"ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்". லூக்கா நற்செய்தி 1:37 "For with God nothing shall be impossible." Luke 1:37.

Introduction:. ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், கன்னி மரியாள் பெத்லகேமில் இருந்தபோது, தாவீதின் வம்சத்தை சேர்ந்த ( யூதா) யோசேப்புடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தார்.அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவளோ அவனைக்கண்டு அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்?புருஷனை அறியேனே என்றாள்.தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.( For nothing is impossible with God) தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.. இறை தூதன் வார்த்தயின்படியே மரியாள், கிறிஸ்துவை பெற்றெடுத்து தீவனத் தொட்டியில் கிடத்தியதாக லூக்கா நற்செய்திகுறிப்பிடுகிறது.உருவில்லாத இறைவன் மரியாவின் கருப்பையில் மனித உடலெடுத்ததால், இவர் "இறைவனின் தாய்" என்று அழைக்கப்படுகிறார். "இவர் இரண்டாம் ஏவாள்" என கருதப்படுகிறார்.இவர் நாசரேத்தில் வசித்து வந்தார். கி.மு. 20 ஆண்டு பிறந்தார். கி.பி. 41ம் ஆண்டு மறைந்தார். . ஆரோனின் வழித் தோன்றள். ( The First Priestly Class) லேவி ( Tribes of Levi) வம்ச வழியில் தோன்றியவர் மரியாள்.தம் 12 - 14 வயதில் திருமணம் செய்திருப்பார்.இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகு 11 ஆண்டுகள் கழித்து 41ம் வயதில் மரித்தார் என இறையியல்வல்லுனர்களின் கருத்து.

இறைதூதர் காபிரியேல் மரியாளிடம் இறை செய்தி வழங்கிய காட்சி.

The Annunciation by Eustache Le Sueur, an example of 17th century Marian art. The Angel Gabriel announces to Mary her pregnancy with Jesus and offers her white lilies.e in ancient sources
லூக்கா 1:37.
"தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை." இது இறை தூதர் மரியாளுக்கு வழங்கிய வல்லமையான வார்த்தை. சிலர் நடக்கும் என்பார் ஆனால் நடக்காது, நடக்காது என்பார் ஆனால் நடந்துவிடும். அப்படியான வாக்கள்ள இறை வாக்கு. ஆண்டவரிடம் ஆம் என்றும் ஆமென் என்றும் மட்டுமே உள்ளது.இயேசு என்னும் நாமத்தினால் எல்லாம் கூடும், அவருடைய வார்த்தையினால் கூடும். தேவனால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை.நடக்கவே நடக்காது என்று சோர்ந்துபோய் கைவிட்ட காரியங்களை, தேவனால் கூடும், ஆண்டவர்மீது நாம் வைக்கும் உறுதியான நம்பிக்கையே நமக்கான தகுதிகள்.
1.ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.  ஆபிரகாம் ஈசாக் கை பெற்றத் போது வயது 100.
2..யோபுவைப்போல “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதைஅறிந்திருக்கிறேன்” (யோபு:42:2) என்ற விசுவாச அறிக்கை செய்ய வேண்டும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை. நாம் "ஒன்றுமில்லை நான் ஐயா. உம்மால் அன்றி".என்ற அணுகு முறையால் மட்டுமே நாம் வேண்டியதை ஆண்டவரிடமிருந்து பெற முடியும்.
3.எரேமியா 32:27. 
எரேமியா தீர்க்கதரிசி,
"நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? என் ஆண்டவரின் வல்லமையை வெளிப்படுத்துகிறார்.

4.நூற்றுக்கு அதிபதியிடம் இயேசு, நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாளிகையிலேயே அவன் வேலைக்காரன் சுகமானான். மனுஷனால் கூடாதது தேவனுடைய வார்த்தையினால் கூடும். என் இறைமைந்தன் இயேசு வின் வாக்கு. ( மத் 8:5-13)
இறைமைந்தன் இயேசுவின் நாமங்களில் ஒன்று அவர் "அதிசயமானவர்" அற்புதங்களை செய்கின்றவர் அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. எல்லாமே அவருக்கு லேசான காரியம். ஐந்தப்பம் இரண்டு மீனை 5000 பேருக்கு கொடுத்தவர் உங்கள் தேவைகள் என்ன என்று அறிந்து இருக்கிறார். நீங்கள் கேட்பதை கொடுப்பார். அவர் உறுதியாய் கொடுத்த வார்த்தை "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்" நாம் கேட்க தான் வேண்டும். கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார். எனக்கு அன்பானவர்களே! உலகத்தில் மிக வல்லமையான வார்த்தை மூன்று எழுத்தில் இருக்கிறது அது "ASK'. ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டே இருப்போம். என்னிடத்தில் கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்" என்று கூறுகிறார். அவர் கொடுக்க சித்தமாய் இருக்கிறார். அவர் நமக்கு என்ன தேவை என்றும் அறிந்திருக்கிறார். ஏற்ற காலத்தில் அவைகளை கொடுப்பார். அவருக்கு ஏற்றவராய் நாம் நடந்து கொள்ள வேண்டும். ஆண்டவரிடம் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. Nothing is impossible with God.
யோவான் 2:
கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.2இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.3திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள்.
5அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.7இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.8.அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.9அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன்திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
10.எந்த மனுஷனும் முன்புநல்லதிராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக்கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும்வைத்திருந்தீரே என்றான்.11இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள்அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்..
அன்னை மரியாளுக்கு நன்றாகவே தெரியும் இறைமைந்தன் இயேசுவால் அற்புதங்கள் செய்யமுடியும் எனவே,  அவரே முன்மொழிந்து இயேசுவை அற்புதம் செய்ய வைத்தார். இறைதூதர் மரியாளுக்கு அறிவித்த வார்த்தை " கடவுளால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை". அவ்வார்த்தையை இயேசுவின் மூலம் நிறைவேற்றினார். நம் இறைவன் நமக்கும் நிறைவேற்றுவவார்.
பாடல்: என் இயேசுவாளால் ஆகாதொன்றுன்றோ. Nothing is to hard for the Lord 

ஆமென்.


Comments

Popular posts from this blog

திருப்பணி: கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்.(147) Mission: Sharing God's Pain. ஏசாயா: 6:1-8 திருப்பாடல் 40, திருத்தூதர் பணிகள்: 9: 10-18, லூக்கா:10:1-11 Mission Sunday. திருப்பணி ஞாயிறு.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.