே அவருக்கு இயேசு என்னும் பெயரும் இடப்பட்டது. 

விருத்த சேதனம்

மத்திய ஆசியாவில் விருத்த சேதனம் செய்யப்படுகின்றது (சுமார். 1865–1872).
ஆதியாகமம் 17:9-14
இதேவன் ஆபிரகாமிடம், “இது உடன்படிக்கையில் உனது பகுதியாகும். நீயும் உனது சந்ததியும் இந்த உடன்படிக்கையை மனதில் வைத்திருக்கவேண்டும். 
10 இது தான் நீ கீழ்ப்படிய வேண்டிய உடன்படிக்கை. இதுவே உனக்கும் எனக்கும் இடையேயுள்ள உடன்படிக்கை. இது உனது சந்ததிகளுக்கெல்லாம் உரியது. உனது சந்ததியருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் விருத்தசேதனம்செய்துகொள்ள வேண்டும். 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே நீங்கள் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதற்கான அடையாளம். 12 ஒரு ஆண்குழந்தை பிறந்த எட்டாவது நாள் அவனுக்கு விருத்தசேதனம் செய்துவிட வேண்டும். அது போலவே உங்கள் அடிமைகளுக்குப் பிறக்கும்ஆண்குழந்தைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 13 எனவே உங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆண்களும் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் அடிமைகளுக்கும் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 14 இதுதான் உனக்கும் எனக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை. விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆணும் உங்களிடமிருந்து விலக்கப்படுவான்; ஏனென்றால் அவன் எனது உடன்படிக்கையை உடைத்தவனாகிறான்” என்றார்.
இதன் அடிப்படையில்தான் இயேசு கிறிஸ்துவின் விருத்த சேதனம் செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.